திங்கள், 9 செப்டம்பர், 2013

வினோத் ராய்ோபா செட், விளையாட்டு கிராமம், ஸ்டேடியப் பராமரிப்பு என காமன்வெல்த் போட்டியில் நடந்த ஊழல்களை புட்டுப் புட்டு வைத்தார் வினோத்ராய். விவகாரம் மீடியாவில் நாற, இந்திய விளையாட்டு சம்மளேனத் தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் சுரேஷ் கல்மாடி.

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு எந்த விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் தாரை வார்த்த விதத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சி.ஏ.ஜி. கிளப்பிய அதிரடி உச்ச நீதிமன்றம் வரை போனது. ஆவணங்களை பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கும், சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் ஆகியோருக்கு காட்டி திருத்தியதாக சர்ச்சை கிளம்பி, உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.-க்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு போனது.

இப்படி அதிரடி கிளப்பிய வினோத்ராய் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். முன்பு தேர்தல் கமிஷனினில் டி.என். சேஷன் அதிரடி கிளம்பியபோது, அதை மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றினார்கள். அதுப்போல சி.ஏ.ஜி.யும் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  
suranஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன்வெல்த், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி திட்ட ஊழல் என லட்சம் கோடிகளில் நடந்த ஊழல்களை வெளிச்சத்துக்கொண்டு வந்த இந்திய தலைமை தணிக்கை அதிகாரியான (சிஏஜி) வினோத் ராய் ..

ஆட்சியாளர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய வினோத்ராய் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவர்."நாம் சியர்கேர்ள்ஸைப் போல பொழுதுபோக்க வரவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு துறையும் நேர்மையாக செயல்படுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்!’’ என்று ஒரு கருத்தரங்கில் முழங்கிய வினோத்ராய், அதை செயல்படுத்தவும் போராடினார்.
வினோத்ராயின் மாத வருமானம் 90 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் இவர் அரசின் பல்வேறு துறைகளை தோண்டி துருவியதோ லட்சத்து கோடிகளில்.
  
அரசு செயல்படுத்தும் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள திட்டங்களின் கணக்கு வழக்குகளை ஆடிட் செய்ய உருவாக்கப்பட்டதுதான் Comptroller and auditor-general சுருக்கமாக சி.ஏ.ஜி. மற்ற துறைகளை போல இது ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. தேர்தல் கமிஷனை போல சுயாட்சி கொண்ட அமைப்பு. இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களின் மொத்த கணக்கு வழக்குகளையும் டீல் செய்கிறது. அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் இதன் கழுகுப் பார்வையின் கீழ் வரும். சுருக்கமாகச் சொன்னால் சி.ஏ.ஜியின் கீழ் வேலை பார்க்கும் 58 ஆயிரம் பணியாளர்கள்தான் இந்தியாவின் அடித்தளம். அரசின் எந்த திட்டமாக இருந்தாலும் மொத்த கணக்கு வழக்குகளை பிரித்து மேயும் சி.ஏ.ஜி.

‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்று செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அதை பொது வெளியில் ஏலம் விட்டிருந்தால் அரசுக்குப் பெருமளவு வருமானம் வந்திருக்கும். அந்த வகையில் அரசுக்கு கிடைத்த இழப்பு ஒரு லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய்!’’ என்று வினோத் ராய் தாக்கல் செய்த அறிக்கைதான் மத்திய அரசுக்கு விழுந்த முதல் அடி. வினோத்ராய் போட்ட குண்டு, ஆ.ராசா முதல் கனிமொழி வரையிலான கைதுக்கு காரணமாக அமைந்தன.

  • ரயில்வேயில் ஏற்றுமதிக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதில் ரூ. 17 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக மத்திய தணிக்கை துறை  கணக்காயம் ( சி.ஏ.ஜி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு,காமன்வெல்த் போட்டி,நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு என பலவேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழல் அம்பலமாகி மத்திய அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு ஊழல் அம்பலமாகி உள்ளது.

ரயில்வே ஏற்றுமதி சரக்கு கட்டணத்தில் குறைத்து வசூலித்து மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு பயனீட்டுக்கு போக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இரட்டை முறையை பயன்டுத்தியது, இதன்படி இரும்பு உருக்கு ஏற்றுமதி செய்தவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்து இதில் பல அதிகாரிகள் ஆதாயம் அடைந்துள்ளனர்.

இந்த வகையில் ரூ. 17 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் மத்திய தணிக்கை துறை  கணக்காயம் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தி உள்ளது.

கடந்த 2009 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் 7 பேர் ரயில்வே அமைச்சர்களாக இருந்ததால், இந்த ஊழல் தொடர்பாக அனைவரையும் விசாரிக்க வேண்டும்