இடுகைகள்

ஆணையர் தீர்ப்பு சாதகம் தேர்தல் வாய் வாடகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருக்கு சாதகம்

படம்
அதிமுகவின் உட்கட்சி பிரச்சினைகளை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு என்று வரவேற்றனர்.  அதேபோல் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்று கூறினர். உண்மையில் இது யாருக்கு சாதகமான தீர்ப்பு என்ற கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் பாஜகவின் நிலைப்பாடு, திட்டம் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் அதில் தான் உண்மையில் இதற்கான பதில் இருக்கிறது . 2024 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் தனித்தனி அணி அமைத்து போட்டியிட்டனர். திமுகவுக்கு எதிரான வாக்குகள் இரு கூட்டணிகளுக்கும் பிரிந்த நிலையில் தமிழ்நாட்டில் அத்தனை இடங்களையும் திமுக எளிதாக வெற்றி பெற்றது.  2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த போதும் இவ்வளவு பெரிய வெற்றி இல்லை.  அதிமுக - பாஜக கூட்டணி மேற்கு மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜக தனித்து போட்டியிட்டிருந்தால் இப்போதுள்ள நான்கு சட்டமன்ற உறுப்...