யாருக்கு சாதகம்
அதிமுகவின் உட்கட்சி பிரச்சினைகளை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு என்று வரவேற்றனர்.
அதேபோல் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்று கூறினர்.
உண்மையில் இது யாருக்கு சாதகமான தீர்ப்பு என்ற கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் பாஜகவின் நிலைப்பாடு, திட்டம் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் அதில் தான் உண்மையில் இதற்கான பதில் இருக்கிறது .
2024 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் தனித்தனி அணி அமைத்து போட்டியிட்டனர். திமுகவுக்கு எதிரான வாக்குகள் இரு கூட்டணிகளுக்கும் பிரிந்த நிலையில் தமிழ்நாட்டில் அத்தனை இடங்களையும் திமுக எளிதாக வெற்றி பெற்றது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த போதும் இவ்வளவு பெரிய வெற்றி இல்லை.
அதிமுக - பாஜக கூட்டணி மேற்கு மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜக தனித்து போட்டியிட்டிருந்தால் இப்போதுள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் பாஜக தவிர்த்து அதிமுக, பாமக உள்ளிட்ட பிற கட்சிகள் கூட்டணி வைத்திருந்தாலுமே கூட 75 இடங்கள் என்பது கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக அல்லாத பிற கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைந்தால் திமுகவுக்கு நெருக்கடி அளிக்க முடியும். ஆனால் பாஜகவுக்கு அது மோசமான முடிவாக அமைந்துவிடும். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலை அமமுக, பாமக, மற்றும் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் தான் சந்திக்க வேண்டும் என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக உள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிர்ச்சி வைத்தியங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படலாம், மூத்த நிர்வாகிகள் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி உருவாகலாம் என்றும் கூறுகின்றனர்.
புதிய (பாஜக ) தேர்தல் பிரிவு செயலர் .
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 65 வயதை எட்டியதை அடுத்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, இரண்டு தேர்தல் ஆணையர்களில் சீனியரான ஞானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்தல் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு மத்திய சட்ட அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் கூட்டத்தில் ராகுல் காந்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். புதிய நியமன நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, நியமனத்தை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஞானேஷ் குமார் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலை நடத்துவார்.
2024 மார்ச் 14ம் தேதி ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 11 மாதங்களில் தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு வந்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
தனது பதவிக் காஉள் துறை கூடுதல் செயலாளராக இருந்த போது 2019 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்யும் மசோதா வரைவை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றியவர்.ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பதில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அமித்ஷாவுக்கு மிக நெருக்கமானவர் எனவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
லத்தில் 20 மாநில சட்டமன்றத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள், 2029 மக்களவைத் தேர்தலுக்கான முன் ஏற்பாடு பணிகளை கவனிப்பார். தற்போது 61 வயதாகும் ஞானேஷ் குமார், 2029ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக நீடிப்பார்.
1988 பேட்ச் கேரளா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை செயலாளர், உள் விவகாரங்கள் துறை இணை மற்றும் கூடுதல் செயலாளர், பாதுகாப்புத் துறை இணைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.
கடைசியாக கூட்டுறவுத் துறை செயலாளராக பதவி வகித்து 2024 ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். முன்னதாக கேரள அரசின் கீழ் முக்கிய துறைகளிலும் பதவிகளை வகித்துள்ளார்
வாய் வாடகைக்கு
நிதானம் இல்லாமல் உளறியிருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ''மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்'' என நிதானம் இல்லாமல் உளறியிருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என காலத்திற்கு ஏற்றார் போல போற்றி பாடுவதற்காகவே தன் வாயை வாடகைக்கு விடுபவர்தான் சி.வி.சண்முகம்.
''அம்மா... அம்மா..'' என அமையார் ஜெயலலிதா இருக்கும் போது உருகிய சண்முகத்தின் நாக்கு, ஜெயலலிதா இறந்த பிறகு ''சின்னம்மா இல்ல...எங்க அம்மா'' என சசிகலாவையே அம்மா ஸ்தானத்தில் வைத்தார். அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பே அருகதை இருக்கிறதா? அவமானப்படுவது அரிய கலை. அது சண்முகத்திற்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது.
மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, முதியோர்களுக்கு வீடு தேடி மருத்துவம் என அனைத்து வயது பெண்களும் பலன் பெறும் வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. குறிப்பாக உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையும் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் செல்லும் இடங்கள் எல்லாம் கூடும் பெண்கள் அவரைப் பார்த்து ''நன்றி அப்பா'' என உருகுகிறார்கள். அதனைதான் உங்களில் ஒருவன் கேள்வி பதிலில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுப் பெண்கள் தலைநிமிர்வது அதிமுகவுக்கு உறுதுறது போல. அந்த பெண்கள் அப்பா என முதலமைச்சரை அழைப்பது அடிவயிற்றில் எரிகிறது போல.அதனால்தான், அறுவறுக்கதக்க நாராச மொழியில் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுனு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது” தெரிவித்துள்ளார்.