மேட் இன் சீனா
சீன ஏஐ சாட்பாட் டீப்சீக்கின் எழுச்சி உலகளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், சீனாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால், ' மேட் இன் சீனா 2025' என்ற லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் தனது நிபுணத்துவத்தை சீனா மெதுவாக வளர்த்து வருகிறது. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, டீப்சீக்கின் வெற்றி என்பது ஒரு பிரமாண்ட திட்டம் வெற்றியடைந்தது என்பதற்கான மற்றுமொரு சான்று. 'மேட் இன் சீனா 2025' எனும் திட்டம் 2015-இல் சீன அரசால் அறிவிக்கப்பட்டது. சீன பொருட்கள் என்றால் மலிவான மற்றும் குறைவான தரம் கொண்டவை என்ற அடையாளத்தை மாற்றுவதே அத்திட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. அதன்படி, 2025ஆம் ஆண்டுக்குள் சீனா ஆதிக்கம் செலுத்த வேண்டிய பகுதிகளாக பத்து தொழில்நுட்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், மின்சார கார்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரி தொழில்நுட்பம் போன்ற துறைகள் அதில் அடங்கும். இதில் குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்களில் சீனா...