பிரிவினை: இந்தியா மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆகும்.
ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், மேலும் பல்வேறு மாநிலங்களில் தனி மாநில கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஏற்கப்பட்டால், இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயரும். ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி பச்சைக்கொடி காட்டியது. அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தை பிரித்து கூர்க்காலாந்து, மணிப்பூரை பிரித்து குகிலாண்ட், தமிழகத்தை பிரித்து கொங்குநாடு, கர்நாடகாவை பிரித்து துலுநாடு, அசாமை பிரித்து போடோலாண்டு, குஜராத்தை பிரித்து சௌராஷ்டிரா மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் அலிகாரை டிவிஷன்களை பிரித்து பிராஜ் பிரதேஷ், கிழக்குப் பகுதியை பிரித்து போஜ்பூர் மாநிலங்களை யும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் முறையே பரத்பூர், குவாலியர் மாவட்டங்க...