சென்ற ஆண்டில் -ஒரு பார்வை.
இதே மாதம் [2012] நடந்த முக்கிய நிகழ்வுகள். சின்னதாக ஒரு பார்வை. உலகம் பிப்., 2: எகிப்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே நடந்த மோதலில் 74 பேர் பலி. பிப்., 5: இங்கிலாந்தில் பிறந்து 17 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, இருதய அறுவை வெற்றிகரமாக செய்யப்பட்டது. பிப்., 6: பிலிப்பைன்ஸ் நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தில் 44 பேர் பலியாகினர். பிப்., 8: பொருளாதார சிக்கலில் உள்ள மொரீசியஸ்க்கு, இந்தியா சார்பில் 1,350 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக மன்மோகன் சிங் அறிவிப்பு. பிப்., 11: தென்ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் புகைப்படம், அந்நாட்டின் ரூபாய் நோட்டில் இடம் பெற்றது. பிப்., 18: ஊழல் புகாரில் சிக்கிய ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் பதவி விலகினார். பிப்., 21: மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 44 கைதிகள் பலி. பிப்., 24: இலங்கை இறுதிக்கட்ட போரில், மனித உரிமைமீறலில் ஈடுபட்ட இலங்கை ராணுவ தளபதி ஷாவேந்திர சில்வா, ஐ.நா., அமைதிப்படை குழுவில் இருந்து நீக்கம். பிப்., 27: ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை, கொலை செய்யும் சதித்திட்டத்தை உக்ரைன் போலீசா...