ஒரு வேதனை-ஒரு சாதனை.



வலுவான லோக்பால் மசோதா அமைக்க வழி காட்டுவதாக 18 மாதங்களாக போராடி வந்த அன்னா ஹசாரே, இப்போது அரசியலில் களம் இறங்க இருப்பதாக அறிவித்து, குழுவை கலைப்பதாக அறிவித்துள்ளார்.
நாட்டில் பெருகி வரும்ஊழலை ஒழிக்க ஜன்லோக்பால் எனும்  மசோதா கொண்டு வரக்கூறி அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். 
 போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆங்காங்கே ஆதரவு குரல் ஒலித்தது. \
ஏராளமானோர் அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து போராட்ட களத்தில் குதித்தனர். ஹசாரேவுக்கு ஆதரவாக இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., கிரண் பேடி, வழக்கறிஞர் பிரசாந்த பூசன், கெஜ்ரிவால், பாபா ராம்தேவ், அக்னிவேஷ்,  ரவிசங்கர்ஜி உள்ளிட்டோரும்  ஆதரவாக கிளம்பினர்.
 லோக்பால் மசோதா அமைக்க வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஹசாரே பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 
 சிறையும் சென்று வந்தார்.  கடந்த இருவாரங்களுக்கு முன்னர் வலுவான லோக்பால் மசோதா மற்றும் ஊழல் கறைபடிந்த எம்.பி.க்களை விசாரிக்க சிறப்பு குழு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தினர். முன்னதாக அன்னா குழுவின் அரவிந்த கெஜ்ரிவால் இப்போராட்டத்தை முதலில் பங்கேற்றார். நான்கு நாட்களுக்கு பிறகு ஹசாரே பங்கேற்றார்.

 ஒரு பக்கம் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வந்த போதும் அவர்களது ‌போராட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை மத்திய அரசு. இதனால் அக்குழுவில் போராட்டம் நடத்தி அரவிந்த கெஜ்ரிவால் மிகவும் சோர்ந்து போனார்.
 
தங்களது போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாததையடுத்து,  அன்னா குழு அரசியலில் களம் இறங்க திட்டமிட்டது. அதன்படி கடந்த 3ம் தேதியன்று போராட்டத்தை முடிக்கும் முன்பாக அன்னா குழு அரசியலில் இறங்குவதாக அக்குழுவின் அரவிந்த கெஜ்ரிவால் உண்ணாவிரத‌ மேடையிலேயே அறிவித்தார்.

அதேசமயம் தங்களது குழு அரசியலில் இறங்கினாலும், தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், அதேசமயம் ஊழலுக்கு எதிராக தனது போராட்டம் தொடரும் என்றும்கூறினார்.

அன்னா குழுவினரைன் பத்தோடு பதினொன்றான அரசியல் முடிவுக்கு கசாரே வுடன் இணைந்து போராடிய பொதுமக்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
சில இடங்களில் ஹசாரேயின் போஸ்டர்களையும் தீ வைத்து கொளுத்திவருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஹசாரே குழு உண்மையான அரசியல் நோக்கம் இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாக கருத்து தெரிவித்தனர்.

 இந்நிலையில் அன்னா ஹசாரே தன்னுடைய புதிய வலைதளத்தில், தான் குழுவை கலைப்பதாக அறிவித்து இருக்கிறார். மேலும் வலுவான லோக்பால் மசோதா அமைக்கவே தான் குழு அமைத்ததாகவும், இனி லோக்பால் ‌மசோதா தொடர்பாக மத்திய அரசை  அணுகப்போவது இல்லை ,அணுகி பயனும் இல்லை என்று அறிவித்துள்ளார். 
 தன்னுடைய போராட்டங்கள் முடிவுக்கு வந்து விட்டதாகவும், இனி லோக்பால் மசோதா பிரச்னையை மக்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று  சோகத்துடன் கூறியுள்ளார்.
________________________________________________________________________
செவ்வாய் -அமெரிக்க சாதனை,
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்து வருகிறது. சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய அமெரிக்கா தொடர்ந்து சந்திரனுக்கு ராக்கெட் மூலம் மனிதர்களையும் அனுப்பி ஆராய்ச்சி நடத்தியது. சந்திரனில் மனிதன் உயிர் வாழ தேவையான ஆக்ஸிஜன், தண்ணீர் போன்றவை இல்லாததால் தொடர்ந்து ஆராய்ச்சியை கைவிட்டது. அதன் பிறகு வானில் விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவியது. 
சுரன்

விண்வெளி வீரர்களை ராக்கெட்டில் அனுப்பி வைத்து அவர்கள் மூலம் விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 50 ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில் “நாசா” விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்காக ராக்கெட்டுகளை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி ஆராய்ச்சி நடத்தியது. அந்த ராக்கெட்டுகள் செவ்வாய் கிரகத்தின் மேலே சுற்றி வந்தபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டது. 


40 விண்கலங்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. இதில் பல வெற்றி பெற்றாலும் பல முறை தோல்வி ஏற்பட்டது. அந்த ராக்கெட்டுகள் பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பியது. இதன் மூலம் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதும், மனிதன் உயிர் வாழ முடியும் என்றும் தெரிய வந்தது. இதுபற்றி மேலும் ஆராய்ச்சி நடத்துவதற்காக “கியூரியா சிட்டி” என்ற விண்கலத்தை ரூ. 12 ஆயிரம் கோடி செல வில் நாசா விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதுவரை செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து தான் ராக்கெட்டுகளும் விண்கலங்களும் ஆய்வு நடத்தின. ஆனால் “கியூரியா சிட்டி” விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கச் செய்து ஆராய்ச்சி செய்யும் வகையில் உருவாக்கினார்கள். 

சுமார் 1 டன் எடை கொண்ட இந்த கியூரியா சிட்டி விண்கலம் நடந்த நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 36 வாரங்கள் அது சீரான பாதையில் பயணித்தது. பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கும் இடைப்பட்ட தூரம் 27 கோடி கிலோ மீட்டர் தூரம் ஆகும். 36 வாரங்கள் பறந்து சென்று எந்த தடங்கலும் இல்லா மல் செவ்வாய்கிரகத்தை நெருங்கியது. இன்று காலை 11.05 மணி அளவில் செவ் வாய் கிரகத்தில் தரை இறங்குமாறு திட்டமிட்டு இருந்தனர். 

“கியூரியா சிட்டி” விண் கலத்தை கண்காணிக்க ஏற்கனவே “மார்ஸ் ஒடிசி” என்ற விண்கலத்தை நாசா அனுப்பி வைத்தது. அது செவ்வாய் கிரகத்தை சுற்றிப் பறந்து வந்து கியூரியா சிட்டியின் செயல்பாடுகளை கண்காணிப்பதுடன் அது பற்றிய தகவல்களை நாசா ஆய்வு மையத்துக்கு அனுப்பி வந்தது. செவ்வாய் கிரகத்தை நெருங்கியதும் விண்கலத்தை பாராசூட் மூலம் தரை இறங்கு வதற்காக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 

இதற்கான பாராசூட் கால்பந்து மைதானத்தில் பாதி அளவு இருக்கும் வகையில் பிர மாண்டமாக தயாரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணி அளவில் கடைசி ஏழு நிமிடத்தில் பாராசூட்டுகள் திட்டமிட்டபடி விரிந்தன. சரியாக 11.05 மணிக்கு “கியூரியா சிட்டி” செவ் வாய் கிரகத்தில் எந்த தடங்கல் இல்லாமல் தரை இறங்கியது. கியூரியா சிட்டியின் செயல்பாடுகளை “மார்ஸ் ஒடிசி” மூலம் கண்காணித்து வந்த நாசா விஞ்ஞானிகள் அது தரை இறங்குவதை பதட்டத்துடன் எதிர்பார்த்தனர். 

திட்டமிட்ட படி அது தரை இறங் கியதும் நாசா விஞ்ஞானி கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 1400 விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர்வாழ முடியுமா? என 2 ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடும். மனித வரலாற்றில் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி ஒரு புதிய சகாப்தம் ஆகும். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு எட்ட முடியாத வெற்றி மகுடம் என்று புகழப்படுகிறது. இந்த சாதனை நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சுரன்

தகுதி நிலைநாடுதங்கப் பதக்கம்வெள்ளிப் பதக்கம்வென்கலப் பதக்கம்மொத்தம்
1சீனாசீனா31191464
2அமெரிக்காஅமெரிக்கா28141961
3பிரிட்டிஷ் அணிபிரிட்டிஷ் அணி16111138
4தென் கொரியாதென் கொரியா115622
5பிரான்ஸ்பிரான்ஸ்88925
6இத்தாலிஇத்தாலி75416
7கஸகஸ்தான்கஸகஸ்தான்6006
8ரஷ்யக் கூட்டமைப்புரஷ்யக் கூட்டமைப்பு5171537
9ஜெர்மனிஜெர்மனி510722
10ஹங்கேரிஹங்கேரி4138
11வட கொரியாவட கொரியா4015
12நெதர்லாந்துநெதர்லாந்து3249
13தென் ஆப்பிரிக்காதென் ஆப்பிரிக்கா3104
14நியூசிலாந்துநியூசிலாந்து3047
15ஜப்பான்ஜப்பான்2121327
16ஆஸி அணிஆஸி அணி212721
17ருமேனியாருமேனியா2428
17டென்மார்க்டென்மார்க்2428
19பெலாரூஸ்பெலாரூஸ்2237
20கியூபாகியூபா2215
21பிரேசில்பிரேசில்2158
22ஜமைக்காஜமைக்கா2114
22போலந்துபோலந்து2114
24உக்ரைன்உக்ரைன்2068
25எத்தியோப்பியாஎத்தியோப்பியா2013
26கனடாகனடா13610
27செக் குடியரசுசெக் குடியரசு1315
27ஸ்வீடன்ஸ்வீடன்1315
29கென்யாகென்யா1225
30ஸ்லோவேனியாஸ்லோவேனியா1124
31குரேஷியாகுரேஷியா1102
31சுவிட்சர்லாந்துசுவிட்சர்லாந்து1102
33இரான்இரான்1012
33லித்துவேனியாலித்துவேனியா1012
35வெனிலுவேலாவெனிலுவேலா1001
35ஜார்ஜியாஜார்ஜியா1001
37மெக்ஸிகோமெக்ஸிகோ0325
38கொலம்பியாகொலம்பியா0314
39ஸ்பெயின்ஸ்பெயின்0213
40ஸ்லோவாக்கியாஸ்லோவாக்கியா0134
41இந்தியாஇந்தியா0123
41அசர்பைஜான்அசர்பைஜான்0123
41பெல்ஜியம்பெல்ஜியம்0123
44செர்பியாசெர்பியா0112
44இந்தோனீசியாஇந்தோனீசியா0112
44ஆர்மெனியாஆர்மெனியா0112
44நார்வேநார்வே0112
44மங்கோலியாமங்கோலியா0112
49தாய்லாந்துதாய்லாந்து0101
49சீன தாய்பேய்சீன தாய்பேய்0101
49எகிப்துஎகிப்து0101
49சைப்ரஸ்சைப்ரஸ்0101
49மலேசியாமலேசியா0101
49குவாதமாலாகுவாதமாலா0101
55மால்டாவோமால்டாவோ0022
55கிரேக்கம்கிரேக்கம்0022
57துனீசியாதுனீசியா0011
57சிங்கப்பூர்சிங்கப்பூர்0011
57கத்தார்கத்தார்0011
57உஸ்பெகிஸ்தான்உஸ்பெகிஸ்தான்0011
57ஹாங் காங்ஹாங் காங்0011
57அர்ஜிண்டினாஅர்ஜிண்டினா0011

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?