சுண்ணாம்பு வைத்தல்
ஒரு கண்ணில் சுண்ணாம்பு -மறு கண்ணில் வெண்ணை வைப்பது சரியான மருத்துவமாகாது.இரண்டு கண்ணிலும் ஒன்றையே வைக்க வேண்டும்.
வேறு ஒன்றுமில்லை.
ஜேப்பியார் கட்டிடங்கள் இடிந்து பலரை காவு கொண்டது.அதன் வழக்கில் கல்லூரி உரிமையாளர் ஜேப்பியார் கைது செய்யப்பட்டார்.சரியான செயல் என்று பாராட்டு கிடைத்தது.
தவறு செய்தவர்களை கண்டிப்பாக தட்டிக்கேட்பேன் என்பதுதான் அம்மாவின்
புதிய மந்திரம்.
அதன் படி பேருந்து ஓட்டையில் விழுந்து சுருதி இறந்த விவகாரத்தில் பேருந்து உரிமையாளர் இல்லாவிட்டாலும் சீயோன் பள்ளை உரிமையாளர் விஜயன் கைது செய்யப்பட்டார்.
ஆனால் இப்போது பள்ளி நீச்சல் பயிற்சியில் மரணமான திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சம்பவத்தில் மட்டும் முதல்வரும் -மேலாளருமான வர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளா.பிரபல கல்வி வியாபாரியான திருமதிஒய்ஜிபி யை மட்டும் சம்பவ எல்லையில் பெயரே வராமல் பார்த்துக்கொள்வது ஏன்?
தினமலர்,தினமணி போன்ற இதழ்களும் அவர் பெயரையே செய்தியில் போட கவனமுடன் தவிர்ப்பது ஏன்?
சமச்சீர் கல்வியை எடை போட அம்மா அமைத்த குழுவில் இவர் முக்கிய பங்கு வகித்து அம்மாவின் ஆசை படியே அறிக்கை கொடுத்தவர்.அம்மாவி இனத்தவர்-மதிப்பிற்குரியவர்.அதனால்தான் பெயர் போனவராகி விட்டாரா?
========================================================================
இது அடுத்த சுண்ணாம்பு செய்தி விவகாரம்
பாவம் .ஏதோ ஆசையில் கடைசியில் கருணாநிதியும் முகநூல்,டுவிட்டர்,இணையத் தளம் என்று நுழைந்துள்ளார்.
அது அம்மாவின் அடியாள் தினமலருக்கு பொறுக்கவில்லை போல் தெரிகிறது.
ஆரம்பித்து ஒரே நாளில் மூடல்.முகபுத்தகம் தெரியவில்லை.மறைந்து விட்டது.
காரணம் கடுமையான எதிர்ப்பு. என்று செய்தியை வெளியிட்டுள்ளது.
அதை நம்பி முயற்சித்தால் அந்த பக்கம்உண்மையில் 7500 பின்பற்றுவோருடன் உயிருடன் தான் உள்ளது.http://www.facebook.com/Kalaignar89 எனும் அப் பக்கத்தில், முரசொலி மாறன் பிறந்த தினத்தில் அவரது சிலைக்கு மரியாதை செய்த படம் மற்றும் செய்தியையும் கருணாநிதி சுடச்சுட பதிவேற்றியுள்ளார்.
=================================================================================
நீதித்துறைக்கே சுண்ணாம்பா?
மம்தா பானர்ஜி பேச்சில் பலருக்கு அதிருப்தி இருந்தாலும்,அவர் பேசியதில் உண்மையும் இல்லாமல் இல்லை.
கர்நாடகாவில் பல கோடி பேரத்தில் பிணை மனு கொடுக்கப்பட்டதில் இரு நீதிபதிகள் மாட்டிக்கொண்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.
மிக சிறப்பான நீதியரசர்கள் இருக்கும் இடத்தில் தங்ளது நீதியை பணத்துக்கு வழங்கும் கறுப்பாடுகளும் உள்ளனர்.
நீதித்துறையை யாரும் விமர்சிக்க கூடாது என்ற மரபினால்தான் அந்ததுறையில் முறைகேடுகள் பெருகவும் எந்த தீர்ப்பை எப்படி வழங்கினாலும் வாங்கிக்கொண்டு போக வேண்டிய நிலையும் உண்டாகி விட்டது.
தனது பிறந்த தேதியையே மாற்றி ஏமாற்றிய நீதிபதி,அரசு பணத்தில் தனது சொந்த உபயோகத்திற்கு வீட்டு தளவாடங்களை வாங்கி மாட்டிக்கொண்ட நீதிபதி,தனது அதிகாரத்தை பயன் படுத்தி நிலங்களை வளைத்து ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் பணம் பார்த்த நீதிபதி,புறம்போக்கு நிலங்களை வளைத்து கொண்ட நீதிபதி என்று பலரை நாம் செய்திகள் மூலம் சந்தித்துள்ளோம்.இவர்கள் தீர்ப்புக்கள் எப்படி நியாயமாக இருந்திருக்க முடியும்?
தீர்ப்புகள் ஆளைபார்த்து வந்து விடக்கூடாது நியாயமாக இருக்க வேண்டும் என்றுதானே நீதி தேவி என்ற சிலையின் கண்ணில் கறுப்புத்துணியை கட்டி வைத்துள்ளார்கள்.
நீதிபதிகள் எந்த தவறு செய்தாலும் கண்டு கொள்ளக்கூடாது என்பதாற்காக அல்லவே?
மம்தாபானர்ஜி தனது பேச்சை கொஞ்சம் நாசூக்காக் வெளியிடாமல் பட்டென்று உடைத்ததால்தான் பிரச்னையே.