இருக்கு, ஆனா. இல்லை.!
நீங்கள் கிரிப்டோ கரன்சி பற்றி அறிந்தவராக இருக்கலாம். அல்லது அதைப் பற்றிப் பிறர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். இரண்டில் ஒரு பிரிவில்தான் நீங்கள் இருக்க முடியும். காரணம் கிரிப்டோ கரன்சி அந்த அளவுக்குப் பிரபலமாகியிருக்கிறது. இந்த வர்த்தகத்தில் கிராம மக்கள்கூட ஈடுபட்டுவருகிறார்கள். எளிதாகச் சொல்வதானால், இது ஷேர் மார்க்கெட் போலத்தான். கிரிப்டோ கரன்சியில் பல்வேறு பிரிவுகள் உண்டு, பிரலமானது பிட் காயின். இவற்றை வாங்கிவைக்க வேண்டும். நாளை அவை ‘விலை’ ஏறும்போது உங்களுக்கு லாபம். இது எல்லாமே இணையம் மூலம் நடக்கும். இதற்கு மெய்நிகர் நாணயம் ( virtual currency ) என்று பெயர் ஷேர் மார்க்கெட் மாதிரி இல்லாமல், கிரிப்டோவில் முதலீடுசெய்யும் நடைமுறை எளிது. குறைந்தபட்சம் நூறு, இருநூறு ரூபாய்கூட முதலீடுசெய்யலாம். இது நாடு என்ற வரையறை கடந்து உலகம் முழுவதுற்கும் பொதுவானது என்று, கிரிப்டோ பயன்படுத்துவோர் சொல்கிறார்கள். கிரிப்டோ என்றால் என்ன? கிரிப்டோ கரன்சியை 2009ஆம் ஆண்டு, சடோஷி நகமோடோ என்ற புனைப்பெயரைக் கொண்டவர்தான் உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. என்னது நம்பப்படுகிறதா... என்கிறீர்களா?...