5000 அல்ல6100 கோடிகள்

 நான் பணத்தை அல்ல, தமிழக மக்களின் மனங்களை எடுத்துக் கொண்டு துபாய் வந்திருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று திரும்பினார்.

முன்னதாக, அபுதாபியில் இந்திய சமூக கலாசார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

எனது இந்தப் பயணத்தை தமிழகத்தில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், இந்தப் பயணம் வெற்றி அடைந்துவிட்டதே என கருதிய சிலர், அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நான் பணத்தை எடுத்துக் கொண்டு இங்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். நான் அரசியல் பேசுவதாக நீங்கள் நினைக்கக் கூடாது. 

நான் பணத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களின் மனங்களை தான் எடுத்து வந்திருக்கிறேன். 

அது தான் உண்மை. 

எங்கிருந்தாலும் தமிழர்களின் உள்ளத்தில், தமிழர்களுடன் இருக்கிறோம் என்பது தான் எனக்கு முக்கியம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் ரூ.5,000 கோடி எடுத்துக் கொண்டு துபாய் சென்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். 

முதல்வர் குடும்பத்துடன் பயணம் சென்று ஏன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்படி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

என்னென்ன துறைகளில் முதலீடு: 

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ஜவுளித் துறை சார்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

உணவு துறை சார்ந்த நிறுவனத்துடனும், மருத்துவத் துறை சார்ந்த நிறுவனத்துடனும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சரக்கு போக்குவரத்து நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும், உணவு பதப்படுத்தல் நிறுவனமான லுலு நிறுவனத்துடன் ரூ.3,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 6 நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று முதல்வர் தெரிவித்தார்.


----------------------------------------------------------------------------

அடுத்தடுத்து பற்றி எரியும் இ-பைக்

வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்த போட்டோகிராஃபர் துரைவர்மா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை மார்ச் 26-ம் தேதி அதிகாலை தனது வீட்டில் நிறுத்தி சார்ஜ் செய்தபோது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் துரைவர்மா(49) மற்றும் அவரது ப்ரீத்தி(13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் தேவராஜ் என்பவரது ஏழு மாதங்களுக்கு முன்பு 90 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். தேவராஜ் வெளியூருக்கு சென்ற நிலையில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் மார்ச் 28-ம் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் அருகில் இருந்த மற்றோரு பைக் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த தேவராஜ் தாய், மனைவி மற்றும் மகன் ஆகியோர் பின்வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர்.

திருச்சி எலக்ட்ரிக் பைக் விபத்து

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள படுகைக்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ்(27). சிங்கப்பூர் செல்வதற்காக தனது எலக்ட்ரிக் பைக்கில் மணப்பாறைக்கு சென்றுள்ளார். ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள தனது நண்பர் பாலு என்பவரது கடையில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பாலு நேற்று காலை சுமார் 7 மணிக்கு பைக்கை எடுத்து வெளியே நிறுத்தியுள்ளார். அப்போது பைக்கின் பேட்டரி பகுதியில் இருந்து புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இ-பைக்: பாதுகாப்பு அவசியம்

எலக்ட்ரிக் பைக்குகளை பொறுத்தவரையில் அந்தந்த நிறுவனங்கள் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே சார்ஜ் செய்ய வேண்டும் எனவும், வாகனங்கள் பாரமரிப்பு குறித்து நன்கு அறிந்த பிறகு இ-பைக்குகளை வாங்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?