இடுகைகள்

தெய்வம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெய்வம் நின்று கொல்லும்?

படம்
பல்லாயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆண்டர்சன் மரணம் அடைந்தான் . அமெரிக்காவில், ஹூஸ்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை, மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இயங்கி வந்தது.  1984–ம் ஆண்டு, டிசம்பர் 3–ந் தேதி, இந்த ஆலையில் மீத்தேல் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிவு ஏற்பட்டது.  இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 787 பேர் பலியானதாக மத்திய பிரதேச மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறின. இ ந்த சம்பவம் நடந்து , 30 ஆண்டுகளாகியும் இன்னும் மக்கள் மனங்களில் இருந்து மறையவில்லை.இன்னமும் விச வாயு பாதிப்பில் குடி நீர் உள்ளது.பிறக்கும் குழந்தைகள் ஊனமுடன் பிறக்கின்றன. இந்த விஷவாயு கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வாரன் எம்.ஆண்டர்சன் அறிவிக்கப்பட்டார். சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆன நிலையில் அவர் போபால் வந்தார். அங்கு அவர் கைது செய்...