இடுகைகள்

“கிட்கேட்” லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

“கிட்கேட்”!

படம்
கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பதிப்பு 4.4 க்கான பெயராக ஸ்விட்சர்லாந்து நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும், “கிட்கேட்” சாக்லேட் பெயரினைச் சூட்டியுள்ளது. கிட்கேட் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்திற்கும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் கூகுள் நிறுவனத்திற்கும், இது ஒரு பெரிய விளம்பரத் தினைத் தரும். இந்தப் பெயரை அறிவிக்கும் முகமாக, கூகுள் தன் நிறுவனத் தலைமை அலுவலகத்தில், ஆண்ட்ராய்ட் இலச்சினையை, கிட்கேட் வடிவில் மிகப் பெரிய அளவில் அமைத்து நிறுத்தியுள்ளது. தன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு, உணவுப் பண்டங்களின் பெயர்களை வைப்பது கூகுளின் பழக்கமாகும். இதுவரை கப்கேக், டோனட், எக்ளேய்ர், ப்ரையோ, ஹனி கோம், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன் (Cupcake, Donut, Eclair, Froyo (short for frozen yoghurt), Gingerbread, Honeycomb, Ice Cream Sandwich மற்றும் Jelly Bean) எனப் பொதுப் பெயர்களையே வைத்த கூகுள், தன் அடுத்த ஆண்ட்ராய்ட் பதிப்பிற்கு, “கீ லைம் பை” என்ற பொதுவான பெயரைச் சூட்டும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், “கிட்கேட்” பெயர் சூட்டப்பட்டுள்ளது, பலரை வியப்பில் ஆழ்த்தியுள...