செவ்வாய், 10 செப்டம்பர், 2013

“கிட்கேட்”!


suran-


கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பதிப்பு 4.4 க்கான பெயராக ஸ்விட்சர்லாந்து நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும், “கிட்கேட்” சாக்லேட் பெயரினைச் சூட்டியுள்ளது.
கிட்கேட் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்திற்கும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் கூகுள் நிறுவனத்திற்கும், இது ஒரு பெரிய விளம்பரத் தினைத் தரும்.
இந்தப் பெயரை அறிவிக்கும் முகமாக, கூகுள் தன் நிறுவனத் தலைமை அலுவலகத்தில், ஆண்ட்ராய்ட் இலச்சினையை, கிட்கேட் வடிவில் மிகப் பெரிய அளவில் அமைத்து நிறுத்தியுள்ளது.
தன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு, உணவுப் பண்டங்களின் பெயர்களை வைப்பது கூகுளின் பழக்கமாகும். இதுவரை கப்கேக், டோனட், எக்ளேய்ர், ப்ரையோ, ஹனி கோம், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன் (Cupcake, Donut, Eclair, Froyo (short for frozen yoghurt), Gingerbread, Honeycomb, Ice Cream Sandwich மற்றும் Jelly Bean) எனப் பொதுப் பெயர்களையே வைத்த கூகுள், தன் அடுத்த ஆண்ட்ராய்ட் பதிப்பிற்கு, “கீ லைம் பை” என்ற பொதுவான பெயரைச் சூட்டும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், “கிட்கேட்” பெயர் சூட்டப்பட்டுள்ளது,
பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 இந்தப் பெயர்கள், உணவிற்குப் பின் சாப்பிடப்படும் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் பெயர்களாக இருந்தாலும், இவற்றின் வரிசையில், ஆங்கிலமொழி அகர வரிசை இருப்பதைக் காணலாம். எனவே புதிய ஆண்ட்ராய்ட் பதிப்பிற்கு கே (ஓ) எழுத்தில் தொடங்கும் பண்டத்தினை வைக்க வேண்டிய கட்டாயம்.
 அதற்காகவே, கீ லைம் பை என்ற பெயர் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கீ லைம் பை பண்டத்தின் சுவை அவ்வளவாக யாருக்கும் தெரியாததனால், இந்த முடிவிற்கு கூகுள் வந்திருக்கலாம்.
உலகெங்கும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாதனங்கள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு நாளும் 15 லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் புதிய சாதனங்களில், ஆண்ட்ராய்ட் பதிக்கப்படுகிறது. மிக அதிகமான எண்ணிக்கையில், மொபைல் சாதனங்களில் (ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி) பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் ஆகும்.இவை அனைத்திலும், இனி ஆண்ட்ராய்ட் கிட்கேட் இயங்கும் என எதிர்பார்க்கலாம்.
இனி, ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம்குறித்து யார்,எப்போது,எந்த ஆண்டில் பேசினாலும், கிட் கேட் பெயரும் கூறப்படும்.

suran
 இது நெஸ்லே தயாரிக்கும் கிட்கேட் சாக்லேட்டிற்கு, பல்லாண்டு கால விளம்பரமாக இருக்கப் போகிறது.
இந்த சிறப்பான நிகழ்வினை ஒட்டி, நெஸ்லே நிறுவனம் என்ன செய்யப் போகிறது? இதற்கென எந்தப் பணத்தையும் கூகுள் பெறவில்லை என அடித்துச் சொல்லியுள்ளது நெஸ்லே.
 நெஸ்லே இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும், நன்றிக் கடனாகவும், தன் கிட்கேட் சாக்லேட்டில், ஆண்ட்ராய்ட் இலச்சினையை அச்சடித்து வெளியிடுகிறது.
 இந்த வகையில், ஸ்பெஷலாக, 5 கோடி சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டு, உலகெங்கும், பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில்,ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட, 19நாடுகளில் விற்பனை செய்யப்படும்.
சாக்லேட் சுற்றப்படும் கவர் பேப்பரில், போட்டிக்கான அறிவிப்பு ஒன்று இருக்கும்.
வெற்றி பெறும் ஆயிரம் பேருக்கு, நெக்சஸ் 7 டேப்ளட் பிசிக்கள் வழங்கப்படும். ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு, கூகுள் பிளே ஸ்டோருக்கான 5 டாலர் மதிப்புள்ள கிரெடிட் வவுச்சர் வழங்கப்படும்.
இந்தப் போட்டி, செப்டம்பர் 6 தொடங்கி, வரும் ஜனவரி 31 வரை நடத்தப்படுகிறது.
suran
 ஏற்கனவே கிட்கேட் மக்களிடையே உலக அளவில் பிரபலமான ஒரு சாக்லேட். \
எனவே, புதியதாக வர இருக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 4.4 பதிப்பு, சரியாக இயங்கவில்லை என்றாலோ, அல்லது மால்வேர் போன்ற கெடுக்கும் புரோகிராம்கள் உள்ளே நுழைய இடம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டாலோ, கிட் கேட் சாக்லேட்டின் பெயர் கெட்டுப் போகும்.
ஸ்மார்ட் போன் சந்தையில் இயங்கும் போன்களில், 79% போன்களில், ஆண்ட்ராய்ட் இயங்குகிறது. இந்த புதிய பெயர் சூட்டல், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்குக் கூடுதல் விளம்பரத்தினையும், ஆரவாரத்தினையும் தந்துள்ளது.
அடுத்து, இதனை எதிர் கொள்ளும் வகையில், ஆப்பிள் நிறுவனம் என்ன செய்யப் போகிறது?
  செப்டம்பர் 10ல், இதன் புதிய ஐபோன் வரலாம் .
பட்ஜெட் விலையில், ஆப்பிள் ஐபோன் ஒன்றை அறிமுகப்படுத்தி, அனைத்து நிலை மக்களும், ஐபோனைப் பயன்படுத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------