அப்பா என்றழைக்காத ....
சமீபத்தில் சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்பட்டுள்ள, 712 குடியிப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இன்றைக்கு மாணவ ,மாணவியர் இளையதலைமுறையினர் எல்லாம் என்னை பார்த்து, ‘அப்பா அப்பா’ என்று அழைக்கக்கூடிய உணர்ச்சிகரமான, நெகிழ்ச்சியான காட்சிகளை பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சிறப்பான ஆட்சிக்கு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை எங்கள் அம்மா , எங்கள் அம்மா என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் குறிப்பிடுவார்கள். இப்போது, அம்மா என்ற வார்த்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் ‘ அப்பா’ என்ற வார்த்தையை அடையாளப்படுத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் , “இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு. மானம், சூடு , சுரணை உள்ளவர்கள் தந்தை...