அப்பா என்றழைக்காத ....
சமீபத்தில் சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்பட்டுள்ள, 712 குடியிப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இன்றைக்கு மாணவ ,மாணவியர் இளையதலைமுறையினர் எல்லாம் என்னை பார்த்து, ‘அப்பா அப்பா’ என்று அழைக்கக்கூடிய உணர்ச்சிகரமான, நெகிழ்ச்சியான காட்சிகளை பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சிறப்பான ஆட்சிக்கு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார்.
வார்த்தைக்கு வார்த்தை எங்கள் அம்மா , எங்கள் அம்மா என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் குறிப்பிடுவார்கள். இப்போது, அம்மா என்ற வார்த்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் ‘ அப்பா’ என்ற வார்த்தையை அடையாளப்படுத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் , “இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு. மானம், சூடு , சுரணை உள்ளவர்கள் தந்தையை பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.” என காட்டமாக பேசியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலும் சண்முகம் கண்டிக்கப்பட்டார் .
இந்த நிலையில் கடலூரில் ‘அப்பா’ (Anaithu Palli Parents teachers Association)என்ற ஆப்பை தொடங்கி வைக்க கடலூருக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அப்போது, சாலையோரங்களில் விழுப்புரம் மாவட்டம் சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர்களில், அப்பா என்ற வார்த்தையை அதிகமாக பார்க்க முடிந்தது.
மரக்காணம் கூட்ரோடு அருகே இறையானூரில் பள்ளி குழந்தைகளை வைத்து ஸ்டாலினை பார்த்து அப்பா அப்பா என்று அழைத்தனர்.இளையதலைமுறையின் கோஷத்தை கேட்டபடியே முதல்வர் ஸ்டாலின் கடலூர் சென்றடைந்தார்.

‘அப்பா’ என்ற புதிய ஆப்பை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
அப்பா ஆப் செயல்படும் முறை குறித்த வீடியோவும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்களை உள்ளடக்கிய செயலியாக அப்பா ஆப் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ , மாணவிக
முள்ளங்கி
குளிர்காலத்தில் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால்தான் இந்த சீசனில் அழகுடன் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் விரும்புகிறார்கள். எனவே குளிர்காலம் நெருங்க நெருங்க பச்சைக் காய்கறிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

பச்சை காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பச்சைக் காய்கறிகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த பச்சை காய்கறிகளில், முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் காய்கறிகளில் ஒன்றாகும்.
முள்ளங்கியின் ஊட்டச்சத்தைப் பற்றி பேசுகையில், இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அவை அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
இது தவிர, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
HKU5-CoV-2 என்ற வைரஸ்
Read more at: https://tamil.oneindia.com/news/international/newly-discovered-hku5-cov-2-virus-what-are-the-symptoms-how-is-it-spread-682259.html
வூஹான் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர். வவ்வால்களிடம் இருந்து பரவக் கூடிய இந்த வைரஸ், விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படும் இந்த வைரஸ், ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டது.
இந்தகொரோனா வைரஸ் பெருந்தொற்று கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை உலுக்கிவிட்டு சென்றது. இந்த வைரஸ் சீனாவில் இருந்தே பரவியதால், சீனாவில் இருந்து வெளிப்படும் வைரஸ்கள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள வவ்வால்களிடம் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவக் கூடியது. சளி, சிறுநீர், மலம் உள்ளிட்ட உடல் திரவங்களில் இருந்து இந்த வைரஸ் பரவும்.