புதன், 25 ஜனவரி, 2017

உருளைச் சாறு


உருளைக் கிழங்கை பெரும்பாலோனோர் வறுத்தும், அவித்தும் சாப்பிடுவதை விரும்புவார்கள்.
அதனை பச்சையாக சாறு எடுத்து குடித்தால் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்???
பலவித நோய்கள் குணமாகின்றன. வராமலும் தடுக்கப்படுகின்றன.
ஒரு நடுத்தர உருளைக் கிழங்கை எடுத்து நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இதனுடன் ஒரு கப் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
பின் இதனை வடிகட்டி பருகவும்.
உங்களுக்கு உடலில் போட்டாசியம் அதிக அளவு அல்லது குறைவான அளவு இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆர்த்ரைடிஸ் 
ஆர்த்ரைடிஸான்ல் உண்டாகும் மூட்டு இணைப்புகளில் வலி மற்றும் கழுத்து, தோள்பட்டைகளில் உண்டாகும் வலிகளை குறைக்கும்.
குறிப்பாக குளிர்காலத்தில் தான் மூட்டு மற்றும் எலும்பு வலிகளால் பாதிக்கப்படுவார்கள். அந்த சமயங்களில் மிகவும் நல்லது.
அமில  சம நிலை
உடலில் அதிக அமிலத்தன்மை இருந்தால் நுண் கிருமிகள் விரைவில் உருவாகும்.அதற்கேற்ப சூழ் நிலை இருப்பதால் பல மடங்கு பரவி நோய்களை உண்டாக்கும்.
உருளைக் கிழங்கு சாறு குடிப்பதால் அமிலத்தன்மை குறைந்து அமில காரச் சம நிலை சமமாகும். இதனால் உண்டாகும் தொற்றுக்கல் மற்றும் நோய்களை தடுக்க முடியும்.
 தேமல்
சருமத்தில் தொற்றினால் அல்லது அலர்ஜியினால் உண்டாகும் தேமல், படை மற்றும் அலர்ஜி இருக்குமிடத்தில் உருளைக் கிழங்கு சாறை தினமும் தடவி வாருங்கள். விரைவில் அவை சருமத்தை குணப்படுத்தும். தொற்றை போக்கும்.
வாத ரோகம் (Gout) யூரிக் அமிலம் சில பிரச்சனைகளால் உப்பாக மூட்டுகளின் இணைப்பில் தங்கி வலியை உண்டாக்கும்.
குறிப்பாக கால் கட்டை விரலில் உண்டாகும் இந்த (Gout) பிரச்சனைக்கு சிறந்த தீர்வு இந்த உருளைக் கிழங்கு சாறு.
இது யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. சிறு நீரகத்தையும் சுத்தப்படுத்தும். காலை, மாலை என இரு வேளை இந்த சாறை அருந்துங்கள்.
நச்சுக்கள் 
உடலில் தங்கப்படும் நச்சுக்கள் மோசமான எதிர்மறை விளைவே நமக்கு தரும். அவற்றை எளிய முறையில் அகற்ற வேண்டுமென்றால் நீங்கள் உருளைக் கிழங்கு சாறை தினமும் குடித்துப் பாருங்கள்.
================================================================================
இன்று ஜனவரி 25:
 மொழிப்போர் தியாகிகள் தினம்..!!
*******************************************************************
இன்றைய தமிழக மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம் ஜல்லிக்கட்டு தடையை நீக்கி இந்தியாவையே அதிரவைத்தது என்றால்.
இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல் மாணவர் எழுச்சி போராட்டம் இந்திய அரசியலையே மாற்றியது.
தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை அகற்றியது.அதன் பின்னர் திமுக ஆட்சி மலர்ந்தது.
அன்றைய மாணவர் எழுச்சியில் ஆட்சியை பறி கொடுத்த காங்கிரசு இன்றுவரை மீளப்பெறவே இயவில்லை.காங்கிரஸ் மட்டுமல்ல தேசியக்கடசிகள் என்று கூறிக்கொள்ளும் எந்தக்கட்சியும் தமிழ் நாட்டில் கால் பாதிக்க இயலவில்லை.

மொழிப்போர் எனப்படும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்த தினம் இன்று . 1937 இல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்ட பொழுது ராஜாஜி ஹிந்தி படிப்பதை மேனிலை கல்வியில் கட்டாயம் ஆக்கினார். 
குழந்தைக்கு தாய் கட்டாயப்படுத்தி தான் பாலூட்ட வேண்டும் என்று விளக்கம் தந்தார். ஹிந்தி ரயில் வண்டி அதில் போனால் வேகமாக முன்னேறலாம் என்றும் சொன்னார்.
பெரியார் கொதித்து எழுந்து சுயமரியாதை இயக்கத்தின் மூலமும் , நீதிக்கட்சியின் மூலமும் போராட்டங்கள் நடத்தினார். 
ஹிந்தி மற்றும் சமஸ்க்ருதத்தை தமிழுக்கு பதிலாக திணிக்க பார்க்கிறார்கள் என்கிற எண்ணம் வலுப்பெற்று போராட்டங்கள் நடைபெற்றன . பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர் .
தீரர் சத்தியமூர்த்தியும் ராதாகிருஷ்ணன் அவர்களும் காங்கிரசிலேயே ஹிந்தி திணிப்பை எதிர்த்தார்கள்; எனினும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார் ராஜாஜி.
இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலேய அரசு போலவே கிரிமினல் சட்டத்தை தாகூர் மற்றும் ஜின்னாவின் எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமலே பயன்படுத்தினார் ராஜாஜி. நடராசன் என்ற இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக 1939 ஜனவரி 15 அன்று உயிர் நீத்தார். 
அவரையடுத்து திரு. தாளமுத்து என்ற இளைஞரும் சிறைக்கொடுமை தாங்காது 1939 மார்ச் 13ஆம் நாளன்று சிறைச்சாலையிலேயே இயற்கை எய்தினார்.. கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் என்று இரண்டுஉயிர்கள் போன பின்னும் போராட்டங்களை விமர்சித்தார் ராஜாஜி.
பெண்கள் பலர் குழந்தைகளோடு சிறை சென்றனர். பெண்களை போராட தூண்டியதற்காக பெரியார் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆறு மாதத்தில் உடல்நலம் காரணமாக விடுவிக்கப்பட்டார் .தனித்தமிழ் இயக்கம் வளர்ந்ததும் அப்பொழுது தான்.
அதற்கு பிறகு 1939 இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலக கவர்னர் மீண்டும் அச்சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டார் .காங்கிரஸ் விடுதலைக்கு பிறகு ஆட்சிக்கு வந்ததும் எல்லா மாநில அரசுகளையும் ஹிந்தியை கட்டாயம் ஆக்க சொன்னது. 
முதலில் தமிழ் பேசும் பகுதியில் இன்னொரு மொழியாக தேர்வு செய்துகொண்டு படிக்க வேண்டிய பாடம் என்று பல மொழிகளை கொடுத்து அதில் ஹிந்திக்கு மட்டும் ஆசிரியர்களை அதிகமாக நியமித்து ஹிந்தி திணிப்பை மறைமுகமாக ஆரம்பித்தது ஓமந்தூரார் அரசு. 
பின்னர் குறைந்தபட்ச மதிப்பெண்களை பிள்ளைகள் பெற்றாலே உயர்கல்விக்கு தகுதி பெறுவர் என்றது இன்னமும் கொதிப்பை அதிகப்படுத்தியது .
பெரியார் போராட்டக்களம் புகுந்தார் ; ம.பொ .சிவஞானம், திருவி.க. முதலியோரும் எதிர்ப்புகளில் கலந்து கொண்டனர் ; ஒரு வழியாக அரசு போராட்டக்காரர்களின் மீதான வழக்குகளை திரும்பபெற்றது ;கட்டாயம் என்பது விருப்பப்பாடம் என்றானது.
இதற்கு முன்னமே அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் பொழுது ஹிந்தி தான் தேசிய மொழியாக வேண்டும் என ஒரு குழு விரும்பியது (அதிலேயே சுத்தமான ஹிந்தி ,ஹிந்துஸ்தான் என இரண்டு குழு இருந்தது தனிக்கதை ). அதை எதிர்த்து தென்னக மற்றும் வங்கத்தை சேர்ந்த குழு உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர் ;
 இறுதியில் தேசிய மொழி என்று ஒன்று இல்லாமலேயே, முன்ஷி அய்யங்கார் திட்டப்படி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழிகள் ஆயின ; பதினைந்து வருடங்கள் வரை இதே நிலை தொடரும் என்றும் , ஐந்து ஆண்டுகள் கழித்து எப்படி படிப்படியாக ஆங்கிலத்தை விளக்கி ஹிந்தியை தேசிய மொழியாக்குவது என பரிந்துரைகள் தர ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்றும் குறிக்கப்பட்டன.
படிப்படியாக அரசு ஹிந்தியை வளர்த்தது ;சட்ட ஆணைகளில் ஹிந்தியை பயன்படுத்தியது . டால்மியாபுரத்தை கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்யசொல்லி 1953 போராட்டம் நடந்து இரண்டு திமுக தொண்டர்கள் உயிர் விட்டார்கள் . 
அண்ணா, பெரியார் ,முந்தைய ஹிந்தி ஆதரவாளர் ராஜாஜி ஆகியோர் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர வேண்டும் என்று 1956 இல் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே அரசியலமைப்பில் சொன்னபடி கேர் கமிஷன் அமைக்கப்பட்டது ; ஹிந்தியை எப்படி முழுப்பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் என அது பல்வேறு யோசனைகள் தந்தது .
 அக்குழுவின் தென்னக மற்றும் வங்க உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர் . கோவிந்த் வல்லபாய் பந்த் தலைமையில் இதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது .அதுவும் அதையே சொன்னது . பத்தொன்பது வகையான ஹிந்தி மொழிகள் பேசப்பட்டுக்கொண்டு இருந்த சூழலில் 36 கோடி மக்களில் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டும் பேசிய கடீபோலி ஹிந்தியை தென்னகத்துக்கும் திணித்தார்கள் மக்கள் மீண்டும் போராட எழுந்தார்கள் .
நேரு ,1959 இல் "ஹிந்தி பேசாத மாநில மக்கள் ஆங்கிலத்தை பயன்படுத்தி கொள்ளலாம் ;ஹிந்தி திணிப்பு செய்யப்பட மாட்டாது என்றார் . பந்த் ரெண்டு ஆண்டுகள் போராடி சாதித்தவற்றை பிரதமர் இரண்டு நிமிடங்களில் கெடுத்து விட்டார் என புலம்பினார் ". 
1959 இல் தந்த உறுதியை நிஜமாக்க நேரு சட்ட வரைவை கொண்டு வர அதில் ஆங்கிலம் தொடரலாம் என்கிற வார்த்தையை, கண்டிப்பாக தொடரும் என மாற்றச்சொல்லி கேட்டார்கள் தமிழர்கள் . 
shall be என்கிற வார்த்தையை போட்டுவிட்டு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக தொடரலாம் என்கிற இடத்தில் may be போட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நேரு தொடரலாம் என சொன்னதை தொடராமலும் போகலாம் என வருகிறவர்கள் கொள்வார்கள் என பயந்தார்கள் .
அதுவே நடந்தது, சாஸ்திரி பிரதமர் ஆனதும் 15 வருடகால காலக்கெடு முடிந்தது என சொல்லி கட்டாய ஹிந்தியை அறிமுகப்படுத்தினார் .
தமிழகம் கொதித்து எழுந்தது . 7
0 பேர் அதிகாரப்பூர்வ பதிவுகளின் படி தீக்குளித்து கொண்டனர்.
 ஐம்பாதாயிரம் மாணவர்கள் ஊர்வலமாக போனார்கள் ;
 கலவரங்கள் வெடித்தன. 
பாரா மிலிடரி படைகள் வந்தன. பக்தவச்சலம் முரண்டு பிடித்தார் .
ஒ.வி.அழகேசன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் பதவி விலக அதை சாஸ்திரி ஏற்றார் ;
 பின்னர் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பிரிய வழி வகுக்காதீர்கள் என்று சொன்னதற்கு பிறகு ஹிந்தி திணிப்பு நின்றது. அதற்கு பிறகு தேர்வுகளில் ஆங்கிலமும் இருக்கும் என அறிவித்தார்கள் .மும்மொழி கொள்கையை கொண்டு வந்தார்கள் ; அதை எதிர்த்தும் தமிழகத்தில் போராட ஹிந்தி கற்கிற வாய்ப்பு பறிபோனது. 
1986 இல் நவோதயா பள்ளிகள் தமிழகம் வரும்பொழுது அதை ஹிந்தி திணிப்பு என கலைஞர் எதிர்த்து போராட்டம் நடத்த இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் ஆனது தமிழ்நாடு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்திக்கான கால அளவை அதிகப்படுத்துவது, மொரார்ஜி தேசாய் காலத்தில் துணை கமிஷனர் அல்லது அதற்கு மேலான பதவியில் உள்ள ஹிந்தி கற்காத மாநில அதிகாரிகள் கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்று உத்தரவு போட்டது,.
 ராஜீவ் காந்தி காலத்தில் ஹிந்தி வாரம் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை வந்தது,மத்திய அரசு அதிகாரிகள் ஹிந்தியிலேயே கையெழுத்து போடவேண்டும் என்கிற உத்தரவு, என்.சி.ஆர்.டி. புத்தகங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர்களை முட்டாள்கள் என்று சித்தரித்த கேலிச்சித்திரம் இடம் பெற்றது என்று ஹிந்தி திணிப்புக்கான ஆதரவும், ஹிந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பை ஹிந்திக்கு எதிரான எதிர்ப்பாகவும் பதிவு செய்வதும் தொடர்கிறது. 
================================================================================
ன்று,
ஜனவரி-25.

 • இந்திய தேசிய வாக்காளர் தினம்

 • ரஷ்யா மாணவர் தினம்
 • மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1755)

 • நாடுகளின் அணி உருவாக்கப்பட்டது(1919)
 • இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சல பிரதேசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1971)

 • "இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜனவரி 25ம் தேதி உதயமானது.
 •  489 லோக்சபா தொகுதிகள். 4500 சட்டசபைத் தொகுதிகள். 
 • 1951 அக்டோபரில், முதல் தேர்தல் துவங்கி மூன்று மாதங்கள் நடந்தன. 
 • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி, தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடும் வகையில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது."
========================================================================================
வன்முறையில் இறங்கியது அரசுதான்.


செவ்வாய், 24 ஜனவரி, 2017

இவர்களின் நோக்கம்

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்,நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும் உண்மை இதுதான்.
இறைநாதனுகளுக்கு முன்னரே தளபதி ஸ்டாலின்" நமக்கு நாமே 'என்று தமிழகம் முழுக்க வளம் வந்து மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்த பொது மதுரை பகுதி மக்களால் வைக்கப்பட்ட கோரிக்கை "ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும்.
திமுக ஆடசியில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு ஜெயலலிதா ஆட்சியில் 2014 இல் இருந்து நடைபெறவில்லை.
அப்போது ஸ்டாலின் ஜல்லிக்கட்டு நடக்க திமுக முயற்சி எடுக்கும்.அதற்காகப் போராடும் என்று வாக்களித்தார்.
நமக்கு நாமே முடிந்த பின்னர் அலங்காநல்லூர் சென்று மாபெரும் உண்ணாவிரதம்,ஆர்ப்பாட்டம் என்று நட்ச்த்தி மத்திய ,மாநில அரசுகள் பார்வையை அதன் பக்கம் திருப்பினார்.
திமுக முன்னெடுக்கிறது என்றாலே அதற்கு எதிராக மட்டுமே செயல் படும் ஜெயலலிதா இதை ஜல்லிக்கட்டை கண்டு கொள்ளவே இல்லை.அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அப்போதே நடவடிக்கை எடுத்தல் ஜல்லிக்கட்டு நடந்திருக்கும்.
இப்போது கூட ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுதான் அவசர சட்டம் பிறப்பித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது. 
இதை வானளாவ அதிகாரம் வைத்திருந்த ஜெயலலிதா,இன்று ஜல்லிக்கட்டு நடக்க வைத்ததற்காக மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கும் சசிகலா உடன் பிறவா சகோதரிகள் அப்போது ஏன் செய்யவில்லை.
மாணவர்கள் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே 3ம் தேதியே அலங்கா நல்லூரில்  ஜல்லிக்கட்டு நடத்த ஸ்டாலின் மக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மற்ற போராட்டங்கள் எல்லாம் அதன் பின்னர்தான்.
ஆக  இன்று ஜல்லிக்கட்டு நடத்த்த ஆணையை பெற மூலக்காரணம் திமுக,ஸ்டாலின் தான் .
ஆனால் சில குழப்பவாதிகள் இதிலும் திமுகவின் பங்கை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.திடீரென போராளிகளாக குதித்து இவர்கள் அரசியல் கடசிகள் யாரும் குறிப்பாக திமுகவினர் பங்கு பேராக் கூடாது என்று கூறியவர்கள்.
அரசு  ஜல்லிக்கட்டு நடத்த்த அனுமதித்தப்பின்னரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் என்ன காரணத்துக்காக காவல் துறையுடன் மோதினர்.அப்படி மோதி அதை தீவைப்பு,பெட்ரோல் குண்டு வீச்சு என்று போராட்டக்களத்தை கலவரமாக்கி அதுவரை ஆதரவு தந்த பொதுமக்களை கூட போராட்டக்காரர்களை விமர்சிக்கும் அளவு கொண்டு போனது ஏன் ?
தங்களால்தான் ஜல்லிக்கட்டு  வந்தது என்று பெயரை தட்டிக்கொண்டு போவதற்கும்,இப்பெரிய அமைதி போராட்டத்தை தாங்கள்தான் நடத்தியதற்காக மக்களிடம் பெயர் பெறவும்தான்.
இந்த போராட்டக்களத்தில் இணைந்தவர்கள் அனைவரும் நோக்கத்தால் கூடியவர்கள்தானே ஒழிய தங்களுக்கென்று அரசியல் ,மாறுபட்ட கொள்கை இல்லாதவர்கள் அல்ல.எல்லாக்கடசியினரும் கலந்து கொண்டனர்.எல்லா மதத்தினரும் கலந்து கொண்டனர்.எல்லா சாதியினரும்தான் கலந்து கொண்டார்கள்.
இப்போது சிலர் இதோ இவர் திமுக,அவர் திமுக என்று புகைப்படத்த்தை காட்டி கூறுகின்றனர்.திமுகவினர் கலந்து கொண்டதில் என்ன தவறுயிருக்கிறது.?அவர்கள் தமிழர்கள்தான்.
ன்று போராட்டக்காரர்கள் மண்டையை பிளக்கும் காவல் துறையை சேர்ந்த நண்பர்களே அன்று மேடையில் ஆதரவளித்து பேசினார்களே அது தவறா ?
உணர்வு இவர்களுக்கு மட்டுமே ஒட்டு மொத்த குத்தகையா ?
திமுகவினர் உடன்பட மக்கள் அனைவரும் கூடியதால்தான் ஜல்லிக்கட்டு  போராட்டம் லட்சக்கணக்கில் மக்களை கொண்ட சுனாமியாக மத்திய,மாநில அரசுகளைத்தாக்கியது.
எப்போதும் தமிழர் நலனுக்கு உழைப்பதும்,நலிந்தோருக்கு சமூகநீதி கிடைக்கசெய்வதும் திமுகதான்.
ஆனால் அதிகமாக விமர்சிக்கப்படுவதும் அதே திமுகதான்.இது ஒன்றும் புதியதல்ல.
கலைஞரில் ஆரம்பித்து தற்போது ஸ்டாலினுக்கும் தொடர்கிறது.அதற்காக தனது செயல்பாடுகளை திமுக முடக்கிக்கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுக்கப்போனதில்லை .
திமுக உள்ளே வரக்கூடாது என்று கூறிய அதே குழப்பவாதிகள்.இந்த வான் முறை காலத்துக்கு ஸ்டாலின் ஏன் வரவில்லை.போராடவில்லை என்கிறார்கள்.
மற்ற நகரங்களில் காவல்துறை வேண்டுகோள் விடுத்தவுடன்,அவசர ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன் கபோராட்டக்காரர்கள் சிறு சலசலப்புடன் களைந்து சென்று விட மெரினாவில் ,கோவையிலும் மட்டும் கலவரம் காவல்துறைக்கு எதிராக வெடிக்க காரணம்?
கோவை காவல்துறை ஆணையர் திரு. அமல் ராஜ் சன் நியூஸ் நேரலை நேர்முக பேட்டியில்..
,"பொதுமக்கள்,மாணவர்கள் கலந்து சென்றபின்னர் இருந்து கலவரத்தை தூண்டியதாகபிடிபட்டவர்கள்  நாம் தமிழர், மே 17, மற்றும் நக்சல் பாரி இயக்கங்களின் ஜனநாயக போர்வை குழுக்கள் ஆகியவையை சேர்ந்தவர்கள்தான்.இவர்கள்தான் திட்டமிட்டு  போராட்டத்தில் வன்முறையை தூண்டி உசுப்பி விட்டது".
 என்று பகிரங்கமாக ஆதாரத்துடன் கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகளே போதும் இவர்களின் நோக்கம் என்னவென்று தெரிய.

அவசர சட்டம் இயற்றியதுமே முடிந்து போன போராட்டத்தை, தனிதமிழ்நாடு கிடைக்கும் வரை போராடுவோம் ஒரவுகளே என உசுப்பி விட்டு அப்பாவி மாணவர்களை அடிவாங்க வைத்து ஜல்லிக்கட்டுக்கான தமிழர் உணர்வுமிக்க போராட்டத்தை கேவலமாக முடிக்க காரணம் நாம் தமிழர், மே 17ஆகியவையை சேர்ந்தவர்கள்தான்"

=======================================================================================
ன்று,
ஜனவரி-24.
 ஹோமி பாபா

 • தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)
 • பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)
 • ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)
 • முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)
 • இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)
=======================================================================================


திங்கள், 23 ஜனவரி, 2017

வீரம் மட்டுமல்ல விவேகமும் முக்கியம்

இதுவரை இல்லாத அளவு இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் பாதிப்பினால்  தமிழ் நாட்டில் ஒரு மாபெரும் போராட்டம் நடந்துள்ளது.அது மத்திய அரசு வரை அசைத்துப்பார்த்துள்ளது.
இப்போராட்டத்துக்கு எல்லா தரப்பு மக்களும் அதாவது இதுவரை அரசியல்,ஆடசி அத்துமீறல்களுக்கு எதிராக வாயைத்திறக்காமல் உள்ளக்குள்ளே புழுங்கிக்கொண்டிருந்த நடுத்தர மக்கள் அனைவரும் ஒன்று திரண்டதுதான் இந்த ஜல்லிக்கட்டு அமைதி போராட்டத்தின் வெற்றி.
இப்போராட்டத்தை வெறும் ஜல்லிக்கட்டு தடை நீக்க மட்டுமான போராட்டமாக மட்டும் கருதினால் அது தவறு.
இதுவரை மத்திய மோடி அரசு தமிழ் நாட்டுக்கு எதிராக செய்துவந்த நடவடிக்கைகள்,காவிரி பிரச்னை,நீட் தேர்வு,பணம் மதிப்பிழக்களில் ஏற்பட்ட கசப்புகள்,வாரா ,வரம் பெட்ரோல் விலை உயர்வு,முதலாளிகளுக்கு ஆதரவான அரசு நடவடிக்கைகள்  போன்றவைகளும்  ,தமிழ்நாட்டில் நடக்கும்  அசிங்கமான அதிகாரப்போட்டி,அமைசர்கள் தங்கள் பணிகளை செய்யாமல்,மக்கள் நலனுக்கும்,விவசாயிகள் நலனுக்கும்,குடிநீர் வசதிக்கும் ஒன்றும் செய்யாமல் ஜெயலலிதா கல்லறை ஈரம் காயும் முன்னரே " சின்னம்மா"காலில் விழுவதையே முழுநேரப்பணியாக செய்து கொண்டிருப்பதை பார்த்து உண்டான வெறுப்பினாலும் தான் தங்கள் மத்திய,மாநில அரசுகளுக்கு  எதிராணா தங்கள் கோபத்தைக்காட்ட  இந்த ஜல்லிக்கட்டை ஒரு  களமாக பயன் படுத்திக்கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஒரு தலைமை இல்லாதது மகிழ்சசியை கொடுத்தாலும் அதுவே வருத்தத்தை தருகிறது.
தமிழகம் முழுக்க எழுந்த மோடி எதிர்ப்பு அலைக்கு மத்திய பாஜக அரசு பயந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செயல் பட்டது.
உச்ச நீதிமன்ற ஜல்லிக்கட்டுக்கு எதிரான  தீர்ப்புக்கு அடிப்படையான காட்சிக்கான விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க மத்திய அமைசச்சரவை ஒப்புதல் அளித்தும் விட்டது.
இனி பிட்டாவோ ,வேறு அமைப்புகளோ ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தாலும் தடை கிடைப்பது அரிது.
இந்த வெற்றியை போராட்டக்களத்தில் உள்ளவர்கள் உணர்ந்திருந்தாலும் சில குழப்பவாதிகள் பேச்சினால்
தங்கள் போராட்டம் தொடரும் என்பது சரியான முடிவல்ல.
ஜல்லிக்கட்டு தடை நீங்கி விட்டது.இதுவரை நடந்த போராட்டம் இதற்காகத்தான் என்றால் போராட்டம் வெற்றி என்று விவேகத்துடன் கலைவதுதான் புத்திசாலித்தனம்.
அப்படியே அடுத்த ஆண்டு நடக்காவிட்டால் அப்போது ஏமாற்றப்பட்டதாக மீண்டும் களம்காணலாம்.அதற்கு பொதுமக்கள் ஆதரவு இதே போல் கிடைக்கும்.
இப்படி இல்லாமல் போராடுவதும்,போராட்டம் தொடரும் என்பது பல விளைவுகளை உண்டாக்கி விடும்.
காலத்தில் இருக்கும் இளம் ரத்தங்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லாததுதான் இதற்கு கரணம்.அரசியல்வாதிகளை ஒதுக்கியது சரி.ஆனால் இவர்கள் போராட்டத்துக்கு முன்னரே ஜல்லிக்கட்டுக்காக போராடிய அரசியல்கட்சிகளை அவமாக சிலர் பேசுவது நல்லதல்ல.

அவசர சட்டம் வந்தபின்னரும் சிலர் போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பை பார்த்து பொதுமக்கள் சிலர் பேசிக்கொண்டதை காலத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
"அதுதான் ஜல்லிக்கட்டு நடக்கலாம் என்று சொல்லி விட்டார்களே.பின் எதற்கு இவர்கள் போராடுகிறார்கள்.?"
சரியான கேள்விதான்.
இந்த கேள்வி போராட்டக்காரர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆதரவு திரும்ப வைத்துவிடும் அபாயம் உள்ளடக்கியது.
மேலும் இதுவரை போராட்டக்கக்களத்துக்கு வலு சேர்த்த நடுத்தர மக்கள்,பொதுமக்கள் ,குழந்தைகள்,சிறார் கூட்டம் முன் போல வருவது இருக்காது.
அவரவர் வேலைக்கு செல்ல வேண்டாமா?பள்ளிக்கு சிறார்களை அனுப்ப வேண்டாமா?உழைத்தால்தான் அவர்களுக்கு ஊதியம்.
சில மாணவர்கள் மட்டும் கல்லூரியை புறக்கணித்து விளையாட்டுத்தனமாக கலந்து கொள்ளலாம்.பின் அவர்களும்பெற்றோர் பேச்சை கல்லூரிகளுக்கு சென்று விடுவார்கள்.
வியாபாரிகளும் ஜல்லிக்கட்டு நடக்க ஆணை வந்தவுடன் தங்கள் வியாபாரத்தை கவனிப்பார்களா?ஆதரவை தருவார்கள்.
ஒட்டு மொத்த தமிழகம் நடத்திய வேலை நிறுத்தம் போல் இனி நடக்கவே நடக்காது.
எனவே கிடைத்த வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விவேகத்துடன் கலைவதுதான் காலத்தில் இருப்பவர்களுக்கு நல்லது.போராட்டம் திசை மாறுகிறது.
நாம் தமிழர்,ஏ.பி.வி.பி,ஆர்.எஸ்.எஸ்,அமைப்பினர் உள்ளே புகுந்துள்ளனர்.இவர்கள் நடவடிக்கைகள் போராட்டத்தை களங்கப்படுத்தவே செய்யும்.
நாம்தமிழர் கடசியினர் ஜல்லிக்கட்டு நடத்துகிறேன் என்று கூறி பசு மாட்டையும்,உழவு மாட்டையும் கொடுமைப்படுத்திய காணொளிகள் தற்போது பீட்டா அமைப்பு கையில் அது ஜல்லிக்கட்டுக்கு எதிரான ஆதாரமாக அவர்கள் பயன் படுத்தலாம்.
மேலும் போராட்டக்களத்தில் அவர்கள் எழுப்பிய குரல்கள் எல்லாம் மத்திய ,மாநில அரசுகளை எதிர்த்தல்ல.நமக்கு நாமே  நடக்கிற காலத்திலேயே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்,உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலினை,திமுகவை எதிர்த்துதான்.
இன்றுவரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் இயக்கம் திமுகதான்.அதை கொச்சை படுத்தியதுதான் நாம்தமிழர் கடசி செயல்பாடு.
இவர்கள்தான் தற்போது காலத்தில் மிச்சம் .

நாம் தமிழர்,ஏ.பி.வி.பி,ஆர்.எஸ்.எஸ் மாணவர் இளைஞ்சர் அமைப்புகள் உடன் இணைந்து நடத்த்தும் வருங்கால போராட்டங்கள் இதுவரை நடந்த போராட்டத்தையே கேலிக்குரியதாக்கி விடும்.
பெற்ற வெற்றியையே கூறிக்கொள்ள இயலாதபடி நீர்த்து போகச்செய்து விடும்.
ஸ்டாலினை பேசாமல் இருக்க சொல்வதும்,பேசாமல் இருந்தால் திமுக இதுவரை ஒன்றுமே சொல்லவில்லை என்பதும் என்ன நிலைப்பாடு என்பதையும்,அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நடத்த வந்த முதல்வரை வழி மறித்து விரட்டி அடிப்பதும் என்னவகையான போராட்டம்?
போராட்ட நோக்கமே" ஜல்லிக்கட்டு தடை நீக்கம் தான் "என்றால் அரசாணை வெளியானதே வெற்றிதானே.


மேலும் காலத்தில் நிற்பது இதுவரை உங்களுக்கு தோள்  கொடுத்த வர்களை எல்லாம் உங்களுக்கு எதிராகவே திருப்பிவிடும்.
உங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறையே ங்களை அடித்து விரட்டும் நிலையை சட்டம்,ஒழுங்குப்பிரச்னையை உண்டாக்கி விடும்.
மெரினாவில் குவிந்த லட்சக்கணக்கு நூற்றுக்கணக்காக மாறி சிதறி ஓடும்.
முடிவு போராட்டம் தோல்வி என்பதுபோல் நிலை இன்றைய ஆதரவு ஊடகங்களாலேயே பரப்பப்படும்.
இந்த நிலையினை அடையும் முன்னர் போராட்டம் வெற்றி என்று கலைவதே வெற்றி.
வீரத்தை விட  விவேகம் முக்கியம்.

போராட்ட நோக்கம் நிறைவேறிய பின்னரும் போராட்டம் என்பது சரியான வழிகாட்டல் இல்லா குழப்பவாதிகள் நிலைதான்.அது புலி வாலை பிடித்தவன் நிலை  போல் முட்டாள்தனமாகிவிடும்

களத்தில் வீரம் மட்டுமல்ல விவேகமும் முக்கியம்.
=======================================================================================
ன்று,
ஜனவரி-23.
 • இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1897)
 • ராமலிங்க அடிகளார் அருட்பெருஞ்சோதியான தினம் (1873)
 • சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது(1957)
 • இஸ்ரேல் சட்டசபை, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது(1950)
 • புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது(1719)
=======================================================================================

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

நான் பொறுக்கிதான்"நான் தமிழ் பொறுக்கிதான்.ஆனால் டெல்லியில் பொறுக்க மாட்டேன்."

                                                                                                  -கமல்ஹாசன்.

அரசியல் விலங்குகள்.?


இன்று இந்தியாவில் நாம் வாங்கும் பால் அனைத்தும் ஜெர்சி, எப்.எஸ்((F.S) மற்றும் ஹெச்.எப்(H.F) வகை மாடுகள் மூலம் பெறப்படுவதே. 
இவற்றை பசுக்கள் என்று கூட சொல்லமுடியாது இவை ஐரோப்பாவில் இருந்த ஆரோக்(AUROCH)​ என்ற உடல் வலிமைகொண்ட வனவிலங்கிடம் இருந்து ‘க்ராஸ் ப்ரீட்’ (கலப்பினம்) செய்யப்பட்டவை. ஆரோக்கள்அவைகளின் இறைச்சிக்காக அதிகம் வேட்டையாடப்பட்டன. ஆனால் அது கடினமான வேலையாக இருந்ததினால் நாட்டு மாடுகளுடன் கலவி செய்யவிட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த கலப்பின மாடுகள்.
(இன்று பன்றியின் மரபணு வரை சேர்க்கப்படுகிறது அதிக பால் கிடைக்கவேண்டும் என்று! அது தனிக்கதை). இன்றும் ஐரோப்பியர்கள் பலர் அதன் பாலை தவிர்க்கிறார்கள். அதில் உள்ள கேசொமார்பின்க்கு பயந்து.(கோசொமார்பின் என்பது, நரம்பு மண்டலத்தைப் பாதித்து, மூளையைத் தாக்கக் கூடிய பொருள் ஆகும்).இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு.
அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். 
நாட்டு மாடுகள் இல்லையேல் ‘இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், நம்மாழ்வார், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்’ போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை.விவசாயமும், மருத்துவமும் நாட்டுமாட்டை சுற்றி இருந்ததால் அதை அழிக்காமல் ரசாயன, பூச்சிக்கொல்லி மற்றும் பார்மா (ஆங்கில மருந்து) வியாபாரிகளுக்கு வேலை இருக்காது; எனவே, நாட்டு மாடுகளின் கொலைக்களம் ராபர்ட் கிளைவால் தொடங்கப்பட்டது.
இருந்தும் மாடுகளை வைத்து வாழ்ந்து பழகிய இந்தியர்களிடம் இருந்து மாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சதிக்கு துணையாக இருந்துமக்களிடம் நோயை விதைக்கிற உழவுக்கு உதவாத கலப்பின மாடுகளைத் திணித்தார்கள். பால் அதிகம் கிடைத்ததால், பஞ்சத்தில் அடிபட்ட நம் உழவர்கள் கலப்பின மாடுகளை வைத்துக்கொண்டு, நாட்டு மாடுகளை ஒதுக்கத்துவங்கினர்.
நாளடைவில் நாட்டு மாடுகள் முக்கியத்துவம் இழந்து அழிவின் பாதையில்போய் விட்டன. இதனால் இலவச இயற்கைஉரங்களுக்கு மாற்றாக ரசாயன உரங்களையும் மருந்துகளையும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கலப்பினப் பசுவின் பாலால்அதிகரித்த சர்க்கரை நோய் முதலான நோய்களாலும் சத்து குறைவாலும் ஆங்கில மருந்தும் ஊட்டச் சத்து பானங்கள் மற்றும் மருந்துகள் விற்பனை களைகட்டியது. 
கலப்பினப் பசுக்களுக்குதீவனம் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவால் அவற்றிற்கான மருந்துகள் என வெளிநாட்டினரின் வியாபாரம் விரிந்தது. தீவனத்துக்காக இந்திய தானியங்கள் பெருமளவில் செலவிடப்பட்டதால் உணவுப் பொருட்கள் விலையும் எகிறியது. 
வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில்தயாராகும் வேப்பெண்ணை, வேப்பம்புண்ணாக்கு, வெர்மிகம்போஸ்ட், தொழு உரம்,கோகோ பீட் முதலான இயற்கை உரங்களை வாங்கிக்கொண்டு நமக்கு யூரியா போன்ற ரசாயன விஷங்களை விற்கிறார்கள்.
இனிவெளிநாட்டு நிறுவனங்கள் விற்கப் போகும்கழிசடைகளால் வரப்போகும் மரபணு கோளாறுகளுக்கும், புற்று போன்ற கொடியநோய்களுக்குமான மருந்து நாட்டுமாடுகளிடம் இருந்தே கிடைக்கின்றன. அவை பாரதத்தின் சொத்து. ஜெர்சி இன மாடுகளில் வியர்வை நாளங்களும் திமில்களும் இல்லாததால், அவற்றின் வெப்பம் பால், சிறுநீர் மூலமாகத்தான் வெளியேறுகிறது.மேலும் இம்மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன. 
நமது நாட்டு மாடுகளில் வியர்வை நாளமும், திமிலும் இருப்பது மட்டுமல்ல; அவற்றின் சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரிக்கலாம். குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் பாலுணர்வு மந்தமாகவே இருக்கும். 
அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது. முதலில்கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டுமாடாக இருந்ததால்… சினை பிடிப்பதில் பிரச்சனை இல்லாமல் இருந்தது. இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது. இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். 
மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது, மாட்டின் மரபணுவில் மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர் பாலைக்கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர் பால் கறவை செய்கின்றனர்.
பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில்கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது. வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது. எனவே பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான் செறிக்கப்படுகிறது. பால், குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2என்று இரண்டு வகை இருக்கிறது.
பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ்(திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின்மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்’ அது குடலில் செறிக்கப்படும் போது க்ஷஊஆ7 (நெவய-உயளடி-அடிசயீiநே-7) ஆக மாற்றமடைந்து நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். ‘‘ஏ2 கேசின் உள்ள பாலைக்குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது’’ என்கிறார் பேராசிரியர் பாப் எலியாட்.
ஏ1, ஏ2 பாலைப் பற்றி…
1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s medicine at aucklanad university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப்எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார். அந்நோய்ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ‘சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும், அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள் ஏ2 பாலைக் குடிப்பதாகவும் கண்டுபிடித்தார். பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சனை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார்.
தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும்மாடுகளில் 50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம். கலப்பின மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு அரசு துடிக்கிறது.ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்துவிட்டன.
இன்று இந்தியாவில் விற்கப்படும் மருந்து விற்பனையில் (மொத்த சில்லறை விற்பனை ரூ.6600 கோடி) முதலிடம் வகிப்பது சக்கரை வியாதி தடுப்பு மருந்துக்களே...வருடத்திற்கு ரூ.4500 கோடி (மொத்த மருந்துவிற்பனையில் 68சதவீதம்) விற்பனை ஆகிறது. அதில் நான்கில் ஒரு பங்கு ஒருஅமெரிக்க நிறுவனம் தயாரிக்கின்றது.கடந்த வருடத்தில் மற்ற மருந்துகளின்விலை 9 சதவீதம் குறைந்து விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் சக்கரைவியாதி மருந்துகளின் விலை 6.4சதவீதம் ஏறியும் விற்பனை 26 சதவீதம் எகிறி உள்ளது(அதிலும் அந்த நிறுவனம் 34 சதவீதம் விற்பனையை பெருக்கியுள்ளது)...இதில் எவ்வளவு யார் யாருக்கு போய் சேரும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

PCA வின் section 22 என்ன சொல்லுதுனா "No person shall exhibit or train performing animals unless he is registered in accordance with provision of this chapter". 

அதாவது "காட்சிபடுத்தப்பட்ட விலங்குகளை பழக்கவோ காட்சி படுத்தவோ கூடாது. மீறி காட்சி படுத்த வேண்டுமானால் அவர்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும் (வண்டலூர் பூங்கா போன்று) 

மேலும் எவை எல்லாம் காட்சி படுத்தப்பட்ட விலங்குகள் என்றால் மத்திய அரசு Notification மூலம் Gazette ல் சேர்பது எல்லாம் காட்சி பபடுத்தப்பட்ட விலங்குகள். 

இந்த Section 22 ல் இருக்குற காளை மாட்டை Section 27 ல் அதாவது Exemptions ல் சேர்க்க வேண்டும் என்று விளக்கம் குடுக்குறாங்க. 

சரி என் சந்தேகம் என்னவென்றால், 

1. திமுக கூட்டணியில் பங்கு வகித்த காங்கிரஸ் அரசு, 2011ல் காளை மாட்டை காட்சி படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்தது தான் பிரச்சனை என்றால், 2004, 2007, 2008 ஆம் வருடங்களில் ஜல்லிக்கட்டு எந்த காரணத்திற்க்காக தடை செய்யப்பட்டது / தடை செய்ய கோரப்பட்டது? எப்படி 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் தடையின்றி நடந்தது? 

2. 2014 ம் வருடம் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக தடை செய்யப்பட்ட போது PFA, AWBI, PETA போன்ற அமைப்புகளால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவை? 

உண்மையில் பிரச்சனை 2011 ஆம் ஆண்டு காளை மாடு காட்சி படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்தது அல்ல. அப்படி அது மட்டும் தான் பிரச்சனை என்றால் 2004 ஆம் ஆண்டு முதலில் எந்த காரணத்தினால் தடை கோரப்பட்டது? 2007/2008 ல் எதற்க்காக ஜல்லிக்கட்டு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது? 2009 ல் தமிழக திமுக அரசு ஜல்லிக்கட்டுக்காக தனி சட்டம் இயற்ற வைத்தது எது? 

2014 ல் PFA, AWBI, PETA போன்ற அமைப்புகள் தடை கோரி முன் வைத்த காரணங்கள் " தமிழக அரசு ஜல்லிக்கட்டு சட்டம் 2009 ல் கொடுக்கப்பட்ட விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை மாடுகள் துன்புறத்தப்பட்டது" என்கிற வாதத்தோடு அதற்க்கான வீடியோ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியது. தடை உத்தரவு பிறப்பிக்கும் போது நீதிமன்றம் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டம் 2009 ஐ நீக்கியது. 

ஆக கடைசியாக தடை உத்தரவு வரும் போதும் இந்த காளை மாடு காட்சிப்படுத்ப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்தது காரணம் இல்லை. ஆனால் தேவை இல்லாமல் காட்சி படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை மாடு சேர்த்தது தான் பிரச்சனைக்கு காரணம் என ஏன் திமுக மீது பழியை போட வேண்டும். 

=======================================================================================
ன்று,
ஜனவரி-22.
 • கொலம்பியா கிராமபோன், வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1889)

 • உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது(1952)

 • சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது(1957)

 • ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது(1984)

 • ஆர்க்குட் துவங்கப்பட்டது(2004)
========================================================================================


சனி, 21 ஜனவரி, 2017

{பீட்டா} காலிகளை குதறிய காளைகள்
தமிழகத்தின் தெருக்கு,தெரு ,மோடி அரசும்,சசிகலா அரசும்(?) ஜல்லிக்கட்டுபோராட்டங்களில்  திட்டு வாங்கிய பின்னர்தான் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் தமிழக அரசிடமே உள்ளது என்று பன்னிர்செல்வம்  உணர்ந்தார்.

அந்த அதிகாரம் மூலமாகத்தான் திமுக அரசு தமிழ் நாட்டில் 2011 வரை ஜல்லிக்கட்டை நடத்தி வந்தது என்ற உண்மை அதிமுக அரசுக்கு தெரிந்திருந்தாலும் ,கலைஞரின் வழியில் நடப்பதா என்ற தயக்கமும்,தனது புதிய முதலாளி பாஜக மோடியின் கண்ணசைவிற்கு காத்திருந்தும்தான் தமிழகத்தை போராட்டக் காலமாக்கி விட்டது.

தற்போது நிலை தலைக்கு மேல்.

இருந்தாலும் டெல்லி சென்று புதிய முதலாளி மோடியின் அனுமதியை பெற்று ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் உண்டாக்கி அனுப்பி வைத்தது.

ஜல்லிக்கட்டு  அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 

தமிழகத்தில் காலூன்ற செய்த முயற்சிகள் அனைத்தும் இருக்கும்  பாஜகவுக்கும் பாலூற்றும் நிகழ்வுகளாகவே மாறிவிடுவதால் அதிர்ந்திருந்த பாஜக மோடி அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அடக்கி வாசிக்கவே முயல்கிறது.

தமிழக போன்.ராகி,தமிழிசை ஏற்கனவே ஜல்லிக்கட்டை அனுமதிக்க கூறியிருந்த போதும்,பசுவை வணங்கும் கும்பல்களின் பேச்சினால் மோடி அரசு கொஞ்சம்   குழம்பி விட்டது தமிழகத்தில் அதற்கு பெருத்த பின்னடைவை தந்து விட்டது.

வேறுவழியின்றி  காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

  காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை முந்தைய காங்கிரசு அமைசர் ஜெயராம் ரமேஷ் தான் சேர்த்தார்.காரணம் அவரும் கோமாதா கும்பிடும் வர்ணத்தை சேர்ந்தவர் என்பதுதான்.
இந்த சேர்ப்பு கூட்டணி கட்சி திமுகவுக்கு மட்டுமல்ல,காங்கிரசு தலைவி சோனியாவுக்கும் கூட அப்போது தெரியவில்லை.


காரணம் இது ஜெயராம் ரமேஷ் துறை சார்பான வழக்கமாக வெளியிடும் பட்டியலில் சேர்த்து விடப்பட்டதுதான்.ஜல்லிக்கட்டு தடை விவகாரத்துக்குப்பின்னர்தான் இந்த சேர்ப்பு கண்டு பிடிக்கப்பட்டது.

அதுவரை வழக்கமான அரசானைதானே என்று கவனக்குறைவாக கண்டுகொள்ளப்படவில்லை.

பிரதமர் மோடி - முதல்வர் பன்னீர் செல்வம் இடையேயான சந்திப்பின்போது, தமிழக மக்களின் பெருகி வரவும் அமைதியான போராட்ட உணர்வுகளை,போராட்டங்களை  தமிழக முதல்வர் விளக்கி வேறு வழியில்லை என்ற பின்னர்தான்,தமிழக ஆளுநரும் அதை வழி மொழிந்த பின்னரே  பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் ஜல்லிக்கட்டு அவசர சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை யாக செயல்பட சமமதித்தார்.

இதன் வெளிப்பாடாக, தமிழகத்தில் நிலவும் சூழல் காரணமாக ஜல்லிக்கட்டு வழக்கில் அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ப்பை வெளியிட கூடாது சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 


இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதாக அட்வகேட் ஜெனரல் முகுல் ரத்தோகி தெரிவித்தார்.மேலும், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசர சட்டம் பிறப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிருந்து காளையை நீக்கம் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சட்ட வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. 

காரணம் அப்பட்டியலில் காளை இருக்கும் வரை பீட்டா போன்ற அமைப்புகள் ஜல்லிக்கட்டை எதிர்க்கும் வழக்குகளுக்கு உசச நீதிமன்றம் ஆதரவாகவே தீர்ப்பை தரும்.
இந்த சட்ட வரைவுக்கு முறையே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, சட்ட துறை, உள்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து சட்ட வரைவு  குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது .

ஏற்கனவே "அந்தந்த பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததால்தான் நாடு முழுக்க அமைதியில்லா சூழல் நிலவுகிறது" என்று கூறிய குடியரசுத்தலைவர்  பிரணாப் முகர்ஜி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 குடியரசுத்தலைவர் அனுமதிக்கு பின்னர்,அதை மேற்கோள் காட்டி  தமிழகஆளுநர்  வித்யாசாகர் ராவ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்குவார். 

இதற்காகவே  தமிழக ஆளுநர்(பொறுப்பு)  வித்யாசாகர்  சென்னை வருகிறார்.

அவசர சட்டம் நாளை அமலுக்கு வரும் நிலையில் இருநாட்களில்  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் .


தமிழக மக்கள் ,மாணவர்கள்  இளைஞர்களின் எழுச்சி போராட்டம் வெற்றிகோட்டை தொட்டுள்ளது.
ஆனால் இந்த உணர்வை காவிரி பிரசினை ,அந்நிய மயமாக்கல்,சரியான தயார்படுத்துதல் இல்லாமல் பணமதிப்பு நீக்கத்தால் உண்டான இறப்புகள்,வார,வாரம் பெட்ரோல் விலை உயர்வு,விவசாயிகள் தற்கொலைகளுக்கு எதிராக காட்டினால் நாடு எப்படியோ முன்னேறியிருக்கும்.

 ஆனாலும் இந்த ஒற்றுமை,வன்முறையற்ற அமைதியான  போராட்ட உணர்வு மேற்கண்ட உணர்வுகளால் பாதிக்கப்பட்டு  குமுறியவர்களின் வெளிப்பாடுதான் அது ஜல்லிக்கட்டாக பாய்ந்து வந்துள்ளது என்பதையும் உணர முடிகிறது.

மேலும் இந்த போராட்ட களம் ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான ,மக்கள் நலனுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை தரும் களமாக அமைந்து விட்டது என்பதை மறுக்க முடியாது.

======================================================================================
ன்று,
ஜனவரி-21.

 • க்யூபெக் கொடி நாள்
 • அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது(1925)
 • உலகின் முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது(1954)
 • இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன தனி மாநிலங்களாக்கப்பட்டன(1972)

======================================================================================வெள்ளி, 20 ஜனவரி, 2017

காவல்துறை உங்கள் நண்பன்!தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி?தமிழகத்தில் ஒரு நகரம், ஒரு கிராமம்விடாமல் எங்கும் ஜல்லிக்கட்டு மீட்புப்போராட்டங்கள் தன்னெழுச்சியாக வெடித்துள்ள பின்னணியில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  அவசரச்சட்டம் கொண்டுவரக் கோரும் மனுவோடு தில்லி சென்றார். 

பிரதமர்நரேந்திர மோடியைச் சந்தித்தார். முதலமைச்சர்தன்னைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்தார் என்பதன்றி, தமிழகத்தின் கோரிக்கைக்கு பிரதமர் வேறு மரியாதை அளித்ததாகத் தெரியவில்லை.

‘ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பண்பாட்டுமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஏற்றுக்கொண்ட பிரதமர், பிரச்சனை இப்போது நீதிமன்றவிசாரணையில் இருக்கிறது என்று நழுவி விட்டார்’ என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்புடன் தன்னைச் சந்தித்த தமிழகமுதலமைச்சருக்கல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே துரோகமிழைத்திருக்கிறார் மோடி. 

பன்னிர் செல்வம் அதிகாரம் தன்  கையில் இருக்கையில் இதற்கு முன்னர் தடை இருந்த போதும் பிரசனையே இல்லாமல் வெளியுலகம் தெரியாமல் தனது அதிகாரம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணையை ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிட்டு நடத்திய திமுக தலைவர் கலைஞர் போன்று ஏன் நடத்தவில்லை?எதற்காக தமிழ் நாடு என்றாலே கசப்புடன் பார்க்கும் பிரதமரிடம் போய் மண்டி இட வேண்டும்.
காரணம் ஊழல்,சொத்துக்குவிப்பு,அதிகார முறைகேடுகள்,அந்நிய செலவாணி மோசடிகள் என்று சசிகலா குடும்பத்தையும் ,வருமானத்துக்கு அதிகமாக 3000 கோடிகளை குவித்ததால் பன்னிரு செல்வமும் மோடியின்,பாஜக கண்ணசைவை எதிர் பார்த்துதான் காய்களை நகர்த்த வேண்டியுள்ளது.இல்லை என்றால் கண்டெய்னர் அளவு இழப்புகள் அவர்களுக்கு.

ஒருவாதத்திற்காக, பிரச்சனை நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதானால் கூட, மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக இதைஅணுகும் என்ற நம்பிக்கை வார்த்தைகளைக் கூட சொல்ல முன்வராதது ஏன்? 

இதற்கானபொறுப்பு தனது ஆட்சியின் தலையில் விழுந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடுதான் முதலமைச்சரைத் திருப்பியனுப்பியிருக்கிறார் மோடி என்பது வெளிப்படை.

‘மாநில அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும்’ என்றும்முதல்வரிடம் பிரதமர் கூறினாராம். எப்படிப்பட்ட ஆதரவு? 

நீதிமன்றத்தை மீறி மாநில அரசேஜல்லிக்கட்டை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு ஆதரவா, அல்லது, போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஆதரவா? 

இதில் என்ன மௌடீகம்? நீதிமன்ற விசாரணையில் இருப்பதால்தான், காட்சிப்படுத்தலிலிருந்து விலக்களிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்கி அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்என்ற கோரிக்கையே எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தை மீறி 23 அவசரச்சட்டங்களைக் கொண்டுவரத் தயங்காத மோடி அரசு இதிலேபின்வாங்குவது ஏன்? 

ஒரு பக்கம், ஆர்எஸ்எஸ்கூடாரத்தின் கலாச்சார ஆதிக்க அரசியலில், மாநிலங்களின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கிற போக்கு; அடுத்து, கால்நடை விருத்திச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும்பன்னாட்டு கார்ப்பரேட் சக்திகளின் நலன்கள். மத்திய அரசு ஏதோ உடனடி நடவடிக்கை எடுக்கப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்று பதுங்கிக்கொண்ட தமிழக பாஜக தலைவர்கள் மக்கள் கோபத்திலிருந்து தப்பிவிட முடியாது.

பண்பாட்டுத் தளத்தோடு வேரூன்றியுள்ள ஒருபாரம்பரியத்தில் கைவைக்கப்படுகிறபோது அதுமக்கள் பெருந்திரளைக் கொதித்தெழ வைக்கும் என்பதற்கு சாட்சியமாக இன்று தமிழகம் திகழ்கிறது. பொருளாதாரம், சமூகநிலை என அனைத்துத் தரப்பு மக்களும் போராட்டக் களமிறங்கியுள்ள நிலையில், அந்த உணர்வை உச்சநீதிமன்றம் சரியாகப் புரிந்துகொண்டு வழக்கைக் கையாளவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முற்றிலும் நியாயமானது. 
போக்குவரத்துத் தொழிலாளர்கள், கலையுலகினர், தனியார் பள்ளி நிர்வாகங்கள், வணிகநிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் தாங்களாகப் போராட்ட அலையில் இணைந்துகொண்டிருக்கிற நிலையில், மத்திய-மாநில அரசுகள் அடுத்து என்ன செய்யப்போகின்றன? 
நீதிமன்றம் என்ன ஆணையிடப்போகிறது?

தமிழ்நாடு அரசோ தனது அதிகார மய்யம் மன்னார்குடியா?
பெரியகுளமா?என்ற பரிதவிப்பில் நிற்கிறது.

ஆனால் சசிகலாவும்,பன்னிர்செல்வமும் தங்கள் எதிர்காலமே மோடியின் பாஜக அரசின் கையில் இருப்பதால் தமிழ்நாட்டின் நலனையே மோடியின் காலில் வைத்து விட்டு குனிந்து நிற்கின்றனர்.
=======================================================================================
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி?
வெளியே தெரியாமல் அரசாணையை கலைஞர் வெளியிட்டார்.ஜல்லிக்கட்டு தடையின்றி நடந்தது.ஆனால் அதை இப்போது போராடுபவர்கள் நன்றியுடன் கூறுவதாக தெரியவில்லை.காவிரியில் இருந்து எந்த பிரசனையானாலும் மக்களை அல்லாத விட்டு,போராடவிட்டு தான் அதை பெருந்தன்மையுடன் தான் செய்ததாக  கூறி ஜால்றா ஊடகங்கள் மூலம் தனக்கு தானே பாராட்டு விழா நடத்திக்கொள்வது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து உள்ள நடை முறை.
அதையே இன்று முதல்வர் பன்னணீர்  செல்வம் அடுத்தக்கட்டடத்துக்கு கொண்டு செல்கிறார்.
சத்தம் போடாமல் அலுவலக ரீதியாகவே தமிழக மக்களுக்கு நன்மைகளை செய்தவர் கலைஞர்.
========================================================================================
ன்று,
ஜனவரி-20.

 • முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்டம் மசாசூசெட்சில் இடம்பெற்றது(1892)
 • பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாக பயன்படுத்த அமெரிக்க செனட் சபை அனுமதியளித்தது(1887)
 • வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு நீள திரைப்படம் திரையிடப்பட்டது(1929)
========================================================================================

                            வீட்டு எலிகளை  கொடுமை படுத்துவதை தட்டிக்கேட்காத                                                                                                    பீட்டாவை தடை செய்!