திங்கள், 23 ஜனவரி, 2017

வீரம் மட்டுமல்ல விவேகமும் முக்கியம்

இதுவரை இல்லாத அளவு இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் பாதிப்பினால்  தமிழ் நாட்டில் ஒரு மாபெரும் போராட்டம் நடந்துள்ளது.அது மத்திய அரசு வரை அசைத்துப்பார்த்துள்ளது.
இப்போராட்டத்துக்கு எல்லா தரப்பு மக்களும் அதாவது இதுவரை அரசியல்,ஆடசி அத்துமீறல்களுக்கு எதிராக வாயைத்திறக்காமல் உள்ளக்குள்ளே புழுங்கிக்கொண்டிருந்த நடுத்தர மக்கள் அனைவரும் ஒன்று திரண்டதுதான் இந்த ஜல்லிக்கட்டு அமைதி போராட்டத்தின் வெற்றி.
இப்போராட்டத்தை வெறும் ஜல்லிக்கட்டு தடை நீக்க மட்டுமான போராட்டமாக மட்டும் கருதினால் அது தவறு.
இதுவரை மத்திய மோடி அரசு தமிழ் நாட்டுக்கு எதிராக செய்துவந்த நடவடிக்கைகள்,காவிரி பிரச்னை,நீட் தேர்வு,பணம் மதிப்பிழக்களில் ஏற்பட்ட கசப்புகள்,வாரா ,வரம் பெட்ரோல் விலை உயர்வு,முதலாளிகளுக்கு ஆதரவான அரசு நடவடிக்கைகள்  போன்றவைகளும்  ,தமிழ்நாட்டில் நடக்கும்  அசிங்கமான அதிகாரப்போட்டி,அமைசர்கள் தங்கள் பணிகளை செய்யாமல்,மக்கள் நலனுக்கும்,விவசாயிகள் நலனுக்கும்,குடிநீர் வசதிக்கும் ஒன்றும் செய்யாமல் ஜெயலலிதா கல்லறை ஈரம் காயும் முன்னரே " சின்னம்மா"காலில் விழுவதையே முழுநேரப்பணியாக செய்து கொண்டிருப்பதை பார்த்து உண்டான வெறுப்பினாலும் தான் தங்கள் மத்திய,மாநில அரசுகளுக்கு  எதிராணா தங்கள் கோபத்தைக்காட்ட  இந்த ஜல்லிக்கட்டை ஒரு  களமாக பயன் படுத்திக்கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஒரு தலைமை இல்லாதது மகிழ்சசியை கொடுத்தாலும் அதுவே வருத்தத்தை தருகிறது.
தமிழகம் முழுக்க எழுந்த மோடி எதிர்ப்பு அலைக்கு மத்திய பாஜக அரசு பயந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செயல் பட்டது.
உச்ச நீதிமன்ற ஜல்லிக்கட்டுக்கு எதிரான  தீர்ப்புக்கு அடிப்படையான காட்சிக்கான விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க மத்திய அமைசச்சரவை ஒப்புதல் அளித்தும் விட்டது.
இனி பிட்டாவோ ,வேறு அமைப்புகளோ ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தாலும் தடை கிடைப்பது அரிது.
இந்த வெற்றியை போராட்டக்களத்தில் உள்ளவர்கள் உணர்ந்திருந்தாலும் சில குழப்பவாதிகள் பேச்சினால்
தங்கள் போராட்டம் தொடரும் என்பது சரியான முடிவல்ல.
ஜல்லிக்கட்டு தடை நீங்கி விட்டது.இதுவரை நடந்த போராட்டம் இதற்காகத்தான் என்றால் போராட்டம் வெற்றி என்று விவேகத்துடன் கலைவதுதான் புத்திசாலித்தனம்.
அப்படியே அடுத்த ஆண்டு நடக்காவிட்டால் அப்போது ஏமாற்றப்பட்டதாக மீண்டும் களம்காணலாம்.அதற்கு பொதுமக்கள் ஆதரவு இதே போல் கிடைக்கும்.
இப்படி இல்லாமல் போராடுவதும்,போராட்டம் தொடரும் என்பது பல விளைவுகளை உண்டாக்கி விடும்.
காலத்தில் இருக்கும் இளம் ரத்தங்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லாததுதான் இதற்கு கரணம்.அரசியல்வாதிகளை ஒதுக்கியது சரி.ஆனால் இவர்கள் போராட்டத்துக்கு முன்னரே ஜல்லிக்கட்டுக்காக போராடிய அரசியல்கட்சிகளை அவமாக சிலர் பேசுவது நல்லதல்ல.

அவசர சட்டம் வந்தபின்னரும் சிலர் போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பை பார்த்து பொதுமக்கள் சிலர் பேசிக்கொண்டதை காலத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
"அதுதான் ஜல்லிக்கட்டு நடக்கலாம் என்று சொல்லி விட்டார்களே.பின் எதற்கு இவர்கள் போராடுகிறார்கள்.?"
சரியான கேள்விதான்.
இந்த கேள்வி போராட்டக்காரர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆதரவு திரும்ப வைத்துவிடும் அபாயம் உள்ளடக்கியது.
மேலும் இதுவரை போராட்டக்கக்களத்துக்கு வலு சேர்த்த நடுத்தர மக்கள்,பொதுமக்கள் ,குழந்தைகள்,சிறார் கூட்டம் முன் போல வருவது இருக்காது.
அவரவர் வேலைக்கு செல்ல வேண்டாமா?பள்ளிக்கு சிறார்களை அனுப்ப வேண்டாமா?உழைத்தால்தான் அவர்களுக்கு ஊதியம்.
சில மாணவர்கள் மட்டும் கல்லூரியை புறக்கணித்து விளையாட்டுத்தனமாக கலந்து கொள்ளலாம்.பின் அவர்களும்பெற்றோர் பேச்சை கல்லூரிகளுக்கு சென்று விடுவார்கள்.
வியாபாரிகளும் ஜல்லிக்கட்டு நடக்க ஆணை வந்தவுடன் தங்கள் வியாபாரத்தை கவனிப்பார்களா?ஆதரவை தருவார்கள்.
ஒட்டு மொத்த தமிழகம் நடத்திய வேலை நிறுத்தம் போல் இனி நடக்கவே நடக்காது.
எனவே கிடைத்த வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விவேகத்துடன் கலைவதுதான் காலத்தில் இருப்பவர்களுக்கு நல்லது.போராட்டம் திசை மாறுகிறது.
நாம் தமிழர்,ஏ.பி.வி.பி,ஆர்.எஸ்.எஸ்,அமைப்பினர் உள்ளே புகுந்துள்ளனர்.இவர்கள் நடவடிக்கைகள் போராட்டத்தை களங்கப்படுத்தவே செய்யும்.
நாம்தமிழர் கடசியினர் ஜல்லிக்கட்டு நடத்துகிறேன் என்று கூறி பசு மாட்டையும்,உழவு மாட்டையும் கொடுமைப்படுத்திய காணொளிகள் தற்போது பீட்டா அமைப்பு கையில் அது ஜல்லிக்கட்டுக்கு எதிரான ஆதாரமாக அவர்கள் பயன் படுத்தலாம்.
மேலும் போராட்டக்களத்தில் அவர்கள் எழுப்பிய குரல்கள் எல்லாம் மத்திய ,மாநில அரசுகளை எதிர்த்தல்ல.நமக்கு நாமே  நடக்கிற காலத்திலேயே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்,உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலினை,திமுகவை எதிர்த்துதான்.
இன்றுவரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் இயக்கம் திமுகதான்.அதை கொச்சை படுத்தியதுதான் நாம்தமிழர் கடசி செயல்பாடு.
இவர்கள்தான் தற்போது காலத்தில் மிச்சம் .

நாம் தமிழர்,ஏ.பி.வி.பி,ஆர்.எஸ்.எஸ் மாணவர் இளைஞ்சர் அமைப்புகள் உடன் இணைந்து நடத்த்தும் வருங்கால போராட்டங்கள் இதுவரை நடந்த போராட்டத்தையே கேலிக்குரியதாக்கி விடும்.
பெற்ற வெற்றியையே கூறிக்கொள்ள இயலாதபடி நீர்த்து போகச்செய்து விடும்.
ஸ்டாலினை பேசாமல் இருக்க சொல்வதும்,பேசாமல் இருந்தால் திமுக இதுவரை ஒன்றுமே சொல்லவில்லை என்பதும் என்ன நிலைப்பாடு என்பதையும்,அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நடத்த வந்த முதல்வரை வழி மறித்து விரட்டி அடிப்பதும் என்னவகையான போராட்டம்?
போராட்ட நோக்கமே" ஜல்லிக்கட்டு தடை நீக்கம் தான் "என்றால் அரசாணை வெளியானதே வெற்றிதானே.


மேலும் காலத்தில் நிற்பது இதுவரை உங்களுக்கு தோள்  கொடுத்த வர்களை எல்லாம் உங்களுக்கு எதிராகவே திருப்பிவிடும்.
உங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறையே ங்களை அடித்து விரட்டும் நிலையை சட்டம்,ஒழுங்குப்பிரச்னையை உண்டாக்கி விடும்.
மெரினாவில் குவிந்த லட்சக்கணக்கு நூற்றுக்கணக்காக மாறி சிதறி ஓடும்.
முடிவு போராட்டம் தோல்வி என்பதுபோல் நிலை இன்றைய ஆதரவு ஊடகங்களாலேயே பரப்பப்படும்.
இந்த நிலையினை அடையும் முன்னர் போராட்டம் வெற்றி என்று கலைவதே வெற்றி.
வீரத்தை விட  விவேகம் முக்கியம்.

போராட்ட நோக்கம் நிறைவேறிய பின்னரும் போராட்டம் என்பது சரியான வழிகாட்டல் இல்லா குழப்பவாதிகள் நிலைதான்.அது புலி வாலை பிடித்தவன் நிலை  போல் முட்டாள்தனமாகிவிடும்

களத்தில் வீரம் மட்டுமல்ல விவேகமும் முக்கியம்.
=======================================================================================
ன்று,
ஜனவரி-23.
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1897)
  • ராமலிங்க அடிகளார் அருட்பெருஞ்சோதியான தினம் (1873)
  • சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது(1957)
  • இஸ்ரேல் சட்டசபை, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது(1950)
  • புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது(1719)
=======================================================================================