இந்தியா வந்த ஏசு
ஏசுகிறிஸ்து இந்தியா வந்தார் என்று 200 ஆண்டுகளாகப் பல வெளி நாட்டினரும், நம் நாட்டினரும் புத்தகங்கள் எழுதிவிட்டனர். சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் ஜீசஸ் மிஸ்டரி என்று இன்னொரு கட்டுரையும் அதன் வந்தது. சுருக்கம் இதோ:- ஏசுவின் இளமைக் காலம் பற்றி பைபிள் மவுனம் சாதிக்கிறது. மார்க், மாத்யூ, லூக், ஜான் ஆகிய நால்வர் எழுதிய புதிய ஏற்பாடு நூல்களில் ஏசு 12 வயதில் சென்றார்- முப்பது வயதில் திரும்பிவந்தார் என்று மொட்டையாக எழுதி முடித்துவிட்டனர். இது பற்றி கிறிஸ்தவர்களே அவர்களுக்குள் தடை எழுப்பி விடை கண்ட பகுதிகளை கிறிஸ்தப் பிரசார நூல்களில் கண்டு கொள்க. ஒரு மனிதனின் இளமைக் காலம் அதிபயங்கர சக்தியுடன் எதையாவது புதுமையைப் படைக்கத் துடிக்கும் காலம். அந்த சக்தியை சரியான வழியில் திருப்பி விடாவிட்டால் அவர்களுடைய வாழ்நாள், வீழ் நாளாகவும் வீண் நாளாகவும் போகும். இதற்காக இந்துக்கள் ஒரு அற்புதமான வழியைக் கண்டு பிடித்தனர். வீட்டில் இருந்தால்தானே “அப்பா, அம்மா சொல்வதெல்லாம் தவறு, உலகம் தெரியாமல் உளறுகிறார்கள்” என்று எண்ணத் தோன்றுகிறது. வாத்தியார் வீட்டுக்கே போய் அவருக்கு உணவு ப...