இந்தியா வந்த ஏசு

ஏசுகிறிஸ்து   இந்தியா வந்தார் என்று 200 ஆண்டுகளாகப் பல வெளி நாட்டினரும், நம் நாட்டினரும் புத்தகங்கள் எழுதிவிட்டனர்.
சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் ஜீசஸ் மிஸ்டரி என்று இன்னொரு கட்டுரையும்  அதன் வந்தது. சுருக்கம் இதோ:-
ஏசுவின் இளமைக் காலம் பற்றி பைபிள் மவுனம் சாதிக்கிறது. மார்க், மாத்யூ, லூக், ஜான் ஆகிய நால்வர் எழுதிய புதிய ஏற்பாடு  நூல்களில் ஏசு 12 வயதில் சென்றார்- முப்பது வயதில் திரும்பிவந்தார் என்று மொட்டையாக எழுதி முடித்துவிட்டனர்.
இது பற்றி கிறிஸ்தவர்களே அவர்களுக்குள் தடை எழுப்பி விடை கண்ட பகுதிகளை கிறிஸ்தப் பிரசார நூல்களில் கண்டு கொள்க.
ஒரு மனிதனின் இளமைக் காலம் அதிபயங்கர சக்தியுடன் எதையாவது புதுமையைப் படைக்கத் துடிக்கும் காலம்.
அந்த சக்தியை சரியான வழியில் திருப்பி விடாவிட்டால் அவர்களுடைய வாழ்நாள், வீழ் நாளாகவும் வீண் நாளாகவும் போகும்.
இதற்காக இந்துக்கள் ஒரு அற்புதமான வழியைக் கண்டு பிடித்தனர். வீட்டில் இருந்தால்தானே “அப்பா, அம்மா சொல்வதெல்லாம் தவறு, உலகம் தெரியாமல் உளறுகிறார்கள்” என்று எண்ணத் தோன்றுகிறது.
வாத்தியார் வீட்டுக்கே போய் அவருக்கு உணவு படைத்து, துணி துவைத்து பாடத்தையும் படி என்று குருகுல வாசம் செய்ய ஏழு வயதில் அனுப்பிவிட்டனர்.
பின்னர் 20 வயதில் வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டனர். இதற்குப் பின் கெட்ட வழியில் செல்வது கடினம்.
மேலும் வாத்தியார் வீட்டில் 13 ஆண்டுகளுக்கு தினமும் மிலிட்டரி ட்ரில்   போல செய்துவந்தது அதே நல்ல வழியில் செல்லவும் உதவியது.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது தமிழ் பழமொழி. நல்லதானாலும் கெட்டதானாலும் சின்ன வயதில் படித்தது அவ்வளவு எளிதில் மாறாது.
அந்தக் காலத்தில் ஒரே குருவிடம் நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர். அததகைய குருமார்களை குலபதி என்று பட்டம் கொடுத்து அழைப்பர்.
அது மட்டுமின்றி ஏசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தட்சசீலம், நாளந்தா, காஞ்சீபுரம் ஆகிய இந்திய நகரங்களில் மாபெரும் பல்கலைக் கழகங்களும் நடந்துவந்தன.
இந்த குருகுலவாசம் பற்றி ஈசன்னிகளுக்குத் தெரியும். அதனால் ஏசுவை இங்கே அனுப்பிவைத்தனர்.
ஈசன்னிகள் என்பது ஈச, ஈச்வர (இறைவன்) என்னும் மூலத்தில் இருந்து பிறந்த சொல் என்பது எனது துணிபு. இந்த யூதமதப் பிரிவு பற்றி பிளினி முதலியோர் கொஞ்சம் எழுதி வைத்துள்ளனர்.
அவர்கள் கூறுவதாவது: இந்தப் பிரிவினர் தினமும் குளிப்பார்கள் (இது பாலஸ்தீனத்தில் ஒரு அதிசயம்!!).
இவர்கள் இறை நாட்டம் உடைய யோகியர். இவர்களில் பெரும்பாலோர் கல்யாணம் செய்து கொள்வதில்லை (பிரம்மசாரி). சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்து யோகிகள் பற்றி என்ன என்ன சொல்வோமோ அததனையும் ஈசன்னிகள் பற்றிச் சொல்லப் பட்டுள்ளன.
இந்தக் குலத்தில் பிறந்தவர்தான் ஏசு. ஆகையால் அவர் குருகுல வாசத்துக்கு இமயமலைக்கு வந்ததில் வியப்பதற்கு ஒன்றுமிலை.
மேலும் காஷ்மீருக்கும் யூதர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி பல ஆய்வுகள் உண்டு. கி.மு 1000 ஆண்டில் இருந்த சாலமன்  காஷ்மீருக்கு வந்ததாக செவிவழிக் கதைகள் உள்ளன.
அவன் விக்ரமாதித்தன்போல பெரிய அறிவாளி. இது தவிர சிலுவையில் அறைபப்பட்ட மூன்றாம் நாள் ஏசு உயிர் பெற்று எழுந்து காஷ்மீருக்கு வந்து 120 வயது வரை யோகி போல வாழ்ந்தார்.
காஷ்மீரில் அவரது சமாதி உள்ளது என்றும் ஒரு புத்தகம் வேறு வெளியாகி இருக்கிறது. யூதர்களின் 12 பிரிவுகளில் ஒன்று காஷ்மீருக்கு வந்தது என்ற ஐதீகமும் உண்டு.
இந்து மதப் புராணங்களில் எப்படிப் பல இருக்கின்றனவோ இப்படி ஏசு பற்றி புராணங்களும் மாறுபட்ட பைபிள் பதிப்புகள்) ஏராளமாக இருந்தன.
துருக்கியில் இருந்த கான்ஸ்டன் டைன்  என்ற மன்னன் ஒரு பைபிள் மகாநாடு கூட்டி எல்லா பைபிள்களையும் எரித்துவிட்டு ஒரே பைபிள் மட்டும் வைத்துக் கொண்டார்.
அதனால் ஏசு 12 வயது முதல் 30 வயது வரை 18 ஆண்டுகள் என்ன செய்தார், எங்கே இருந்தார் என்பதெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது.
=======================================================================================
ன்று,
டிசம்பர்-25.

  • ஆன்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்தார்(1741)

  • முகமது அலி ஜின்னா பிறந்த தினம்(1876)

  • இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம்(1924)

  • ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இறந்த தினம்(1977)



========================================================================================
இஞ்சி
காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, இரவில் கடுக்காய் என்பார்கள்.  இந்த இஞ்சியின் நற்குணம் அதிகம்.
இஞ்சியை தினமும் சேர்ப்பதால் சளி, ஆஸ்துமா, அஜீரணம், மலச்சிக்கல், வறட்டு இருமல், ஜலதோஷத்தால் உண்டான பாதிப்புகள், பித்தம் ஆகிய அனைத்தும் தீர்ந்துவிடும். 
ஆனால் கர்ப்பிணிகள், புதிதாக திருமணமாகி கர்ப்பம் தரித்தவர்கள், இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இஞ்சியை உணவில் சேர்க்கவேண்டாம்.
1. தினமும் காலையில் தேநீர் வைக்கும் போது பாலுடன் ஒரு சிறு துண்டு இஞ்சியை நன்றாக நசுக்கி பாலில் போடவும்.  பால் கொதித்தவுடன் தேநீர் தயாரித்து வடிகட்டும்போது இஞ்சியின் சக்கையும் வெளிவந்துவிடும்.  ஆனால் சாறு முழுவதும் இறங்கி நல்ல ருசியாகவும் உடலுக்கு நன்மையாகவும் இருக்கும்.
2. குழம்பில் தினமும் இஞ்சியை நசுக்கிசேர்த்துக்கொள்ளலாம்.
3. குழந்தைகளின் தண்ணீர் பாட்டிலில் இஞ்சியை நசுக்கி சாறு பிழந்து விடலாம்.
4. மறக்காமல் வீட்டில் இஞ்சி மிட்டாய்களை வாங்கி வைத்துவிட்டால் தினமும் சாப்பாட்டுக்கு பின் ஒரு மிட்டாய் சாப்பிட்டால் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
இப்படி தினமும் இஞ்சி அல்லது சுக்கை உடலில் கலந்து விட்டால் உடல் நன்றாக இருக்கும். எந்தப்பிரச்சினைகளும் வராது.
=========================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?