ரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்!
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி தலைமை செயலர் பதவி பெற்றார் ராவ் மோகன ராவ். சீனியாரிட்டி அடிப்படையில் 20-வது இடத்தில் இருந்த ராவ் பதவி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி ராவ் தலைமை செயலர் பதவி பெற்ற போதே சர்ச்சைகள் உருவாகின. 20 இடத்தில் இருந்தவரை ஜெயலலிதா தனக்கு பல உதவிகளை (?)செய்தவர் ,தான் கூறியவற்றை உடனே குறுக்கு வழிகளை கண்டு பிடித்து நிறைவேற்றுபவர் என்பதால்தான் எதிர்ப்புகளையும் மீறி தலைமைசெயலர் பதவியில் கொண்டு வந்து உட்காரவைத்து அழகு பார்த்தார். தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ். 1990-ம் ஆண்டுகளில் அன்றைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக ராம மோகனராவ் இருந்தார். நெடுஞ்சாலைத்துறை செயலராக இருந்த ராவ் தான் அரசு கான்ட்ராக்ட்டுக்கு கமிஷனை கட்டாயமாக்கியவர். 2001 ம் ஆண்டு ராமமோகன ராவ் சிந்தனையில் உதித்த புதிய யோசனையே அரசு கான்ட்ராக்ட்டுக்கு 10 % கமிஷன் ஆகும். சோதனையில் சிக்காமல் பணத்தை இடமாற்றம் செய்யும் வித்தையை கண்டுபிடித்தவர் இவர் தான்....