வியாழன், 22 டிசம்பர், 2016

ரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்!

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி தலைமை செயலர் பதவி பெற்றார் ராவ் மோகன ராவ். சீனியாரிட்டி அடிப்படையில் 20-வது இடத்தில் இருந்த ராவ் பதவி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 
மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி ராவ் தலைமை செயலர் பதவி பெற்ற போதே சர்ச்சைகள் உருவாகின. 
20 இடத்தில் இருந்தவரை ஜெயலலிதா தனக்கு பல உதவிகளை (?)செய்தவர் ,தான் கூறியவற்றை உடனே குறுக்கு வழிகளை கண்டு பிடித்து நிறைவேற்றுபவர் என்பதால்தான் எதிர்ப்புகளையும் மீறி தலைமைசெயலர் பதவியில் கொண்டு வந்து உட்காரவைத்து அழகு பார்த்தார்.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ். 1990-ம் ஆண்டுகளில் அன்றைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக ராம மோகனராவ் இருந்தார். 


நெடுஞ்சாலைத்துறை செயலராக இருந்த ராவ் தான் அரசு கான்ட்ராக்ட்டுக்கு கமிஷனை கட்டாயமாக்கியவர்.  

2001 ம் ஆண்டு ராமமோகன ராவ் சிந்தனையில் உதித்த புதிய யோசனையே அரசு கான்ட்ராக்ட்டுக்கு 10 % கமிஷன் ஆகும்.  சோதனையில் சிக்காமல் பணத்தை இடமாற்றம் செய்யும் வித்தையை கண்டுபிடித்தவர் இவர் தான்.  ராவின் நூதன யோசனைகளின்படியே 2014, 2016 தேர்தல்களில் அதிமுகவினர் பணபரிமாற்றம் செய்தனர்.


மணல் எடுக்க அனுமதி தருவதன் மூலம் பணம் பெறலாம் என ஆட்சியாளர்களுக்கு சொல்லியவர் ராம மோகன ராவ். ராம மோகனராவ் உருவாக்கி தந்த திட்டம் மூலமே மணல் குவாரிகள் அரசு வசமானது. மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்த பெருமை ராம மோகன ராவுக்கு பெரும் பங்கு உண்டு.

சேகர் ரெட்டி ரூ.10,000 கோடி மதிப்புள்ள அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இந்த ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்புதல் அளித்தவர் தலைமை செயலர் ராம் மோகன ராவ் தான்.  
சேகர் ரெட்டியிடம் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மோகனராவ் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை செயலர் ராவ் வீட்டில் சோதனை நடப்பதை அடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமை செயலர் பதவியில் இருந்து ராம  மோகன ராவை நீக்கும் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

விஜயவாடாவில் உள்ள ராம மோகன ராவ் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக தலைமை செயலர் ராம மோகன ராவ், அவரது மகன், சகலை வீடு, மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 


தமிழக தலைமைச்செயலர் ராம மோகனராவ் மகன் வீட்டிற்கு நகை மதிப்பீட்டாளர்கள் குழு வந்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் ராம மோகனராவ் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக தலைமை செயலர் ராம மோகன ராவ், அவரது மகன், சகலை வீடு, மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

சென்னை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை காலை 5.30 மணியளவில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலைமை செயலர் வீடு சோதனைக்கு ஆளாவது இதுவே முதல் முறையாகும். 
தலைமை செயலர் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் அமைச்சர்கள், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராம் மோகன ராவ் தங்களையும் காட்டி கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அதிகார மையங்கள் அச்சத்தில் உள்ளது.
=====================================================================
ன்று,

டிசம்பர்-22.
  • இந்திய கணித தினம்

  • சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் பிறந்த தினம்(1666)

  • இந்திய ஆன்மிகவாதி அன்னை சாரதா தேவி பிறந்த தினம்(1853)

  • இந்திய கணிதவியலாளர் ராமானுஜர் பிறந்த தினம்(1887)
 ====================================================================
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்ற பின்னர் அதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உயர் மட்டக் குழுக்களை மத்திய அரசு அமைத்தது. அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு. 
இக்குழுவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட 13 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். 

முதலில் கறுப்பு பணம் ஒழிப்புக்கு காரணமாக இருந்தது தெலுங்கு தேசம் கட்சி தான் என்று பெருமையாக மோடிக்கு வரவேற்ப்பு அளித்தது. 
இதை தொடர்ந்து இந்த ரூபாய்  நோட்டு விவகாரத்தில் உயர் மட்டக் குழு அமைதது மத்திய அரசு. 
அந்த குழுவுக்கு தலைவராக மோடி திட்டத்துக்கு ஆதரவாக பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வை மோடி நியமித்தார் . 
ஆனால் இந்தத் திட்டம் பெரும் தோல்வி என்பதை இந்தியா முழுக்க இருந்து வரும் செய்திகள் மூலம்  சந்திரபாபு நாயுடு உணர்ந்திருக்கிறார்.
 இந்நிலையில் விஜயவாடாவில் நடந்த தெலுங்குதேசம் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், 
"இப்போது இந்தத் திட்டத்தை நான் விரும்பவில்லை. முதலில் மோடியின்  இந்த முடிவை ஆதரித்தேன். ஆனால் தற்போது 40 நாட்களுக்கு மேலாகியும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. 
அறிவித்த நாள் முதல் இன்று வரை மக்களின் பிரச்சனை ஒரு சதவிகிதம் கூட குறைவில்லை. இதுதொடர்பாக நான் தினசரி சிந்தித்து வருகிறேன். ஒரு தீர்வும் எனக்கு கிடைக்கவில்லை. 

"இந்தத் திட்டத்தால் உண்மையில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதாக தெரியவில்லை.ஏழை எளிய மக்களும், நடுத்தர மக்களும் தான் பாதிக்கப்படுள்ளனர் மற்றும் பல அப்பாவி பொதுமக்கள்தான்  உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மாற்றி மாற்றி விதிமுறைகளை அறிவித்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். 

அவர் அவர்கள் பணத்தை செலுத்த முடியாமல், எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் ரிசர்வ் வங்கியும் முழுமையாக உத்தரவுகளை அமல்படுத்தவில்லை. வங்கிகளில் பணம் இல்லை என்று பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றனர் . 

மேலும் தலையை உடைத்துக் கொண்டு யோசித்தும் கூட என்னால் உயர் மட்டக் குழுதலைவர் என்பதால்  தலையைக் குனியத்தான் முடிகிறதே தவிர தீர்வு காண முடியவில்லை.காரணம் மோடி பேசுவது ஒன்றாகவும்,ரிசர்வ் வாங்கி செயல்முறைகள் வேறாகவும் உள்ளது.

மோடி கருப்புப்பணத்தை ஒழிக்க தவறான முடிவுகளை ,வழியை தேர்ந்தெடுத்து  அதில் வேகமாக பிடிவாதத்துடன் நடை  போடுகிறார்.பாமர மக்களின் இன்னல்களை அவர் கண்டு கொள்ளவே இல்லை.வங்கிகளை போதுமான அளவு புதிய பணம் இருப்பை ஏற்பாடு செய்யாமல் பணத்தை முடக்கியது தெளிவான சிந்தையற்ற செயல்.ஒரு இரண்டாயிரம் தாளுக்கு மக்கள் காத்துக்கிடைக்கையில் பெரும் பணம் படைத்தவர்களிடமிருந்து கணக்கில் காட்டாத 2000 பணத்தாள்கள் கோடிகளில் கைப்பற்றப்படுகிறது.இது மத்திய அரசின் செயல்பாடுகளையே சந்தேகம் கொள்ளவைக்கிறது.
"என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 
40 நாட்களுக்கு மேலாகியும் மக்கள் பிரச்சனை ஒரு துளிக்கூட குறையவில்லை என்றும் இந்த திட்டத்தால் நான் தலைகுனிந்து நிற்கின்றேன் என்றும் நாயுடு கூறியிருப்பது பாஜக வட்டாரத்தையும், பிரதமர் மோடியையும் அதிர வைப்பதாக உள்ளது. 

ஆனால் மக்கள் படும் அவதியையும், சிரமத்தையும் இனியும் பார்த்தும் பார்க்காமலும் போக முடியாது என்ற என்னத்தில் தான் சந்திரபாயு நாயுடு கூறியிருப்பதாக தெரிகிறது. 
இந்த நிலையில் ரூபாய் நோட்டு ஒழிப்பு செயல்முறை தவறான  வழியில்  போய் விட்டதாக கூறியுள்ள நாயுடுவின் பேச்சு மோடிக்கு பெரும் தர்மசங்கடமாக ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய குழுத்தலைவரே  இப்படி பேசியிருப்பது பாஜகஅரசுக்கும் மோடிக்கும்  அதிர்ச்சியை கொடுத்துள்ளது.