ஆளுநருக்கு பிரதமர் புத்திமதி!
*தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி வசம் நிலுவையில் இருந்து வருவதால் தமிழக மக்களும், மாநில அரசும் பாதிப்பு அடைந்துள்ளனர்" என்று உச்ச நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்துவரும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு வாதங்களை முன்வைத்தார். "நாடாளுமன்றோ, சட்டமன்றோ மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டுதான் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுகின்றன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை ஆளுநருக்கு உள்ளது. ஒருசமயம் அவர் மசோதாக்களை அரசின் மறுபரிசீலனைக்கு அனுப்பும்பட்சத்தில், அதனை கருத்தில் கொண்டு மசோதாக்களை மறுபரிசீலனை செய்து இரண்டாவது முறை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினால், அர...