ஆளுநருக்கு பிரதமர் புத்திமதி!

*தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி வசம் நிலுவையில் இருந்து வருவதால் தமிழக மக்களும், மாநில அரசும் பாதிப்பு அடைந்துள்ளனர்" என்று உச்ச நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்துவரும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

suran

இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

"நாடாளுமன்றோ, சட்டமன்றோ மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டுதான் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுகின்றன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை ஆளுநருக்கு உள்ளது. ஒருசமயம் அவர் மசோதாக்களை அரசின் மறுபரிசீலனைக்கு அனுப்பும்பட்சத்தில், அதனை கருத்தில் கொண்டு மசோதாக்களை மறுபரிசீலனை செய்து இரண்டாவது முறை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினால், அரசியலமைப்பு சட்டத்தின் 200 ஆவது பிரிவின்படி அதற்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். மாறாக அவர் தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பும் தோல்வியுற்றதாக ஆகிவிடும்." என்று முகுல் ரோத்தகி வாதிட்டார்.

மேலும், "2020 ஜனவரி 13 முதல் 2023 ஏப்ரல் 28 ஆம் தேதி வரை மொத்தம் 12 மசோதாக்கள் மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தன. 2021 நவம்பர் மாதம், தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார்" என்று தமது வாதத்தின்போது ரோத்தகி குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் எவ்வளவு மசோதாக்கள் நிலுவையில் உள்ளன? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு,"12 மசோதாக்களில் 2 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆளுநர், 10 மசோதாக்களை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பினார். 

அவற்றை மறுபரிசீலனை செய்த சட்டமன்றம், மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இரண்டாவது முறை தமது ஒப்புதலுக்கு அனுப்ப்பட்ட மசோதாக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவற்றையும் அவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினார்" என்று ரோத்தகி பதிலளித்தார்.ரோத்தகியின் வாதத்தை கேட்ட நீதிபதிகள்,"மாநில சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் எதனடிப்படையில் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன?

 இது சரியோ, தவறோ இந்த நடவடிக்கையின் மூலம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது? என்று கேள்வியெழுப்பினர். மேலும், ஆளுநரின் இந்த செயலை நீங்கள் (தமிழக அரசு தரப்பு) எதிர்க்க முடியுமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், "குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களின் தற்போதைய நிலை என்ன? 

எதனடிப்படையில் ஆளுநர் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்?

 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் மாநில ஆளுநரால் தன்னளவில் ஏன் முடிவெடுக்க இயலவில்லை? ஓர் குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆளுநர் மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்று அரசியலமைப்பு சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்போது ஆளுநர் எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்? என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

அப்போது, "பல மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், மாநில அரசும், மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்று நீதிபதி பர்திவாலா வேதனையுடன் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட, ஆளுநர் தரப்பு மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞரான ஆர்.வெங்கடரமணி, "ஆளுநரின் ஒப்புதல் கோரப்பட்ட மசோதாக்கள் அனைத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. தற்சமயம் தமிழக ஆளுநர் வசம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை." என்று பதிலளித்தார்.நீதிபதிகள் பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலோ, அவற்றை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்யும் வகையில் திருப்பி அனுப்பாமலோ அப்படி தன்வசம் வைத்திருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவை மீறும் செயலாகும்" என்று நீதிபதி பர்திவாலா காட்டமாக தெரிவித்தார்.

suran

அப்போது குறுக்கிட்ட ஆளுநர் தரப்பு வழக்குரைஞரும், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞருமான ஆர். வெங்கடரமணி, "தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இரண்டு மனுக்களில், ஒரு மனு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன திருத்த மசோதா தொடர்பானது.

மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அவற்றின் வேந்தரான ஆளுநருக்கு தான் உண்டு. அத்துடன் யுஜிசி விதிமுறைகளின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் யுஜிசி தலைவரின் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும். மேலும் இந்த தேடல் மற்றும் தேர்வுக் குழுவை நியமிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு தான் உண்டு" என்று குறிப்பிட்டார்.

மேலும்," இது புதிதாக இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை பற்றிய விவகாரம் அல்ல; ஏற்கெனவே உள்ள சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை பற்றியது." என்று அவர் குறிப்பிட்டார்.

அதாவது, மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் யுஜிசியின் இந்த விதிமுறைக்கு எதிராக உள்ளது." என்று பொருள்படும்படி ஆளுநர் தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்தார்.


அவரது வாதத்தை கேட்ட நீதிபதி பர்திவாலா, "அப்டியானால் குறிப்பிட்ட சட்டத்திருத்தம் தொடர்பாக ஆளுநருக்கு இருக்கும் ஆட்சேபங்கள் என்ன? அதில் உள்ள ஓட்டைகள் என்ன? என்பவை குறித்து ஆளுநர், மாநில அரசுக்கு முறையாக தெரிவித்துள்ளாரா? அதற்கான பதிவேடுகள், ஆவணங்கள் ஏதேனும் ஆளுநர் மாளிகை வசம் உள்ளதா? என்று மீண்டு்ம் கேள்வி எழுப்பினார்.

மேலும்,"எதனடிப்படையில் மாநில அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்? என்பதை இந்த நீதிமன்றம் அறிய விரும்புவதாக கூறிய நீதிபதி, ஆளுநர் இந்த விஷயத்தில் ஏன் இவ்வாறு செயல்படுகிறார் என்பதை சட்ட வல்லுநர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்." என்றும் தெரிவித்தார்.

அதற்கு, இங்கு பிரச்சனை அடிப்படையில், அரசியலமைப்பு சட்டத்தின் 200 ஆவது பிரிவை ஆளுநர் மீறும் வகையில் செயல்படவில்லை என்பது பற்றியது அல்ல. ஆனால், மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்புவதாக தெரிகிறது. ஆனால், அவ்வாறு செய்ய இயலுமா? என்று ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு," மாநில சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்குபின் மீண்டும் தன் பார்வைக்கு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் எவ்வளவு காலம் கடத்துவார்? என்று நீதிபதி பர்திவாலா கேள்வி எழுப்பினார்.

மே்லும், ஒரு மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போதும், அதனை மறுபரிசீலனை செய்து அவையால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு சமர்ப்பிக்கப்படும்போது, ​​ஆளுநருக்கு அதைத் தடுத்து நிறுத்த அதிகாரம் உள்ளதா?

மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை, குடியரசுத் தலைவரின் பார்வைக்கு ஆளுநர் எதனடிப்படையில் அனுப்பினார்?

குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பார்வை அனுப்பும் விருப்புரிமை ஆளுநருக்கு உள்ளதா அல்லது குறிப்பிட்ட விஷயங்களையும் தாண்டியும் இவ்வாறு ஆளுநர் இவ்வாறு செயல்பட முடியுமா?

மாநில அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது குறித்த 200 ஆவது சட்டப்பிரிவு எவ்வாறு பொருள் கொள்ளப்பட வேண்டும்? என்று அடுக்கடுக்காக கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.


ஆர். யன். ரவி க்கு மோடி  புத்திமதி!

யார் பேச்சையும் கேட்காமல் ஆடிக் கொண்டிருக்கும் ஆளுநர் ரவியை, உச்சந்தலையில் ஓங்கிக் கொட்டி புத்திமதி சொல்லி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மாநில அரசு தயாரித்துத் தரும் உரையை வாசிக்காமல் முரண்டு பிடித்துக் கொண்டிருப்பவர் ஆளுநர் ரவி என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு நாடாளுமன்றத்தில் அறிவுரை – கண்டிப்பு – உத்தரவு – கட்டளை இடும் வகையில் சில சொற்களை உதிர்த்துள்ளார் மாண்புமிகு பிரதமர் அவர்கள்.“மாநில சட்டமன்றத்தில் அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது, நமது நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம்”என்று பிரதமர் மோடி அவர்களே சொல்லி விட்டார்கள்.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி,“ஒன்றிய அரசு தயாரித்து வழங்கிய உரையை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் இந்த அவையில் வாசித்தார்கள். மாநில சட்டமன்றங்களில் அந்தந்த மாநில அரசுகள் வழங்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பதும் நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியமாகும். குஜராத்தில் நான் முதலமைச்சராக இருந்தபோது எங்கள் அரசு தயாரித்து அளித்த உரையை காங்கிரஸ் ஆளுநர்கள் வாசித்தார்கள்”என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்கள். இதை விட வெளிப்படையான புத்திமதியை பிரதமரால் சொல்ல முடியாது.

மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற உண்மையை பிரதமர் மோடியே ஒப்புக்கொண்ட நிலையில், இனி என்ன சொல்ல வேண்டும் போகிறார் ஆளுநர் ரவி?

“இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைப் பார்த்திருக்கிறது’ – என்று ‘பராசக்தி’ படத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு வசனத்தை எழுதி இருப்பார்கள். இந்தச் சட்டமன்றமும் கடந்த சில ஆண்டுகளாக விசித்திரமான காட்சிகளைக் கண்டு வருகிறது. உரையாற்ற வருகிறார் மாண்புமிகு ஆளுநர். ஆனால் உரையாற்றாமல் போய்விடுகிறார். அதனால்தான் ஆளுநரின் செயல்பாடுகளை நான் சிறுபிள்ளைத்தனமானது என்று சொன்னேன்”என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசியதைச் சுட்டிக் காட்டி, 'ஆணவம்' என்று விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் ஆளுநர் ரவி. இன்றைக்கு அவரது நடத்தையை பிரதமர் அவர்களே விமர்சித்து விட்டனர். பிரதமரையும் ஆணவக்காரர் என்பாரா ரவி?

ஆளுநர்களாக வருபவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை, 'அரசு தயாரித்துத் தரும் உரையை ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வாசிப்பது' ஆகும். அதைக் கூட ரவி செய்யாமல் அடம்பிடித்தார்.

2021 ஆம் ஆண்டு ஆர்.என்.ரவி ஆளுநராக வந்தார். 2022 ஆம் ஆண்டு தனது முதல் உரையை முழுமையாக வாசித்தார். எதையும் மாற்றவில்லை.

2023 ஆம் ஆண்டு உரையில் இருந்த பெரியார், அம்பேத்கர், கலைஞர் போன்ற பெயர்களை விட்டுவிட்டு வாசித்தார். சுயமரியாதை, மதச்சார்பின்மை, மகளிர் முன்னேற்றம் ஆகிய சொற்களையும் விட்டுவிட்டு வாசித்தார். அரசு கொடுத்த உரையில் முழுமையாக அவைக் குறிப்பில் ஏறும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது, தேசிய கீதம் பாடப்பட்டது.

தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர். இதுவரை எந்த மாநில ஆளுநரும் இந்த மாதிரி தேசிய கீதத்தை அவமானப்படுத்தியது இல்லை. என்ன கோபம் இருந்தாலும் தேசியகீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நின்று மரியாதை செலுத்தி விட்டுச் செல்ல வேண்டும் என்ற அடிப்படை நெறிகூடத் தெரியாத அழக ரவி நடந்து கொண்டார்.

ஆளுநர் ரவியின் உச்சந்தலையில் ஓங்கிக் கொட்டிய மோடி : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

2023 ஆம் ஆண்டு தேசிய கீதத்தை அவமதித்த அதே ஆளுநர், 2024 ஆம் ஆண்டு, 'தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடுகிறீர்கள், தேசிய கீதம் பாடவில்லை' என்பதற்கு ஒரு காரணம் சொன்னார். ஆளுநர் உரையின் தமிழ் வடிவத்தை அவைத்தலைவர் வாசித்தார். ஆளுநர் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தார்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கமான கடந்த மாதம், வந்தார் ஆளுநர். பேரவையின் காவல் அணிவகுப்பு மரியாதையை வாங்கினார். உள்ளே வந்து உட்கார்ந்தார். எல்லார் முகத்தையும் பார்த்துவிட்டு, அவராகவே போய்விட்டார். இந்த காமெடி வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாதது ஆகும்.

பேரவை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது – அவை நடவடிக்கைகள் முடியும் போது தேசிய கீதம் ஒலிப்பதுதான் நடைமுறை மரபு என்பதை எத்தனை தடவைகள் சொன்னாலும் அதனைப் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவராக ஆளுநர் இல்லை.

உண்மையான காரணம் தேசிய கீதம் அல்ல. திராவிட மாடல் என்பதுதான் ஆளுநரை தூங்கவிடாமல் செய்கிறது. அதனை வாசிப்பதுதான் அவருக்கு வலிக்கிறது. பெரியார், அம்பேத்கர், கலைஞர், சுயமரியாதை, மதச்சார்பின்மை, மகளிர் முன்னேற்றம் ஆகிய சொற்களைச் சொல்லவே அவருக்கு வாய் வலிக்கிறது. தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது என்பதைச் சொல்லும் போது அவருக்கு நெஞ்சு அடைக்கிறது.

அந்த நெஞ்சு அடைப்பை சரி செய்வதாக பிரதமர் மோடியின் புத்திமதி அமைந்துள்ளது.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?