இடுகைகள்

அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருந் துளையும்,ஈர்ப்பு சக்தியும்.

படம்
பு கழ்பெற்ற நோபல் பரிசு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன்பே "பிரபஞ்ச வெளியில் கருந்துளை என்ற பிளாக் ஹோல் பிரபஞ்சத்தில் இருப்பதாகவும் அது மிகுந்த ஈர்ப்பு சக்தியுடன் கூடிய வெற்றிடமாக இருக்கும் எனவும்.அது தன்னை நெருங்கி வரும் கோள்கள் உடப்பட்ட விண் வெளிப்பொருட்களை தன்னுள் இழுத்துக்கொள்ளும்" என்றும் கண்டுபிடித்து சொன்ன புவி ஈர்ப்பு அலைகளை இதுவரை கறபனை உண்மை என்ற அளவிலேயே வைத்திருந்தனர்.  கடந்த 1915ஆம் ஆண்டிலேயே விஞ்ஞானி ஐன்ஸ்டின் தனது கோட்பாடு ஒன்றில் இது குறித்த கணிப்பை அறிவியல் உலகின் முன்வைத்தார்.  தற்போது  விஞ்ஞானிகள் உண்மைதான் என ஆய்வின் மூலம் கண்டறிந்து  நிரூபித்துள்ளனர்.   நம் பிரபஞ்சவெளியில் 'பிளாக் ஹோல்' என்ற கருந்துளைகள் ஆங்காங்கே இருப்பதை முன்பே  விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஐன்ஸ்டின் தத்துவத்தை சரி என கூறினாலும் அந்த கருந்துளைகளுக்கு  ஐன்ஸ்டின் கூறியது போல்    ஈர்ப்பு அலைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.இந்த ஆய்வில் ...

வேற்று கிரகங்களில் மனிதன்?

படம்
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தீராத தாகத்துடன் விடை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள்...  ‘இந்தப் பிரபஞ்சத்தில் பூமியைப் போல வேறு கிரகங்கள் இருக்கிறதா?  இல்லையா?  அப்படி இருந்தால் அவற்றில் மனிதன் உள்ளிட்ட ஜீவராசிகள் உள்ளனவா?’  என்பது தான். பிரபஞ்சத்தில் பூமியைப் போல் ஏராளமான கோள்கள் இருப்பது விண்வெளி வல்லுனர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கோள்களில் மனிதனைப் போன்றோ அல்லது மனிதனைவிட அறிவில் பன்மடங்கு திறம் வாய்ந்த உயிரினங்களோ ஏதேனும் உண்டா எனும் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.  ஆனால் அண்மையில் நிகழ்ந்த ‘KIC 8462852’  எனும் ஒரு நட்சத்திரத்தின் கண்டுபிடிப்பு, ‘வேற்று கிரகவாசிகள் அந்த நட்சத்திரத்தின் அருகில் இருக்கக் கூடுமோ’ என்ற சந்தேகத்தை விண்வெளி வல்லுனர்களிடையே உருவாக்கியுள்ளது. ‘KIC 8462852’  நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 1481 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. விண்வெளி அறிவியல் அகராதியில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இன்று ஒரு சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் நாம் இந்த நட்சத்திரத்தைப் பார்த்தால், 1481 ஒளிஆண்டுகளுக்கு முன் அந்த நட...

பீட்சாவுக்கு... காக்கா முட்டையே மேல் ...

படம்
உலக அளவில் பசி, பட்டினி மற்றும் வறுமையால் 160 கோடி பேர் வாடி வருகின்றனர்.  இவர்கள் நல்ல குடிநீர் கூட கிடைக்காமல் வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகளை அனுதினமும் சந்தித்து வருகின்றனர் என்று ஐ.நாவின் யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது.  இது ஒருபுறம். மறுபுறம் தேவைக்கு அதிகமாகவும், பசிக்காக இன்றி ருசிக்காக அளவிற்கு அதிகமாக உண்பதும் நடந்தே வருகிறது. இதில் சில வகை உணவுகளை சாப்பிடுவதே அந்தஸ்து என ஒரு கட்டமைப்பு உருவமைக்கப்பட்டிருக்கிறது.  குறிப்பாக மிகப்பெரிய செல்வந்தர்களை கவரும் நோக்கிலும், கொள்ளை லாபநோக்கிலும் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் ஒருவித ருசிக்கு அடிமையாக்கும் சூத்திரத்தை கையாண்டு இன்று ஏராளமான துரித உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. அது எந்தளவிற்கு உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது பல்வேறு நிகழ்வுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்த உணவுப் பதார்த்தங்களுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல என்பதும் அவ்வப்போது நிரூபணமாகி வருகிறது.  குறிப்பாக சில மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் துரித வகை உணவுகள் எந...

மூர் விதி

படம்
ஒரு கம்ப்யூட்டர் வேகமாகவும், சரியாகவும் இயங்க, அதில் பயன்படுத்தப்படும் சிப் முக்கிய பங்கு வகிக்கிறது.  இவற்றை, ஐ.சி. (integrated circuit) அல்லது “ஒருங்கிணைந்த மின் சுற்று கொண்ட சிப்” என அழைக்கலாம்.  இந்த சிப்கள் பணியை மேற்கொள்கையில், செயல்பாட்டின் துல்லியமும், விரைவுத் தன்மையும், சிப்களில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களே நிர்ணயம் செய்கின்றன.  எனவே, அறிவியல் உலகம், இந்த சிப்களில் தொடர்ந்து கூடுதலான எண்ணிக்கையில், ட்ரான்சிஸ்டர்களைப் பதிப்பதிலேயே தன் முழுக்கவனத்தையும் செலுத்தி, ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. 1965 ஆம் ஆண்டு, இந்தப் பெருக்கத்தினைக் கண்ணுற்ற, இந்த சிப் துறையில் செயலாற்றிய விஞ்ஞானி கார்டன் மூர் (Gordon Moore) ; "ஒவ்வோர் ஆண்டும், சிப் ஒன்றில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காக உயரும் "  என்று, ஏப்ரல் 18, 1965 அன்று, கருத்து வெளியிட்டார்.  இதனையே கம்ப்யூட்டர் உலகம் ” மூர் விதி (Moore's Law)” எனப்  பெயரிட்டு அழைத்தது. இந்த விதி உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த விதி...

மூளை ?

படம்
மு க்கிய கண்டுபிடிப்பு கோமா நிலை எனப்படும் நடைபிண நிலையிலும் மனித மூளை சிந்தித்து செயற்படும் திறனுடன் இருப்பதாகவும், தான் இருக்கும் சூழலை அதனால் உணரமுடியும் என்றும், தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அது நினைவில் பதிந்துகொள்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஒரு நிலை இருக்கிறது. அதாவது ஒரு மனிதரின் மூளைச்செயற்பாடுகள் முற்றாக செயலிழந்த ஒரு நிலை. அவருக்கு தன்னைப்பற்றியோ தனது சூழல் பற்றியோ எந்த பிரக்ஞையும் இல்லாத ஒரு நிலை.  அவரால் மற்றவர்களிடம் பேசவோ மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் புரிந்துகொள்ளவோ முடியாத ஒரு நிலை. அவரது உடல் உறுப்புக்களை அவரால் இயக்கமுடியாத நிலை. சில நேரங்களில் அவரது கண்கள் திறந்திருந்தாலும் அவரால் பார்த்து புரிந்துகொள்ளமுடியாத நிலை. தமிழில் சொல்வதானால், நடைபிணம் போன்றதொரு நிலை. அதாவது உடலில் உயிர் இருக்கிறது என்பதைத்தவிர வேறு எந்த உணர்வும், உடற்செயற்பாடும...

ஹிக்ஸ் போசான் -கண்டு கொண்டது எப்படி?

படம்
இன்றைய உலகை வியப்பில் ஆழ்த்தியிருக்கும், ஹிக்ஸ் போசான் -_ கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடத்திற்கு, அவர்களின் அனுமதி பெற்று நேரில் சென்று பார்த்து வந்தவர், சென்னை வேளச்சேரியில் வசிக்கும் முருகானந்தம். இவரை உண்மை இதழில் செவ்வி கண்டு பிரசுரித்த கட்டுரை மீள் பதிவாகத்தருகிறோம்.. முதலில் முருகானந்தம் பற்றி சில வரிகள்: " அழகப்பா கல்லூரி, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்றவர். அறிவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஈர்ப்பு விசையின் உண்மைகளை கண்டுபிடிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருபவர். அய்ன்ஸ்டீன் அறிவியல் இயக்கம் (Einstein Science Movement) என்ற இயக்கத்தை நிறுவி அறிவியலை மக்களிடம் பிரச்சாரம் செய்து வருபவர்."   ஹிக்ஸ் போசான் - ஏன்? எதற்கு?  எப்படி? " Science is nothing. But, Searching the Truth.  கேள்வி முற்றுப் பெறும் வரையிலும் உண்மையைத் தேடிச் செல்வதுதான் அறிவியல். அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு புதிரையும் அவிழ்த்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில்தான், கேள்வி மேல் கேள்வி கேட்டு செயல்முறையில் அந்த கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்து...

"கேரி"ப் பைகளும் அணு குண்டும்

படம்
பி.பாலசுப்பிரமணியன் இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் ‘கேரிபேக்’ மாறிவிட்டது, இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப்படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம், பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்றுமண்டலம் மாசுபடுகிறது, பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது. பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்யமுடியாது. இதனால் இவை நீர்நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் ‘நெட்வொர்க்கையும்’ பாதிக்கிறது, இந்த வகையில் ‘கேரிபேக்’ எனும் பாலிதீன் பைகளும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகளும் இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு ‘கேரிபேக்’ மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானம் சொல்கிறது. மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பை...

கழிவு டயர்களும் சிற்பங்களாகலாம்.

படம்
கீழே காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் வீசி எறியப்பட்ட கழிவு டயர்களால்.உருவானது. இப்போது கழிவு டயர்கள் பற்றி சிறிது பார்ப்போமா? ஆண்டுதோறும்1 பில்லியன்  டயர்கள்  செயற்கை ரப்பர், இயற்கை ரப்பர், கார்பன் , பாலியஸ்டர் இழைகள், மற்றும் இரும்பு கம்பிகள் கொண்டு,  உற்பத்தி செய்யப்படுகின்றன, டயர்கள் பல்வேறுசூழல்களிலும் உழைத்திட  டயர்கள் 28 % இயற்கை ரப்பர், 28 % செயற்கை ரப்பர் (கச்சா எண்ணெய் இருந்து தயாரிக்கப்படுகிறது), மற்றும் 28 சதவீதம் கார்பன்கள் பயன்படுத்தி  தரமான டயர்கள் செய்யப்படுகிறது.   முதல் 84%போக மீதி 16 %டயரை மென்மையாக்கும் (ஹைட்ரோகார்பன் எண்ணெய், ரெசின்கள்), Antidegradants (பாரா-phenylenediamine, பாராஃப்பின்), Curatives சல்பர், துத்தநாக ஆக்ஸைடு, ஸ்ட்டியரிக் அமிலம் போன்றவையாகும். டயர்களை எரித்தால் - அது வளிமண்டலம் மற்றும் நிலத்தடி நீரையும் நச்சாக்கும் நச்சு வாயுக்களை வெளியிடும்.   உற்பத்தியாளர்கள் இப்போது அதிகமாக நீடிக்கக்கூடிய மற்றும் மறு சுழற்சிபொருட்கள்,நச்சுத்தன்மையற்றடயர்கள் தயாரிப்பது பரிசோதித்து வருகின்றனர். அதில் அவர்...

பணக்கார கிராமமும்-ஆபத்தான கிருமிகளும்

படம்
இந்திய பணக்கார கிராமம் இ ந்த பணக்காரக் கிராமத்தின் பெயர் மதாபர் நவ வியாஸ். வெளிநாடுகளிலிருந்து படேல்கள் சம்பாதிக்கும் பணம் இவ்விடத்தை செழுமையாக்கி உள்ளதாகக் குறிப்பிடுகிறார் மனீஷ் மக்வான். இந்தியாவில் உள்ள எந்தக் கிராமத்தோடும் மதாபரை ஒப்பிடமுடியாது. ஐந்து சதுர கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிராமம் இது. திட்டமிடப் பட்ட சாலைகளும், வளமான வீடுகளும் இக்கிராமத்தின் வாழ்க்கைத் தரத்தை சுட்டிக்காட்டுகின்றன. பெருநகரங்க ளைவிட நாகரிகமாக உள்ளது இக்கிராமம்.  மளிகைக் கடைகளைவிட வங்கிகளின் எண்ணிக்கை அதிகம். டெல்லி அல்லது மும்பையை ஒப்பிடும்போது இங்கு பங்கு வர்த்தகர் கள் அடர்த்தியாக உள்ளனர். இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்ந்துவிட்டது.   எல்லா கட்டடங் களிலும் மூன்று மாடிகள் உள்ளன. நன்றாகக் கட்டப்படாத ஒரு கடை அல்லது வீட்டைப் பார்க்கமுடியாது. மின்சாரமும் தண்ணீரும் 24 மணி நேரமும்  தடையின்றிக் கிடைக்கிறது. இங்கே அதிநவீன வசதி உள்ள ஆங்கிலப் பள்ளி ஒன்றும் இயங்குகிறது. அதில் உள்ள விளையாட்டுத் திடல் கிராமத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு இடம்தருகிறத...