பீட்சாவுக்கு... காக்கா முட்டையே மேல் ...
உலக அளவில் பசி, பட்டினி மற்றும் வறுமையால் 160 கோடி பேர் வாடி வருகின்றனர்.
இவர்கள் நல்ல குடிநீர் கூட கிடைக்காமல் வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகளை அனுதினமும் சந்தித்து வருகின்றனர் என்று ஐ.நாவின் யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது.
இது ஒருபுறம். மறுபுறம் தேவைக்கு அதிகமாகவும், பசிக்காக இன்றி ருசிக்காக அளவிற்கு அதிகமாக உண்பதும் நடந்தே வருகிறது. இதில் சில வகை உணவுகளை சாப்பிடுவதே அந்தஸ்து என ஒரு கட்டமைப்பு உருவமைக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக மிகப்பெரிய செல்வந்தர்களை கவரும் நோக்கிலும், கொள்ளை லாபநோக்கிலும் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் ஒருவித ருசிக்கு அடிமையாக்கும் சூத்திரத்தை கையாண்டு இன்று ஏராளமான துரித உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
அது எந்தளவிற்கு உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது பல்வேறு நிகழ்வுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்த உணவுப் பதார்த்தங்களுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல என்பதும் அவ்வப்போது நிரூபணமாகி வருகிறது.
குறிப்பாக சில மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் துரித வகை உணவுகள் எந்த முறையில் தயாரிக்கப்படுகிறது. அதில் என்ன என்ன பொருட்கள் எந்த அளவில் சேர்க்கப்படுகின்றன.
அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்ற விபரங்களை வெளியிடுவதில்லை. கேட்டால் இது அந்த உணவு தயாரிப்பு முறையின் ரகசியம் என்கின்றனர். இதையும் நம்பி மேல்தட்டு வகுப்பினர் இந்த வகை ஜங் புட் என்றழைக்கப்படும் துரித வகை உணவுகளை விரும்பி உண்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் எச்சரிக்கை தரும் வகையில் ஒரு நிகழ்வு லண்டனில் அரங்கேறியிருக்கிறது.
எல்லோரும் உணவு இன்றி உயிரிழப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பலர் உணவருந்துவதாலேயே உயிரிழந்து வருகின்றனர்.
அந்த பட்டியலில் தற்போது பிரிட்டனின் கொழுத்த மனிதன் என்று அழைக்கப்படும் “பீட்சா கார்ல் தாம்சன்” இணைந்திருக்கிறார்.
கார்ல் தாம்சன் அன்றாடம் கட்டுப்பாடு இல்லாமல் பீட்சா, பர்கர் உள்ளிட்ட துரித வகை உணவுகளை உட்கொண்டு வந்தார்.
இதனாலேயே அவரை அனைவரும் பீட்சா கார்ல்தாம்சன் என்றழைத்தனர். இந்த வகை துரித உணவுகளை தொடர்ந்து உண்டதால் அவரது உடல் எடை 412.769 கிலோவாக அதிகரித்தது. அதாவது ஐந்து வாஷிங் மிஷின்களின் எடைக்கு நிகராக கார்ல் தாம்சனின் எடை இருந்தது.
அதிக உடல் எடை காரணமாக அவரால் தானாக குளிப்பது, உடை மாற்றுவதுபோன்ற தனது தனிப்பட்ட வேலைகளைக் கூட செய்ய இயலாமல் சிரமப்பட்டு வந்தார்.
எனினும் தினமும் பழக்கப்பட்ட மவுண்டயின் ஆப் பிஸ் பிங்கர், பீட்சா, 6 பாக்கெட் யார்கீஸ், மார்ஸ்பார்ஸ் மற்றும் பெரிய அளவிலான ஹார்போ ஸ்வீட் போன்ற உணவுகளை அவரால் தவிர்க்க இயலவில்லை.
உடல் எடையால் ஏற்பட்ட அத்தனை அவஸ்தைகளையும் தாண்டி அவரால் தினமும் 10 ஆயிரம் கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
கடந்த ஓராண்டிற்கு மேல் படுக்கையை விட்டு எழ முடியாமல் சிரமப்பட்டு வந்த கார்ல் தாம்சன் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்த பின்னரும் அவருக்கு உடல் எடை கொடுத்த துன்பம் சிறிதும் குறைய வில்லை.
ஆம் அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத் தளத்தில் இருந்த அவரது உடலை வெளியில் கொண்டு வருவது மிகவும் சிரமானதாக இருந்தது.
அவரது சடலத்தை வெளியில் கொண்டு வரும் பணியில் 15 காவல் துறை அதிகாரிகள், 3 மருத்துவ உதவியாளர்கள், ஒன்பது தீயணைப்பு படையினர், ஒரு தீயணைப்பு இயந்திரம், இரண்டு தீயணைப்பு வாகனம் மற்றும் ஹைட்ராலிக் லிப்ட் என ஒரு பேராபத்து மீட்புக்குழுவே கூடி பல மணி நேர போராட்டத்திற்கு பின் அவரது சடலத்தை வெளியில் கொண்டு வந்தனர்.
இத்தனை பிரச்சனைக்கும் காரணம் கார்ல் தாம்சனின் முறையற்ற ஜங் புட் உணவுப்பழக்கமே என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் எடையில் 285 கிலோவை கண்டிப்பாக குறைத்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று மருத்துவர்கள் கூறியும் அவரால் தனது உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ள இயலவில்லை.
காரணம் மனிதனுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது என்ற நடைமுறை மாறி, இன்றும் மூலதனத்தின் லாபவெறி உணவிற்கு ஏற்ப மனிதனை உற்பத்தி செய்யும் நடைமுறைக்கு இட்டுச் செல்கிறது.
அப்படி உணவை நுகர்வதற்காக உற்பத்தி செய்யப்பட்ட மனிதனாக கார்ல் தாம்சன் மாற்றப்பட்டிருக்கிறார்.
அதனாலேயே மரணத்தையும் தழுவியிருக்கிறார்.
என்றைக்கு இயற்கைக்கு மாறாக முழுவதும் செயற்கையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுதானிய உற்பத்தியை நோக்கி உணவுப் பழக்க வழக்கம் நகரத்துவங்கியேதா, அன்றே அதோடு பல்வேறு நோய்களும் மனிதனை தொற்றியே வருகிறது.
பீட்சா, பர்கர் கோக், பெப்சி என்று பாட்டுப்பாடும் குழந்தைகளுக்கு, குதிரைவாலி, திணை, சோளம், கம்பு, வரகு, எள் போன்ற தானியங்களை இன்றைய அவசர உலகின் அம்மாக்கள் மறந்தும் கூட குழந்தைகளுக்கு சொல்லித் தருவதில்லை.
இன்று மூட்டு வலி, முதுகு வலி, நீரிழிவு நோய், இரத்தக்கொதிப்பு எனத் தொடங்கி, எப்போது மருந்து கண்டு பிடிக்கப்படும் என ஏங்கிக் காத்திருக்கும் புற்று நோய் வரை சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நோய்களுக்கு அடிப்படை காரணங்களில் ஒன்று நமது உணவு முறை என்பதையும் மறுக்க முடியாது.
எனினும் இன்றைய பணிச்சூழலில் கணினியின் முன் பல மணி நேரம் அமர்ந்து பணி புரிந்து வரும் இளைஞர்களும் பெற்றோரும் ஒரு போன் செய்தால் வீட்டிற்கே கொண்டு வரப்படும் ஜங்புட் உணவுகளை அவசர உணவு என்று பார்க்கின்றனர்.
ஆம், அது அவசர உணவுதான்.
நம்மை இந்த பூமிப்பந்தில் இருந்து அவசரமாக வெளியேற்றும் அவசர உணவு.
சமீபத்தில் தமிழில் வெளிவந்திருக்கும் காக்கா முட்டை படத்தில் பீட்சாவிற்காக ஏங்கும் குப்பத்துச் சிறுவர்கள் இருவர் பீட்சாவை உண்பதையே லட்சியமாகக் கொண்டு அதனைஅடையும் போது, இதற்கு காக்கா முட்டையே மேல் என்ற தொனியில் படம் நிறைவுறும். ஆம் உண்மைதான்.
ஆம் கார்ல் தாம்சனின் உயிரைப் பறித்த பீட்சாவை விட, குப்பத்து சிறுவர்களின் கொடும் பசியை கொஞ்சமாவது தீர்த்து உயிரை காக்கும் காக்கா முட்டை நூறு மடங்கு மேல்...
எம்.பாண்டீஸ்வரி.
இன்று,
ஜூலை-04.
- பிலிப்பைன்ஸ் குடியரசு தினம்
- அமெரிக்க விடுதலை தினம்(1776)
- இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் இறந்த தினம்(1902)
- நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)
தி.மு.க. தலைவர் கலைஞர் "முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அவசியம் என்றாலும், விடுதலைப் புலிகள் மீது குறைகூறி, அவர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல்.
புலிகள் மீது மாசு கற்பிப்பதைப் போலவும் அவர்களின் முதுகிலே குத்தி அவமானப்படுத்துவதைப் போலவும் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதைக் கண்டிப்பதாக" கூறியுள்ளார்.
ஈழத்தாய் புலிகளின் பாதுகாவலர் என்று ஆராதிக்கும் இங்குள்ள சில ஈழ வியாபாரிகள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்.ஜெயலலிதா அரசை கண்டிப்பதை விட்டு சைமன் [எ]சீமான் நடிகர் விஷாலை சரத்குமாருக்கு ஆதரவாக வரித்தெடுக்கிறார்.இங்குதான் சாதிப்பாசம் திராவிட இயக்கத்தையே வைக்கிறது.