என்றும் இளமை
உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி வேப்பிலையில் உள்ளது.
கற்பமூலிகை என்றழைக்கப்படும் வேப்பிலைக்கு நரை, மூப்பு என்ற மூன்றையும் அணுக விடாமல் தடுக்கும் குணம் உண்டு.
இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு.
இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப்படுகிறது.
மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
ஆனால், கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்தி ருப்போரும் இதை உட்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.
2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக்குணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், வீக்க உருக்கி, குடல் புண்ண கற்றி, மலேரியா போக்கி, பூஞ்சை நோய் நீக்கி, பாக்டீரியா அகற்றி, வைரஸ் அகற்றி, ஆண்டி ஆக்சிடென்ட், புற்றுநோய் தடுப்பு, வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.
வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர்.
வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.
நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக்கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு.
சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டுநோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக்கூடிய சரும நோய்கள். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்துவிடும்.
வேப்பிலையை பயன்படுத்தும் முறை :
புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும். வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக்காய்ச்சி , அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.
வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.
வேப்பிலையின் பொதுவான பயன்கள்:
அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம். சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.
சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.
வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.
வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள் , வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத் தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.
வேப்பிலையின் உபயோகங்கள்:
விவசாயத்துறையில் பூச்சிக்கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதிலுள்ள முக்கிய வேதிப்பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.
அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப் படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன் படுத்தப்படுகிறது.
இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.
சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.
வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப் படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.
மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும். பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம்பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.
வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது.
இன்று,
ஜூலை-15.
- தமிழக முன்னாள் முதல்வர் கே.காமராஜர் பிறந்த தினம்(1903)
- மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)
- தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)
- இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது(1954)
1903 - ஜூலை 15
தமிழ்நாடு காங்கிரசில்ஒன்று, ராஜாஜி கோஷ்டி; மற்றது, காமராஜர் கோஷ்டி. ராஜாஜி, அகில இந்திய அளவிலான காங்கிரசில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாடு காங்கிரசில், காமராஜர் கை ஓங்கியது.
தமிழ்நாடு காங்கிரசில்ஒன்று, ராஜாஜி கோஷ்டி; மற்றது, காமராஜர் கோஷ்டி. ராஜாஜி, அகில இந்திய அளவிலான காங்கிரசில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாடு காங்கிரசில், காமராஜர் கை ஓங்கியது.
ஒருமுறை, காந்திஜி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்தார்.
அவர் பயணம் முடித்து திரும்பியபோது, ஆந்திராவில், விஜயவாடா ரயில் நிலையத்தில், அவரிடம் ஒரு ரகசிய கடிதம் கொடுக்கப்பட்டது.
அதில், காமராஜர் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுதப்பட்டிருந்தன.
ஊர் திரும்பிய காந்தி, தன், 'யங் இந்தியா' பத்திரிகையில், 'தமிழ்நாடு காங்கிரசில் சில புல்லுருவிகள், உட்கட்சிப் பூசலை உண்டாக்கி வருகின்றனர்' என்று எழுதினார்.
அதை புரிந்து கொண்டு 'காந்தி என்னைத் தான் கூறுகிறார்; நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என, காமராஜர் கூறினார்.
தமிழகமெங்கும், காமராஜருக்கு ஆதரவாகவும், காந்திஜிக்கு எதிராகவும் கிளர்ச்சி நடந்தது. கடைசியில் எதிர்ப்பை தாக்கு பிடிக்க முடியாமல் "'நான் காமராஜரை கூறவில்லை' என்று மறுப்பு வெளியிட்டு பல்டியடித்தார் காந்தி. அப்பேற்பட்ட, புகழுக்கு சொந்தக்காரர் காமராஜர் பிறந்த தினம் !
========================================================================
வியாபம் ஊழல்
இதுவரை ?
1982ம் ஆண்டு வியவசாயிக் பரீக்சா மண்டல் (வியாபம்) அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே இது நடத்தியது.
2008ம் ஆண்டில் அரசு ஊழியர்களை தேர்வுசெய்வதற்கான தேர்வுகளை நடத்தும் பொறுப்பும் இதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
2009 ஜூலை 5 அன்று வியாபம் நபர்களை தேர்வு செய்ததில் விரிவான அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.2009ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது. இது தொடர்பாக முதல் புகார் பதிவு செய்யப்பட்டது.
2009 டிசம்பரில் இந்த ஊழலை விசாரிப்பதற்காக முதல்வர் ஒரு குழுவை நியமித்தார்.
2013 ஜூலை 7 அன்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
20 பேரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதற்காக கைது செய்தனர்.
2013 ஜூலை 16 அன்று இந்த ஊழலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜகதீஷ் சாகர் கைது செய்யப்பட்டார்.
2013 ஆகஸ்ட் 26 அன்று சிறப்பு அதிரடிப்படை விசாரணையை எடுத்துக்கொண்டது.
55 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
2013 அக்டோபர் 9 அன்று தேர்வு எழுதிய 345 பேரின் அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன.
2013 டிசம்பர் 18 அன்று உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா (பாஜக) வழக்கில் பதிவு செய்யப்பட்டார்.
2014 நவம்பர் 5 அன்று ம.பி., உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவை சிறப்பு அதிரடிப்படையின் விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக நியமித்தது.
2015 ஜூன் 29 அன்று சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட 23 பேர் “இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாதாரணமான காரணங்களால்’’ மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று கூறினர்.
2015 ஜூலை 7 அன்று முதல்வர் சவுகான் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.
140 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன;
3800 பேர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்;
800 பேர் தலைமறைவாக இருக்கிறார்கள்;
2000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்;
68 தேர்வுகளை வியாபம் நடத்தி இருக்கிறது;
1,087 மாணவர்களுடைய அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது;
76 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் இந்த ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்;
1 கோடியே 40 லட்சம் பேர் வியாபம் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் ;
‘வியாபம்‘ மூலம் வேலைக்குச் சேர்ந்த ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் 25 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
========================================================================