நெல்லி தரும் நலம் & அழகு.
நெல்லிக்காய் தமிழ் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த கனி. பெரு நெல்லிக்காய் எனப்படும் நாட்டு நெல்லிக்காய்தான் மிகவும் மருத்துவக் குணங்களைக்கொண்டது. மிகவும் நல்லது. அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் சாப்பிடுவதால், நம் உடலுக்கு அதிக நன்மைகள்கிடைக்கும். உடல் நோய்களை போக்கி நன்மைகளைத்தரும் நெல்லிக்காய் நமக்கு இளமையை மீட்டுத்தருகிறது. உடல் உள்ளே செய்யும் மருத்துவத்தை போலவே நம் தோல் இளமையை தரும் வெளி உபயோக நன்மைகளும் நெல்லிக்காயில் அதிகம். அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைகிறது. சருமத்தின் பொலிவு அதிகரிக்கும் , நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும். நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில...