நெல்லி தரும் நலம் & அழகு.

 நெல்லிக்காய் தமிழ் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த கனி.

 பெரு  நெல்லிக்காய் எனப்படும் நாட்டு நெல்லிக்காய்தான் மிகவும் மருத்துவக் குணங்களைக்கொண்டது. மிகவும் நல்லது. 

 அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.  நெல்லிக்காய் சாப்பிடுவதால், நம் உடலுக்கு அதிக  நன்மைகள்கிடைக்கும்.

உடல் நோய்களை போக்கி நன்மைகளைத்தரும் நெல்லிக்காய் நமக்கு இளமையை மீட்டுத்தருகிறது.
உடல் உள்ளே செய்யும் மருத்துவத்தை போலவே நம் தோல் இளமையை தரும் வெளி உபயோக நன்மைகளும் நெல்லிக்காயில் அதிகம்.

 அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம்.
இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைகிறது. சருமத்தின் பொலிவு அதிகரிக்கும் , நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம். 
அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும்.
 நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். 
சிலருக்கு சருமத்தில்  கருமையான திட்டுக்கள் ஆங்காங்கு காணப்படும். 
இது வயதான தோற்றத்தைத் தரும்.

மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். 
ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். 


ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.
 தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும். அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? 

அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும் நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. 

அதிலும் அதில் உள்ள விற்றமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.
நெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை.
அதை போக்க  தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருக வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் விற்றமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும். 
இது இளம் வயதில் உண்டாகும் இள  நரைக்குத்தான் வயதாகி முடிகள் நரைப்பதை தடுக்க எந்த மருத்துவத்தால்,மருந்தாலும் இயலாது.அது இயற்கை. ஜீன் செய்யும் முடிவு.


பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்  பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்பொடுகு நாம் வெளியில் சென்று வருகையில் முடியின் மீது படியும் தூசுகள் குளிக்கையில் சரிவர நீங்காமல் தலைமுடி வேர்ப்பகுதிகளில் தங்கி விடுவதால் பெரும்பாலும் உண்டாக்குகிறது.சிலருக்கு சத்து குறைவாலும் உண்டாகலாம்.

அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் சாறு  பருகுவதால் தடுக்கலாம்.

நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.அது  இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும்.
நெல்லிக்காய் ,தான்றிக்காய்,கடுக்காய் என்ற மூன்று மருத்துவக் குணம் நிறைந்த காய்களால் தயார் செய்யப்படுவதுதான் "திரிபலா ".
இதான் மருத்துவக்குணத்தை கண்டவர்கள்கள் இதைத்தான் காயகல்பம் என்பார்கள்.அந்த அளவு உடல் நலம்,சளி, சுருக்கம் இல்லா சரும இளமை,கண்களுக்கு வலிமை ,சீரான சீரணம் ,உடலில் கெட்டப் கொழுப்பை நீக்கி இதய நோய்களை தவிர்ப்பது ,மற்றும் எப்போதும் சுறு,சுறுப்பை தருவது.என்று சொல்லிக்கொண்டே போகலாம் திரிபலா மகத்துவத்தை.
இப்போது சொல்லுங்கள் இதை காயகல்பம் என்று சொல்லலாம்தானே?
===========================================================================================
இன்று,
ஜூலை-07.
  • இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது(1896)
  • கனடாவில் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழியும் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது(1969)
  • சாலமன் தீவுகள் விடுதலை தினம்(1978)
  •  தாஜ்மஹால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(2007)
  • கவிஞர் கா மு ஷெரீப்  மரணமானார்.( 1994)
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?,
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…,
வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்,
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே,
ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?,
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா, உலவும் தென்றல் காற்றினிலே,
“ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே... ..
என்ற இனிய பாடல்களை எழுதியவர்.
"ஷெரீப் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். 
திரையுலகத் தொடர்பிருந்தும் அதன் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு. ஷெரீப்பிடம் இருந்தது. 
ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமிருந்து நான் பயின்றேன். கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் தீவிரமான சைவர். 
அதுகுறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.கள் வியாபாரம் செய்பவன் கள் அருந்த மாட்டான். அதுபோல் கசாப்பு வியாபாரம் செய்பவன் கறி சாப்பிட மாட்டானா? 
கவிஞர் ஷெரீப் கறி வியாபாரம் செய்பவராக இருந்தாலும் இருப்பாரே ஒழிய புலால் சாப்பிடமாட்டார். 
ஷெரீப் புகை பிடிப்பதில்லை. 
நான் அவர் எதிரில் ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகை பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன்” 
                                                                                                                     -எழுத்தாளர் ஜெயகாந்தன்
========================================================================
உலகில் இதுவரை 1,000 கழிப்பறைகள் கொண்ட மிகப்பெரிய கழிப்பறைகள் கொண்ட வளாகம் சீனாவில்தான் கட்டப்பட்டிருந்தது .

இதை தற்போது இந்தியாவில் உள்ள  பந்தர்பூர் கழிப்பறைகள் வளாகம் முறியடித்துள்ளது. 
 மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூர் நகரில் உலகின் மிகப்பெரிய கழிப்பறைகள் வளாகம் கட்டப்பட்டுள்ளது. 

அம்மாநில அரசு மற்றும் சுலாபா அரசு சாரா சர்வதேச தொண்டு நிறுவனம் இணைந்து எட்டு அடுக்கு மாடியில் மொத்தம் 1417 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 
இதனுடன் குளியறைகளும் தனியாக கட்டப்பட்டுள்ளன.

பந்தர்பூர் நகரில் மொத்தம் 2,858 கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1417 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

அடுத்தாண்டில் முற்றிலுமாக  கட்டி முடிக்கப்படும். கோயில் நகரமான இங்கு  திருவிழா நடக்கும் காலங்களில் லட்சகணக்கில் மக்கள் குவிவார்கள் . அவர்களுக்கு இந்த கழிப்பறை வளாகம் மிக உபயோகமாக இருக்கும்.

இந்த கழிப்பறைகள் வளாகத்தில் தினமும் 1.5 லட்சம் பேர் உபயோகப்படுத்தலாமாம்.

எட்டு அடுக்கு மாடிகள் கொண்ட இதில் அவசரத்துக்கு லிப்ட் வசதி உண்டா என்று தெரியவில்லை.
                                                               வஞ்சப்  புகழ்ச்சி ? 
                                                       கும்கினாலும் யானைதாங்க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?