இடுகைகள்

மணிப்பூர் விலகல் மாபெரும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாபெரும் அவமானம் ?

படம்
அமெரிக்காவில் இருந்து கை, கால்களில் விலங்கிட்டு இந்தியர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது இந்த நூற்றாண்டின் மாபெரும் மனித உரிமை மீறல் ஆகும். 'இது புதிதல்ல' என்று ஒன்றிய பாஜக அமைச்சர் ஜெய்சங்கர் சொல்வது அவர் எந்த நூற்றாண்டு மனிதர் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தக் கூடிய இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார் தன்மையாக -– இயந்திரத்தனமாக இருக்கிறது. ''அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது அல்ல'' என்று சொல்வதற்கு அவமானமாக இல்லையா? அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் வந்ததில் இருந்து, சட்டவிரோதக் குடியேற்றங்கள் குறித்து அதிகமாகப் பேசி வருகிறார். அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாகச் சொல்லி கைது செய்து ராணுவ விமானத்தை அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதியன்று கிளம்பிய ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்து சேர்ந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த 33 பேர், அரியானாவைச் சேர்ந்த 33 பேர், ...