வியாழன், 1 ஆகஸ்ட், 2013

"நெல்லிக்காய்-மின்னல்"

ஆஸ்திரேலியா, சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது.
இதற்கு ஜப்பானிய கடவுளின் பெயரை வைத்துள்ளது.
ஒரு வீட்டை விட பெரிதாக உள்ள இந்த மெகா கம்ப்யூட்டர், வானிலை ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளது.
 இதன் பெயர் "ரெய்ஜின்"
ஜப்பானிய மொழியில் மழை மற்றும் மின்னல் என்று பெயர்.
suran
 அந்த நாட்டு மழை கடவுளின் பெயர். அவர்கள் ஒத்துழைப்பு இருந்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இருபதாண்டு உழைக்கும் திறன் படைத்த இந்த சூப்பர் கம்ப்யூட்டர், 700 கோடி மக்கள் கால்குலேட்டரை பயன்படுத்தி சேகரிக்கும் விவரத்தை ஒரு மணி நேரத்தில் கணக்கிட்டு விடும். 40 ஆயிரம் கம்ப்யூட்டர்களின் மெமரி சக்தியை கொண்டது.

கான்பெர்ரா நகரில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் தனி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டரை அறிமுகம் செய்து வைத்த விஞ்ஞானிகள் கூறுகையில், ‘வானிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு இனி மற்ற நாடுகளுக்கு ஆஸி நிபுணர்கள் போக வேண்டாம். இங்கு எல்லா வசதிகளும் இதில் உள்ளது’ என்றனர்.
உலகின் 27வது சூப்பர் கம்ப்யூட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் 15 நாடுகளில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இதில் ''டாப் டென்'' நாடுகள்

1. அமெரிக்கா , 10 டார்பா டிரைல் சப்செட், வேகம்: 1.52 பெட்டாபிளாப்ஸ்
  (பெட்டாபிளாப்ஸ் என்றால், ஒரு வினாடியில் 10,000000000000000 முறை இயங்கும் திறன் உடையது.)
2. இத்தாலி , 9 பெர்மி, வேகம்: 1.73 பெட்டாபிளாப்ஸ்
3. சீனா , 8 டியான்கி,1ஏ, வேகம்: 2.56 பெட்டாபிளாப்ஸ்.
4. அமெரிக்கா (டெக்சாஸ் பல்கலை. ஆஸ்டின்) , 7 ஸ்டாம்பேட், வேகம்: 2.6 பெட்டாபிளாப்ஸ்.
5. ஜெர்மனி , 6 சூப்பர்எம்யூசி, வேகம்: 2.89 பெட்டாபிளாப்ஸ்.
6. ஜெர்மனி (ஜூலிச் ஆய்வு மையம்) , 5 ஜுகுயின், வேகம்: 1.38 பெட்டாபிளாப்ஸ்.
7. அமெரிக்கா (டிபார்ட்மென்ட் ஆப் எனர்ஜிஸ் ஆர்கோனி நோஷனல் லெபாரட்டரி) , 4 மிர்ரா, வேகம்: 8.16 பெட்டாபிளாப்ஸ்.
8. ஜப்பான் , 3 கே கம்ப்யூட்டர், வேகம்: 10.51 பெட்டாபிளாப்ஸ்.
9. அமெரிக்கா (எரிசக்தி துறை) , 2 சீகுயோ, வேகம்: 16.32 பெட்டாபிளாப்ஸ்.
10. அமெரிக்கா (எரிசக்தி துறை) , 1 டைடன், வேகம்: 17.59 பெட்டாபிளாப்ஸ்.
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 'நெல்லிக்காய்'
'அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’
என்ற சங்க காலக் கதைகள் முதல்
 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’
என்று சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை.
தினம் ஒரு அப்பிள் சாப்பிட்டால், டொக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டொக்டரைத் தேடிப் போவதும் அப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான்.
அப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும். ஒரு நெல்லிக்காய் மூன்று அப்பிள்களுக்குச் சமம்.
நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விடயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்
1. 'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள்.
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
suran
2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.
3. கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள்.
உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
4. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.
ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
5. தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது.
நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
6. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.
நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
7. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில்நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
8. நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
9. நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும்.
கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.
10. கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
suran
suran