5000 கோடிகள் அம்போ...?
, 2004 ஏப்ரல் முதல், மத்திய அரசும்; 2003 முதல், தமிழக அரசும், சி.பி.எஸ்., திட்டத்தை அறிமுகம் செய்தன.
இதன்படி, 2003க்குப் பின், பணியில் சேர்ந்த ஒரு லட்சம் அரசு ஊழியர்களுக்கு, சி.பி.எஸ்., திட்டப்படி, மாத அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.இதன்படி, 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியம் செலுத்துகின்றனர்.
இவர்களில், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பொதுக் கணக்கு அலுவலகம்; தொடக்கப் பள்ளி, உள்ளாட்சி நிர்வாகப் பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னை அரசு தகவல் தொகுப்பு மையத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் பராமரிக்கப்படுகிறது.
இதில் தான், தமிழ் நாடு அரசு செயல்படாமல் சில ஆண்டுகளாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பதவி உயர்வு பெற்று, பள்ளிக் கல்வித்துறையின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்வோருக்கு, பழைய பங்களிப்பு கணக்கு எண் கைவிடப்பட்டு, பொதுக் கணக்கு அலுவலகத்தில் புதிய எண் துவங்கப்படுகிறது.
இதனால், பல ஆண்டுகள் பணம் கட்டிய, அந்த ஓய்வூதியக் கணக்கு அம்போவென விடப்படுகிறது;
அந்த நிதி எங்கே சென்றது?என்னவானது??என அதிமுக அரசு தெரியப்படுத்தவில்லை.
தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்,பிடித்தம் செய்யப்பட்ட, 5,000 கோடி ரூபாயை, தமிழக அரசு இன்னமும், மத்திய அரசிடம் செலுத்தவில்லை' என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
நாட்டில் உள்ள பிற மாநிலங்கள் எல்லாம், புதிய திட்டத்தில் பிடித்த, பணத்தை சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் செலுத்தி விட்டன.
தமிழக அரசு, ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை.
இதுவரை பணியில் இறந்துபோன யாருக்கும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், எதுவும் கொடுக்கப்படவில்லை.
திட்டம் துவங்கி, 12 ஆண்டுகளாகியும், பணம் செலுத்தாதது, தற்போது வெளிப்பட்டுள்ளது.
இந்த கணக்கு எண்களை ஒன்றாக இணைக்கும்படி, அரசுக்கு பல முறை மனு கொடுத்த பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை.
ஓய்வுபெற்றவர்கள், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. பலருக்கு பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
========================================================================
இன்று ,
ஜூலை-25.

- துனீசியா குடியரசு தினம்(1957)
- அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது(1908)
- இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்றார்(2007)
- சோவியத் செய்தி நிறுவனமான டாஸ் நிறுவப்பட்டது(1925)
- முதல் சீன-ஜப்பானியப் போர் துவங்கியது(1894)
கூகுள் தேடுப்பொறியில் உலகின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகின் முட்டாள் பிரதமர்கள் என கூகுள் புகைப்பட தேடு பொறியில் தேடினால், மோடியின் புகைப்படம் தோன்றுகிறது.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் கூகுள் தேடுப்பொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் என டைப் செய்து புகைப்படத் தேடுப்பொறியில் தேடினால், மோடியின் புகைப்படம் தோன்றியது.பின்னர் நீக்கப்பட்டது.
========================================================================
நரேந்திர மோடி ,
லலித்மோடி விவகாரத்தில்
வாயே திறக்காதது ????
லஞ்ச ஊழல்கள், ஏற்றுக் கொள்ள இயலாத நேர்மையற்ற செயல்பாடுகள் பற்றிய தொடர்ந்த குற்றச்சாட்டுகள் இந்திய அரசியல் வாழ்க்கையில் இன்று அன்றாடம் நடைபெறும் ஒரு நிகழ்ச் சியாகவே ஆகிவிட்டது. ஆனால் பல விவகாரங்களில் இத்தகைய குற்றச் சாட்டுகளுக்கான சமாதானங்கள் சொல் லப்படவோ, அல்லது அவை உண்மை யானவையா என்பது கூட சரிபார்க்கப் படவோ இல்லை. அவ்வப்போது தற் காலிக அரசியல் ஆதாயத்துக்காக இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பயன் படுத்திக் கொண்டபின் அவை தூக்கி எறியப்பட்டு விடுகின்றன. மற்ற நேரங் களில், அத்தகைய குற்றச்சாட்டுகள் கடுமையானவையாகவும், பொதுவாழ்க் கைக்கான வழிகாட்டுதல்களாக அமைந் துள்ள சட்டம் மற்றும் ஜனநாயக மரபு ஒழுக்கத்தின்படி மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகளுக்குப் போதுமான அடிப்படை ஆதாரங்கள் உள்ளனவாக வும் அமைந்துவிடுகின்றன.
தற்போது புயலாக வீசிக் கொண்டி ருக்கும் லலித் மோடியின் விவகாரத்தில் நிதி மோசடியும், அரசமைப்பு சட்டத் தினை மீறிய நேர்மையற்ற செயல்களும் பின்னிப் பிணைந்துள்ளன. ஆளும் பா.ஜ.க.யை பேரிடி போன்று தாக்கியுள்ள இந்த விவகாரத்தை, உணர்ச்சி வயப் பட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகாமல், கீச்சுக் குரலில் தொலைக்காட்சி விவா தங்களில் ஈடுபட்டுவிடாமல், மெய்மை களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்நோக்கக் குறிக்கோளுடன் பார்க்க வேண்டும். இத்தகைய ஒரு அமைதியான அணுகுமுறையை தங்கள் எதிர்க் கட்சியினரிடம் இருந்து பா.ஜ.க.வால் எதிர்பார்த்திருக்க முடியாது. முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பொதுவாழ்வில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் வலி யுறுத்தி பா.ஜ.க. தீவிரப் பிரச்சாரம் மேற் கொள்ளத் தவறவில்லை. தங்கள் எதிர்ப் பினை நாடாளுமன்றத்தில் மட்டுமல் லாமல், தெருக்களுக்கும் கொண்டு வந்த பா.ஜ.க. நாடாளுமன்றத்தின் ஒட்டு மொத்தக் கூட்டத் தொடர்களையும் நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்துள் ளது. நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல் தடுப்பதும் கூட மற்ற வடிவங் களைப் போன்ற ஜனநாயகத்தின் ஒரு வடிவம்தான் என்று மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். அப்போது மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய மத்திய நிதி அமைச்சரான அருண் ஜேட்லி 2012 ஆகஸ்டில் அளித்த பேட்டி ஒன்றில், நாடாளுமன்றத்தை நடைபெற விடாமல் இடையூறு விளைவிப்பதை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். ஜனநாயக நடைமுறை யில் உள்ள பிரச்சினை என்னவென்றால், ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறுவதே பிறிதொரு சந்தர்ப்பத்தில் வந்து உங் களையே திருப்பித் தாக்கும் என்பதுதான். இப்போது அத்தகைய தாக்குதலுக்கு இலக் காகியிருக்கும் பா.ஜ.க.,வினால் எதிர்க்கட்சி யினர் மன்னிப்பு அளிக்கும் முறையில் கட்டுப்பாடுடனும், கண்ணியமாகவும் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. மனிதாபிமான உணர்வில் தெரிவிக்கப்படும் சாடை
அப்படியிருந்தாலும் கூட, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரின் வழக்கு பற்றிய உண்மைகள் செயல்நோக்கக் குறிக் கோளுடன் மதிப்பிட வேண்டியவை யாகும். சுஷ்மா ஸ்வராஜிடம் நான் ஒரு மிக உயர்ந்த தனிப்பட்ட மரியாதையை வைத் திருக்கிறேன். அவர் அசாதாரணமான திறமை வாய்ந்த ஒரு அமைச்சர் என்பதுடன் கொள்கையும் நேர்மையும் கொண்டவரும் ஆவார். தனது அமைச் சகத்தையோ அல்லது நிதி அமைச்ச கத்தையோ அல்லது லண்டனில் உள்ள நமது தூதரகத்தையோ கலந்தாலோசிக்கா மல், லலித் மோடி பயணம் மேற் கொள்வ தற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு உதவி செய்வதற்கு சுஷ்மா ஸ்வராஜை தூண்டியது எது? அப்படி ஒன்றும், லலித் மோடியின் மீதான குற்றச்சாட்டுகள் முக்கி யத்துவம் இல்லாதவை அல்ல. அயல் நாட்டுச் செலாவணி நிர்வாக சட்டம் மற்றும் கணக்கில் வராத கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதைத் தடை செய்யும் சட்டம் இரண்டையும் மீறியதாக லலித் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டிருக் கிறது.
அவரது பாஸ்போர்ட்டும் 2011 மார்ச் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒன்றல்ல, 15-16 விளக்கம் கேட்ட தாக்கீதுகளை என்போர்ஸ்மென்ட் இயக்ககம் அவருக்கு அனுப்பியுள்ளது. அய்.மு.கூ. அரசில் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் லலித் மோடியை, குற்றச் சாட்டுகளை எதிர் கொள்ள வேண்டி, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும்படி இங்கிலாந்து நாட்டு நிதியமைச்சருக்குத் தான் கடிதம் எழுதி இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். லலித் மோடிக்கும் சுஷ்மா ஸ்வராஜூக்கும் இடையே நட்புணர்வு இருந்தது என்பது உண்மைதான். அதே போல ஸ்வராஜின் கணவரும், மகளும் லலித் மோடியின் வழக்குரைஞர்களாக இருந்தனர் என்பதும் உண்மையானதுதான். அதனால் மட்டுமே, தான் உணர்ச்சி வயப்பட்டு செய்த செயலை மனிதாபிமான அடிப்படையில் செய்ததாகக் கூறி நம்பச் செய்வதற்குப் போதுமான ஆதாரங்களை அது நிச்சயமாக வழங்கவில்லை. இது போன்ற தாராளமனம் கொண்ட மனிதா பினமான செயல்களைச் செய்வதற்கு ஒரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அனுமதிக்கப்பட்டதில்லை. நீங்கள் அமைச் சராக உள்ள ஓர் அரசின் ஓர் அங்கமாக இருந்து முடிவுகளை மேற்கொள்ள வேண் டிய நிலையில் உள்ள உங்களுக்கு தனிப் பட்ட நட்புணர்வு அப்படி ஒன்றும் முக்கிய மானது அல்ல. அரசாட்சி என்பது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, போனாலும் சரி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டிய ஒன்றாகும். ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்தால், முந்தைய அரசு மேற்கொண்ட செயல்களுக்கு முக்கியத் துவம் அளித்து புதிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தனது அரசையே, குறிப்பாக நிதி அமைச்சரையே கலந்து ஆலோசிக் காமல், தன்னிச்சையாகச் செயல்பட சுஷ்மா எடுத்த முடிவு நிச்சயமாக தீய நோக்கம் கொண்டதாக இருந்திருக்க முடியாது; என்றாலும் அது நேர்மை யான, முறையான செயல் அல்ல என்பது மட்டும் நிச்சயமானது.
தனிப்பட்ட நட்புகள் வரிசையில்
வசுந்தரா ராஜேவைப் பொறுத்த வரையில், இந்த விவகாரம் மேலும் சிக்கலானதாகவும், தீவிரம் மிகுந்ததாக வும் ஆகிவிட்டது. லலித் மோடி இங்கிலாந்தில் தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரமாண பத்திரம் ஒன்றில், தனது அரசுக்கு இந்த செய்தி தெரியக்கூடாது என்ற தனிப்பட்ட நிபந் தனையுடன், அவர் கையெழுத்திட்டது உண்மையில் மன்னிக்கவே முடியாத செயலாகும். இவ்வாறு அவர் செய்யும் போது, ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் என்னும் அரசமைப்புச் சட்டப் படியான பதவியில் அவர் இருந்துள்ளார்; சட்டமன்றத்திற்குள் நுழையும் முன் அரசமைப்பு சட்டத்திற்குத் தான் விசு வாசமாக இருப்பேன் என்று பிரமாண மும் அவர் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், சுஷ்மாவின் மகனது நிறுவனத்தில் சந்தேகம் தரும் முறையில் லலித் மோடி பலகோடி ரூபாய் முதலீடு செய்திருந்ததால்தான் லலித் மோடிக்கு ஆதரவாக சுஷ்மா செயல்பட்டிருக் கிறார் என்பதற்கும், இந்த முதலீடுகளி னால் பயன்பெறுபவர் சுஷ்மாவாக இருக்கக்கூடும் என்பதற்குமான கூடுதல் சான்றுகள் கிடைத்துள்ளன. தனிப்பட்ட நட்புக்கு முன்னால், நேர்மையும், ஒழுக்கமும், சட்டத்தைப் பின்பற்றுதலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன என்பதை சுஷ்மாவின் வழக்கு தெளி வாக எடுத்துக் காட்டுகிறது.