சின்ன ,சின்னஅழகுக் குறிப்புகள்.

அந்தக் காலத்தில் சாதாரணமாக ஏரி, குளங்களில் குளிக்கச் செல்லும் பெண்கள், இலையும் பூவுமாய் இருக்கும் ஆவாரம் செடியிலிருந்து ஒரு கொத்தை உடைத்து  நசுக்கித் தலையில் தேய்த்துக் குளிப்பார்கள். 
எள்ளுச் செடியும் இதற்குப் பயன்படும். 
கூந்தல் பூப்போல மென்மையாக மிளிறும்.

நவீனத்தின் தாக்கத்தில் ஷாம்புவுக்கும் விதவிதமான பசைகளுக்கும் மாறிய பெண்கள், அவற்றின் பக்க விளைவுகளை அறிந்துகொண்டு மீண்டும் பாரம்பரிய வழியில் அழகைக் காப்பாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், பக்க விளைவுகள் எதுவும் இல்லை. செலவும் கைக்குள் இருக்கும்!
கஸ் தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா மொட்டு, சம்பங்கி விதை, தவனம், வெட்டிவேர், மகிழம்பூ, ஆவாரம்பூ, திரவியப்பட்டை இதை எல்லாம் தேவையான அளவுக்கு வாங்கி அரைத்து பயன்படுத்தலாம்.

தினமும் இதில் குளித்தால் சருமம் பளபளக்கும். 
கூந்தல் உதிராது. 
சோப்புக்கு பதிலாக உபயோகிப்பவர்கள் கடலைப் பருப்பு, பயத்த மாவு இரண்டையும் இதில் சேர்த்துக்கொள்கிறார்கள்ஒரு சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும். 
சிலருக்கு சருமம் எண்ணெய்ப் பசையாய் இருக்கும்.

அவரவருக்குத் தகுந்த மாதிரி தனித் தனியாக மூலிகை பவுடர்களை வாங்கியும் தயாரித்துக்கொள்ளலாம்!வேப்பிலை இயல்பாகவே பளபளக்கும் சருமத்தைத் தரும். 
பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றைக் கலந்து ஒரு கலவையாகச் செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பளபளக்கும்.

சருமப் பராமரிப்பு சார்ந்த எல்லாப் பொருட்களிலும் சந்தனம் மூலப்பொருள். 
சந்தனம் சரும வியாதிகள், முகப் பருக்கள், அரிப்பு மற்றும் இதர சருமப் பிரச்னைகள் அனைத்தையும் குணமாக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும். மஞ்சள் இயற்கையான சருமப் பாதுகாப்புப் பொருள். பருக்கள், அரிப்புகள் மற்றும் பருக்களால் உருவாகும் கிருமிகள் ஆகியவற்றை  நீக்க வல்லது.

கற்றாழை நமது தோலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும். 
பாதாம் இலைகளில் இருந்து எடுக்கும் எண்ணெயும் அற்புத குணங்கள் உடையது. தோலுக்கு ஈரப்பதம் தந்து ஊட்டம் பெறச் செய்யவும், பளபளப்பாக்கவும் இதைப் பயன்படுத்தலாம். 
அதனால்தான் அழகு சாதனப் பொருட்களில் இவை சேர்க்கப்படுகின்றன.

துளசி இலை கண்ணின் கருவளையங்கள், பருக்கள் ஆகியவற்றைத் தடுக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது.
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவினால் சருமம் பொலிவாகும். முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றைத் தடவினால் போதும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவிக் குளித்தால் சருமம் அழகாகும்’
வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றைக் கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பளபளக்கும்.
- எஸ்.ஆர்.செந்தில்குமார்
சின்ன அழகுக் குறிப்புகள்.
=======================================================================
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?