நீங்கள் பிராய்லர் கோழி ரசிகரா?
இன்று விடுமுறை தினங்களில் பையை தூக்கிக்கொண்டு பிராய்லர் கோழி இறைச்சி வாங்கி சுவைப்பவர்கள்.ஏராளம்.ஆட்டு இறைச்சியை விட மலிவு விலை என்பது முக்கிய காரணம்.அடுத்து மென்மையான இறைச்சி என்பதும் ஒரு காரணம்.
ஜூலை-20.
மீது
ஒரு வன்மத் தாக்குதல்.
ஆனால் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் நமக்கு உணடாகுகிறது.
பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ‘ரோக் ஸார்சோன்’ (Roxar- sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கவல்லது என்று அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு, பெண்களின் மார்பகங்கள் பெரிதாகுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
பிராய்லர் கோழிகளை வளர்க்கும்போது, அதன் சிறகு பகுதி வழியாக வளர்ச்சிக்கான ஊசி போடப்படுகிறது.
இந்த கோழிகளை நாம் சாப்பிடும்போது, நமது உடலிலும் செல்களில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் முக்கியமானது ஹார்மோன் சுரப்பதில் வேறுபாடு ஏற்படுவதுதான் .
சீனாவை சேர்ந்த 26 வயது லி என்ற வாலிபர் சிக்கன் உணவுக்கு அடிமையானதால் அவருக்கு பெணகளுக்கு இருப்பதை போல்
மார்பகங்கள் வளர்ந்துள்ளன.
அவரது உடலில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்த அளவுகளில் இருக்க வேண்டிய ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்டோஸ்டெர்ன் ஹார்மோன்கள், மாறுபட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம் பற்றி மருத்துவர்கள் ஆராய்ந்ததில் அவர் பிராய்லர் சிக்கனை இவர் அதிகமாக சாப்பிட்டதோ ஆகும்.
பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசைக்ளின், ஃப்ளோரோகைனோலோன், அமினோக்ளைக்கோசைட் உள்ளிட்ட அதிகப்படியான ஆன்டிபயாடிக் அந்தக் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது.
இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் அதன் இறைச்சிகளில் தங்கியிருக்கும் அதிகப்படியான ஆன்டிபயாடிக் உடம்பில் தங்குகிறது.
இது, பல்வேறு சிகிச்சைகளுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வேலை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது.அதானால் அதிக வீரியங்க்களில் அடிக்கடி மருந்துகளை உட்கொள்ளவேண்டிய நிலை உண்டாகி மனிதர்களின் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகுகிறது.
காய்கறிகளை பூச்சி மருந்து பாதிப்பு.சரி கோழி,ஆடு என்று போனால் அதிலும் இப்படியா? .
========================================================================
இன்று,ஜூலை-20.
- சர்வதேச சதுரங்க தினம்
- கொலம்பியா விடுதலை தினம்(1810)
- வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)
- யுகோஸ்லாவிய ராஜ்யம் உருவாக்கப்பட்டது(1917)
- டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது(1940)
========================================================================
ஊடக சுதந்திரத்தின்மீது
ஒரு வன்மத் தாக்குதல்.
அரசின் கொள்கைகளையும் ஆட்சி நடைமுறைகளையும் பற்றிய விமர்சனங்களைத் தடுப்பதற்கான சரியான வழி, உண்மையிலேயே மக்கள்நலக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும், ஆட்சிநிர்வாகத்தை சீர்படுத்துவதும்தான்.
மத்தியபாஜக அரசு கண்டுபிடித்துள்ள வழி என்னவென் றால், விமர்சனங்களே எழ விடாமல் முடக்குவதே. தமிழகத்தின் ஒரு முன்னணி ஊடக நிறுவனமான சன் குழுமத்தின் மீதான நடவடிக்கைகள் பாஜக அரசின் குறுகிய அரசியல் நோக்கத்தைத்தான் காட்டுகின்றன.
பத்திரிகைகளையும் பல்வேறு மாநிலங்களில் தொலைக்காட்சி அலைவரிசைகளையும் பண்பலை வானொலி சேவைகளையும் நடத்திவருகிற சன் குழுமத்திற்கான பாதுகாப்புச் சான்றிதழ்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
நிறுவனத்தின் மீதான பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பாகு பாடின்றி சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதிலும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளோ, வழக்குகளோ இல்லாதபோது எதற்காக அந்த நிறுவனத்திற்கான பாதுகாப்புச் சான்றிதழ்களை வழங்க மறுக்க வேண்டும்?
அல்லது உண்மையிலேயே அப்படிப்பட்டபிரச்சனைகள் இருக்குமானால் அதை வெளிப் படையாக அறிவிக்க வேண்டியதுதானே?
வெளி நாடுகளில் இருந்து பிறந்த நாள் பரிசாக டாலர்களில் வந்த காசோலைகளை யார அனுப்பினார் என்று தெரியாமேலே[?]வாங்கி யவர் பெயரில் தொலைக்காட்சிகள் நடத்தப்படுகிறதே அது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குரியதாக ஆக்க வில்லையா?
முற்றிலும் அந்நிய முதலீட்டில் விஜய்,ஸ்டார் தொலைக்காட்சிகள் நடத்தப்படுகிறதே அது பாதுகாப்பானதுதானா?
வழக்கு என்று பார்த்தால் ஜீ தொலைக்காட்சி குழுமம்,என்.தி.தி.வி,டென் ஸ்போர்ட்ஸ்,கலைஞர் ,ஜெயா ,ராஜ் டிவி என்று ஏதோ ஒருவகையில் வழக்கில்லாத நிறுவனமே இல்லையே.அனைத்தையும் தடை செய்யாதது ஏன் ராஜ்நாத் சிங் அவர்களே ?
சொத்து குவிப்பு வழக்கை எதிர் கொண்டுள்ள் உங்கள் நட்பு ஜெயலலிதா அவர்கள் மீதே பிறந்த நாள் காசோலை வழக்கு,வருமான வரி ஏமாற்று வழக்கு உள்ளதே.அதற்கு ஜெயா தொலைக்காட்சிக் குழுமத்தை முடக்கவில்லையா?
இதிலிருந்தே எதிர் கட்சி சார்பான ஊடகங்களை முடக்குவதுதான் ராஜ்நாத் சிங்,பாஜக நோக்கம் என்று தெரிகிறது.
ஆனால், அந்நிறுவனம் எதன் கீழ் வருகிறதோஅந்த தகவல் ஒலிபரப்புத் துறை, நிலுவையில் இருப்பது பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான வழக்குதான் என்பதால் அதைக் காட்டி பாதுகாப்புச் சான்றிதழ் வழங்க மறுக்க வேண்டியதில்லை என்று தெரிவித்த பிறகும் இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதிலும், அதையேகாரணம் காட்டி பண்பலை வானொலி உரிமத்திற்கான ஏலத்தில் பங்கேற்க நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதிலும் அரசின் உள்நோக்கம் அப்பட்டமாகிறது.
சன் குழுமமே கூட தொழில்ரீதியாக வேறு தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகளை தடுத்துவைத்திருப்பது ஏற்கத்தக்கதல்லதான்.
சன் ஒளிபரப்புகளின் பல்வேறு நிகழ்ச்சிகள், அவற்றின்உள்ளடக்கங்கள் போன்றவையும் விமர்சனத் திற்கு உரியவைதான்.
அரசியல் கட்சிகளும் மகளிர்அமைப்புகளும் பண்பாட்டுத்தள இயக்கங்களும் அப்படிப்பட்ட விமர்சனங்களைக் கடந்த காலத்தில் செய்ததுண்டு.
பா.ஜ.க-வுக்கும் அந்த உரிமை உண்டு.
ஆனால், தற்போது ஆட்சியில் இருப்பதால், விமர்சன உரிமையைப் பயன்படுத்தாமல் இப்படி முடக்கல் அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விடுவது, அரசமைப்புச் சாசனம் உறுதிப்படுத்துகிற கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான வன்மத்தாக்குதலேயாகும்.
எதிர்க்கட்சியாக இருந்த போதே, அதன் மதவாத அரசியலை விமர்சித்தார் என்பதற்காக, அதுவும் ஒரு வெளி நிகழ்ச்சியில் விமர்சித்தார் என்பதற்காக இந்நிறுவனத்தின் தொகுப்பாளர் வீரபாண்டியனை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தக்கூடாது என்று கெடுபிடி செய்தவர்கள் இவர்கள்.
அந்தக் கெடுபிடிக்கு நிர்வாகம் பணிந்ததும் வருத்தத்திற்குரியதே.
தற்போது மோடி அரசு தனது உள்துறை மூலமாகஎடுத்துள்ள நடவடிக்கை, உண்மையில் மாற்றுக் கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்ல முயலும்அனைத்து ஊடகங்களுக்கும் விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையே.
இதனை ஒரு குறிப் பிட்ட நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்காமல், ஊடகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவே கருதி, கண்டனக் குரல் எழுப்பியுள்ள அரசியல் இயக்கங்களோடு இதர ஊடகங்களும் சேர்ந்துதமது எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டும்.
======================================================================