படுகொலையான நடு நிலை.

தமிழ்நாடு நிர்வாகம் எந்த அளவு சீரழிந்து போயுள்ளது என்பது அனைவரும் அறிந்துள்ளது.அதிலும்  முதல்வர் ஜெயா புகழ் பாடுவதில் அரசு அதிகாரிகளும்,காவல்துறையினரும் போட்டி போடுகிறார்கள்.
அதிமுக கட்சி வேறு காவல்துறை வேறு என்ற வித்தியாசம் இல்லாமல் போய்  விட்டது.
முன்பு ஜெயலலிதா உள்ளே இருந்த போது ஒரு காவல் ஆய்வாளர் சட்டையில் கட்சிக்காரன் போல் கருப்பு கோடி குத்தியதில் ஆரம்பம்.
அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காததால் அந்த ஜெயா விசுவாசம் ரா.கி.நகர் இடைத்தேர்தலில் உதவி காவல் ஆணையர் விடுப்பு போட்டு வாக்கு சேகரிப்பதில் தொடர்ந்தது.
அவர் மீதும் இதுவரை எந்த நதவடிக்கையும் இல்லை.
அதானால் ஏற்பட்ட ஜெயா ஆதரவு மன நோய இன்று தலைமைக்காவலர் இடைத்தேர்தல் ஜெயா வெற்றிக்கு மொட்டை போடும் அளவுக்கு அதுவும் காவல்துறை சீருடையுடன் அசிங்கம் உண்டாகி விட்டது.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலைய தலைமைக்காவலர்  வேல்முருகன், 2 பேருடன் தேனி நேரு சிலை அருகே வெற்றிக்கொம்பன் விநாயகர் கோயிலுக்கு வந்தார்.சீருடையில் இருந்த அவர் கோயில் வாசலில் அமர்ந்து மொட்டை போட்டார். அவருடன் வந்தவர்களில் இருவர் மொட்டை போட்டனர். 
கடந்த ஆண்டு பெங்களூருவில் ஜெ., கைது செய்யப்பட்ட போது, டி.ஜி.பி., அலுவலகம் முன் வேல்முருகன் தீக்குளிக்க முயன்று கைதானார்.ஜெயலலிதா விடுதலை ஆனதும் வாழ்த்து பதாகை வைத்து சர்ச்சையில் சிக்கினார் .

இதற்கு முன்னரும் அரசு அதிகாரிகள் ,காவல்துறையினர் மத்தியில் கட்சி பிடிப்புகள் இல்லாமல் இல்லைஆனால் அவை அவர்கள் மனதில் ஒரு ஓரத்தில் இருக்கும்.அது வெளியெ தெரி ந்து விடாமல் பார்த்துக்கொள்வார்கள்.
காரணம் அரசுப் பணியாளர் நன்னடத்தை விதிகள் அப்படி.
ஆனால் அதிமுக ஆட்சியில் அரசு நன்னடத்தை விதிகள் மீது இவர்களுக்கு குளிர் விட்டு போச்சு.
ஆட்சி இனி என்று ஜெயலலிதா பக்கம்.அவர் எப்பாடு பட்டாவது முதல்வராகி விடுவார்.அதற்காக அவர் எந்த எல்லைக்கும் சென்றுவிடுவார் என்ற நம்பிக்கைதான் காரணம்.
மேலும் தன்னை கட்சிக்காரனாக காட்டிக்கொண்டால் கிடைக்கும் சலுகைகள் ஒரு பக்கம்.
கட்சிக்காரனாகக் காட்டினால் எந்த நடவடிக்கையும் இந்த ஆட்சியில் இல்லை என்பது முக்கிய காரணம்.
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் அலெக்சாண்டர்,நடராஜ்,நீதிபதிகள் தங்கராஜ்,அதிகாரி மலைச்சாமி போன்றோர் போட்டப்பாதை யில் நடக்க பலர் தயார்.தங்களுக்கும் ஏதாவது பதவி,பணம் கிடைக்கும் என்ற ஆசைதான் இதன் பின்னால் இருக்கும் முக்கிய காரணம்.
படுகொலையான நடு நிலை.
ஜெயா விடுதலையானதும் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி அச்சிட்டு ஒட்டிய தீயணைப்புத்துறையினர் மீது இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
 இது போன்று எந்த நடவடிக்கையும் இல்லாததே இப்படி நிர்வாகம்,காவல்துறை சீர்கெட்டு அதிமுக கிளைக் கழகங்களாக மாறி வரும் சூழலை உண்டாக்கி வருகிறது.
இது தனிப்பட்ட ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரலாம்.எ
ஆனால் முதல்வர் ஒருவருக்கு காவல்துறையில் இப்படி கட்சி,சாதி,மதம் கலப்பது ஆட்சிக்கு கேடு என்பது தெரிந்திருக்க வேண்டும் .
இன்று இவருக்காக மொட்டை போடும் காவல்துறையில் இவர் உள்ளே போக மொட்டைப்போடும் ஆவலுடன் ஒருவர் இருப்பார் என்பதை அறியும் உணர்வு முதல்வருக்கு வேண்டும் .
ஜெயலலிதா உள்ளே போய் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் அவரை முதல்வர் என்றே விளம்பரப்படுத்தி ,பதாகைகளில் படங்களை போட்ட தமிழ் நாடு அரசு இது போன்ற ஜெயா துதிபாடிகளை,அதிமுக அனுதாப அதிகார்கள்,காவல்துறையினர் மீது நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை வைக்க நாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
இருப்பினும் நடவடிக்கை எடுத்தால் அரசு எந்திரம் நன்றாக இருக்கும் என்று சொல்கிறோம்.
ஆனால் தமிழ்நாட்டிலோ நடுநிலையை விட தங்கள் விளம்பரத்துக்காக செய்திகளை வெளியிடும் ஊடகங்கள்தான் உள்ளன.அவர்கள் இதை எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வார்கள்.எதிர்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாத நிலை.
இன்னும் ஆறு மாதங்கள் இந்த கூத்துகளை அனுபவித்துதான் ஆக வேண்டும் .இவைகளை நாம் விரும்பாவிட்டாலும் கூட.
இது போன்ற அதிகாரிகள்-காவலர்களை வைத்து அடுத்து வரும் அரசு எப்படித்தான் ஆட்சி நடத்தப் போகிறதோ என்ற கவலைதான் இப்போது .
========================================================================
இன்று,
ஜூலை-01.
  • இந்திய மருத்துவர்கள் தினம்
  • சோமாலியா விடுதலை தினம்(1960)
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது(2002)
  • இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி முழு விடுதலை வழங்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது(1947)
  • ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது(1967)
=======================================================================
.அன்பு வணக்கங்கள்!
அத்துடன் இதய நன்றிகள்!!

 ஒரு [2011] தை தமிழ்ப் புத்தாண்டு அன்று ஆரம்பமான “சுரன்”எனது எண்ணங்களை,படித்ததில் பாதித்தவற்றை மற்றவர்களிடம் கொண்டு செல்லும் பணியைத்தான் செய்கிறது.

முதலில் பல நாட்கள் சொந்த கருத்துக்களை எழுதி குவித்தேன்.
ஆனால் சொந்த,அலுவலகப் பணிகள் அதிகமான அழுத்தம் காரணமாக சொந்த பதிவிடல் குறைந்து போனது.

இப்போது இடையிடையேதான் சொந்த இடுகைகள்.
அதிகமாக  நன்றிகளுடன் படித்தவைகளின் வெட்டல்-ஒட்டல் தான்.

எதுவானாலும் இதுவரை வந்து சென்ற [அனைவரும் படித்திருப்பார்களா என்று சொல்ல இயலாது]அனைவருக்கும் நன்றி.

அவர்கள் வருகையின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்து விட்டது.

நான் வலைப்பூ ஆரம்பித்த நேரம் தினசரி குறைந்தது பத்து வலைப்பூக்கள் ஆரம்பமாகிக்கொண்டு இருந்தது.

”சுரன்”உடன் ஆரம்பமான வலைப்பூக்களில் பல இன்று இல்லை.வலைப்பூ மேய்பவர்களும் குறைந்து விட்டனர்.காரணம் முக நூல்,டுவிட்டர் போன்ற சமுக வலைத்தளங்கள் .

அந்த வகையில் ”சுரன்”பக்கம் வந்தவர்கள் ஐந்து லட்சங்கள் என்பது மிக மகிழ்வான ஒன்றுதான்.

அதற்காக மீண்டும் நன்றிகள்.!

 என்றும் அன்புடன்,

உங்கள்சுரன்
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?