ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

தனியே தமிழ் "திரையுலக 100 விழா "?

 இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி:
" சமீபத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழா வில் ஆந்திரா, தெலுங்கு, மலையாளம், கன்னட கலைஞர்களுக்கு மொத்தமாக அழைப்பிதழ் கொடுத்தார்கள். 
அவர்கள் தங்கள் கலைஞர்களுக்கு அதனை வணங்கி அனைவரையும பங்கேற்கச் செய்தார்கள். 
ஆனால் தமிழ் கலைஞர் களுக்கென்று தனி அழைப்பு இல்லை. அதனால் பெரும்பாலானோர் பங்கேற்க முடியவில்லை. திரைப்பட வர்த்தக சபை ஒன்றை தனியாக அமைக்க வேண்டும் என்று கூறிவந்தோம். அதன் அவசியத்தை சமீபத்திய விழாவில் உணர்ந்திருக்கிறோம்., இது யாருக்கும் எதிரானதல்ல. நமக்கு தேவையானது. "
suran

இயக்குனர் பார்த்திபன்: 
"எங்கள் மண்ணின் இயக்குனர் பாரதிராஜா ஒரு ஞானகிறுக்கன். சினிமாவை தவிர அவருக்கு வேறெதுவும் தெரியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அவரை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவித்திருக்க வேண்டும். செய்யவில்லை. நம் மண்ணின் கலைஞனுக்கு நாமே விருது கொடுத்து கவுரவிப்போம்."
இயக்குனர் பாரதிராஜா: 
"எனக்கு அழைப்பு அனுப்பவில்லை,
 கவுரவிக்கவில்லை என்று இங்கு வருத்தப்பட்டார்கள். 
தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பில்லையே என்ன செய்ய முடியும். 18 வருடங்களுக்கு முன்பு இருந்தே தமிழ் சினிமாவுக்கென்று தனி அமைப்புகள் வேண்டும் என்று கூறிவருகிறேன். அப்படி இருந்திருந்தால் அழைப்புகள் வீடு தேடி வந்திருக்கும். மொழிவாரி மாநிலம் பிரிந்த உடனேயே தமிழ் சினிமா தனி அமைப்புகள் கண்டிருக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் மட்டும்தான் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய தொழிலாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலைமையால் தமிழ் சினிமா அநாதையாக இருக்கிறது.  சினிமாவுக்கென்று தனி அமைப்புகள் வந்தால்தான் சுய அதிகாரமும் நமக்கு கவுரவமும் கிடைக்கும்."
ஜெயா அரசு நடத்திய சினிமா 100 ஆண்டுகள் கொண்டாட்டம் என்ன ஆக்கத்தில் நடந்து முடிந்துள்ளது .
கிராமங்களுக்கு சினிமாவை கொண்டு சென்று தடத்தையே புரட்டிப் போட்ட பாரதி ராஜாவுக்கு அழைப்பே இல்லையாம்.காரணம் அவரின் முதல் மரியாதை தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதால்தான் .
எல்லா பக்கமும் தமிழ்த்திரையுலகில் எழுந்துள்ள குழப்பத்தில் புதிதாக தமிழ் திரையுலகத்தினர் சினிமா 100 விழா ஒன்றை தனியே முறையாக எற்பாடு செய்வதுதான் ஜெயா சினிமா விழாவின் அலங்க்கோலங்களுக்கு சரியான மாற்றாக அமையும்.அதை விட்டு,விட்டு மேடைதோறும் அழையா புராணம் பாடுவது சரியான மாற்றாக அமையாது.
சினிமா 100 விழாவை திரைப்படக்கலைஞர்கள் கொண்டாடுவதுதானே சரி!.அரசு விழா வெறும் முதல்வர் சிங்கி விழாவாகத்தானே அமையும்.?
suran

------------------------------------------------------------------------------------------------------------
இதய  தினம் இன்று.!

உலகில் இதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
இது 2030ல் 2 கோடியே 30 லட்சமாக உயரும் எனவும் உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 80 சதவீத மாரடைப்புகள், தடுக்கக் கூடியவை. இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்டம்பர் கடைசி ஞாயிறு (செப்., 29) உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இரவுப் பணி, முறையற்ற உணவு பழக்கம், அதிக நேர பணி, குடும்பத்தில் நிம்மதியின்மை போன்றவை இதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன.
 உ லகில் மாரடைப்பால் இறப்பவர்களில், 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். 
புகை பிடிப்பதால் இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்பவர்கள், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன் ஆதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இதய நோய் ஏற்படலாம். 
suran
சர்க்கரை நோயால் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

* உப்பு அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.
* யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இதய நோயிலிருந்து பாதுகாக்கும்.
* முடிந்தளவு "எஸ்கலேட்டர்',"லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும். 
ஒ ரு நாளுக்கு சராசரியாக, 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
* காய்கறிகள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.
* சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, இதய நோயிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மருந்து.

இதயத்திற்கு இதம் தரும் உணவுகள், மலர்களை பார்க்கும் போதும், மழலைகளைப் பார்க்கும் போதும், மனதும், முகமும் சிரிக்கும்.புகையாலும், மதுவாலும், எண்ணெய் உணவாலும் வலியால் துடிக்கிறது. 
"அட்ரினலின், தைராக்ஸின்' ஹார்மோன்களால், கெட்ட கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், ரத்தக் குழாய் சுருக்கம் போன்றவற்றால், இதயம் சற்று பாதிக்கப்படுகிறது. தினம் ஒருவேளை, 30 கிராம் தயிர் சாப்பிடுவது நல்லது. பாலில் உள்ள சத்துக்களை விட, தயிரில் அதிக சத்துக்கள் உள்ளன.
சிவப்பு நிற பசலை, பொன்னாங்கன்னி, கரிசாலை, தண்டுக்கீரை, பீட்ரூட், கேரட் ஆகியவற்றில், இதயத்தை பாதுகாக்கும், "ஆன்தோசயனின்கள்' உள்ளன. இவை, இதயத்திற்கும், ரத்தக் குழாய்களுக்கும் இடையே உராய்வு அழுத்தத்தை, குறைத்து மென்மைப்படுத்துகின்றன. குறைந்த தண்ணீரில் அவித்த சோளம், கொள்ளு இரண்டும், ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன.

சிவப்பு சோயா, பாதாம், பிஸ்தா, சாரைப்பருப்பு, வெந்தயம், பட்டாணி, மீன்களில் உள்ள, "ஒமேகா 3 அமிலம்', கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
 தக்காளி, வெண்டைக்காயை அதிகம் வேக வைக்கக் கூடாது. பச்சையாக சாப்பிடுவது இன்னும் நல்லது. இவற்றிலுள்ள, "லைக்கோபின்கள்' பித்தநீருடன் வினைபுரிந்து, கெட்ட கொழுப்பு உருவாவதை தடுக்கின்றன. ஆப்பிள், ஸ்ட்ரா பெர்ரி, ஆப்ரிகாட், முலாம்பழம், கிவி, மாதுளை, எலுமிச்சை, ஆரஞ்சு, புளு பெர்ரி சாப்பிட்டால், நுண்ணிய ரத்தக் குழாய்களில் நைட்ரஜன் ஆக்ஸைடு அதிகரித்து, ரத்தக் குழாய் விரிவடைகிறது. இதனால் அடைப்பு மற்றும் சுருக்கம் தவிர்க்கப்படுகிறது. 
suran
இதிலுள்ள "பீட்டா கரோட்டின், விட்டமின் இ' இரண்டும், இதயத்தை பாதுகாக்கின்றன.பப்பாளி, பிளம்சில் உள்ள, மெக்னீசியம், பொட்டாசியம் இரண்டும், ரத்தத்தில் சோடியம் அதிகரிக்காமல் தடுத்து, இயல்பான நிலைக்கு கொண்டு வருகின்றன. இதிலுள்ள, "விட்டமின் ஏ' செல், அழிவை தடுக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரித்து வயிறு, இடுப்பு, தொடைப்பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, இருதயத்திற்கு தேவையற்ற சுமையை தவிர்க்கின்றன. 
சிறுமலை வாழை, ரஸ்தாளியும் இதய தசைக்கு ஏற்றது.

முளைவிட்ட தானியங்கள், பார்லி, ஓட்ஸ், மட்டை அவல், சிவப்பு அரிசி, கோதுமை, ஆலிவ் எண்ணெய், கொழுப்பு நீக்கப்பட்ட பால், முட்டை வெள்ளைக்கரு, அதிக எடையுள்ள மீன்கள், தோலுரித்து, கொழுப்பு நீக்கப்பட்ட கோழி, சோயா சார்ந்த உணவுகள், குடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.
வெள்ளைநிற அரிசி, ரவை, மைதா, சீனி, உப்பை குறைத்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு மாதமும், சமையல் எண்ணெய் மாற்றி பயன்படுத்த வேண்டும்.
கோபம், கவலை, மனஅழுத்தம், பயத்தாலும் இருதயம் பாதிக்கப்படும். தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா, எளிய உடற்பயிற்சிகளால் இதயத்தை பாதுகாப்போம். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

suran


சனி, 28 செப்டம்பர், 2013

தலைக்கு மேலே .

ஒரு ஆய்வின் படி மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டால் ஒருவனுக்கு உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் ஏற்படலாம். 
என நினைக்க தோன்றுகிறது. தனக்குள் தானே ஆழ்தல் (Self Transcendence)  எனும் ஒரு தனிச்சான்றாண்மை இயல்பு (ஆளுமை இயல்பு  என்பதை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 
suran
சான்றாண்மை இயல்பு அல்லது ஆளுமை இயல்பு என்பது ஆன்மிக உணர்வு சிந்தனை, நடத்தை ஆகியவற்றின் ஒரு தெளிவற்ற அளவாகும். தனக்குள் தானே ஆழ்தல் என்பது தன்னுணர்வைக் குறைவாய் பிரதிபலிக்கின்றது. குறைவாய் சார்ந்திருக்கின்றது. ஒரு தனி ஆத்மா தன்னை இந்த பிரபஞ்சத்தின் ஒரு முழுமை பகுதியாய்க் கண்டு கொள்ளும் ஆற்றலையும் பிரதிபலிக்கின்றது. எனக்கருத்து தெரிவிக்கின்றார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அறுவைசிகிச்சை மூலம் மூளையில் ட்யூமர்க்கட்டி நீக்கப்பட்ட சிலரை அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் ஆராய்ந்திருக்கின்றார்கள்.அப்போது பின்மண்டைப் பகுதிகளில் மூளையில் ஏற்படும் பாதிப்பு தனக்குள் தானே ஆழ்தல் எனும் யோக நிலையை தூண்டும் மர்மம் தெரியவந்திருக்கின்றது. மூளை இயல்பாக செய்து கொண்டிருக்கும் வேலைகளுக்கும், தனக்குள் தான் ஆழ்ந்து விடும். 
யோக நிலைக்கும் இடையிலுள்ள செய்விளைவு தொடர்பை எங்கள் ஆய்வு முதன்முதலாக நிரூபித்து காட்டியுள்ளது. என்று ஆய்வு விஞ்ஞானிகளில் ஒருவரான காஸிமோ உர்ஜெஸி கூறியிருக்கின்றார். 
பின் பக்கத்து மண்டை பகுதிகளில் மூளையில் ஏற்படுகின்ற பாதிப்பு அல்லது பழுது ஒரு தனிநிலை சான்றாண்மை வேகமான மாறுதல்கள் ஏற்பட தூண்டியுள்ளது. 
அது தனியான ஒரு சான்றாண்மை என்ற எல்லை பரிமாணத்தையும் தாண்டி ஆழ் உணர்வில் தொடர்பு கொண்டு பொதுவாகி, வெட்ட வெளியாகிவிடுவதை போன்றதாகும். ஆக, பழுதினால் பாதிக்கப்பட்ட மண்டை நரம்பு செயல்பாடு என்பது, உருதிரிந்த ஆன்மிக மத உணர்வுகளையும் உறுதிபடுத்தி தெரிவிக்கலாம். முன்பெல்லாம் நடந்து வந்த நியூரோ இமேஜிங் ஆய்வுகள் மூளையினுள்ளதாக திகழும் மண்டைப்பகுதிகள் முதலியவற்றை இணைக்கும் பெரிய ஒரு நரம்பு பின்னலினுள்ளே நிகழும் செயல்களை ஆன்மிக அனுபவங்களுடன் தொடர்புபடுத்தின. 
வலது மண்டைப் பகுதி மூளைத்தோடு நன் என்னும் உணர்வை விளக்குவதாகும். இந்த உணர்வை அதிகம் ஓட்டாமல் உணர்பவர்கள் ஆன்மிக ஆர்வம் கொண்டவர்களாக பெரும்பாலும் இருப்பார்கள்.

 ஆக மொத்தத்தில் மூளையில் எற்படும் பாதிப்புதான் கடவுளையே நமக்கு காட்டுகிறது .
இளம் வயதில் பெற்றோரும்,மற்றோரும் கடவுளை நம மனதில் புகுத்துவதால்தான் கடவுள் நம்பிக்கையே மனிதனுக்கு உண்டாகுகிறது.மற்ற உயிர்களிடம் அப்படி மூளைச்சலவை இல்லை.அவைகளுக்கு கடவுளும் இல்லை.இயற்கையோடு இணைந்து வாழ்ந்து இயற்கையுடன் மறைகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் முடி கரு,கரு வென அடர்த்தியாக இருந்தால் எப்படி இருக்கும் ?

* வைட்டமின், 'பி' குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும்.
* நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊற வைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும்.
* அழுகின தேங்காயை தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், மயிர்க்கால்கள் வலுப்பெறும்.
suran
* இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். இதை, மயிர் கால்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசினால், பொடுகு தொல்லை போய் விடும்.
* உங்களுக்கென்று தனியாக சீப்பு வைத்துக் கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளை தவிர்க்கவும்.
* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். இதை இரும்பு கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயை, தலையில் தடவி ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால், மயிர்க்கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
* நேரமில்லை என்பவர்கள், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் குளிக்கலாம்.
* விளக்கெண்ணையை போல உடலுக்கு குளிர்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, இலேசாக சுடவைத்து, மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்த சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
* தலையில், ஆங்காங்கே சிறு பொட்டல் இருந்தால், சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால், மீண்டும் முடி வளரும்.
* தலை முடிக்கு, போஷாக்குத் தரும் ஷாம்பூவை, வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி அளவு எடுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருட்கள் இல்லாத இந்தப் பொடி, எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது.
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.
* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.
suran
* வெயிலில் அலைந்து, வேலை செய்வோர், தினமும் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி; முடியும் உதிராது.
* தலைக்கு சீயக்காய்த் தூள் தேய்க்கும் போது, சீயக்காயுடன் தண்ணீருக்கு பதில், மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும்.


முடி பளபளப்பாக

வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு கப் அளந்து எடுத்து, அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது, யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்த சாறுடன், தேங்காய் எண்ணெய் கலந்து, மயிர் கால்களில் படும்படி நன்றாக, "மசாஜ்' செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால், முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.
Click Here
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தங்கம் தோன்றியது எப்படி?

உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதியளவு தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது.
கனடா, அமெரிக்க, ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூக்கொடை என்னுமிடத்தில் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்று மண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாக கூறப்பட்டாலும், மிக குறைந்த அளவே அங்கிருந்து கிடைக்கிறது.
இந்த தங்க உலோகம் புவியில் தோன்றியது எப்படி?
 புவி தோன்றிய பல ஆண்டுகளுக்கு பின்னர், இருபது பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட எடையுடைய எரிகல் ஒன்று பூமியின் மீது தங்கத்தையும், பிளாட்டினத்தையும் மழை போல பொழிந்துள்ளது. அதிலிருந்து தான் இன்றளவும் கிடைக்கின்ற தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல தனிமங்கள் வந்துள்ளன என்ற புவியியலாளர்கள் கூறுகின்றனர். எரிகல் பொழிவால் தங்கம் தோன்றியுள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக நடத்தப்படட புதிய ஆய்வில், காலாவதியான மிக அடர்த்தியான விண்மீன்களின் மோதல்களால் புவியிலுள்ள தங்கம் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் புவியில் கிடைக்கும் உலோகங்களில் மிக அரியது மட்டுமல்ல, இந்த பேரண்டத்திலும் அரியதே. கரி மற்றும் இரும்புப் பொருட்களை போல, தங்கம் விண்மீன்களிலே எளிதாக கிடைக்கக்கூடிய உலோகமல்ல. எனவே, மிக மோசமான அழிவுகளோடு மாற்றங்களை ஏற்படுத்துகிற அண்டவெளியில் ஏற்படும் மோதல்களால் தான் தங்கம் தோன்றிருக்க முடியும் என்று இந்த புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இரு நியுட்ரான் விண்மீன்களின் மோதலால் ஏற்படும் சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு அல்லது காலாவதியான விண்மீன் மையங்களின் மோதல் போன்றவற்றால் தங்கம் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டு நியுட்ரான் விண்மீன்கள் மோதுகின்றபோது, பத்து நிலவுக்கு சமமான தங்கம் உற்பத்தியாகி வெளிப்படுகிறது என்று இந்த ஆய்வை மேற்கொண்டோர் மதிப்பிட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் நாசா ஸ்விப்ட் செயற்கைக்கோள் கண்டறிந்த காமா கதிர்களின் வெடிப்பு என்று அறியப்படும் ஜிஆர்பி 130603பி-யில்  கண்டறிந்தவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
காமா கதிர்களின் வெடிப்பு இரண்டு நியுட்ரான் விண்மீன்களின் மோதலால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. அப்படியானால், புவியிலிருந்து 3.9 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இடம்பெறும் இந்த காமா கதிர் வெடிப்பு வினாடியில் பத்துக்கு இரண்டு என்ற அளவிலான சொற்ப நேரமே நீடிக்கிறது. காமா கதிர்கள் மிக விரைவாக மறைந்து விட்டாலும், அந்த வெடிப்பு மெதுவாக மறையும் கனல் ஒளி அகச்சிவப்பு ஒளியால் பரவி நிலைபெற்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த ஒளியும், பண்புகளும் உயர்வேக ஜெட் விமானம் வெளியேற்றும் துகள்கள் சுற்றுச்சுழலில் மெதுவாக மறைவது போன்ற உண்மையான கனல் ஒளி மறையும் நிலைமையை வெளிப்படுத்தவில்லை. அந்த கனல் ஒளி நியுட்டரான் விண்மீன்கள் மோதலில் வெளியான நியுட்ரான் செறிந்த பொருளால் உற்பத்தியாகும் வேறொரு கதிரியக்க தனிமம் போன்று தோன்றியது.
நியுட்ரான் விண்மீன் மோதலையும், அதனோடு உருவாகும் காமா கதிர்களின் வெடிப்பையும் இணைத்து விளக்குவதற்கு மறுக்க முடியாத உறுதியான சான்றை தேடிக் கொண்டிருந்த ஆய்வாளர்களுக்கு ஜிஆர்பி 130603பி-லிருந்து கிடைத்த கதிரியக்க கனல் ஒளி மறுக்க முடியாத உறுதியான சான்றாகிவிட்டது. ஏறக்குறைய நூறில் ஒரு பங்கு சூரிய நிறை அளவுக்கான பொருட்கள் காமா கதிர் வெடிப்பில் வெளியாகிறது.
அந்த பொருட்களில் தங்க உலோகமும் இடம்பெறுகிறது. ஒரு காமா கதிர் வெடிப்பில் உருவாகும் தங்கத்தையும், பேரண்ட காலத்தில் ஏற்பட்டுள்ள அதுபோன்ற வெடிப்புக்களையும் கணக்கிட்டு பார்த்தபோது, இவ்வுலகிலுள்ள எல்லா தங்கமும் காமா கதிர்களின் வெடிப்பால் தோன்றியிருக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் அனைவரும் விண்மீன்களால் அதாவது நட்சத்திர இராசியால் வழிநடத்தப்படுகிறோம் என்றால், நாம் அணியும் அணிகலன்கள் அனைத்தும், விண்மீன் மோதலால் உருவான பொருட்கள் என்னலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
தேய்மானத்தில் தேசத்தின் ஆலயங்கள்
------------------------------------------------------------------------------------------.

தேசத்தின் ஆலயங்கள் என்று நேரு போற்றிய பொதுத்துறை நிறுவனங் களைத் தனியார் சொத்துகளாக மாற்றுவ தில் மத்திய அரசு பிடிவாதமாக இருக் கிறது. என்எல்சி போன்ற நிறுவனங் களின் பிரச்சனைகளும், போராட்டங் களும் ஊடக வெளிச்சத்திற்கு வந்தன. ஆனால் மக்கள் கவனத்திற்கு வராமல் பல பொதுத்துறை நிறுவனங்களில் தனி யாரின் ஆதிக்கம் மேலோங்கிக் கொண்டி ருக்கிறது.
 கடந்த 1992 ஆண்டு முதல் 2012-13 வரை 1,36,970 கோடிக்கு பங்கு கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசமாகியுள்ளன. மக்களின் வரிப் பணத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டின் பெரிய சொத்துக்களாக உருவாக்கப்பட்டன.
ஆனால் இன்றோ அந்த பொதுச் சொத்து கள் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு நிறுவனத் தின் பங்குகள் 5 சதவீதம், 10 சதவீதம் என கூறி பங்குகள் விற்பனை செய்யப்படுகின் றன. பின்னர், நாளடைவில் அந்த நிறுவனமே மொத்தமாக தனியார் பிடியில் சிக்கிவச மாகி விடுகிறது. 1992 ஆண்டு முதல் 2012-13 வரை 1,36,970 கோடிக்கு பங்கு கள் விற்கப்பட்டுள்ளன. மேலும், 16 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்வச மாகியுள்ளன. இதில், பெரும்பான்மை யான நிறுவனங்கள் பெரிய அளவில் லாபத்தை ஈட்டியவை. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும்போது, அந்தந்த நிறு வனங்கள் ஈட்டுகிற லாபம் தனியார் வச மாகிறது.
அடுத்து, அந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தனி யாரே விலையை தீர்மானிக்கின்றனர். இத னால், பொருட்களின் விலையும், சேவை களுக்கான கட்டணமும் உயர்கிர்கின்றன.இதுவே, பொதுத்துறை நிறுவனங் களாக இருக்கும் போது, மக்களின் நலன் கருதி விலையை கட்டுப்படுத்த முடியும். அல்லது குறைந்தபட்ச விலைக்கு பொருட்கள் அல்லது சேவைகளை வழங்க முடியும்.பங்குச் சந்தை நிலவரம் கண் காணிப்பு, நிறுவனங்களின் செயல்பாடு கள் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் முக் கிய அமைப்பாக இந்திய பங்குச் சந்தை நிறுவனம் (செபி) இருக்கிறது.
இது மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. 2010ம் ஆண் டில் செபி நிறுவனம் தனது சட்டத்தில் புதிய மாற்றத்தை செய்தது. அதன்படி தனியார் நிறுவனங்கள் 25 சதவீதத்திற்கு அதிகமாகவும், பொதுத்துறை நிறுவனங் கள் 10 சதவீதம் வரையிலும் பங்குகளை விற்பனை செய்து கொள்ளலாம். செபியின் சட்ட திட்டங்களை மாற்ற மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. ஆனால், பொதுத்துறை பங்குகளை விற்கும் நோக் கத்துடன் செயல்படுவதால், இதில் தலை யிடாமல் மத்திய அரசு மவுனமாக உள்ளது என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலா ளர் ரா. முத்துசுந்தரம், “மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து வரக்கூடிய உபரி நிதியை பொதுத்துறை நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும், நவீனப்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அரசு உபரி நிதியை பட்ஜெட் பற்றாக்குறைக்கு பயன்படுத்து கின்றது. கடந்த ஆண்டு பட்ஜெட் பற்றாக் குறை 5.23 லட்சம் கோடி. ஆனால் அரசு தனியார் பெரும் நிறுவனங்களுக்கு வழங்கி யுள்ள வரிச் சலுகை 5.83 லட்சம் கோடி. இப்படி பெரும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்காமல் இருந்தாலே கடந்த பட்ஜெட் உபரி பட்ஜெட்டாக அமைந் திருக்கும். அரசின் தவறான தாரளமய பொருளாதரக் கொள்கையே இதற்கு காரணம்,” என்றார்.“அரசின் பற்றாக்குறையை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
கறுப்புப் பணத்தை மீட்டெடுக்கலாம், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக் கும் 25 லட்சம் கோடி ரூபாயை இந்தியா விற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங் களிடமிருந்து வங்கிகளுக்குத் திரும்பி வர வேண்டிய கடன் 1.50 லட்சம் கோடி ரூபாய். அந்த வாராக்கடனை வசூலிக்க அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும். பொதுத் துறை நிறு வனங்களை விரிவுபடுத்தி, மேம்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்குவதின் மூலம் சமூக நீதி காக்கப்படும். மேலும் மக் களின் வாங்கும் சக்தி அதிகரித்து, பொரு ளாதார வளர்ச்சிக்கும் அது உந்து சக்தியாக அமையும்,” என்றும் அவர் கூறினார்.தொழிற்சங்கத் தலைவர்கள் மட்டுமல் லாமல் பல பொருளாதார வல்லுநர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள். காது கொடுத்துக் கேட்கத்தான் மத்திய அர சுக்கு மனமில்லை.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிக சம்பளம் பெறும் சிஇஓ பட்டியலில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.
 கடந்த நிதி ஆண்டில் இவர்களது ஆண்டு சம்பளம் ரூ. 56.25 கோடியாகும். 
இவர்களுக்கு அடுத்தபடியாக ஜின்டால் ஸ்டீல் நிறுவனத்தின் நவீன் ஜின்டால் ரூ. 54.98 கோடியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 
suran
முந்தைய நிதி ஆண்டில் (2011-12) ஜின்டால் பெற்ற சம்பளம் ரூ. 73.42 கோடியாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்துக்கான போட்டி கலாநிதி மாறன், ஜின்டால் இடையேதான் உள்ளது.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சம்பளம் ரூ. 49.62 கோடி. ஹீரோ குழுமத்தின் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் ரூ. 32.72 கோடி, பவன் முன்ஜால் ரூ. 32.80 கோடி மற்றும் சுநீல் முன்ஜால் ரூ. 31.51 கோடியோடு அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளனர். ராம்கோ சிமென்ட்ஸ் பிஆர்ஆர் ராஜா, மாருதி சுசுகி முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷின்ஸோ நகானிஷி, டிவிஸ் லேப் ரவி கே திவி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பிஜிஆர் எனர்ஜி பிஜி ரகுபதி, டாடா மோட்டார் முன்னாள் தலைவர் கால் பீட்டர் பார்ஸ்டர் ஆகியோர் இம்முறை பட்டியலில் இடம்பெறவில்லை.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி ஆனந்த் மஹிந்திரா. சுநீல் மித்தல் ஆகியோர் அதிகம் சம்பளம் பெறுவோர் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆப்பிள் நிறுவனம் திடீரென நேற்று தங்கத்திலான மாடல் ஐபோன் வெளியிட்டது.
வெளியிட்ட சில மணி நேரத்தில் நியூயார்க ஷோரூமில் 1400 பேர்  அள்ளிச்சென்றனர்.
5எஸ் மற்றும் மலிவு விலை என்று கூறி 5சி மாடல் மொபைல்களை சமீபத்தில் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், திடீரென தங்கம் மாடல் மொபைல் வெளியிட்டது.
suran
கியூவில் நின்ற பாதி பேருக்கு மொபைல் போன் கிடைக்கவில்லை.

ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த மொபைல் விலை 55 ஆயிரத்தை தாண்டும் என தெரிகிறது. இதையும் இந்தியா, சீனாவில் தங்கம் மோகம் அதிகம் என்பதால் அங்கு சந்தையை பிடிக்க சரியான வழி  என்று ஆப்பிள் நிறுவனம் இப்படி திடீர் இன்ப அதிர்ச்சி தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தங்கம் மாடல் போனில் மேல் தகடு மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும், விற்பனைச் சந்தையிலும், இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளுக்கு நம் நாட்டவர் எப்போதும் தீராப் பசியோடுதான் இருப்பார்கள் என்பதனை, வெளிநாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே, மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து முடிவெடுக்கையில், இந்தியர்களின் எண்ணங்களுக்கு அதிக மதிப்பு கொடுத்து வருகின்றனர்.
ஆனால், தற்போது ஒரு சின்ன பிரச்னை இதில் எழுந்துள்ளது. 
இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள், பட்ஜெட் விலையில், மிகவும் குறைவான விலையில், போன்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கி உள்ளனர். இதனால், பல பன்னாட்டு நிறுவனங்களும், தங்கள் போன்களை குறைந்த விலையிட்டு விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். குறைந்த விலையிட்டு விற்பனை செய்வதற்காகவே, போன்களின் வடிவமப்பையும், இந்தியாவில் விற்பனை செய்வதற்கென மாற்றி வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், ஆப்பிள் போன்ற உயர் ரக போன்களைத் தயாரித்து, உயர்ந்த விலையிட்டு விற்பனை செய்திடும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் நிலை என்ன? இதன் போனின் சராசரி குறைந்த விலை ரூ.40,000 ஆக உள்ளது. இது உயர்நிலையில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரின், ஒரு மாத கால ஊதியமாக உள்ளது. இதனாலேயே, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் 5 எஸ் மற்றும் ஐபோன் 5 சி ஆகியவை உயர் மத்திய வகுப்பினர் மட்டும் செல்வந்தருக்குக் கூட கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளன.
சாம்சங் மற்றும் எல்.ஜி. போன்ற நிறுவனங்கள், இந்த வகையில் அதே வசதிகள் கொண்ட போன்களை வடிவமைத்து விற்பனை செய்தாலும், அவை அனைவரும் வாங்கும் நிலையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த மத்திய தர வகுப்பினர் வாங்கும் நிலையில் எந்த போனும் கொண்டிருக்கவில்லை. முன்பு வெளியான பழைய போன்களைத்தான் விலை குறைத்து விற்பனை செய்கிறது.

ஐபோன் 5 சி ,

ஆப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய இரண்டு போன்களில், ஐபோன் 5 சி, பட்ஜெட் விலை போன் எனத் தெரிவிக்கப்பட்டது. 
ஐபோன் 5 எஸ் போனுடன் ஒப்பிடுகையில், இதன் விலை குறைவாக இருக்கலாம். ஆனால், ஐபோன் 5 சி இந்தியாவிற்கான பட்ஜெட் விலை போனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், வெளிநாடுகளில், மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்தில் இல்லாத ஐபோன் 5 சி போன் ஒன்றின் விலை 549 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணி மாற்றத்தின் படி பார்த்தால், இதன் இந்திய விலை ரூ. 35 ஆயிரமாக இருக்க வாய்ப்புண்டு. மேலும், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5 எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், ஐபோன் 5 சியின் பிளாஸ்டிக் கவர் சற்றாக இதன் தரத்தினைக் குறைக்கிறது. எனவே, மக்கள் இதே வசதிகளைத் தரும், பிற நிறுவனங்களின் குறைந்த விலை போன்களை நாடிச் செல்லும் வாய்ப்புண்டு.
எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 5 சி, இந்தியாவில் அதிகம் விற்பனை ஆக வேண்டும் எனில், அதன் விலை ரூ.15,000 முதல் ரூ.25,000க்குள் இருக்க வேண்டும். பழைய மாடல் ஐபோன்4, 8 ஜிபி திறன் கொண்டதாக இருந்தால், ரூ.22,000 எனத் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய போனின் விலை இந்த அளவைக் காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதே நல்லது.

பிளாக்பெரி 9720

பிளாக் பெரி நிறுவனம் தன் பிளாக்பெரி 9720 மாடல் மொபைல் போனை இந்தியாவில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 
இது ஒரு பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன். QWERTY கீ போர்ட் கொண்டு, பிளாக்பெரி ஓ.எஸ்.7.1 சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 2.8 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. 
06 MHz திறன் கொண்ட ப்ராசசர் இந்த போனை இயக்குகிறது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டு, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு இயங்குகிறது. இதன் தடிமன் 12 மிமீ. எடை 120 கிராம். பல பார்மட்களில் ஆடியோ மற்றும் வீடியோவினை இயக்கலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம்.ரேடியோ, 512 எம்பி ராம் மெமரி, அதே அளவில் ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை அதனை அதிகப்படுத்தும் வசதி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். 
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் இந்த பிளாக் பெரி மாடல் போனின் அதிக பட்ச விலையாக ரூ. 15,990 எனக் குறிக்கப்பட்டுள்ளது.
Click Here
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
                          
                                                   அரசு தொல் [லை ]க்  காட்சி ?
 
suran

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

எவரும் தர முடியாத ........!


suran
இலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை அது பெறுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், யாழ் மாவட்டத்தில் 14 இடங்களையும் ( மொத்தமாக 28 இடங்கள்) அந்தக் கட்சி பெற்றுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது.
ஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.
ஆகவே மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 30 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 7 இடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.
ஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுகிறது.
விபரம்:
யாழ்ப்பாணம்:
தமிழ் அரசுக் கட்சி --- 14 இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 2 இடங்கள்


மன்னார் :
தமிழ் அரசுக் கட்சி --- 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 1
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 1
கிளிநொச்சி :
தமிழ் அரசுக் கட்சி --- 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1
முல்லைத்தீவு :
தமிழ் அரசுக் கட்சி --- 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்ப-1
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
எவரும் தர முடியாத மொபைல் போன் இது?
-------------------------------------------------------------------------------------------------------
உண்மையிலேயே தமிழர்களுக்கு!
------------------------------------------------
பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 
அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது.

suran
ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. 
இதில் இயங்கும் ஐ.ஓ.எஸ் 7 என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தமிழ் மொழிச் செயல்பாட்டினையும் உள்ளடக்கியாதாக உள்ளது. இது தமிழுக்குப் பெருமையாகும்.
ஐ போன் 5 எஸ் மற்றும் குறைந்த விலை போனாக ஐபோன் 5சி என இரு மாடல்கள் வெளியாகி உள்ளன. ஐபோன் 5 எஸ், 16, 32 மற்றும் 64 ஜிபி என மூன்று மாடல்களில், தங்கள், வெள்ளி மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கும். 
அமெரிக்காவில், இரண்டாண்டு மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்துடன் இவை 199, 299 மற்றும் 399 டாலர் கட்டணத்தில் கிடைக்கும்.

 நிறுவன ஒப்பந்தம் இல்லாமல், அமெரிக்காவில், 16 ஜிபி போன் 549 டாலர், 32 ஜிபி 649 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. ஐபோன் 5சி, ஒப்பந்தக் கட்டுப்பாடு இல்லாமல், 549 டாலர் என விலையிடப்பட்டுள்ளது.
 இந்த போன்களுடன் ஐ.ஓ.எஸ்.7 என்னும் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது. முதன் முதலாக, தன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 18 முதல் இது டவுண்லோட் செய்திடக் கிடைக்கும். ஐபோன் 4, ஐபேட் 2, ஐபேட் மினி, மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றில் இயங்கும்.
2007 ஆம் ஆண்டு, முதல் ஐபோன் வெளியானது. இதில் இயங்கும் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐ.ஓ.எஸ்.7 என்ற பெயரில், புதிய வடிவத்தில், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் தற்@பாது வெளிவருகிறது. 
தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏழாவது ஜெனரேஷன் என்பதால், இதற்கு ஐ.ஓ.எஸ்.7 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 200 புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பயனாளர் இண்டர்பேஸ், அறிவிப்பு மையம், விரைவாக அணுக்கம் பெற கட்டுப்பாடு மையம் என இதில் பல விஷயங்கள் புதியதாக அறிமுகமாகின்றன. 
மிகப் பளிச் எனத் தெரியும் வண்ணமயமான இண்டர்பேஸ் இதற்கு சரியான மேக் அப் ஆக தோற்றம் அளிக்கிறது. ஐ வொர்க் (iWork productivity suite), ஐ லைப் (iLife), ஐமூவி (iMovie) மற்றும் ஐ போட்டோ (iPhoto) ஆகிய அப்ளிகேஷன்கள், ஐ.ஓ.எஸ்.7 உடன் இணைந்து கிடைக்கின்றன. இவை, இந்த போன்களுக்கு நல்ல விற்பனையைத் தரலாம். ஏனென்றால், இந்த அப்ளிகேஷன்கள் மூலம், போட்டோக்களையும், வீடியோக்களையும் எடிட் செய்திட முடியும். 
""இவை ஏற்கனவே மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவை ஆதலால், தற்போது இந்த போன்கள் மூலம் பயன்படுத்த மக்கள் ஆர்வப்படலாம். மேலும் வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இவை தரப்படுவதில்லை என்பதால், புதிய ஐபோன்களை, இதற்காகவே மக்கள் விரும்புவார்கள்,தனக்கென ஒரு தனித்தன்மையையும், அதனையே தனிச் சிறப்பாகவும் பண்பாகவும் ஆப்பிள் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. அதனை மாற்றும் எந்த முயற்சிக்கும் நான் சாட்சியாகவும் இருக்க மாட்டேன், அனுமதிக்கவும் மாட்டேன்'' என்று கூறினார்.

suran
ஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்:1.ப்ராசசர்: ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.
2. விரல் ரேகை: டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது. பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.
3. பேட்டரி: தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.
4. கேமரா: இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது. தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.
5. இயக்கும் சிப்: இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.
6. இலவச அப்ளிகேஷன்கள்: இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன.
7. வடிவமைப்பு: இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.
8. திரை: மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
9. சிம்: இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.
10. மொழிகள்: இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன.

ஐபோன் 5 சி மொபைல் போன் சிறப்புக்கள்

1. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கிறது.
2. பாலிகார்பனேட் ஷெல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
3. சுற்றியுள்ள ஸ்டீல் ஸ்ட்ரக்சர் ஆன்டென்னாவாகச் செயல்படுகிறது.
4. ஏ6 (A6) சிப் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் காம்பஸ், ஜி.பி.எஸ்., வை-பி ஆகிய வசதிகள் உள்ளன.
5. ஐபோன் 5 எஸ் போல, இதிலும் 4 அங்குல திரை டிஸ்பிளே கிடைக்கிறது. ரெசல்யூசன் 1136 x 640 பிக்ஸெல்கள்.
6. கேமரா 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ரெடினா டிஸ்பிளே, போட்டோ ஜியோ டேக்கிங் வசதிகள் கிடைக்கின்றன. வீடியோ நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.
7. இதன் பரிமாணம் 124.4 x 59.2 x 8.97 மிமீ. எடை 132 கிராம்.
8. இதில் உள்ளாக அமைந்த லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டு, யு.எஸ்.பி மற்றும் பவர் அடாப்டர் வழியே அதனை சார்ஜ் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. தொடர்ந்து 3ஜி அழைப்புகளை 10 மணி நேரம் பயன்படுத்தலாம். வீடியோ 10 மணி நேரமும், ஆடியோ 40 மணி நேரமும் பயன்படுத்தலாம்.
இந்த போன் மக்கள் மனதில் பட்ஜெட் விலை போனாக இடம் பெறுமா என்பது சந்தேகமே. ஆனால், ஆண்ட்ராய்ட் போனால் சரியும் தன் மொபைல் போன் சந்தைப் பங்கினை, இந்த போன் தூக்கி நிறுத்தும் என ஆப்பிள் நிறுவனம் எண்ணுகிறது.
 இந்த இரண்டு மாடல்களில்சில வசதிகள் இல்லை. 
1. அண்மைக் கள தகவல் தொடர்பு எனக் கூறப்படும் Nearfield communications. வருங்காலத்தில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதால், ஆப்பிள் ஏன் இதனை விட்டுவிட்டது என்று தெரியவில்லை.
2. வயர்லெஸ் சார்ஜிங் தொழில் நுட்பம். ஆப்பிள் தொடர்ந்து இது குறித்து எந்த எண்ணமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சாம்சங், எல்.ஜி. மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இதனைத் தங்களின் சில மாடல்களில் தந்து வருகின்றன. ஒருவேளை, இந்த தொழில் நுட்பம் இன்னும் சீராக வளர்ந்த பிறகு, ஆப்பிள் இதனைத் தன் மாடல் போன்களில் தர திட்டமிட்டிருக்கலாம்.
3. எச்.டி. ஸ்கிரீன்: ஹை டெபனிஷன் திரை தருவதை ஆப்பிள் இந்த மாடல்களிலும் தள்ளிப்போட்டுள்ளது. ஆப்பிள் போன் திரைகளில் காட்டப்படும் டிஸ்பிளே ரெசல்யூசன் இன்னும் பழைய பாணியிலேயே உள்ளது.
4. நம் வசப்படுத்தும் வசதி: இதில் நாமாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு மெமரி அதிகப்படுத்த இயலாது. நாமாக புதிய பேட்டரி ஒன்றை இணைக்க முடியாது.
மெமரி கார்ட் மற்றும் உபரி பேட்டரியினை வைத்து மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டு என்றால், ஆப்பிள் போன்களை மறந்துவிடுங்கள். இருப்பினும், இதன் நவீன ப்ராசசர், பல வண்ணங்களில் வடிவமைப்பு ஆகியவை இம்முறை குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களாகக் கிடைத்துள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Click Here
1914 - செப்டம்பர் 22
1914ம் ஆண்டின் செப்டம்பர் 22 நவராத்திரியின் மூன்றாம் நாள்.
காலைப்பொழுதில் சென்னை நகரின் வர்த்தக நிறுவனங்கள் திறந்து வைக்கப்படும் நேரம் அது.
நடந்து வரும் முதலாவது உலக யுத்தம் பற்றிய செய்திகள் மக்களின் உதடுகளில் அரைபட்டுக் கொண்டிருந்தன.
மாலையில் கொலு பார்க்கச் செல்லும் பெண்களும் சிறுமிகளும் பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர்.
suran
 மவுண்ட் ரோட்டில் இருந்த பிரபலமான மோசஸ் அண்ட் கம்பெனி ஐரோப்பா செல்லும் மாணவர்களுக்கு தேவையான உல்லன் கோட்டுகள் மற்றும் உள்ளாடைகள் பற்றிய விளம்பரத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது.
இரவு ஒன்பது மணி இருபதாம் நிமிடத்தில் சென்னை நகரம் பெரும் நடுக்கத்துக்குள்ளாகியது.முதலாம் உலகப்போரின் போது 22 - 9 - 1914ம் ஆண்டில் ஜெர்மன் யுத்தக்கப்பல் எம்டன் சென்னை துறைமுகத்தை தாக்கியது. அமைதிப்பூங்காவாக இருந்த சென்னையில் வாழ்ந்த மக்கள் பீதியடைந்தனர்.
 நாளொன்றுக்கு இருபதாயிரம் பேர் நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர் என்று செய்திகள் கூறின.
இவன் பெரிய எம்டண்டா என்று சர்வசாதாரணமாக ஊரை ஏமாற்றி திரியும் பேர்வழிகளை அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் அன்று முதல் புழக்கத்துக்கு வந்தது. சென்னை நகரைத் தாக்கிய கப்பலில் தியாகி செண்பகராமன் பணியாற்றி வந்தார் என்று வரலாறு கூறுகிறது. காந்தி மண்டபம் அருகில் செண்பகராமனின் நூறாவது பிறந்த நாளையொட்டி, அவருடைய நினைவாக நிறுவப்பட்ட சிலையை 1991ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ஜெர்மனியில் உள்ள எம்டன் நகர மக்கள் நன்கொடையாக அளித்த போர்க்கப்பலுக்கு எம்டன் அந்த நகரத்தின் பெயரே சூட்டப்பட்டது.
3600 டன் எடையுடைய இக்கப்பலில் 22 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. நாகம் அழகாக இருக்கிறது என்று கூறுவது போல் இதுவும் அழகாக இருந்தது.
ஜெர்மனியின் எதிரிகளான பிரிட்டிஷார் கூட இக்கப்பலை ‘கிழக்கத்திய அன்னம்’ என்று வர்ணித்தார்கள் எம்டன் கப்பலின் தலைவன் வோன் முல்லர் சென்னை தாக்கப்பட்டது குறித்து தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். வர்த்தகக் கப்பல்களை அழிப்பதற்காக இக்கப்பல் கிழக்கத்திய கடலில் வலம் வந்தது.
எந்தவொரு எதிர்ப்பும் சிரமமும் இன்றி பிலிப்பைன்ஸ் கடல் வழியாக வங்காள விரிகுடாவில் நுழைந்த எம்டன் சென்னை கடற்கரையை நெருங்கியது.
பிரிட்டிஷ் கப்பல்கள் போன்று நான்கு புகைபோக்கிகளுடன் அது இருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.
நான்காவது புகைபோக்கி வோன் முல்லரின் வியூகத்தால் உருவாக்கப்பட்ட போலி புகைபோக்கியாகும். இரண்டு எண்ணெய்க் கப்பல்களை தகர்த்த பின்னர் அது வேடிக்கையாக நகரை நோக்கி சுட ஆரம்பித்தது. பழைய கலங்கரை விளக்கத்தின் மின்கலம் அருகே நின்று எம்டன் கப்பல் குண்டு வீசுவதை பார்த்த தி இந்தியன் ரிவியூ பத்திரிகையின் செய்தியாளர் டி.ஸ்காட் பீரங்கி குண்டுகளின் துகள்களும், உலோகக்குண்டுகளும், பூந்தமல்லி ஹைரோடு, சூளைமேடு, காசா மேஜர் சாலை, நுங்கம்பாக்கம் வரை சிதறிக் கிடந்ததாக அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
போர்ட் டிரஸ்ட் கட்டிடம், மெட்ராஸ் செயிலிங் கிளப்பின் போட் ஹவுஸ், புதிய நேஷனல் பேங்க் ஆப் இந்தியா கட்டிடத்தின் முகப்பு ஆகிய இடங்களில் குண்டுகளின் சிதறல்கள் கிடந்தன. வெடிக்காத சில குண்டுகளும் சிதறிக் கிடந்தன. மொத்தத்தில் மூன்று பேர் மடிந்தனர். பதின்மூன்று பேர் காயம் அடைந்தனர். மறுநாள் வெளியான செய்தித்தாள்களில் குண்டுவீச்சு பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஒருவேளை பிரிட்டிஷ் அரசு செய்திகளை வெளியிடக்கூடாது என்று தடை விதித்திருக்க வேண்டும்.
இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவத்தொடங்கின. எம்டன் கப்பல் மீண்டும் நகரைத் தாக்கக்கூடும் என்று நகரெங்கும் பேசப்பட்டது.
 மக்கள் உறக்கமின்றித் தவித்தனர். ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரயிலில் ஏற முடியாதவர்கள் பேருந்துகளிலும், மாட்டுவண்டிகளிலும் நகரை விட்டு வெளியேறிய வண்ணம் இருந்தனர்.
 மாநில ஆளுநர் பெண்ட்லாண்ட் இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. அவர் குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

suran
எம்டன் குண்டு வீசிய மூன்றாம் நாள் அதாவது செப்டம்பர் 25 அன்று சென்னை வந்திறங்கினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர் அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் துறைமுகத்தை சுற்றிப் பார்த்தார். மத்திய மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்தார். காலை பத்தேகால் மணிக்கு அவர் தனது மாளிகைக்கு திரும்பி விட்டார்.
 ஓரிரு நாட்கள் கழித்து அவர் ஊட்டி திரும்பிவிட்டார்.
ஆனால் எம்டன் பற்றிய உண்மைச்செய்திகளுக்கு கூட காதும் மூக்கும் வைத்து அதை ஒரு அசுரனாக சித்தரிக்கும் செய்திகள் நாடெங்கும் பரவின.
கோகோஸ் தீவுகள் அருகே கடல் கேபிள்களை சீரழிக்க முயன்ற எம்டன் கப்பலை ஆஸ்திரேலிய போர்க்கப்பல் சிட்னி நேருக்கு நேர் எதிர்த்தது. கடுமையான சண்டைக்கு பின் எம்டன் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
இச்சம்பவம் நவம்பர் ஒன்பது அன்று நடந்தது.
சென்னை நகருக்கு இத்தகவல் நவம்பர் 11 அன்று கிட்டியது.
நகரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
-

சனி, 21 செப்டம்பர், 2013

"ஜெ " [‘இந்திய ] சினிமா 100’ விழா


suran

ஜெ தலைமையில் நடைபெறும் ‘இந்திய சினிமா 100’ விழா பற்றி தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர்- இயக்குநர் பீ.லெனின்.
“கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவிற்கு அளித்த பங்கை யாராவது மறந்து விட முடியுமா? 
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அவரவர் மொழிப் படங்களுக்கு மாநில விருது வழங்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்காக மாநில விருது வழங்கப்படவே இல்லை. 

அதை கருணாநிதிதான் தொடங்கிவைத்தார். 
ான், பாலு மகேந்திர உள்ளிட்டவர்கள், விருதுத் தொகையை அதிகரித்துக் கொடுக்க சொன்னபோது அதை உடனே அதிகரித்து கொடுக்கவும் செய்தார். தவிர, உலகில் இந்த வயதிலும் பேனா பிடித்து எழுதும், அதுவும் யார் கேட்டாலும் சினிமா என்றால், தன்னை மறந்து அதில் மூழ்கிப் போகும், ஒரு கலைஞன் இந்த சினிமாவிற்கு அளித்த கொடையை ஏன் தமிழ்சினிமா மறந்து போனது? சிவாஜி கணேசன் என்கிற ஆளுமையை அடையாளம் காண வைத்து, தமிழர்களின் பகுத்தறிவை உசுப்பிவிட்ட, திராவிட இயக்கத்தின் தொடக்க கால காவியமான “பராசக்தி”, திரைப்படம் எங்கே போனது? கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அவரை கொண்டாடிய கூட்டம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை. கலைஞரின் மூலமே சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்த வித்தக கவிஞர் என்கிற பா.விஜய் இந்நேரம் எங்கே போனார்? அப்துல் ரகுமான், வைரமுத்து, என்று ஒரு பெரிய பட்டாளமே கலைஞரால்தான் இங்கே நிலையான இடத்தை அடைந்தது. கலைஞரின் படத்தை திரையிடாதது கண்டு ஏன் இவர்கள் வெகுண்டெழவில்லை?”
திரை உலக நூற்றாண்டு விழா அம்மா புகழ் பாடும் விழாவாகத்தான் நடக்கிறது.சும்மாவா மக்கள் வரிப்பணத்தில் 10 கோடிகளை அன்பளிப்பாக [?]வழங்கியிருக்கிறாரே.
பராசக்தி மூலம் புராணப் படங்கள் ,பாடல்களுக்காகவே திரைப்படம் என்றிருந்ததை தனது வசனத்தின் மூலம் புதிய வழியை ஏற்படுத்திய கலைஞர் கருணாநிதி,கிராமத்து மின்னலை திரையில் கொணர்ந்து ஸ் டுடியோ க்களில் முடங்கிக் கிடந்த படப்பிடிப்புகளை கிராமங்களில் வர வைத்த பாரதிராஜா,பாலுமகேந்திரா ,பாக்கியராஜ்,விஜய்காந்த்,விஜய் போன்றோர்களின் பங்கேற்பை தவிர்த்த விழா நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படாத ஜெ ஆதரவு மாநாடுதான் .இந்த திரைப்பட நூற்றாண்டு விழா க் குழு நிச்சயம் அடிமைகளின் குழு வாகத்தான் உள்ளது.ஜெயலலிதாவுக்கு பிடித்தவர்,பிடிக்காதவர் என பாகுபடுத்தும் விழா திரையுலக நூற்றாண்டு விழாவாகவே கருத்தப்பட முடியாது.
முதல்வர் ஜெயலலிதா விழாவுக்கு வரும்  தவிர்த்து இவர்களை பெருமைப்படுத்தலாமே.இவர்களை அழைக்காமல் தவிர்க்கும் விழாக்குழுவினர் நிச்சயம் கொத்தடி மைகள்தான்.


கலைஞர்  வசனம் பேசித்தான் திரை உலகில் ஆர்வத்துடன் வந்ததாகக் கூறும் அல்லது கூறிய கமல்ஹாசன் போன்றோர் இது போன்ற சார்பு விழாவில் கலந்து கொள்வது இருக்கட்டும்.இது போன்ற மீறல்களை மேடையில் கூறுவார்களா?
கலைஞர் காலத்தில் நடந்த விழாவில் தகிரியமாக பேசிய அசி த் அதற்கு கைதட்டி பாராட்டிய ஆண்மை ரசினி இந்த விழாவில் இருக்குமிடம் தெரியும்படி இது போன்ற குறைகளை தகிரியமாக பேசுவார்களா?
[பேசினால் கருணாநிதி போல் ஜெயா சும்மா இருப்பாரா?ஆரம்பத்துக்கு கட்ட காலம் ஆரம்பமாகிவிடாதா?]
--------------------------------------------------------------------------------------------------------------
போபால் கொலைகாரனை கையூட்டு வாங்கிக்கொண்டு தப்பவிட்ட ராஜீவ் கட்சியினர் அமெரிக்க அணு உலை க்காரர்களிடமும் இழப்பீடை வாங்க இயலாதவாறு ஒப்பந்தம் போடுவதில் என்ன வியப்பு இருக்கிறது?
அவர்களுக்கு தேவை டாலர்களில் சுவிஸ் வங்கி கணக்கு அதிகரிப்பதுதானே ஒழிய இந்திய அப்பாவி வாக்களிக்கும் எந்திரங்களின் உயிர் பற்றிய கவலை அல்ல.!

அணுஉலை விபத்து இழப்பீடு விவகாரத்தில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு மத்திய அரசு அடிபணிவது, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அவமதிப்பதுடன், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரானது .
இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, இந்தியாவில் அணு மின்னுற்பத்திக்காக அணு உலைகள் நிறுவும் விஷயத்தில்,நாட்டின் நலனுக்கு எதிராகவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருப்பதாக சர்ச்சை மூண்டுள்ளது.
அணுமின் உற்பத்திக்காக, அயல்நாட்டு நிறுவனங்களின் கூட்டுடன் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் மின் நிறுவனத்திடமிருந்து அணு உலைகள் மற்றும் உதிரிபாகங்களை வாங்க, மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அணுமின் வாரிய நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்.) ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளது.
suran


இதுபோல் அயல்நாட்டு நிறுவனங்களின் அணு உலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டு, அவற்றில் விபத்து ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய நஷ்டஈட்டை அணுஉலை மற்றும் உதிரிபாகங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பதை, 2010-இல் கொண்டுவரப்பட்ட அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு உறுதி செய்கிறது.
இதனால், போபால் விஷவாயு சம்பவத்தைப்போல, இந்தியாவில் நிறுவப்படவிருக்கும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து நேர்ந்தால், அதற்குப் பெருமளவு நஷ்டஈட்டுத் தொகையைத் தர வேண்டுமே? என அமெரிக்க நிறுவனம் கவலைப்படுகிறது. அந்தக் கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜி.ஈ. வாஹன்வதி, அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவை செயல்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை அணுமின்நிலையத்தை நடத்தும் இந்திய நிறுவனத்தின் விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின்போது அணு விபத்து பொறுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும், அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையிலும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் என்.பி.சி.இ.எல். நிறுவனம் மேற்கொள்ளும் எந்தவோர் ஒப்பந்தமும், இந்தியச் சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என அணுசக்தித் துறை (டி.ஏ.இ.) வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக்குழு வரும் 24-ம் தேதி விவாதிக்கும் எனத் தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மருதநாயகம்  கமல்?
 1997ல் கமல் தொடங்கிய படம் மருதநாயகம்.

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரன் முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகத்தை பற்றிய அந்த வரலாற்றுப்படத்தை தனது கனவு படமாகவும் சொன்னார் கமல்.
suran
அதனால் இங்கிலாந்து நாட்டு ராணியை சென்னைக்கு அழைத்து வந்து பிரமாண்டமாக படத்தை தொடங்கினார். ஆனால் பின்னர் ஏற்பட்ட பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டார் கமல்.

ஆனால் விஸ்வரூபம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார் கமல்.
இந்த பாகத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது.
அதனால் இந்த சூட்டோடு மருதநாயகம் படத்தையும் தூசு தட்டுமாறு கமலின் அபிமானிகள் அவரை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். சிலர் பைனான்ஸ் உதவி செய்யவும் முன்வந்துள்ளார்களாம். அதனால் விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு மருதநாயகம் வேலைகளில் கமல் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
வழக்கு! -விநோதம்!!-ஜெயலலிதா!!

கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக வாதாட வேண்டிய வழக்கறிஞர் பவானி சிங் அவர்களே, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவே திரும்பத் திரும்ப பல முயற்சிகளில் ஈடுபடுகிறாரே?

பதில் :- கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சார்பில் 23-8-2013 அன்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், விசாரணையின்போது பின்பற்றப் பட வேண்டிய நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்படுவதால், அவரை நீக்கிவிட்டு புதிய வழக்கறிஞரை, அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப் பட்டது.
suran
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, கர்நாடக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையில், அரசு வழக்கறிஞர் பதவி யிலிருந்து பவானி சிங்கை நீக்கிவிட்டதாக, கர்நாடக மாநிலச் சட்டத் துறைச் செயலாளர் நாகராஜா 25-8-2013 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் """"ரிட்"" மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் சவுஹான் மற்றும் போப்படே ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, நீதிபதிகள், புதிய வழக்கறிஞரை நியமனம் செய்ய அனுமதி வழங்கியதுடன், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து, 7-9-2013 அன்று உத்தரவிட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங் அரசு சார்பாக ஆஜராக வலியுறுத்த வேண்டாம் என்று 10-9-2013 அன்று கர்நாடக அரசு கூறியது. 
அதை எதிர்த்து ஜெ. தரப்பில் மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் 11ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 
 கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதி மன்றம் ஏற்று, பவானி சிங் விசாரணையில் ஆஜராகக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதற்கிடையில் கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில், சொத்துக் குவிப்பு வழக்கி லிருந்து வக்கீல் பவானி சிங்கை கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒப்புதலோடு முறைப்படி நீக்கம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் புதிதாக இரண்டு மனுக்களை நேற்றையதினம் (18-9-2013) தாக்கல் செய்திருக்கிறார். 
அதாவது, தற்போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களே தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென்றும், புதிய நீதிபதியை நியமிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்றும், பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டுமென்றும் ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
நீதிபதி பாலகிருஷ்ணா அவர்கள் இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பு திரு. மல்லிகார்ஜுனய்யா அவர்களும், வேறு சிலரும் நீதிபதிகளாக இருந்த போது, அவர்களே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா, தற்போது மட்டும்
திரு. பாலகிருஷ்ணா அவர்களே தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பது ஏன்? அதுபோலவே அரசு வழக்கறிஞராக திரு. ஆச்சார்யா அவர்கள் பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டாமென்றும், தொடர்ந்து அந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்காதது ஏன்?
எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குற்றவாளியே தன்மீதான வழக்கை குறிப்பிட்ட நீதிபதிதான் தொடர்ந்து விசாரிக்க வேண்டு மென்றும், தனக்கு எதிராக வாதாடக்கூடிய அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட ஒருவரே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கும் விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------

பூமி ‘உயிர் வாழும்’ காலம்  தெரியுமா?

 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது.

suran
 ஆன்ட்ரூ ரஷ்பி கூறியது:  பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்கள் பல வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்கள் ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. காரணம், பூமி பற்றிய ஆய்வுகள் முடிவில்லாதவை. ஆனால், எங்கள் கண்டுபிடிப்புகள் பல கட்டங்களில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன.

எங்கள் முந்தைய கணிப்பு படி, பூமி இன்னும் 325 கோடி ஆண்டுகள் வரை ‘உயிர் வாழும்’ தகுதி படைத்ததாக இருக்கும் என்று தான் மதிப்பிட்டிருந்தோம். ஆனால், வானிலை மாற்றங்கள் கடுமையாக மாறி வருகின்றன; கடல் மட்டம் மாறி வருகிறது; கடல் நீர் அதிவேகமாக நீராவி ஆகி வருகிறது. இப்படி பல வகையான வானிலையில் மிக மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், பூமி ‘உயிர் வாழும்’ காலம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. அதாவது, எங்கள் இப்போதைய கணிப்பு 175 கோடி ஆண்டுகள் வரை பூமி ‘உயிர் வாழும்’ என்பது தான்.

ஆம், அதுவரை பூமியில், தண்ணீர் இருக்கும்; வெப்பம், மனிதர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும். அதன் பின், வெப்பம் மிகவும் கொடூரமாக இருக்கும்.
; மனிதர்கள் பொசுங்கி போவர்; ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் அதிர்ச்சி தரும் வகையில் கோடிக்கணக்கில் மடிந்தும் மறைந்தும் விடும்.  அதனால் மாற்று இடம் தேடி தான் மக்கள் போக வேண்டியிருக்கும். சூரிய மண்டலத்துக்கு வெளியே கிட்டத்தட்ட ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனிதர்கள் உட்பட உயிரினங்கள் உயிர் வாழ தகுதி இருக்கிறதா என்று ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.

 செவ்வாய் உட்பட எட்டு கிரகங்கள் தான் உயிரினங்கள் உயிர் வாழ, வானிலை உட்பட  எல்லா வகையிலும் அருமையாக இருக்கும். அதில் மனிதர்கள் குடியேறலாம். மனிதர்களுக்கு ஏற்ற வகையில் செவ்வாய் உட்பட இந்த கிரகங்களில் இயற்கை வளங்கள், வசதிகள் இருக்கும். இவ்வாறு ஆன்ட்ரூ ரஷ்பி கூறினார்.
suran
* சூரியனின் காலம் இன்னும் 600 கோடி ஆண்டுகள்.
* சூரியனை வைத்து தான் மற்ற கிரகங்கள் உயிர் வாழுகின்றன. அதாவது, பல வகையிலும் உயிர் வாழும் தகுதிகளை படைத்துள்ளன.
* அப்படி பார்த்தால் செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்.
* மேலும், பூமிக்கு வெகு அருகாமையில் உள்ளதும் செவ்வாய் தான்.
* பூமி போலவே, வானிலை அருமையாக இருக்கும்; தண்ணீர் போன்ற வசதிகள் இருக்குமாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

வியாழன், 19 செப்டம்பர், 2013

"அனைத்தையும் காணோம்?"

நிலக்கரி ஊழல் 
 முக்கியக் கோப்புகள் அனைத்தையும் காணோம்!
 
கோப்புகளுக்கு பதிலாக மீண்டும் பட்டியல்?


ரூ1.86 லட்சம் கோடி அளவிற்கு மக்கள் பணம் சூறையாடப்பட் டுள்ள நிலக்கரிப் படுகை ஊழல் விவகாரத்தில் பெரும் நிறுவனங்க ளின் மின் திட்டங்கள் தொடர் பான கோப்புகளும் மாயமாகியுள் ளன.
ரிலையன்ஸ்பவர், டாடா ஸ்பான்ஜ்அண்ட் அயர்ன், ரதி ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ஆகிவற்றிற்கான நிலக்கரி ஒதுக்கீடு குறித்த கோப்புகள் மாயமாகி இருப்பதால் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நிலக் கரிப் படுகைகள் தனியார் கம்பெனி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
suran
இந்த ஒதுக்கீட்டின் போது ரூ1.86 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ள தாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) நாடாளுமன்றத்தில் சமர்ப் பித்த அறிக்கையில் அரசுக்கு ஏற் பட்ட இந்த இழப்பு விவரம் குறிப் பிடப்பட்டிருந்தது. இந்த மெகா ஊழல் நடந்த போது, நிலக்கரித் துறை, பிரதமர் மன்மோகன் சிங் வசம் இருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்த ஊழல் வழக்கை மத்திய குற்றப்புலனாய்வுக்கழகம் (சி.பி.ஐ) விசாரணை செய்து வருகிறது. சிபி ஐயிலும் நிலக்கரித்துறை அமைச் சகம் மேற்படி ஒதுக்கீடு தொடர் பான குறிப்பிட்ட சில கோப்பு களை மட்டும் அளித்தது. இந்த கோப்புகளில் பெரும் நிறுவனங் களுக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாய மாகி இருந்த விவரம் வெளியான தும் அதிர்ச்சி ஏற்பட்டது.இதனால் ஆளும் அரசின் மீது மேலும் சந்தேகம் வலுத்தது. மாய மாகிப்போன கோப்புகள் எங்கே இருக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த வழக்குத்தொடர்பாக தேவைப்படும் கோப்புகளை 2 வார காலத்திற்குள் அளிக்க வேண் டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இந்த கெடுவைத் தொடர்ந்து நிலக்கரித்துறை அமைச்சகம் கோப்புகள் மற்றும் ஆவணங்களை அளித்தது.சிபிஐக்கு தர வேண்டிய கோப் புகள் பட்டியலை அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகனவதி செப் டம்பர் 2ம் தேதியன்று நிலக்கரி அமைச்சகத்திடம் அளித்தார்.
இதையடுத்து மாயமாகிப்போன கோப்புகளை கண்டுபிடிக்க கூடு தல் செயலாளர் (நிலக்கரித்துறை) மற்றும் எஸ்.கே.ஸ்ரீவத்சவா தலை மையிலான கமிட்டி அமைக்கப் பட்டது. இந்த குழு மாயமாகிப்போன கோப்புகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் நடத்தியது. உருக்கு மற் றும் மின்சாரம் மற்றும் பிரதமர் அலுவலகம் வரையிலான கோப்பு களைத் தேடும் பணி நடந்தது. மேலும் தொழிற்கொள்கை மற் றும் மேம்பாடு துறையிலும் தேடு தல் பணி நடைபெற்றது.
 மத்தியப்பிரதேசம் சாசன் நக ரில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு செய்தது தொடர் பான கோப்புகள் உள்பட முக்கிய கோப்புகளை சி.பி.ஐ கேட்டது.
எப்போது பெரு மின் திட்ட மான ரிலையன்ஸ் திட்டம் செயல் படுத்தப்பட்டது 3 படுகைகளில் எப்போது நிலக்கரி எடுக்கும் பணி துவங்கியது;
சாசன் மின் திட்டத் திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட படு கையில் இருந்து அதே மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித் ராங்கியில் உள்ள ரிலையன்ஸ் திட் டத்திற்கும் நிலக்கரி பயன்படுத்தப் பட்டது போன்ற விவரங்களை சிபிஐ கேட்டிருந்தது. ஆனால் இந்த கோப்புகள் மாயமாகி இருந்தன.
அதேபோன்று டாடா ஸ்பான்ஜ் அண்ட் அயர்ன் லிமிடெட்டிற் கான ராதிகாபூர் கிழக்கு நிலக்கரிப் படுகை மற்றும் எஸ்.சி.ஏ.டபிள்யூ நிறுவனத்திற்கான படுகை தொடர் பான கோப்புகளும் காணவில்லை.எம்ஆர் அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்திற்கு பந்தர் நிலக்கரி படு கையை ஒதுக்கீடு செய்தது தொடர் பாக காங்கிரஸ் எம்பி விஜய் தார்தா அளித்த பரிந்துரை தொடர்பான கோப் பும் காணாமல் போய் உள்ளது.
suran
நிலக்கரி ஊழல் வழக்கில் கோப் புகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத்தொடரில் மிகப்பெ ரும் பிரச்சனை எழுந்தது.
வேறு வழியின்றி நாடாளுமன்றத்திற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இன்னும் ஒரு வார காலத்திற் குள் எப்படியேனும் கோப்புகளை கண்டுபிடித்து தந்துவிடுவோம் என்று உறுதியளித்தார்.
 ஆனால்" பெரும் நிறுவனங்களின் முறை கேடுகள் சம்பந்தப்பட்டுள்ள கோப்புகள் அனைத்தையும் காண வில்லை" என்பது உறுதியாகியுள்ள நிலையில்,
மீண்டும் அதை உறு திப்படுத்தி காணாமல் போன கோப்புகளின் பட்டியலை புத னன்று நிலக்கரி அமைச்சகம் சிபி ஐக்கு அனுப்பியுள்ளது.
பிரதமர் கூறியபடி கோப்புகள் வரவில்லை; எந்தெந்த கோப்பு களை காணவில்லை என்று மீண் டும் பட்டியலே வந்திருப்பது சிபிஐ யை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 இதைத்தொடர்ந்து கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் சிபிஐ வசம் மனு அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அம லாக்கப்படவுள்ளது.
suran

புதன், 18 செப்டம்பர், 2013

"மண்ணில் புதைக்கப் படுகிறது."

மணற்கொள்ளையன் வைகுண்டராஜன்ஜெயா அரசு தாது மணற் கொள்ளை விவகாரத்தை கையாளும் விதம் மிக சூழ்ச்சி மிக்கதாய் -குற்றவாளிகளுக்கு பக்க பலமாய் இருக்கிறது.
லட்சம் கோடிகளில் மணற்கொள்ளை நடந்துள்ளது.விசாரணை குழுவும் மணற்கொள்ளை யை உறுதி செய்தே அறிக்கை அளித்துள்ளது.இதை 90%செய்த வைகுண்டராஜனை உள்ளே பி.ஆர்.பி.மாதிரி தள்ளாமல் வேறு இடங்களில் விசாரணை குழுவை ஆய்வு செய்ய சொல்லியும்-அதுவரை தாது மணற் சுரங்கங்களில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று மட்டுமே முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.இதில் இருந்தே மணற்கொள்ளை யை  அப்படி புதைமணலில் புதைத்து வைகுண்டராஜனை காப்பாற்றும் எண்ணம் பகிரங்கமாகியுள்ளது.
நில மோசடி வழக்குகளில் திமுகவினரை வெறும் ஆதாரமற்ற புகார்களை வாங்கிக்கொண்டே சிறையில் தள்ளியவர் கையும்-களவுமாக மாட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது கூட்டு களவாணித்தனத்தை தானே காட்டுகிறது.


"கார்னெட் என்பது கனசதுர உருவில் உள்ள உறுதியும் பளபளப்புமிக்க கனிமம்.  உறுதியான தரை அமைப்பதற்கும், கண்ணாடி – சலவைக்கல் முதலானவற்றைத் துண்டிப்பதற்கும், பளிங்குக் கற்களைப் பாலீஷ் செவதற்கும்,மோதிரம் முதலான அணிகலன்களில் முத்துக்களாகப் பதிக்கவும் கார்னெட் பயன்படுகிறது.
இல்மனைட் என்பது அரிதாகக் கிடைக்கும் கனிமம். பெயிண்ட், பிளாஸ்டிக் ஆலைகளிலும், உலைகளின் உள்கட்டமைப்பு, விளையாட்டு, மருந்து பொருட்கள் தயாரிப்பு ஆலைகளிலும் பயன்படுகின்றது.
ரூட்டைல் என்ற கனிமம் இலேசானதாக இருப்பினும் வைரத்தைவிட உறுதியானது. பெயிண்ட், பிளாஸ்டிக், அதிக உறுதி தேவைப்படும் கட்டுமானங்களில்வெல்டிங் செவதற்கான வெல்டிங் ராடுகள் தயாரிக்க, விண்வெளி உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் முதலானவற்றில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சிர்கான் என்பது கண்ணாடி போன்ற தோற்றம் கொண்ட உறுதியான கனிமம். வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. இதன் உறுதித் தன்மை காரணமாக பீங்கான் தரை ஓடுகள், பீங்கான் தட்டுகள் – கோப்பைகள் தயாரிப்பிலும், உருக்கு – வார்ப்பு தொழிற்சாலைகளிலும்  பயன்படுத்தப்படுகிறது."
suran
 தேரிக்காட்டு முதலைகள்
- அ.வ.பெல்லார்மின்

மணல் கொள்ளை நமக்கு பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரசு நிர்வாகமும், மாவட்ட ஆட்சியர்களும், பல்வேறு அரசுத் துறைகளும் நிர்வாணப்பட்டு நிற்கின்றன.
லட்சம் கோடி அளவிற்கு கனிம மணலை ஒரு தனியார் நிறுவனம் அபகரிக்கும் வரை இந்த நிர்வாகங்கள் என்ன செய்து கொண் டிருந்தன என்ற கேள்வியை எழுப்பி, விடை தேடினால் நம்முடைய நிர்வாக அமைப்பின் லட்சணம் தெரியும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி கடற்கரைப் பகுதிகளை ஆக்டோப ஸாக வளைத்து, எங்கெல்லாம் மணல் இருக்கிறதோ அங்கெல்லாம் ராட்சச இயந்திரங்களோடு அலையும் விவிமின ரல்ஸ் எனும் தனியார் நிறுவனம் தனி ராஜாங்கமே நடத்தி வருகிறது. இந்த நிறு வனம் செய்யாத சட்ட விரோத செயல்கள் எதுவும் இல்லை. அரசு, தனியார் நிலங் களை வளைப்பது, தர மறுப்போரை அடித்து துவைப்பது, வெடிகுண்டுகளை வீசி கலைப்பது, ரவுடி கூட்டத்தை சேர்த்து கலவரங்களை ஏற்படுத்துவது, அச்சுறுத்தியும் கணிசமாக எலும்பு துண்டுகளை வாரி வீசியும், சுயமரியாதை யற்ற அரசியல்வாதிகளை, அதிகாரிகளை அடிமைகளாக்குவது, சாதி-மத உணர்வு களை பயன்படுத்துவது என ஆயக்கலை கள் அனைத்தையும் நடத்தி வரும் இந்த நிறுவனம் அசுர பலம் கொண்டது.
கண் அசைவுக்கு அனைத்து துறைகளையும் கட்டி இழுக்கும் இந்த சர்வ வல்லமை இந்த நிறுவனத்திற்கு எப்படி வந்தது. அது ஒரு அபூர்வ கதை.அபூர்வ மணல்களாக சொல்லப்படும் இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட், சிலிமனைட், கார்னெட் மணல் வகைகள் இந்திய கடற்கரையில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் இல் மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோ சைட் ஆகியவை அணு ஆற்றலை உள்ளடக்கிய அதிமுக்கியமான மணல் வகைகள். இந்த அபூர்வப் பொருளை முத லில் கண்டுபிடித்து சொன்னவர் ஹெர்ஸ் கோம்பெர்க் என்ற ஜெர்மானியர்.

1900 காலக்கட்டத்தில் கன்னியாகுமரி, கேரள கடற்கரை பகுதிகளிலிருந்து ஏற்றுமதி யாகி போன கயிறு கட்டுகளோடு ஒட்டிக் கொண்டு போன பல நிற மணல் வகை களை ஆராய்ந்த அந்த வேதியியல் அறி ஞர் மோனோசைட் எனப்படும் அணு மூலப்பொருள் அதில் இருப்பதை கண்டு பிடித்தார். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 1910ல் இம்மண லை பிரித்தெடுப்பதற்கான ஒரு ஆலை யை துவங்கினார்.
 1950 ஆகஸ்ட் 18ல் இந்திய அரசும், அன்றைய கேரள திருவாங்கூர் கொச்சி அரசும் இணைந்த கூட்டு ஆலையாக, இந்திய அரிமணல் ஆலை ஒன்று கேரள மாநிலம் ஆலுவாயில் துவங்கப்பட்டது. அணுசக்தி மூலப்பொருளான தோரியத் தை, மோனோசைட் மணலிலிருந்து பெரிய அளவில் பிரித்தெடுக்கும் ஆலை யாக அது அமைக்கப்பட்டது.
suran
1963ல் இந்த ஆலை முழுவதும் மத் திய அரசின் நிறுவனமாக்கப்பட்டு, பிரத மரின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள அணு சக்தி துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. தமிழ்நாட்டில் மணவாளக்குறிச்சி, கேரளாவில் சவரா, ஆலுவா, ஒரிஸாவில் பெர்காம்பூர் பகுதிகளில் ஆலைகள் துவங் கப்பட்டு மணல் வகைகளை பிரித்து, வகைப்படுத்தி ஏற்றுமதிக்கானவை களை ஏற்றுமதி செய்தும், பயன்படுத்த வேண்டியதை பயன்படுத்தியும் கோடி கோடியாக லாபமீட்டி இந்திய அரசாங்கத் தின் கஜானாவை நிறைத்தன இந்த ஆலைகள். மட்டுமின்றி, நேரடியாக, மறை முகமாக பல்லாயிரம் வேலை வாய்ப்பு களை உருவாக்கி அந்தந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வந்தன. அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஆலைகள் என்பதால், மாசுக்கட்டுபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் அமலாக்கம், சுற்று வட்டார வளர்ச்சி திட் டங்கள் மணலை எடுத்த பகுதிகளில் கழிவு மணலை போட்டு நிரப்பி சமூக காடுகளை வளர்ப்பது என சமூக பொறுப்போடும், செயலாற்றி வருகின்றன.
தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகளை வரைமுறை இல் லாமல், கண்மூடித்தனமாக பின்பற்றத் துவங்கிய மத்திய ஆட்சியாளர்கள் 1998 அக்டோபர் 6ல் ஒரு விபரீதமான, பொறுப் பற்ற கொள்கை முடிவை எடுத்தனர். அபூர்வ தாதுக்களையும், சுரங்கங்களை யும் சிலர் அபகரிப்பதற்கு ஏதுவாக, இந்த இயற்கை பொக்கிஷங்களை தனியாரும் கையாளலாம், அந்நிய நேரடி முதலீட்டை யும் அனுமதிக்கலாம் என முடிவெடுத் தார்கள். மோனோசைட் போன்ற அணு சக்தி மூலப்பொருள் தவறானவர்களின் கையில் போனால் உலகிற்கு அதனால் ஏற்படும் ஆபத்துக்களை கூட கணக்கிலெடுக் காமல் முடிவெடுத்தது மட்டுமின்றி தங்கள் கூட்டாளிகளுக்காக சட்டங் களையும், விதிமுறைகளையும் கூட வளைத்தார்கள். பாரத பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டி லுள்ள அணுசக்தி துறை 2006 ஜனவரி 18ம்தேதி ஒரு சட்டப்பூர்வமற்ற அறிவிக் கையை வெளியிட்டது.
S.G.61(E) என எண் கொண்ட இந்த அறிவிக்கை இரண்டே நாளில் அரசிதழி லும் வெளி யிட்டப் பட்டது. நாடாளுமன்றத்தின் ஒப் புதலின்றி, சுரங்கம் மற்றும் கனிமப் பொருட்களின் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் 1957ல் எந்த திருத்தமும், செய் யப்படாமலேயே கனிமங்கள் குறித்த, மறுவரையறையை செய்து தனியார் கம்பெனிகள் கொள்ளையடிக்க இதன் மூலம் வகை செய்யப்பட்டது. இது முற்றி லும் நாடாளுமன்ற அவமதிப்பு, ஆக்கிர மிப்பு நடவடிக்கையாகும். இந்த அறிவிக் கையை ரத்து செய்ய வேண்டும். நாடாளு மன்றத்தின் உரிமை மீது ஆக்கிரமிப்பு செய்தோரை தண்டிக்க வேண்டும் என நேரில் சென்று துறை தலைவர்களை, அன்றைய அமைச்சர்களை இடது சாரிகள் வலியுறுத்தினோம். என்றாலும் பாதாளம் வரை பாயும் பணமும் பொறுப் பான நாற்காலிகளில் இருந்த பொருத்த மற்ற நபர்களும் அவைகளை கண்டு கொள்ளவில்லை.
இப்படி கதவுகள் அகலத் திறக்கப் பட்டதும், வாய்ப்பை எதிர்பார்த்து காத் திருந்த முதலைகள் அசுர பாய்ச்சலில் கடற்கரையை ஆக்கிரமிக்க துவங்கின. குவாரி நிலங்களை பெறுவதில், அதில் தாதுவை எடுப்பதில் பல விதி முறைகள் உணடு. பல துறைகளின் அனுமதியும் வேண்டும். ஆனால் விவிஎம்-க்கு அவை ஒரு பொருட்டாக இருக்கவில்லை. தனது சாகசங்களால் அனைத்தையும் வளைத்து, அனைவரையும் கவிழ்த்து, வளைய மறுத்தவர்களை துரத்தியடித்து அனுமதிகளை பெற்றது.
 பண்டித நேரு சொன்ன நாட்டின் திருக்கோயிலாம் பொதுத்துறை ஆலைக்கு அனுமதிகள் கிடப்பில் கிடந்த போது விவிஎம் கோப்பு கள் வேகமாக நகர்ந்து அனுமதிகளைப் பெற்றது. அனுமதிக்கப்பட்ட நிலங்களுக் கும் அளவுகளுக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் கடற்கரைகள் தனியார் கம்பெனியால் மொட்டையடிக்கப்பட்டன.
தொலைபார்வையற்ற, பதவி சுகங் களை மட்டுமே அனுபவித்த ஐஆர்இ-ன் சில அதிகாரிகளும், உள்ளுக்குள்ளேயே இருந்து தனியார் கம்பெனிக்காக வேலை செய்த சில எட்டப்பன் வகை அதிகாரி களும் தேவையான நிலங்களை கையகப் படுத்தி, அரசு ஆலையின் சுரங்க இருப் பை ஏற்கனவே வலுப்படுத்த தவறியிருந் தார்கள்.
இந்த பலவீனத்தை பயன் படுத்திக் கொண்டு ஐஆர்இ ஆலையை ஒட்டிய நிலங்களைக் கூட ஆக்கிரமித்தது விவிஎம்.
suran
 ஒரு கட்டத்தில் “உனது நிலங் கள் எல்லாம் கடலுக்குள் மூழ்கிவிட்டன”. இருக்கும் இடமெல்லாம் எனது சுரங்கம் என ஐஆர்இ-யே கடலுக்குள் தள்ள முயற்சித்தது. தனது பணபலத்தை, அதிகார பலத்தை தவறான அதிகாரி களின் கூட்டை பயன்படுத்தி ஐஆர்இ-ன் தலைமையையே அச்சுறுத்தியது. என்ன வேடிக்கை பாருங்கள்… தனது நிலத்தில் உள்ள மணலை ஐஆர்இ-ன் தலைமை அதிகாரியும் மற்றும் அதிகாரி களும் திருடியதாக 03-01-2003 கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தது விவிஎம். அந்த நகைப்புக்குரிய புகாரின் மீது கருங்கல் காவல் நிலையம் அதி வேகமாக எப்ஐஆர் பதிவு செய்து குற்ற எண் 4-2003ன் படி பல பிரிவுகளில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
பெரும் முயற்சிகளுக்கு பின்னர் அந்த எப்ஐஆர் அரசால் திரும்பப் பெறப்பட்டது, என்றால் காவல்துறை எந்த அளவுக்கு அடிமையாகி கிடந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படி பொதுத்துறை நிறுவனத் தையே உண்டு இல்லை என்றாக்கி, சிதம் பரத்தின் நலிந்த ஆலைகள் பட்டியலில் தள்ளி, அடிமாட்டு விலைக்கு அதையும் வாங்கி விடலாம் என கனவு கண்டது வி.வி.எம். ஆனால் அதிர்ஷ்டவசமாக 2004-2009 ஆட்சி காலத்தில் மத்தியில் இடது சாரிகள் வலுவாக இருந்ததாலும், நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வசம் இருந்ததாலும் அது அன்று தடுத்து நிறுத்தப்பட்டது. மாவட்டத்தின் ஒரே பொதுத்துறை ஆலை பாதுகாக்கப்பட்டது. மட்டுமன்றி ஆலை யை பலப்படுத்த புனரமைப்பு நிதி ரூபாய் 64 கோடி பெறப்பட்டு மத்திய இணை யமைச்சர் பிருதிவிராஜ்சவான் அவர் களால் 11-09-2006ல் புனரமைப்பு பணிக் கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. நாட்டின் நலனை விட நபர்களின் நலனே பெரிது எனக் கருதும் மத்திய ஆட்சி யாளர்கள் தற்போது அத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.
கடற்கரை பகுதி முழுவதும் இத் தாதுக்கள் இறைந்து கிடந்தாலும், கன்னி யாகுமரியின் மிடாலம் பகுதிகளில் அதன் தாது அடர்த்தி அதிகமாயிருந்தது.
இதை மோப்பம் பிடித்து விட்ட விவிஎம் அங்கே கடற்கரை நிலங்களை வாங்கி பிடித்தது. சிறு ஆலையும் அமைத்தது.
 இயல் பாகவே கடும் கடல் சீற்றமும் நில அரிப்பு களும் இருக்கும் இப்பகுதிகளில், இருக் கும் கரைகளையும் குடைந்து மணலை அள்ளி குவிக்க முயற்சியை துவங்கியது.
தங்கள் உயிரையும், வாழ்விடத்தையும் பாதுகாக்க முனைந்த மக்கள் இம்முயற் சியை எதித்தார்கள்.
எதிர்த்தவர்களை முறியடிக்க ஏராளமான வாகனங்களில் அடியாட்களையும், குண்டர்களையும் கொண்டு இறக்கி பலாத்காரமாக மண லை அள்ள முயற்சித்தபோது, மேற்படி கூலிப்படைகளுக்கும், பொதுமக்களுக் கும் இடையே ஒரு யுத்தமே நடந்து முடிந்தது.
ஓட்டுமொத்த கிராமங்களும் ஒன்றாக நின்று எதிர்த்ததால் விவிஎம் பின்வாங்கியது.
தோல்வி ஆவேசத்தில் காவல்துறையை பயன்படுத்தி அம்மக் களை பழிவாங்க துடித்தது. மேல் மிடாலம், கீழ்மிடாலம், குறும்பனை கிராம மக்கள் மீது அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் கருங்கல் காவல் நிலையத்தால் பதிவு செய்யப்பட்டன.
suran
ஆனால் இடதுசாரிகள் அம்மக்களோடு இணைந்து நின்றதால் அண்ணாச்சியின் முயற்சி வெற்றி பெற வில்லை.
நூறு விழுக்காடு கல்வியறிவும், போர்குணமும் மிக்க கன்னியாகுமரி மாவட்டத்திலேயே இப்படியெல்லாம் அண்ணாச்சி ஆட்டம் போட்டாரென்றால் மற்ற பகுதிகளைப் பற்றி சொல்லவா வேண்டும்?. புகுந்து விளையாடிவிட் டார்கள். வந்து கொண்டிருக்கும் புள்ளி விபரங்கள் வாயை பிளக்க வைக்கின்றன.
 லட்சம் கோடி வரை தாதுக்கள் கொள்ளை யிடப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் இல்மனைட் ரூ.11800, சிர்கான் ரூ.75000, ரூட்டைல் ரூ.80000, கார்னெட் ரூ.5600, மோனோசைட் ரூ.5லட்சம் என டன் னுக்கு விலை போகிறது.
இதில் மோனோ சைட் என்ற அணு மூலகத்தை தனியார் கையாளக் கூடாது, பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் மோனோசைட் மணலை அரசு துறை ஆலையிடம் தந்து விட வேண்டும் என விதி இருக்கிறது.
ஆனால் இன்றுவரை ஒரு பொடி மோனோசைட் மணலை கூட விவிஎம் அரசிடம் ஒப்படைக்கவில்லை என்றால் ஆபத்து புரிகிறதா?
 ஆந்த அணு மூலகம் எங்கே போனது?
யாருக்கு போனது?
கண்காணிக்க வேண்டியவர்கள் எங்கே போனார்கள்?
 என்பதெல்லாம் அணு குண்டு கேள்விகள்.
இப்படியெல்லாம் ஏற்றுமதி செய்து தூத்துக்குடி துறை முகத்தில் பெரிய ஏற்றுமதியாளராகவும் வைகுண்டராஜன் விளங்கினார். இந்த பிரச்சனையில் இன்னொரு கோணமும் இருக்கிறது. விவிஎம் போன்ற மோசடி கம்பெனிகளுக்கு ஆஸ்தான ஆலோசகர்களாக, தொழில்நுட்ப, வியா பார உதவியாளர்களாக இருப்பவர்கள் ஐஆர்இ-ல் பணியாற்றி ஓய்வு பெற்ற சில நபர்கள்.

suran
 வாழ்நாள் முழுவதும் பொதுத் துறை நிறுவனமான ஐஆர்இ-ல் சம்பளம் பெற்று சுகவாழ்க்கை வாழ்ந்து விட்டு, தாதுக்களை கையாளுவது குறித்த அனைத்து பயிற்சிகளையும் அரசு சார்பில் பெற்று, அனைத்து தொழில்நுட்பங்களை யும், வியாபார ஏற்றுமதி ரகசியங்களையும் தெரிந்த இந்த அதிகாரிகள்; ஓய்வுக்கு பின்னர் (ஓய்வுக்கு முன்னரே இவர் களுக்கும் விவிஎம்-க்கும் உள்ள தொடர்பு கூட ஆராயப்பட வேண்டும்) விவிஎம்-மோடு சேர்ந்து, “உண்ட வீட்டுக்கு இரண் டகம் செய்பவர்களாக” மாறி சுய ஆதாயத் திற்காக ஆலையின் பலவீனம், தொழில் ரகசியங்களை, விலை விபரங்களை, வாடிக்கையாளர்கள் விபரங்களை எல் லாம் கொடுத்து பொதுத்துறை ஆலை யினை வீழ்த்தும் பாவச்செயலை செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் பொதுத் துறை ஆலையில் பணியிலிருக்கும் போதே, தாங்கள் நெருங்கிய உறவினர்கள் மூலமாக இது போன்ற தொழில் ரகசியங் களை பகிர்ந்து வருகின்றனர்.
இது மக் களுக்கும், நாட்டிற்கும் செய்யும் பெரும் துரோகமாகும். இப்படிப்பட்ட, காசுக்காக எதையும் செய்யும் நபர்களுக்கு வழங்கப் பட்ட சம்பளம், இதர சலுகைகள், தற் போது பெற்று வரும் சலுகைகள் எல்லா வற்றையும் அரசு திரும்ப பெற வேண்டும்.
                                                                                          கட்டுரையாளர் : நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தற்போது ஜெயா அரசு தூத்துக்குடியைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுக்க ‘தடை’ விதித்துள்ளது.

எனினும் துத்துக்குடி தவிர இதர மாவட்டங்களில் சிறப்புக் குழு ஆய்வு எடுக்கும் வரை தடை இருக்குமாம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம் போட்ட இடைக்காலத் தடை குறுகிய காலத்திலேயே நீர்த்துப் போய் அந்த ஆலை தற்போது சுமூகமாக இயங்கி வருவது தெரிந்ததே.

மதுரை பிஆர்பி கிரானைட் ஊழலும் இத்தகைய தடை என்னும் நாடகத்தால் மறைக்கப்பட்டதை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். வைகுண்டராஜன் கொள்ளை முழுவதும் அம்பலப்பட்ட பிறகு அவர் மீது தடை என்பது வேறு வழியின்றி செய்யப்படும் நாடகம்.

முக்கியமாக அதிமுகவின் தேர்தல் செலவு, ஜெயா டிவியின் பங்குதாரர் என்ற அளவில் அவரது முக்கியத்துவம் எவ்வாறு இருக்கும் என்பதை  அறியலாம்.!"
ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற, திறமையான, நேர்மையான நிர்வாகம் நடப்பதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவதாகவும் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கும் சித்திரம் எவ்வளவு மோசடியானது என்பதை கார்னெட் மணற்கொள்ளை விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டி விட்டது.
வைகுண்டராஜனின் சூறையாடல்
வைகுண்டராஜன் கும்பலின் சூறையாடல் : இயற்கை அரணாக இருந்த மணற் குன்றுகளும், சவுக்கு மரங்களும் அழிக்கப்பட்டு தீவிரமாகி வரும் கடல் அரிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரை முழுவதையும் கையில் வைத்துக் கொண்டு கார்னெட் மணல் ஏற்றுமதி செய்யும் தொழிலில் உலக அளவில் இரண்டாம் இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் இருந்து வருகிறார், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வைகுண்டராஜன். ‘அம்மா’வின் ஆதரவோடு தொழில் நடத்திவரும் அவர், ஜெயா டி.வி.யின் பங்குதாரராக உள்ளதோடு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ‘அம்மா’வுக்குப் பெரிதும் உதவியாக நின்றதை அனைவரும் அறிவர். அப்பேர்ப்பட்ட கோடீசுவர வைகுண்டராஜனின் நிறுவனம், அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டிச் சட்டவிரோதமாகத்  தாது மணலை அள்ளி ஏற்றுமதி செய்துள்ளதா என்று ஆய்வு செய்ய கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி உத்தரவிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் குமார், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வைகுண்டராஜன் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் தனி அரசாங்கமே நடத்தி வருகிறார் என்பது நாடறிந்த உண்மை. கடற்கரைப் பகுதியிலுள்ள செந்நிற மணலில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் முதலான விலைமதிப்பற்ற அரிய கனிமங் கள் கிடைக்கின்றன. மணலிலிருந்து அவற்றைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் வைகுண்டராஜனின் தொழில். இந்திய சுரங்கக் கழகம் அனுமதி அளித்துள்ள 111 கார்னெட் மணல் குவாரிகளில் 96 அவருக்கும் அவரது பினாமிகளுக்கும் சோந்தமானது. மைய அரசால் அனுமதி தரப்பட்டுள்ள 44  இல்மனைட் குவாரிகள் அனைத்தும் அவருக்கே சொந்தமானது. மைய அரசின் சுற்றுச்சூழல் துறை, மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலோரப் பாதுகாப்புச் சட்டம், வனத்துறை – எனப் பல்வேறு துறைகளின் விதிகள், கட்டுப்பாடுகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, கடற்கரையையும் அதையொட்டியுள்ள பகுதிகளையும்  தனது பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமித்து தாதுமணல் கொள்ளையை இக்கும்பல் நடத்தி வருகிறது.
தாது மணலிலுள்ள கனிமங்களைச் சேகரிக்கும், பிரிக்கும் நடவடிக்கைகளால் கதிரியக்கம் அதிகமாகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஏற்கெனவே குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அரசின் அருமணல் தொழிற்சாலைகளில் பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் இருந்த போதும், சுற்றுப்புற கிராமங்களில் ஏறத்தாழ 500 பேருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆனால் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல், விளைவுகளைப் பற்றிய அக்கறையும்  இல்லாமல், ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளனைப் போல வைகுண்டராஜன் கும்பல் இச்சூறையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது.
தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையாகவே அமைந்திருந்த மணல் குன்றுகள் இக்கும்பலின் சூறையாடலில் தரைமட்டமாகி விட்டன. இதனால் பல ஊர்களில் கடல் நீர் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி, குடிநீருக்காக மக்கள் தவிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகளால் நடப்பட்ட ஆயிரமாயிரம் சவுக்கு மரங்களும், இயற்கையின் கொடையாகக் கருதப்படும் கடலோர அடையாளச் சின்னங்களாக நின்றிருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. கடலோர மணலிலிருந்து தாதுப் பொருட்களைப் பிரித்தெடுத்த பிறகு, கழிவு நீரையும் மணலையும் அதே பகுதியில் கொட்டுவதால், பல இடங்களில் கடல் நீரின் நிறமே சிவப்பாக மாறி விட்டது. கடலையொட்டி அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதால் மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது.
கழிவுகளால் நாசமான கடலோரம்
தாது மணலிலிருந்து கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் வெளியேற்றப்படும் கழிவுகளால் நாசமாக்கப்பட்ட கடலோரப் பகுதி
தான் சார்ந்துள்ள நாடார் சாதியினரைச் சமூக அடித்தளமாகப் பயன்படுத்திக் கொண்டும், எல்லா ஊர்களிலும் பிழைப்புவாதிகளைக் கையாட்களாகக் கொண்டும் வைகுண்டராஜன் தனது மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். இச்சூறையாடலை யாராவது எதிர்த்தால் அடுத்த நிமிடமே வைகுண்டராஜனின் அடியாட்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குவதோடு, வீடுகளின் மீது வெடிகுண்டுகளை வீசுவதும் நடந்துள்ளன. இதனால் உயிருக்கு அஞ்சி பல குடும்பங்கள் ஊரை விட்டே ஓடி விட்டன. பண பலம், சாதிய பலம், அதிகார பலத்தைக் கொண்டு சூறையாடலை நடத்தி வந்த கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி. கும்பலைப் போலவே,  அதையும் விஞ்சும் வகையில் தாது மணற் கொள்ளையன்  வைகுண்டராஜன் கும்பலின் ஆட்சி கேள்வி முறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தனி மாவட்டமாகப் பிரிக்கப்படாமல் நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடியும் இருந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரம், வைகுண்டராஜனுக்குப் போட்டியாக கார்னெட் மணல் அள்ளும் தொழிலில் உள்ள தயா தேவதாஸ் என்பவரது நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். வைகுண்டராஜனின் கொள்ளைக்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதைப் பற்றியும், சட்டவிரோதமாக அள்ளப்பட்டுள்ள கனிம வளமிக்க மணலின் மதிப்பு உத்தேசமாக ரூ. 96,120 கோடிகளாக இருக்கும் என்றும் கடந்த ஜனவரி 2013-ல் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தொழில் போட்டியின் காரணமாக வைகுண்டராஜனின் கொள்ளையையும் மோசடிகளையும் அவர் அம்பலப்படுத்தியுள்ள போதிலும், அவரது குற்றச்சாட்டுகள் மறுக்க முடியாதவை. மேலும், சமூக ஆர்வலர்களும் இப்பகுதிவாழ் மீனவர்களும் வைகுண்டராஜனின் சூறையாடலையும் அடாவடிகளையும் பற்றி அரசுக்குப் பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.
இத்தகைய புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டும் நோக்கத்தில் கண்துடைப்பு விசாரணை, ஆய்வு  நடத்துவதென்பது வழக்கமான அதிகார வர்க்கச் சடங்கு. அதன்படியே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷிஸ் குமார் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேம்பார் பகுதியில் ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்பியதோடு,  அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்த கணக்கீட்டிற்கு உத்தரவிட்டதும் அடுத்த நாளே அவர் பணிமாற்றம் செயப்பட்டுள்ளார்.
மணற்கொள்ளையால் வெடித்த நிலம்
தாது மணற்கொள்ளையால் நாசமாகி வெடித்துக் கிடக்கும் நிலம்
மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றப்பட்ட விவகாரம், தனது ஆட்சியின் மீதான அதிருப்தியாக மாறிவிடாதிருக்க,  தாது மணற்கொள்ளை குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்துத் தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொள்கிறது ஜெயா கும்பல். ஆனால், வைகுண்டராஜனுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்துக் கொள்ளையடிக்கக் கற்றுக் கொடுத்தவர்களே இத்தகைய அதிகார வர்க்கக் கூட்டம்தான்.  கடந்த பல ஆண்டுகளாக இந்த ஊழல் கொள்ளையின் பங்காளிகளாக இருந்த அதிகார வர்க்கத்தைக் கொண்டே இப்போது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப் போவதாக நாடகமாடுகிறது ஜெயா கும்பல். ஜெயலலிதா அமைத்துள்ள அதிகாரிகளின் சிறப்புக் குழுவைப் பற்றி எழுதிய கருணாநிதி, ”அந்தக் குழுவுக்குத் தலைவராக வைகுண்டராஜன் என்பவரை நியமிக்கலாம் என்று நம்முடைய ஆபீஸ் பையன் சிபாரிசு செய்கிறான்” என்று எள்ளி நகையாடுகிறார். இருப்பினும், ”ஜெயா கண் சிவந்தார், அ.தி.மு.க.வினர் உடந்தையாக இருப்பதை அறிந்ததும் அதிர்ந்தார்” என்று ஏதோ ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் தாது மணற்கொள்ளை நடந்திருப்பதைப் போலவும், அவர் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதைப் போலவும் பார்ப்பன ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன.
தனியார்மயம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே அரசிடம் குறிப்பிட்ட இடத்தில் தாதுமணல் அள்ள உரிமம் பெற்றுக் கொண்டு, அதைக் காட்டியே வைகுண்டராஜனின் நிறுவனம் பல இடங்களில் சட்டவிரோதமாகத் தாதுமணலைச் சூறையாடி வந்தது. மறுபுறம், 2002-ஆம் ஆண்டிலேயே அன்றைய ஜெயா அரசாங்கத்துக்கும் டாடா நிறுவனத்துக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.
அதன்படி  சாத்தான்குளம், திசையன்விளை முதலான செந்நிற மணல் மிகுந்த தேரிக்காடுகளில் என்னென்ன அரிய உலோகங்கள் உள்ளன என்பதற்கான சோதனைகளை செய்து முடித்திருந்த டாடா நிறுவனம், தேரிக்காட்டில் கிடைக்கும் இல்மனைட் மணலைப் பிரித்தெடுத்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாரித்து, அதிலிருந்து டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஆலை தொடங்குவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருந்தது.
 ஆண்டுக்கு 2 லட்சம் டன் இல்மனைட் தாதுவைப் பிரித்து 50 ஆயிரம் டன் தாதுவை டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கப் பயன்படுத்திவிட்டு, மீதி 1.5 லட்சம் டன் தாதுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய டாடா தீர்மானித்தது.
ஆனால், ஜெயா கும்பலுக்கும் டாடா நிறுவனத்துக்குமிடையே திரைமறைவு பேரங்களில் உடன்பாடு ஏற்படாததால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
suran
 நாட்டின் அரிய கனிமங்கள் டாடா நிறுவனத்தின் மூலம் வெளிநாடு செல்வதைத் தடுக்க இத்திட்டம் கைவிடப்பட்டது என்று அறிவித்தார், அப்போதைய அமைச்சரான நயினார் நாகேந்திரன். வைகுண்டராஜன் கும்பலோ வழக்கம்போலவே தனது சூறையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
பின்னர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் டாடாவுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் 2007 ஜூன் மாதத்தில் போடப்பட்டது. இதன்படி, தாது மணல் நிறைந்த 10,500 ஏக்கர் நிலத்தை அரசே கையகப்படுத்தி டாடா நிறுவனத்துக்கு வழங்குவதென்றும், நிலம் வழங்கியவர்களுக்கு டாடாவின் டைட்டானியம் ஆலையில் வேலை கொடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கெதிராக, தென்மாவட்ட கடலோரப் பகுதிவாழ் மக்களின் விவசாய நிலங்களைப் பறித்து டாடாவுக்குத் தாரை வார்க்கும் திட்டம்தான் இது என்று ஜெயா கும்பலும், அதன் கூட்டணிக் கட்சிகளும், வைகுண்டராஜன் வகையறாக்களும் போராட்டங்களை நடத்தத் தொடங்கின. இதனால், மக்களின் கருத்தறிந்த பின்னரே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று தி.மு.க. அரசு பின்வாங்கியது.
டாடா நிறுவனமும் இத்திட்டத்திலிருந்து விலகிக் கொண்டது.
 வைகுண்டராஜன் கும்பலோ கேள்வி முறையின்றி சூறையாடலைத் தொடர்ந்தது. ”கார்னெட் கனிமத்தைத் திருட்டுத்தனமாக எடுத்து, சட்டவிரோதமாக நாட்டு நலனுக்கு எதிராகக் கடத்தி விற்பனை செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் ஒரு‘தாதா’வுடன் ஜெயலலிதா செய்து கொண்ட ஒப்பந்தமே, இத்திட்டத்தை ஜெயலலிதா எதிர்ப்பதற்குக் காரணம்” என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார் அன்று முதல்வராக இருந்த கருணாநிதி.
suran
ஆனாலும் அந்த தாதாவைக் கைது செய்து தண்டிக்கவோ, தாது மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்தவோ அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வளவுக்கும் பின்னர், கார்னெட் மணல் கொள்ளை பற்றி இப்போதுதான் தெரிய வந்துள்ளதைப் போல ஜெயா அரசு ஆய்வுக் குழுவை அமைத்து சோதனை நடத்துவதே அயோக்கியத்தனமானது.
இன்று நேற்றல்ல, பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இப்பகற்கொள்ளை பற்றி பல்வேறு தரப்பினரும் அரசிடம் முறையிட்டுள்ள போதிலும்,  தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல நிறுவனங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கும் போது, வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு 72 நாட்களில் அனுமதி தரப்பட்டுள்ள முறைகேட்டையும், அந்நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்பாடுகளையும்  அம்பலப்படுத்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரம், வைகுண்டராஜனை ”மணல் மாஃபியா” என்று வெளிப்படையாகச் சாடுவதோடு, அவரது அரசியல் சார்புதான் அவரைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார். 
பாபா அணு ஆராச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் சி.எஸ்.பி. அய்யர் என்பவர், ”இந்திய கனிமவளக் கழகம் மற்றும் அணுசக்தித் துறை உயரதிகாரிகள் இத்தகைய தனியார் நிறுவனங்களின் ஆலோசகர்களாக இருப்பதோடு, அரசாங்கம் தரும் சம்பளத்தைவிடப் பத்து மடங்கு அதிகமான சம்பளத்தை இந்நிறுவனங்களிடமிருந்து பெறுகிறார்கள்” என்கிறார்.
இப்பூமியிலுள்ள கனிம வளங்கள் அரசுக்கு – அதாவது சமுதாயத்துக்குச் சொந்தமானது என்பது நேற்று வரை இருந்த பொது நியதி. ஆனால் அரிய வகைக் கனிமங்கள் குறித்த விதிகள், தனியார்மயமாக்கலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டன. கனிம வளமிக்க பகுதிகளை விலைக்கு வாங்கியோ, குத்தகைக்கு எடுத்தோ கார்னெட் மணலைப் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்வது தனியார்மயத்தின் கீழ் சட்டபூர்வ நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டது. ஏற்கெனவே சட்டவிரோதமாக தாது மணற்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வைகுண்ட ராஜன் கும்பல், இதைச் சாதகமாக்கிக் கொண்டு இச்சூறையாடலைப் பல மடங்கு விரிவாக்கியுள்ளதோடு, திடீர் பணக்கார கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்து கொட்டமடிக்கிறது.
வைகுண்டராஜனின்  நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி தாதுமணலை அள்ளியுள்ளதா?
அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமாக அள்ளப்பட்டுள்ளதா? முறைகேடுகள் நடந்துள்ளதா – என்பதுதான் இப்போது நடக்கும் ஆய்வும் விசாரணையும். அனுமதி பெறாத இடத்தில் நடந்துள்ள சூறையாடல்களைப் பற்றியோ, சட்டவிரோத கடத்தல் பற்றியோ எவ்வித விசாரணையுமில்லை.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில்தான் வைகுண்டராஜன் கும்பல் மிகப் பெரிய சூறையாடலை நடத்தியுள்ளது. ஆனாலும் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நடந்துவரும் சூறையாடலைப் பற்றி எந்த விசாரணையும் இல்லை.
இருப்பினும், தூத்துக்குடியில் இந்த சிறப்பு ஆய்வுக் குழு கறாராக விசாரணை நடத்துவதாகவும், பல பகுதிகளில் திடீரென ஆய்வு நடத்துவதாகவும் ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன. கார்னெட் மணல் உள்ளிட்டு, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நாட்டின் பொதுச் சோத்துக்களை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்ற மையமான கேள்வியை விட்டுவிட்டு, அதில் அம்பலமாகும் ஊழல் – முறைகேடுகளை மட்டும் பெரிதாக்கிக் காட்டியும், அரசு நடவடிக்கை எடுப்பதாகப் பரபரப்பூட்டியும் மக்களைத் திசை திருப்பும் பணியைத்தான் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் எனும் மாஃபியா கும்பல் இரும்புக் கனிமங்களைச் சூறையாடியதைப் போலவே, மதுரையில் மலைக்கள்ளன் பி.ஆர். பி. கும்பல் கிரானைட் கொள்ளையை நடத்தியதைப் போலவே, மண்ணாதி மன்னன் வைகுண்டராஜன் கும்பல் தாதுமணற் கொள்ளையை நடத்தி வந்துள்ளது. பொதுச் சொத்தான கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் இத்தகைய மாஃபியாக்களின் – கார்ப்பரேட் முதலாளிகளின் தனிச்சொத்தாக மாற்றும் தனியார்மயக் கொள்கைதான் இத்தகைய ஊழல்கள் அனைத்துக்கும் அடிப்படை.
தனியார்மயம்  என்பதே ஊழல்மயம்தான். ஊழலற்ற தனியார்மயம் என்பதே இல்லை. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டு போராடுவதன் மூலமே வைகுண்டராஜன் வகையறாக்களையும், இக்கிரிமினல் மாஃபியாக்களின் கூட்டாளிகளான ஆட்சியாளர்களையும் தண்டிக்க முடியும்; தனியார்மயக் கொள்ளையைத் தடுத்து நிறுத்திடவும் முடியும்.
                                                                                                                                             - -வினவு                                                                                                                             - மனோகரன். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
\