தனியே தமிழ் "திரையுலக 100 விழா "?
இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி:
" சமீபத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழா வில் ஆந்திரா, தெலுங்கு, மலையாளம், கன்னட கலைஞர்களுக்கு மொத்தமாக அழைப்பிதழ் கொடுத்தார்கள்.
அவர்கள் தங்கள் கலைஞர்களுக்கு அதனை வணங்கி அனைவரையும பங்கேற்கச் செய்தார்கள்.
ஆனால் தமிழ் கலைஞர் களுக்கென்று தனி அழைப்பு இல்லை. அதனால் பெரும்பாலானோர் பங்கேற்க முடியவில்லை. திரைப்பட வர்த்தக சபை ஒன்றை தனியாக அமைக்க வேண்டும் என்று கூறிவந்தோம். அதன் அவசியத்தை சமீபத்திய விழாவில் உணர்ந்திருக்கிறோம்., இது யாருக்கும் எதிரானதல்ல. நமக்கு தேவையானது. "
இயக்குனர் பார்த்திபன்:
"எங்கள் மண்ணின் இயக்குனர் பாரதிராஜா ஒரு ஞானகிறுக்கன். சினிமாவை தவிர அவருக்கு வேறெதுவும் தெரியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அவரை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவித்திருக்க வேண்டும். செய்யவில்லை. நம் மண்ணின் கலைஞனுக்கு நாமே விருது கொடுத்து கவுரவிப்போம்."
இயக்குனர் பாரதிராஜா:
"எனக்கு அழைப்பு அனுப்பவில்லை,
கவுரவிக்கவில்லை என்று இங்கு வருத்தப்பட்டார்கள்.
தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பில்லையே என்ன செய்ய முடியும். 18 வருடங்களுக்கு முன்பு இருந்தே தமிழ் சினிமாவுக்கென்று தனி அமைப்புகள் வேண்டும் என்று கூறிவருகிறேன். அப்படி இருந்திருந்தால் அழைப்புகள் வீடு தேடி வந்திருக்கும். மொழிவாரி மாநிலம் பிரிந்த உடனேயே தமிழ் சினிமா தனி அமைப்புகள் கண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும்தான் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய தொழிலாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலைமையால் தமிழ் சினிமா அநாதையாக இருக்கிறது. சினிமாவுக்கென்று தனி அமைப்புகள் வந்தால்தான் சுய அதிகாரமும் நமக்கு கவுரவமும் கிடைக்கும்."
ஜெயா அரசு நடத்திய சினிமா 100 ஆண்டுகள் கொண்டாட்டம் என்ன ஆக்கத்தில் நடந்து முடிந்துள்ளது .
கிராமங்களுக்கு சினிமாவை கொண்டு சென்று தடத்தையே புரட்டிப் போட்ட பாரதி ராஜாவுக்கு அழைப்பே இல்லையாம்.காரணம் அவரின் முதல் மரியாதை தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதால்தான் .
எல்லா பக்கமும் தமிழ்த்திரையுலகில் எழுந்துள்ள குழப்பத்தில் புதிதாக தமிழ் திரையுலகத்தினர் சினிமா 100 விழா ஒன்றை தனியே முறையாக எற்பாடு செய்வதுதான் ஜெயா சினிமா விழாவின் அலங்க்கோலங்களுக்கு சரியான மாற்றாக அமையும்.அதை விட்டு,விட்டு மேடைதோறும் அழையா புராணம் பாடுவது சரியான மாற்றாக அமையாது.
சினிமா 100 விழாவை திரைப்படக்கலைஞர்கள் கொண்டாடுவதுதானே சரி!.அரசு விழா வெறும் முதல்வர் சிங்கி விழாவாகத்தானே அமையும்.?
------------------------------------------------------------------------------------------------------------
இதய தினம் இன்று.!

உலகில் இதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
இது 2030ல் 2 கோடியே 30 லட்சமாக உயரும் எனவும் உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 80 சதவீத மாரடைப்புகள், தடுக்கக் கூடியவை. இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்டம்பர் கடைசி ஞாயிறு (செப்., 29) உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இரவுப் பணி, முறையற்ற உணவு பழக்கம், அதிக நேர பணி, குடும்பத்தில் நிம்மதியின்மை போன்றவை இதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன.
உ லகில் மாரடைப்பால் இறப்பவர்களில், 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
புகை பிடிப்பதால் இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்பவர்கள், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன் ஆதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இதய நோய் ஏற்படலாம்.
சர்க்கரை நோயால் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.
* உப்பு அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.
* யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இதய நோயிலிருந்து பாதுகாக்கும்.
* முடிந்தளவு "எஸ்கலேட்டர்',"லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும்.
ஒ ரு நாளுக்கு சராசரியாக, 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
* காய்கறிகள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.
* சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, இதய நோயிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மருந்து.
இதயத்திற்கு இதம் தரும் உணவுகள், மலர்களை பார்க்கும் போதும், மழலைகளைப் பார்க்கும் போதும், மனதும், முகமும் சிரிக்கும்.புகையாலும், மதுவாலும், எண்ணெய் உணவாலும் வலியால் துடிக்கிறது.
"அட்ரினலின், தைராக்ஸின்' ஹார்மோன்களால், கெட்ட கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், ரத்தக் குழாய் சுருக்கம் போன்றவற்றால், இதயம் சற்று பாதிக்கப்படுகிறது. தினம் ஒருவேளை, 30 கிராம் தயிர் சாப்பிடுவது நல்லது. பாலில் உள்ள சத்துக்களை விட, தயிரில் அதிக சத்துக்கள் உள்ளன.
சிவப்பு நிற பசலை, பொன்னாங்கன்னி, கரிசாலை, தண்டுக்கீரை, பீட்ரூட், கேரட் ஆகியவற்றில், இதயத்தை பாதுகாக்கும், "ஆன்தோசயனின்கள்' உள்ளன. இவை, இதயத்திற்கும், ரத்தக் குழாய்களுக்கும் இடையே உராய்வு அழுத்தத்தை, குறைத்து மென்மைப்படுத்துகின்றன. குறைந்த தண்ணீரில் அவித்த சோளம், கொள்ளு இரண்டும், ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன.
சிவப்பு சோயா, பாதாம், பிஸ்தா, சாரைப்பருப்பு, வெந்தயம், பட்டாணி, மீன்களில் உள்ள, "ஒமேகா 3 அமிலம்', கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
தக்காளி, வெண்டைக்காயை அதிகம் வேக வைக்கக் கூடாது. பச்சையாக சாப்பிடுவது இன்னும் நல்லது. இவற்றிலுள்ள, "லைக்கோபின்கள்' பித்தநீருடன் வினைபுரிந்து, கெட்ட கொழுப்பு உருவாவதை தடுக்கின்றன. ஆப்பிள், ஸ்ட்ரா பெர்ரி, ஆப்ரிகாட், முலாம்பழம், கிவி, மாதுளை, எலுமிச்சை, ஆரஞ்சு, புளு பெர்ரி சாப்பிட்டால், நுண்ணிய ரத்தக் குழாய்களில் நைட்ரஜன் ஆக்ஸைடு அதிகரித்து, ரத்தக் குழாய் விரிவடைகிறது. இதனால் அடைப்பு மற்றும் சுருக்கம் தவிர்க்கப்படுகிறது.
இதிலுள்ள "பீட்டா கரோட்டின், விட்டமின் இ' இரண்டும், இதயத்தை பாதுகாக்கின்றன.பப்பாளி, பிளம்சில் உள்ள, மெக்னீசியம், பொட்டாசியம் இரண்டும், ரத்தத்தில் சோடியம் அதிகரிக்காமல் தடுத்து, இயல்பான நிலைக்கு கொண்டு வருகின்றன. இதிலுள்ள, "விட்டமின் ஏ' செல், அழிவை தடுக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரித்து வயிறு, இடுப்பு, தொடைப்பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, இருதயத்திற்கு தேவையற்ற சுமையை தவிர்க்கின்றன.
சிறுமலை வாழை, ரஸ்தாளியும் இதய தசைக்கு ஏற்றது.
முளைவிட்ட தானியங்கள், பார்லி, ஓட்ஸ், மட்டை அவல், சிவப்பு அரிசி, கோதுமை, ஆலிவ் எண்ணெய், கொழுப்பு நீக்கப்பட்ட பால், முட்டை வெள்ளைக்கரு, அதிக எடையுள்ள மீன்கள், தோலுரித்து, கொழுப்பு நீக்கப்பட்ட கோழி, சோயா சார்ந்த உணவுகள், குடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.
வெள்ளைநிற அரிசி, ரவை, மைதா, சீனி, உப்பை குறைத்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு மாதமும், சமையல் எண்ணெய் மாற்றி பயன்படுத்த வேண்டும்.
கோபம், கவலை, மனஅழுத்தம், பயத்தாலும் இருதயம் பாதிக்கப்படும். தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா, எளிய உடற்பயிற்சிகளால் இதயத்தை பாதுகாப்போம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------