வியாழன், 25 ஜூன், 2020

நிர்வாக திறமையற்றவர்.

உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேலான நாடுகள் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சிக்கிச் சின்னாபின்னமாகி வருகின்றன. அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
தொடக்கத்தில் கொத்துக்கொத்தாக உயிர் பலிகளை கொண்டிருந்த ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளே தற்போது 3 மாத முழு ஊரடங்குக்கு பிறகு மெல்ல மீண்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நான்கு கட்ட ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்ட போதும், கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
இதற்கு முக்கிய காரணங்களாக அதிகப்படியான கொரோனா சோதனைகளை மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்றே பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆகவே இப்படியான இக்கட்டான சூழல் நிலவும் வேளையில் மக்களை வீட்டிலேயே இருத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தவறிவிட்டது எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.


முன்னறிவிப்பில்லாமல், திடீரென மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வேலையின்றி, பசிப்பிணியால் வாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாரை சாரையாக நாட்டின் நெடுஞ்சாலைகள் மார்க்கமாக சொந்த கிராமங்களுக்கு பலநூறு கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்றனர். இந்த அவலத்தைக் கண்டு உலக நாடுகளே விமர்சிக்கும் வகையில் மத்திய மோடி அரசு இருந்து வருகிறது.
இருப்பினும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பா.ஜ.க அரசின் கீழ் இந்தியா சிறந்து விளங்குகிறது என உலக நாடுகள் கூறுவதாக தற்பெருமையுடன் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 476 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் எப்படி உலக அளவில் சிறந்து விளங்கும் நாடு என பிரதமர் மோடியால் பெருமிதம் கொள்ளமுடிகிறது என அரசியல் நோக்கர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இந்நிலையில், அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் உலகளாவிய நிருபரும், எழுத்தாளருமான ராணா அயூப் இந்தியாவில் கள ஆய்வை மேற்கொண்டுள்ளார். அவரது களஆய்வின்படி, பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது போன்ற எந்த ஒரு சிறப்பான சீரான நடவடிக்கையும் கொரோனாவுக்கென அரசு மேற்கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.


நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ள மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர்கள் வசதியில்லாமல் நோயாளிகள் தவித்து வருவதும், அதன் காரணமாக உயிர்கள் பறிபோகும் நிகழ்வும் நடந்தேறி வருகின்றன. அதேபோல, கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா அறிகுறிகளுடன் வரும் மக்களுக்கு சோதனை மேற்கொள்ள கருவிகளே இல்லாத அவலநிலை உள்ளது என ஷகீல் அகமது என்ற மருத்துவர் கூறியதாக ராணா அயூப் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான கொரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு காசநோய்க்கான மருந்துகளை சான்றிதழ் பெறாத மருத்துவர்கள் கொடுத்து வருவதாகவும், அதனால் ஏராளமான மக்கள் உயிரிழப்பதாகவும் மருத்துவர் ஷகீல் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான நிதி ஆதாரங்களை கொடுப்பதாக ஊடகங்களில் கூறிவிட்டு அதை நிறைவேற்றாமலும் உள்ளது மத்திய மோடி அரசு. மேலும், கொரோனாவை தடுப்பதற்காக PM CARES எனும் நிதியத்தின் மூலம் திரட்டப்பட்ட சுமார் 1.7 பில்லியன் டாலர் நிதியை விடுவிக்காமல் அதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு தனியார் நிதியம் என கைவிரித்தது தொடர்பாகவும் ராணா அயூப் தனது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு இந்திய மக்கள் கொரோனாவின் பிடியிலும், பொருளாதார இழப்பினாலும் கடுமையாக அவதியுற்று வரும் வேளையில், இந்தியா-சீனா இடையே லடாக் எல்லைப்பகுதியில் இராணுவத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்திய சமூகவியலாளரும், எழுத்தாளருமான பிரதாப் பானு மேத்தா அண்மையில் “தலைமையில்லாமல் பெயரிடப்படாத நீரில் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது” என எழுதியுள்ளதை ராணா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸை தொடக்கத்தில் அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே உலக வல்லரசு நாடான அமெரிக்காவும், பிரேசிலும் தற்போது லட்சோப லட்ச கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. 
அந்த வரிசையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள ராணா அயூப், கொரோனா பரவல் மேன்மேலும் வலுவடைந்து வருவதால் இந்தியாவின் ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்து, 130 கோடி மக்களை நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு நரேந்திர மோடி வழிநடத்துகிறார் என அந்த செய்திக் குறிப்பில் ராணா அயூப் தெரிவித்துள்ளார்.
------+-----------+------------+----------+----------

மக்கள் நல ஆளுநர்?

புதுச்சேரியில் அரசுப் பணத்தில் கவர்னர் கிரண்பேடி வீண் செலவு செய்கிறார் என சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கவர்னர் மாளிகையில் 10 ஆண்டு செலவினங்களைப் பெற்று வெளியிட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் 2010 முதல் 2020 வரை கவர்னர் மாளிகை செலவின தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளார்.
அதன்விவரம் வருமாறு:
புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி 2016ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். 2016-17ல் பட்ஜெட்டில் கவர்னர் மாளிகைக்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது. திருத்திய மதிப்பீட்டில் ரூ.4 கோடியே 42 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ.4 கோடியே ஏழரை லட்சத்தை கவர்னர் மாளிகை செலவு செய்துள்ளது.
2017-18 பட்ஜெட்டில் ரூ.4 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. திருத்திய மதிப்பீட்டில் ரூ.4 கோடியே 90 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.4 கோடியே 87 லட்சமும், 2018-19ல் பட்ஜெட்டில் ரூ.5 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, திருத்திய மதிப்பீட்டில் ரூ.6 கோடியே 5 லட்சமாக உயர்த்தப்பட்டு, ரூ.6 கோடியே 4 லட்சமும், 2019-20ல் பட்ஜெட்டில் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.6 கோடியே 20 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளது.
2010-11ல் ரூ.3 கோடியாக இருந்த கவர்னர் மாளிகை செலவு 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது. இவ்வாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.

-----------------+------------------+---------------+---------------------

வெள்ளி, 12 ஜூன், 2020

எது நேர்மறை.?

எது பாசிட்டிவ் பார்வை? – ஜெ. ஜெ.ஜெயரஞ்சன்

எது பாசிட்டிவ் பார்வை? – ஜெ. ஜெ.ஜெயரஞ்சன்
ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட அன்றைய நடவடிக்கைகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பேசி வருகிறார்.
இந்நிலையில் இன்று (11/06/2020) மோடி அரசின் விவசாயம் தொடர்பான மூன்று அவசர கால சட்டங்கள் வேளாண் துறைக்கு பயனளிக்கும், ஆனால் விவசாயிகளுக்கு பயனளிக்காது என்று வெளியான ஒரு கட்டுரை பற்றியும் அது குறித்த தனது பார்வையையும் பகிர்ந்துள்ளார். விலை கொள்கை தற்போது விவசாயிகளுக்கு அல்லாமல் வியாபாரிகளுக்கு சாதகமாக மாற்றியைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள ஜெ.ஜெயரஞ்சன் அதற்கு விளக்கமும் தெரிவித்துள்ளார்.
முழுக் காணொலியையும் கீழே காணலாம்...
 நன்றி: மின்னம்பலம்.
------------------------------------

புதன், 10 ஜூன், 2020

தேர்தல்தான் முக்கியம்.

விரைவில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரச்சாரத்தைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  பாஜக தொடங்கி உள்ளது.  இதை பாஜக முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் புலம்பெயர்வு தொழிலாளர்கள் இரயில் பயணம் செய்யத்தேவையான நிதி மத்திய அரசிடம் இல்லை என்றும், மாநில அரசின் பங்கில்தான் புலம்பெயர்வு தொழிலாளர்களின் இரயில் பயணம் சாத்தியமாகும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் இந்த கரோனா காலத்திலும் தேர் தல் பிரச்சாரத்தில் இறங்கிய பாஜக சத்தியப் பேரணி (விருட்சுவல் ரேலி) என்ற பெயரில்  இணையவழி பிரச் சாரத்தை தொடங்கியுள்ளது. இதற்காக பீகாரின் பல்வேறு இடங்களில் ஒருலட்சம் பிரமாண்ட எல்.ஈ.டி.   எனப்படும் பெரிய மின்னணுத் திரைகள் அமைக்கப்பட்டன. அனைத் திற்கும் அதிநவீன இணைய இணைப்பு வேகமாக வழங்கப்பட்டது. இதற்கான தொகை குறைந்த பட்சம் ரூ.200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். பீகார் முழுவதும் முக்கிய இடங்களில் இவ்வாறு பெரிய எல்.ஈ.டி. திரைகள் அமைக்க மூன்று தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கொடுக்கப்பட்டன.
 இந்த எல்.ஈ.டி திரைகள் தேர்தல் வரை அங்கேயே இருக்கும் என்றும், கரோனா காரணமாக நேரடிப் பிரச்சாரம் சாத்தியமாகாத பட்சத்தில் இந்த எல்.ஈ.டி. திரைகள் மூலமே மோடி - அமித்ஷா மற்றும் இதர பாஜக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்வார்கள் என் றும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று திரைகள் இலட் சக்கணக்கில் பீகாரின் அனைத்துப் பகுதிகளிலும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பீகார் பாஜக பிரமுகர்கள் கூறியுள்ளனர். இதற்கான செலவும் ஆயிரம் கோடி வரை ஆகும் என்று கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் உலகெங்கும் பரவிய கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் முழுமையான ஊரடங்கு நிலவியது. இந்த ஊரடங்கின் போது உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு திட்டங்களை வகுத்து கரோனாவிலிருந்து தங்களுடைய மக்களை பாதுகாத்துக் கொண்டனர். அதே வேளையில் இந்தியாவில் ஊரடங்கு மே 18-ஆம் தேதிக்குப் பிறகு மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கரோனா தொற்று அபாயகரமான அளவு அதிகரித்து வருகிறது. ஒரு இலட்சம் கரோனா தொற்று நோயாளிகள் உருவாக 4 மாதங்கள் ஆயின.
 ஆனால் தற்போது 10 நாட்களில் தொற்று ஒரு இலட்சத்தைத் தாண்டுகிறது அதே போல் மரணமும் ஜூன் மாதத்திலிருந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.  இந்தியாவில் இந்தவார இறுதியில்  3 முதல் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப் படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.  உயிரிழப்பின் வேகத்தைப் பார்த்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அனைத்துக் கட்சிகளும் மத்திய பாஜக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளன.   ஆனால் ஆளும் பாஜக தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி உள்ளது.  புலம்பெயர்வு தொழிலாளர்களின் இரயில் பயணத்திற்குப் பணம் இல்லை என்று கூறிய மத்திய பாஜக அரசு தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆயிரம் கோடிகளை வாரி இறைக்க முடிவு செய்துள்ளது.  தற்போது பீகார் மாநிலத்தில் பாஜக பங்கு பெற்றுள்ள கூட்டணியே ஆட்சி நடத்தி வருகிறது.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது.
"பீகாரில் பிஜேபி கூட்டணி ஒருவர்மீது ஒருவர் அவநம்பிக்கைக் கொண்ட கூட்டணியாக மாறி விட்டது. ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பின் பீகார் மக்களும் தங்களுக்கு எதிராக உள்ளனர் என்பதைப் பிஜேபி தலைமை புரிந்து கொண்டுள்ளது. எனவேதான் எதிர்க்கட்சிகளின் மனவலிமையைக் குலைக்க ரூபாய் 150 கோடி செலவில் ஆன்லைன் பொதுக் கூட்டத்தை பிஜேபி நடத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கரோனா கடுமையாகத் தொற்றிய கால கட்டத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி யைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபடும் பிஜேபியின் மதவாத அரசியல் - அதிகாரம் கரோனாவைவிட ஆபத் தானதே!
----------------------------------------------------+
உச்சம்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
தமிழகத்தில் இன்று மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 30 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 36,841 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டுமே இன்று 1,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 25,937 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 17,675 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று வரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 6,38,846 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 19,333 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 17,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையில் 16 பேர், செங்கல்பட்டில் 3 பேர் என இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
+--------------------------------------------+
இதுவரை ஒன்பது ச.ம.உறுப்பினர்கள்
மரணம்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று (ஜூன் 10) காலை உயிரிழந்த நிலையில், தற்போது தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் 15வது சட்டப்பேரவையில் இதுவரை ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டுவரும் சட்டப்பேரவை, மாநிலத்தின் 15வது சட்டப்பேரவை. 2016ல் தேர்வுசெய்யப்பட்ட இந்த சட்டப்பேரவையில், அ.தி.மு.க. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஜெ.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஆனால், இந்தச் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து தற்போதுவரை சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மரணமடைந்துவருகின்றனர். தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனின் மரணத்தோடு சேர்ந்து இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெ. அன்பழகன்படத்தின் காப்புரிமைஜெ.அன்பழகன்ஜெ.அன்பழகன்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எம். சீனிவேல், வாக்கு எண்ணிக்கை நடந்த தினத்தன்றே காலமானார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் வெற்றிபெற்றிருந்தபோதிலும், சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன்பே காலமானார்.
அதற்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா (சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம் தொகுதி), ஆர்.கனகராஜ் (சூலூர் தொகுதி) என அடுத்தடுத்து மரணங்கள் நடந்தன.
தி.மு.கவிலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்தனர். கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி (திருவாரூர்), கே.ராதாமணி (விக்கிரவாண்டி), கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்) ஆகியோர் உயிரிழந்துவிட்ட நிலையில், ஐந்தாவதாக சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ. அன்பழகனும் உயிரிழந்திருக்கிறார். கே.பி.பி. சாமியும் எஸ். காத்தவராயனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.
விக்கிரவாண்டி கே. ராதாமணி, திருவொற்றியூர் கே.பி.பி. சாமி, குடியாத்தம் காத்தவராயன், சேப்பாக்கம் அன்பழகன் என தி.மு.கவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஓராண்டிற்குள் உயிரிழந்துள்ளனர்.
இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.கவின் பலம் 100ஆக உயர்ந்திருந்த நிலையில், கே.பி.பி. சாமி, எஸ். காத்தவராயன் மறைவுக்குப் பிறகு 98ஆகக் குறைந்தது. ஜெ. அன்பழகனும் உயிரிழந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 97ஆகக் குறைந்துள்ளது.
234 எம்எல்ஏக்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் தற்போது 231 உறுப்பினர்களே உள்ளனர். இந்த சட்டப்பேரவையின் காலம் 2021 ஏப்ரல் வரையே உள்ளதா லும்,கொரோனா பரபரப்பு என்று ஓயும் என்று தெரியாத்தாலும் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.
---------------------------------------------------+
இனி எப்போது பாச முகம் காண்பேன்?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன்  ஜூன் 10 அன்று தனது பிறந்த தேதியிலேயே (10.06.1958)காலமானார். 
அவருக்கு வயது 62.
கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட ஜெ. அன்பழகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8 05 மணிக்கு உயிரிழந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தான். தனது பிறந்த நாளான ஜூன் 10-ஆம் தேதியில் அவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் அவர் இருந்தார்.
கடந்த ஜூன் 2ம் தேதி முதல் மூச்சுத் திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அன்பழகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கும் வகையில் வெண்டிலேட்டர் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொரோனா பாதிப்பு இருப்பதால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் அவரை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன.
திமுக நிர்வாகி ஒருவர், ''அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளது. அதோடு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது குடும்பத்தார் அவரை சந்திப்பதற்குக் கூட அதிக கட்டுப்பாடுகள் இருப்பதால், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அவரை நலம் விசாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எங்களுக்கு இது வருத்தமான காலம்,'' என்றார்.

யார் இந்த அன்பழகன்?

திமுகவில் வெளிப்படையாக பேசும் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஜெ.அன்பழகன். ஃபேஸ்புக், ட்விட்டர் என தனது கருத்துகளை உடனடியாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வந்தவர்.
2001ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.

DMK MLA J Anbazhagan coronavirusபடத்தின் காப்புரிமைஜ்ஜ/ஜெ.அன்பழகன் தலைவர் மு.க.ஸ்டாலினுடன்

அவர் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2001 தேர்தலில், தியாகராய நகர் தொகுதியில், அதிமுகவின் சுலோச்சனா சம்பத்தை 2,499 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு நேரத்தில், கடந்த மார்ச் மாத இறுதியில், நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
அத்துடன் அவரது ஒரு மாத சம்பளமான ரூ.1,05,000-ஐ தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்

திமுக எம்.எல்.ஏ மற்றும் அரசியல்வாதியாக மட்டுமல்லாது தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.
2013ல் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும், ''யாருடா மகேஷ்'' என்ற படத்திற்கு விநியோகஸ்தராகவும் அன்பழகன் இருந்துள்ளார்.
2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.
அப்போது அந்தப் படத்தின் குழுவினர் விரும்பினால் தனது 'அன்பு பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்று கூறியிருந்தார் அன்பழகன்.
இனி எப்போது பாச முகம் காண்பேன்?
"மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் அன்பழகனை எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?" என முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ஜெ.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன்.

லாபம் அதானிக்குமக்களுக்கு இழப்பு.
 இஇந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடமிருந்து (AAI) அதானி குழுமம் 50 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் கையில் எடுத்த விமான நிலையங்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டுள்ளது. கொரோனா முடக்கம் காரணமாக வானூர்திப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் தமக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று காரணம் கூறியுள்ளது அதானி குழுமம்.
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் மத்திய மோடி அரசு, 6 வானூர்தி நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்க முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரியது. லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய விமான நிலையங்கள் இதில் அடங்கும். இது இவ்விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான பொதுத்துறை – தனியார் கூட்டு (PPP) அடிப்படையிலான ஒப்பந்தத்திற்கான அழைப்பாகும்.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சட்டத்தை மீறி இந்த ஏலத்திற்கான பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதாக நியூஸ் கிளிக் எனும் இணையதளம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மோடி அரசை அம்பலப்படுத்தியது. பிற அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் கொடுத்த ஆலோசனைகளை மீறியே, வானூர்தி நிலையத் தொழிலுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அதானி குழுமத்திற்கு 6 வானூர்தி நிலையங்கள் வழங்கப்பட்டன.
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் என்ற தனி நிறுவனத்தை புதியதாக உருவாக்கி இந்தத் துறையில் கால் பதித்திருக்கிறது அதானி குழுமம். விமான தரையிறக்கம் மற்றும் நிறுத்துவதற்கான கட்டணம் ஆகியவற்றின் மூலமும், விமான நிலையத்திலேயே விடுதிகள், மால்கள் மற்றும் விமான நிலைய கிராமம் போன்ற கேளிக்கை அம்சங்களின் மூலமும் வரக்கூடிய பெருமளவிலான வருவாயைக் கணக்கில் கொண்டுதான் மோடி அரசின் உதவியுடன் இந்த ஒப்பந்தத்தை மும்முரமாகப் பெற்றது அதானி குழுமம்.
இதன்படி, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 180 நாட்களுக்குள் ரூ. 1500 கோடியைச் செலுத்தி முறைப்படி விமான நிலையத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில விமான நிலையங்களின் மீதான வழக்குகள் இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில், லக்னோ, மங்களூரு, அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களை மட்டும் உடனடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி 2020-ல் அதற்கான இறுதி ஒப்பந்தத்தை இந்திய வானூர்தி நிலைய ஆணையத்துடன் கையெழுத்திட்டது அதானி குழுமம். இதன்படி அதானி குழுமம் ஏப்ரல் மாதத்திற்குள் முழுத் தொகையையும் கொடுத்து இந்த மூன்று விமான நிலையங்களின் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் ஜூன் மாதம் முதல் வாரத்தில், தற்போது இருக்கும் கொரோனா நிலைமைகளைச் சுட்டிக் காட்டி வருமான இழப்பு ஏற்படும் என்பதால், இன்னும் 6 மாதம் கழித்து அந்த மூன்று விமான நிலையங்களையும் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது அதானி குழுமம்.
மேலும் தனது அறிக்கையில், வானூர்தித் துறையில் பெருமளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஒட்டி, இது குறித்து வல்லுனர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு முடிவெடுக்க இருப்பதாகவும், அதற்காக இன்னும் 6 மாதங்களுக்கு இத்திட்டத்தை தள்ளிப் போடப் போவதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்பு இருக்கும் என்பதைத் தாம் உணர்வதாகவும் தெரிவித்துள்ளது அதானி குழுமம்.
“எதிர்பாராத / கட்டுப்படுத்த முடியாத சூழல்களில்” ஒப்பந்தத்தை தள்ளிவைப்பது பற்றிய விதிப்பிரிவின் கீழ் இந்த திட்டத்தை இன்னும் 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்கும்படி இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஒரு கடைக்கு முன்பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்த பின்னர், லாபம் குறைவாக வருவதால் வாடகை கொடுக்க முடியாது. 6 மாதம் கழித்து வாடகை கொடுக்க ஆரம்பிக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது, அதானி குழுமத்தின் இந்த வாதம்.
ஒப்பந்தப்படி ஏப்ரல் மாதம் வானூர்தி நிலையத்தை கையில் எடுத்த பின்னர், வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் குவியத் தொடங்கி இருந்தால், நான் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வருகிறது என திருப்பிக் கொடுத்திருப்பாரா அதானி ? லாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு ! இதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் பின்னணி !
பொதுவாகவே, “நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டுபேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்னலாம்” என்பதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் நியதி. லாபமாக இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், சொத்துக்களையும், ஒரு அற்பமான தொகையை ஈவுத்தொகையாகக் கொடுத்து விட்டு மீதி லாபத்தைக் கல்லா கட்டுவதுதான் இந்த பொதுத்துறை – தனியார் கூட்டுத் திட்டங்களின் அடிப்படையே.
இந்த நிலைமையில் கடந்த மே மாதம், வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஷ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய 6 விமான நிலையங்களை ஏலத்திற்கு விடப் போவதாக அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பையும், அதானி குழுமத்தின் 6 மாத அவகாச அறிவிப்பையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், தற்போதைய கொரோனா மற்றும் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி, அடிமாட்டு விலைக்கு விமான நிலையங்களை தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கு அரசு தயாராகி விட்டதையே காட்டுகிறது!

செவ்வாய், 9 ஜூன், 2020

சாதனை படைக்கும் வேலுமணி

தமிழக மக்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் போலி முகத்திரையைக் கிழித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை" எனத் தெரிவித்துள்ளார் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

“உள்ளாட்சித் துறை அமைச்சரா அல்லது ஊழலாட்சித் துறை அமைச்சரா என்று தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கேட்கக்கூடிய அளவில் ஊழலில் மிகப்பெரிய வரலாற்று சாதனைகளை புரிந்து கொண்டிருக்கும்; மிக விரைவில் ஊழல் முறைகேட்டில் உலக அளவில் கின்னஸ் சாதனை படைக்க இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, பொது வாழ்வில் இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் தூய்மையானவராக திகழும், அல்லும் பகலும், தமிழக மக்களின் தேவையறிந்து , அவர்களுக்காக பாடுபடும் எங்கள் கழகத் தலைவர் அன்புத் தளபதி பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை.

ஊழலின் ஊற்றுக் கண்ணான, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மிகவும் கேவலமான முறையில், பிதற்றல்களுடன், அரசியலுக்கு உண்டான அடிப்படை நாகரிகம் கூட தெரியாமல், அநாகரீகமாக ஒரு அறிக்கை வெளியிட்டு “உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகாது” என்ற பழமொழிக்கேற்ப தான் ஒரு 'ஊர்க்குருவிதான்' என்று நிரூபித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித்துறை அமைப்பையே தனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் மட்டும் உரித்தான துறையாக மாற்றிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு, எங்கள் கழகத் தலைவரைப் பற்றி பேசுவதற்கு அருகதையில்லை. நேற்று அடித்த காற்றில் இன்று கோபுரத்தின் மீது சென்ற குப்பை ஒருபோதும் கோபுரக் கலசமாக மாற முடியாது!

மக்களைப் பற்றி சிந்திக்காமல் , மக்களைக் காப்பாற்றுவதை தவிர்த்துவிட்டு, தங்களைச் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கும் இந்த கேடுகெட்ட, தமிழக உரிமைகளை பறி கொடுத்த ஆட்சியைப் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை கூடத் தெரியாமல், “பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டாகி விடும்” என்று எண்ணிக் கொள்வதைப் போல, “முதல் அமைச்சர் அண்ணன் எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று உள்ளாட்சி நிர்வாகத்தை, ஊழல் நாறும் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பேசுவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.

பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. “பொய்யிலே பிறந்து பொய்களிலேயே வாழ்ந்து வரும்” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதை தனது பெரிய சாதனையாக, தான் ஊழல் செய்து சம்பாதித்த சொந்தப் பணத்தில் கொடுத்தது போல பறைசாற்றிக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். அப்படி என்றால் தினம் தினம் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது ஏன்? நோய்த் தொற்றின் தலைநகராகச் சென்னை மாறிக்கொண்டிருப்பது ஏன்?

கழகத் தலைவர் அவர்கள் அறிவித்த “ஒன்றிணைவோம் வா” முன்னெடுப்பின் கீழ் 18 லட்சம் உதவி எண் கோரிக்கைகள், 76 லட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 51 லட்சம் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி, 28 லட்சம் சமைத்த உணவுப் பொட்டலங்கள், 7 லட்சம் அரசிடம் சமர்ப்பித்த கோரிக்கைகள் என்று ஓர் அரசாங்கம் செய்ய வேண்டியதை தி.மு.க. கழக நிர்வாகிகள் துணையுடன் தனியொரு மனிதனாக செய்துள்ளார்.

ஆனால் தமிழக அரசும், அ.தி.மு.க.,வினரும் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனை பேருக்கு நேரடியாக நிவாரண உதவிகள் வழங்கினர். நிவாரண களத்திற்கே வராமல் இருந்தது யார்? இதில் வீறுகொண்ட வேங்கை யார்? பொய்யையும், புரட்டையும் பரப்புபவர்கள் யார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

நியாய விலைக் கடையில் விற்கப்படும், 19 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு, தரமற்றதாக இருப்பதால், மக்கள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இத்தனை நாட்கள் ஆகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு இதுகூடத் தெரியாமல் 500 ரூபாய் தொகுப்பை அரசின் பெரிய சாதனை என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறார்.

மேலும், அரசின் சார்பில் இலவச அரிசி வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடிக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்த அரிசியின் தரத்தை ஒரு முறையாவது நேரில் பார்த்தாரா?

இப்படி மக்களுக்கு தரமில்லாத, பயனில்லாத பொருள்களை கொடுத்ததுதான் சாதனையா?

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குத் தலா 1,000 ரூபாய் 2 முறை வழங்கப்பட்டதாக கூறியிருப்பது சம்பந்தமாக எத்தனை பேருக்கு இதுவரை வழங்கப்பட்டது என்று வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

புதிய முதலீடுகளைப் பெற்றிட தொழில் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பாம்! இதுவரை இந்த அழைப்பின் பேரில் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன?

123 தேசிய விருதுகள்!? உள்ளாட்சியில் சாதனைகள்!? பிறகு ஏன், கோவையில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது? குப்பைகள், சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேடு மிக்க நகரமாக கோவை உள்ளது?

2G அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும், கடந்த 21 டிசம்பர் 2017 அன்று, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்து, உத்தரவிட்டது கூட இந்த அமைச்சருக்கு தெரியாமல் போனது ஏன்?

“வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று அறிக்கை வெளியிடுவது அமைச்சர் பதவிக்கு அழகல்ல!

மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொள்ளையடித்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்து , “கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன்” என்ற ஒரே நோக்கத்துடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டு, ஊழலும் - லஞ்சமும் புரையோடிப் போய், உள்ளாட்சித் துறை அமைப்பில் காணுமிடம் எல்லாம் ஊழலே நிறைந்திருக்கிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி “ஊழல்களின் மொத்த இருப்பிடமாக” செயல்பட்டுக் கொண்டு, நாட்டையும், நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் சுரண்டி, மக்கள் நலன் மறந்து, மக்களை வாட்டி வதைத்து வருவது தமிழக மக்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும்.

தனக்கு எதிரான ஊழல் வழக்குகளை மறைக்கும் பொருட்டு , சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை, காவல்துறை போன்ற அமைப்புகளைத் தலையாட்டிப் பொம்மைகளாக்கி, அவற்றின் மீதான நம்பகத்தன்மைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேராபத்து ஏற்படுத்தியிருப்பதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

நெருப்பில்லாமல் புகையுமா? ஒரு அமைச்சர் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வருகிறது என்றால் என்ன காரணம்? ஊழல் முறைகேடுகள் நடக்காமல் ஊழல் வழக்குகள் தொடர்ந்து போடப்படுமா? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்வதுபடி “தான் குற்றமற்றவர்” என்றால், தகுந்த ஆதாரங்களுடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாதது ஏன்? லஞ்ச ஊழல் தடுப்புத் துறை முன்பு ஆஜராகி விளக்கமளிக்காதது ஏன்? இதுகுறித்து பதிவிடுபவர்கள், பேசுபவர்கள் அனைவரையும் காவல்துறையை ஏவி விட்டு பொய் வழக்கு போட்டு கைது செய்வது ஏன்? தன்னுடைய முறைகேடுகள் எல்லாம் வெளியே தெரிந்துவிடும் என்பதாலா?

இப்படிப்பட்ட ஒருவர் ஒரு உத்தமர் போல தன்னைக் காட்டிக் கொண்டு, தான் செய்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டிருப்பதை பார்த்து “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?” என்ற அச்சத்தில், அறிக்கை என்ற பெயரில் பிதற்றல்களுடன், கழகத் தலைவர் அவர்கள் மீது உண்மைக்கு புறம்பான, ஆதாரமில்லாத தகவல்களைக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களைக் கூறி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை எல்லாம் அவமதித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ள பொய்களையும், புரட்டுகளையும் மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். தமிழக மக்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் போலி முகத்திரையைக் கிழித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

---------------------3----------------------

இத்தாலியைப் பின் தள்ளிய

இந்தியா.

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 4- லட்சத்து 06 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்ற மாநிலங்களில்தான் இதன் பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால், தற்போது, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களிலும் இந்த வைரஸ் தலைவிரித்தாடி வருகிறது.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 265,928 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை இந்த வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 7,473 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 129,095 ஆகவும் உள்ளது.

-----------------------------------------------

தேர்வல்ல.

மாணவர்கள் நலனே முக்கியம்.

கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை என்று கூறி 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.

அத்துடன், 10-ம் வகுப்பு படித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

அகநிலை மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு தரநிலை அளிக்கப்படும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு - எஸ்.எஸ்.எல்.சி. - பொதுத் தேர்வினை ஜூன் 15ம் தேதி நடத்தியே தீருவது என தமிழக அரசு பிடிவாதமாக இருக்கிறது.

தேர்வு வேண்டாம் என்று பரவலாக கல்வியாளர்கள் வலியுறுத்திவந்தாலும், தமிழக அரசு தமது நிலையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், அது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா அரசின் முடிவு வந்துள்ளது.

தமிழக அரசு பிடிவாதம் எதற்கு?

Image copyrightGETTY IMAGES10-ம் வகுப்புத் தேர்வு

வெறும் 4,0000 க்குள் கொரோனா தொற்றாளர்கள் உள்ள தெலுங்கானா இப்படி தெளிவான முடிவிகளை எடுக்கையில் 34,000 தொற்றாளர்கள் இருக்கும் தமிழ் நாடு அரசு மூன்று லட்சம் மாணவர்களைத் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது ஏன்?

ஆரம்பம் முதலே கொரோனா நோயில் தமிழக அதிமுக அரசு எடுத்து வரும் முடிவுகள் கொரோனாவை சமூகப் பரவலாக்கும் முயற்சிகளாகவே உள்ளது.

திமுக கொரோனாவை எச்சரித்து கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கோரிய போது சட்டமன்றத்திலே கிண்டலடித்தார் எடப்பாடி.

பின் கொரோனா நோயாளி ஒருவர் இருந்தார் அவரும் நலமாகி விட்டார் என்றார்கள்.மூன்றே நாளில் போய்விடும் என்றார்.திமுக வினர் என்ன டாக்டர்களா என்றார்.

பின் முக்கவசத்துடன் தோன்றி பணக்கார்ர்களுக்கு,வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு மட்டும் வரும் என்றார்.

பலஆயிரக்கணக்கில் வியாபாரிகள் குவியும் கோயம்பேடு காய்கறி சந்தையை சரிவர பராமரிக காதல் அங்கு வந்து சென்றவர்கள் மூலம் வட தமிழகம் முழுக க கொரோனாவை பரவ வைத்தனர்

வீட்டில் இருந்து காய்கறி வாங்க மட்டும் ஒழுங்கு முறையில் மக்கள் வந்து சென்று தனிமனித இடைவெளியை கடைபிடித்த போது திடீரென நாளை முதல் நான்கு நாட்கள் கடுமையான ஊரடங்கு.ஒருவரும் வெளியே வரக்கூடாது என முட்டாள்தனமாக அறிவித்து வீட்டில் இருந்த மக களை எல்லாம் நான்கு நாட்களுக்கான காய்கறி,மளிகை வாங்க தெருக்களில் ஊர்வலமாக வலம் வர வைத்து அதுவரை இருந்த தனி மனித இடைவெளியை கேலிக்குரியதாக்கினார் எடப்பாடி.

டாஸ்மாக்கை திறந்து மேலும் கொரோனா பரவலுக்கு உற்சாகபானமளித்தார்.

இப்போது பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தியே தீர்வேன் என பிடிவாதம் பிடித்து கொரோனா பரப்ப வழி செய்கிறார்.

காரணம் " அக்டோபர், நவம்பரில் கொரோனா மிக உக்கிரமாக நாலு லட்சம் பேரை பிடித்துக்கொள்ளும்.அதற்குள் தேர்வை நடத்த வேண்டுமாம்."

அட அறிவாளிக்கு எதிராளிகளே.இப்போது மூன்று லட்சம் மாணவர்கள் ,மேலும் தேர்வு நடத்தும் அலுவலர்கள்,ஆசிரியர்கள் ,தேர்வு மய்யத்திற கு மாணவர்களை விட வரும் பெற்றோர்கள்,வாகன ஓட்டிகள. என ஒரு லட்சம் பேர்கள் வெளியே தேர்வு நடக்கும் பத்து நாட்கள் கூட்டமாக வந்து சென்றால்தான் நீங்கள் சொல்லும் அக டோபர்,நவம்பர் எண்ணிக்கை வரும் வாய்ப்புள்ளது.

நம்மில் பத்து % மட்டுமே கொரோனா தொற்றாளர்கள் இருக்கும் தெலுங்கானாவே தேர்வில்லை. அனைவரும் தேர்ச்சி என்கிறது. 

இது போன்ற அறிவார்ந்த நடவடிக்கைகள்தான் அங்கு வெறும் 4000 கொரோனா நோயாளிகளுடன் இருக்கக் காரணம்.

உங்களின் அறிவற்ற,பிறர் சொல்லியும் கேட்காத திமிர்த்தனமும்தான் தமிழகம் தினமும் 1600 கொரோனா தொற்றாறாளர்களுடன் 40,000 என மராட்டியத்துடன் போட்டிபோடும் நிலைக்கு காரணம்.

நீங்கள்தான் அடிமை வம்சம்,பணம் குவிப்பதைத்தவிர வேறு தொழில் நுணுக்கம் தெரியாதவர்கள் என்றால் உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் கூட அறிவார்ந்த ஆலோசனைகளை உங்களுக்கு சொல்வது கிடையாதா?

அல்லது நீங்கள் கேட்பது கிடையாதா?

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரி நடந்துவந்த வழக்கு ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதி நடத்த மாநில பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஜூன் 10ஆம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாடு உயர்நிலை - மேல் நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, மாணவர்களின் எதிர்காலத்தைவிட, அவர்களது உயிர் முக்கியமானது என்றும் தற்போதைய சூழலில் அவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போல இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்தனர். தேர்வை ஏன் ஒத்திவைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், இது தொடர்பாக தாங்கள் ஒரு விரிவான திட்டத்தை வைத்திருப்பதாகவும் எவ்வித பாதிப்புமின்றி தேர்வு நடைபெறுமென்றும் தற்போதுதான் தேர்வை நடத்த சரியான தருணமென்றும் இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல்செய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக மேலும் பல வழக்குகள் ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதால் அன்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்வதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

----------------------------+------------------------------

ஞாயிறு, 7 ஜூன், 2020

மோ(ச)டி பிம்பம்.

ஆனால், குஜராத் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெறாத மாநிலமாகவே இன்றளவும் இருக்கிறது. சுகாதார துறையைப் பொறுத்தவரை பின்தங்கிய மாநிலமான பீகாரை விட குஜராத்தின் நிலை படுமோசம் என அதிர்ச்சித் தகவலை எடுத்துவைத்திருக்கிறது உலகளாவிய செய்தி நிறுவனமான பிபிசி.

'குஜராத் சுகாதார மாடலின் பயங்கரமான நிலை... அதிகரிக்கும் மரணங்கள்' என பிபிசியின் இந்தி மொழிப் பிரிவில் ஒரு அதிரவைக்கும் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் சுருக்கமான வடிவம் பின்வருமாறு :

1. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக மரணங்களைச் சந்தித்த மாநிலம் இது.

2. இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளில் 65 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் 74,860 பேர், தமிழ்நாட்டில் சுமார் 28,000 பேர், டெல்லியில் சுமார் 23 ஆயிரம் பேர், குஜராத்தில் சுமார் 18,000 பேர்.

சுகாதார வசதிகளில் படுமோசமான நிலை : “இதுதான் குஜராத் மாடல்” - அம்பலப்படுத்திய பிபிசி!
TASHI

3. ஆனால், மரண விகிதங்களை எடுத்துக்கொண்டால், மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது குஜராத். மகாராஷ்டிராவில் 2,587 பேர்; குஜராத்தில் 1,122 பேர்.

4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் சுமார் 3 சதவீதம் பேருக்கு மரணம் நேர்கிறது. ஆனால், குஜராத்தில் இந்த சதவீதம் மிக அதிகம். மே மாத இறுதியில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத்தில்தான் அதிக நோயாளிகள் இருந்தனர்.

5. இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்கள் அகமதாபாதும் சூரத்தும். பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அகமதாபாதில்தான் இருக்கிறார்கள். இறப்பும் இந்நகரில்தான் அதிகம்.

6. அகமதாபாதில் அம்தாவாத் நி பாட் என்ற பகுதியில் ஏழைகள் அதிகம். மக்கள் நெரிசலும் அதிகம். சமூக இடைவெளி என்பதே இங்கு சாத்தியமில்லை. இந்தப் பகுதியில் யாருக்காவது கொரோனா வந்தால் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும். அங்கே கவனிப்பும் இருக்காது, சிகிச்சையும் இருக்காது.

7. சற்று வசதியானவர்களாக இருந்தால் தனியார் மருத்துவமனையான எஸ்விபி மருத்துவமனைக்குச் செல்வார்கள். அங்கே சிகிச்சை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும்.

8. ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற அடிப்படை மருத்துவ உதவிகள் கிடைத்திருந்தால், கொரோனா பாதித்தவர்கள் விரைவிலேயே சிகிச்சைக்குச் சென்றிருப்பார்கள்.

சுகாதார வசதிகளில் படுமோசமான நிலை : “இதுதான் குஜராத் மாடல்” - அம்பலப்படுத்திய பிபிசி!

9. ஆகஸ்ட் 2018வாக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 1,474 ஆரம்ப சுகாதார நிலையங்களே இருக்கின்றன. பின்தங்கிய மாநிலமான பீகாரிலேயே 1,899 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன.

10. ஆயிரம் பேருக்கு எத்தனை படுக்கை வசதி என்று எடுத்துப் பார்த்தால், அதில் இந்திய சராசரியைவிட குஜராத் கீழே இருக்கிறது. அதாவது ஆயிரம் பேருக்கு 0.3 படுக்கையே இருக்கிறது. ராஜஸ்தானில் 0.6 படுக்கையும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிஷாவில் 0.4 படுக்கையும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 1.1 படுக்கை இருக்கிறது. அதாவது குஜராத்தைப் போல நான்கு மடங்கு.

11. குஜராத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் 29 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறப்பு நிபுணர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 90 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. மக்களிடமும் விழிப்புணர்வு கிடையாது.

12. அகமதாபாத் சிவில் மருத்துவமனையிலிருந்து கணபதி மக்வானா என்பவரை குணப்படுத்திவிட்டதாக டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஆனால், அவரது உடல் பேருந்து நிலையத்தில் கிடந்தது.

இதுதாங்க உண்மையான மோ(ச)டி குஜராத் மாடல்.

இதைத்தான் இப்போது இந்தியா முழுக்க செய்கிறார் மோடி.

-விக்னேஷ் செல்வராஜ்


------------------8--------------------

கொந்தகை.

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள், நத்தை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

மே 20ல் அகரம், கீழடியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. மணலூரில் மே 22ம் தேதி, கொந்தகையில் 27ம் தேதி முதல் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறுது.

கொந்தகையில் நடந்த அகழாய்வில் நான்கு முதுமக்கள் தாழிகளும், ஆறு சிறிய மண்பானைகளும் கண்டறியப்பட்டதால், கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்க கூடும், என மதுரை காமராசர் பல்கலை கழகம் மற்றும் உயிரியல் துறை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

கொந்தகையில் குறைந்த பட்சம் 15 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் அலுவலர்கள் முடிவு செய்து அந்த பகுதியில் அகழாய்வு நடத்தி வரும் நிலையில் நேற்று (05.06.2020) அந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கதிரேசன் என்பவரின் தோட்டத்தில் தென்னை கன்றுகள் நடுவதற்காக இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் போது முதுமக்கள் தாழி முழு அளவில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து நில உரிமையாளர் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து தாழியினுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர்.

பின்னர் அவை தொல்லியல் ஆய்வாளர்கள், மரபணு ஆய்வாளர்கள் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது

கீழடி
Image caption காலத்தில் முதியோர்களை பராமரிக்க முடியாவிட்டால் பெரிய அளவிலான பானையினுள் அவர்களை வைத்து உணவு, தண்ணீருடன் மண்ணிற்குள் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்து உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவற்றுடன் மண்டை ஓடு, எலும்புகள் கண்டறியப்பட்டது இதற்கு ஆதாரமாக கருதப்படுகிறது.

முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த பின்தான் இவற்றின் காலம் பற்றி அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வில் அதிகமாக நத்தை கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நத்தைகளில் இருவகை உண்டு, நன்னீரில் வளரும் நத்தைகளை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவார்கள். கடல் நீர் நத்தைகளை அழகு பொருளாக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

அகரத்தில் கிடைத்த நத்தை கூடுகள் அனைத்துமே நன்னீர் நத்தை கூடுகள். பண்டைய தமிழர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி உடல் உபாதைகளுக்கு தீர்வு கண்டறிந்த நிலையில், நத்தைகளை மருத்துவ ரீதியாக பயன்படுத்தினார்களா அல்லது உணவு பொருளாக பயன்படுத்தினார்களா என்பது ஆய்வின் முடிவில்தான் தெரிய வரும்" என்று கூறப்பட்டுள்ளது.

தொல்லியல்

மேலும், தற்போது கிடைத்து வரும் நத்தைகளை அதன் அளவுக்கு ஏற்ப தரம் பிரித்து ஆவணப்படுத்தி வருகிறோம். முழுமையான அளவில் கிடைத்த நத்தைகளை ஆய்விற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நத்தைகளை சமைத்து சாப்பிட்டால் சளி, இருமல் சிறு குழந்தைகளுக்கு உமிழ் நீர் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும், ரத்தகட்டுக்கு நத்தையை அரைத்து ரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்டுப்போட்டால் விரைவில் குணமடையும். நத்தை ஓடுகள், மூலம் நோய்க்கு சிறந்த மருந்து. நத்தையின் சதை, விந்து எண்ணிக்கையை உயர்வடைய செய்யும் என்பதால், அகரத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக நத்தை கூடுகள் கிடைத்திருப்பதால் அங்கு சமையல் கூடமாக இருக்க வாய்ப்புண்டு. தொடர்ச்சியான அகழாய்வு மூலம் இதன் பயன்பாடு தெரிய வரும்" என சித்த மருத்துவர் வெங்கட்ராமன் தெரிவிக்கிறார்.

கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணியின்போது, ஒரு விலங்கின் எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீழடியில் நடந்த அகழ்வாய்வில் இதுவரை கிடைத்த எலும்புத் துண்டுகளை விடப் பெரிதாக, ஒரு விலங்கின் எலும்புத் கூடு கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவை கிடைத்தன.

கொந்தகை பகுதியில் இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன. முதல் குழியில் 2 முதுமக்கள் தாழிகளும், 2வது குழியில் 8 முதுமக்கள் தாழிகளும், மூன்றாவது குழியில் 2 தாழிகளும் கிடைத்தன.

இந்த நிலையில், கொந்தகையில் மார்ச் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு ஒன்று கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிபிசி தமிழிடம் பேசிய கீழடி அகழ்வாய்வு இயக்குநர் சிவானந்தம் எலும்புக் கூட்டை அகழ்வாய்வு செய்த இடத்தில் இருந்து எடுக்காமல் வைத்திருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு முடிந்ததும், வல்லுநர்களின் துணையோடுதான் பிற சோதனைகளை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்தார்.

'கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் அகழ்வாய்வு பணிகளை நிறுத்தியிருந்தோம். மே கடைசி வாரத்தில் பணிகளைத் தொடங்க அனுமதி கிடைத்தது. தற்போது ஒரு எலும்புக் கூடு உள்பட சில சிறிய பொருட்களையும் கண்டறிந்துள்ளோம். இவை அனைத்தையும் கண்டறிந்த இடத்தில் பிளாஸ்டிக் பைகளில் பாதுகாப்பாக சுற்றிவைத்துள்ளோம். கண்டறியப்பட்ட பொருட்கள் எந்த காலத்தை சேர்ந்தவை, எந்த விலங்காக இருக்கும் என எந்த தகவலையும் அறியமுடியவில்லை. அந்த எலும்புகளை எடுக்கும்போது அதிக கவனம் வேண்டும். பிரத்தியேகமான கருவிகளைக் கொண்டு பாதுகாப்பாக எடுக்கவேண்டும் என்பதால் காத்திருக்கிறோம்,'' என்றார் சிவானந்தம்.

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்களை இங்கு அனுமதிப்பதில்லை என்றும் பாதுகாப்பை பலப்படுத்தி, இந்த பொருட்களை கண்டறியப்பட்ட களத்தில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூடு

கடந்த மே 28-ல் பெய்த பலத்த மழையால் அகழாய்வு செய்த இடங்களில் தண்ணீர் புகுந்திருந்தது. பணிகள் நிறுத்தி தண்ணீர் வற்றிய பின்னர் பணிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அதேசமயம், மணலூர் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில், ஒரு குழியில் சுடு மண்ணால் செய்யப்பட்ட உலை ஒன்றையும் கண்டறிந்ததாக சிவானந்தம் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக நடந்த அகழ்வாய்வில், 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரைக் கட்டைகள் (ரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துகளுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. அரிக்கமேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பொருட்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

------------------8---------------------

ஹாங்காங் 

போராட்டம்.


அமெரிக்க 

கலவரம்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் புருவங்களை உயர்த்தியுள்ள நிலையில், அதை சீனா மட்டும் வேறுபட்ட பார்வையில் ஆர்வத்துடன் உற்றுநோக்கி வருகிறது.

கடந்தாண்டு ஹாங்காங்கில் நடந்த ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்களின் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது சீனா.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான போராட்டம் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் சீன ஊடகங்கள், அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையை மையப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீன அரசு, அமெரிக்காவில் உள்ள இன வேறுபாடு மற்றும் அநீதியைக் கண்டித்து மற்ற நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்பதுடன், இதன் மூலம் சர்வதேச அளவில் ஒரு பொறுப்புள்ள உலகளாவிய தலைவராக தன்னை சித்தரிக்க முயற்சிக்கிறது.

சீன செய்தி ஊடகங்களின் பகடி - 'ஓர் அழகான காட்சி'

சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா, அமெரிக்காவின் உள்நாட்டு அமைதியின்மையை "ஃபெலோசியின் அழகிய நிலப்பரப்பு" என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது

  • கடந்த ஆண்டு, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி ஃபெலோசி, ஹாங்காங் போராட்டங்களை "பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிப்பதாக" கூறியதை இந்த செய்தியில் நினைவுகூர்கிறது அந்த ஊடகம்.

மற்றொரு சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸின் தலைமை ஆசிரியர் ஹு ஜிஜின், அமெரிக்க அரசியல்வாதிகள் இப்போது "தங்கள் சொந்த ஜன்னல்களிலிருந்து இந்த அழகிய காட்சியை அனுபவிக்க முடியும்" என்று தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் தன்னாட்சி அதிகாரத்தில் சீனா தலையிடுவதாக ஹாங்காங்கில் ஜனவரி மாதம் நடந்த போராட்டம்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionதங்கள் தன்னாட்சி அதிகாரத்தில் சீனா தலையிடுவதாக ஹாங்காங்கில் ஜனவரி மாதம் நடந்த போராட்டம்.

சீனாவால் "பயங்கரவாதத்தின் அறிகுறிகளைக் காட்டும் கலகக்காரர்கள்" என்று வகைப்படுத்தப்பட்ட ஹாங்காங் போராட்டக்காரர்களை ஆதரித்த ஃபெலோசி உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளை சீனா நீண்டகாலமாக கண்டித்துள்ளது.

ஹாங்காங் சீன பிரதேசமாக இருந்தாலும், அங்கு 'ஒரு நாடு; இரு அமைப்பு முறை' எனும் கோட்பாட்டின்கீழ், சில தன்னாட்சி அதிகாரங்களை ஹாங்காங் பெற்றுள்ளது.

99 ஆண்டுகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் 1997இல் சீனாவுடன் இணைந்தது.

வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொது விவகாரங்களுக்கான மில்லர் மையத்தின் மூத்த பேராசிரியரான அய்ன் கோகாஸ், அமெரிக்காவும் சீனாவும் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளால் தூண்டப்பட்ட உறுதியற்ற தன்மையை உள்நாட்டில் எதிர்கொண்டு வருவதாக கூறுகிறார்.

சீனா தனது சொந்த தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடுத்து நிலைக்கு கொண்டு செல்வதற்கு, தற்போது அமெரிக்காவில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் "இரட்டை நிலைப்பாடு"அமெரிக்கா தனது உள்நாட்டில் நிலவரம் அசாதாரணமான சூழ்நிலையில், 'இரட்டை நிலைப்பாட்டை' கடைப்பிடிப்பதாக சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

"அமெரிக்காவில் நடக்கும் கலவரத்தை, அங்குள்ள உள்ளூர் அரசாங்கங்கள் எப்படி கையாளுகின்றன என்பதை பாருங்கள். ஆனால், இதே மாதிரி ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தின்போது, அமெரிக்கா எடுத்த நிலைப்பாடு குறித்து நமக்கு தெரியும்," என்று கூறுகிறார் ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவரான கேரி லாம்.

Hong Kong Chinese and Hong Kongபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் சீன அரசு ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார்.

சீனா மற்றும் ஹாங்காங்கின் தலைவர்கள் கூறும் இதுபோன்ற கூற்றுகளை சமூக ஊடகங்களில் பகிரும் சீனர்கள், அமெரிக்காவை "இரட்டை நிலைப்பாடு கொண்ட நாடு" என்று விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, அமெரிக்க அரசு போராட்டங்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் தேவைக்கு அதிகமான காவல்துறையினரை குவிப்பது, போராட்டக்காரர்கள் மற்றும் நிகழ்விடத்தில் பணியில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களை கண்மூடித்தனமாக தாக்குவது உள்ளிட்ட ஜனநாயகத்துக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாக சீன ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஜார்ஜியா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் மரியா ரெப்னிகோவா, அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்த சீன அரசு ஊடகங்களின் தீவிரம் முன்னெப்போதுமில்லாத ஒன்று என்று கூறுகிறார்.

"இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, ஏனென்றால் சீன ஊடகங்கள் அதை உருவாக்கவில்லை" என்று பேராசிரியர் ரெப்னிகோவா கூறுகிறார். எனினும், அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்களின் கோர முகத்தை காட்டும் சீன ஊடகங்கள், அதை ஹாங்காங் காவல்துறையினரின் இயல்புக்கு மாறான பக்கத்துடன் ஒப்பிடுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

இனவெறிக்கு கண்டனம் தெரிவிக்கும் சீனா

உள்நாட்டு அமைதியின்மையை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவின் தோல்வியை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீனா, உலக அரங்கில் தன்னை மிகவும் பொறுப்பான நாடாக நிலைநாட்டிக்கொள்ள முயற்சிக்கிறது.

George Floyd death China takes a victory lap over US protestsபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவில் நிலவி வரும் இனவெறி மற்றும் காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பதிவிட்ட ட்வீட்களை சீன அரசு அதிகாரிகள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

"என்னால் மூச்சுவிட இயலவில்லை" என்று ட்வீட் செய்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், ஹாங்காங் விவகாரத்தை சீனா கையாள்வது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் முன்வைத்த விமர்சனங்களின் திரைப்பிடிப்புகளை பதிவிட்டிருந்தார்.

-------------------8----------------------