இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோழிக்கறிஅரசியல்

படம்
இந்தியாவின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கோழிப்பண்ணைத்துறையின் பங்களிப்பு, ஒரு டிரில்லியன் ரூபாய் ஆகும்.  நாட்டில் ஆண்டுக்கு சுமார் 9,000 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியா (சீனாவுக்கு பிறகு), உலகில் அதிக முட்டைகளை உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடு.  நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 400 மில்லியன் பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோழித்தொழிலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, முதல் மற்றும் இரண்டாமிடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாக முட்டையை பயன்படுத்த வேண்டுமென்று உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது. இந்தியாவின் தனிநபர் முட்டை நுகர்வு, தேசிய ஊட்டச்சத்து அமைப்பு (என்ஐஎன்) பரிந்துரைத்த 180 முட்டைகள் என்பதற்கு பதிலாக ஆண்டுக்கு வெறும் 68 முட்டைகளாகவும், பரிந்துரைக்கப்பட்ட 11 கிலோ கோழிக்கறி என்பது, 3.5 கிலோ நுகர்வு என்றளவில் உள்ளது. இந்த அளவிற்கு பொருந்தும் வகையில், தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள், இங்கு ஏராளமாக உள்ளன. உள்நாட்டு கோழித்தொழித்து...

வாலறுந்த நரி

படம்
மகாராஷ்டிராவில் தங்களுடைய சதித் திட்டம் நிறைவேறாத நிராசையில் வாலறுந்த நரி போல புலம்புகிறது பாஜக. பல்வேறு மாநிலங்க ளில் முறையற்ற வகையில் ஆட்சியமைத்து அதன் காரணமாகவே “சாணக்கியப் பட்டம்” பெற்ற அமித்ஷா மகாராஷ்டிராவில் அதிகா ரத்தை கைப்பற்ற எதிரெதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன என்று குமுறியுள்ளார். மகாராஷ்டிரத்தில் பாஜக இரவோடு இரவாக மேற்கொண்ட சித்து வேலைகளில் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் ஆளுநர், குடியரசுத் தலைவர் பதவியையும் பயன்படுத்தியவர்கள்தான் இவர்கள். தங்களால் ஆட்சியமைக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகட னம் செய்து சட்டமன்றத்தை முடக்கிவைத்தனர். அஜித்பவார் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, பெரும்பான்மையை நிரூபிக்க எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் ஆளுநர் பாஜகவைச் சேர்ந்த பட்னாவிஸ்க்கும், அஜித் பவாருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  இதன் மூலம் மிகப் பெரிய அளவில் குதிரைப் பேரத்தை நடத்தி கர்நாடக, கோவா பாணியில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற அவர்களின் திட்டம் உச்சநீதிமன்றத்தின்...