வாலறுந்த நரி

மகாராஷ்டிராவில் தங்களுடைய சதித் திட்டம் நிறைவேறாத நிராசையில் வாலறுந்த நரி போல புலம்புகிறது பாஜக.

பல்வேறு மாநிலங்க ளில் முறையற்ற வகையில் ஆட்சியமைத்து அதன் காரணமாகவே “சாணக்கியப் பட்டம்” பெற்ற அமித்ஷா மகாராஷ்டிராவில் அதிகா ரத்தை கைப்பற்ற எதிரெதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன என்று குமுறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் பாஜக இரவோடு இரவாக மேற்கொண்ட சித்து வேலைகளில் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் ஆளுநர், குடியரசுத் தலைவர் பதவியையும் பயன்படுத்தியவர்கள்தான் இவர்கள்.

தங்களால் ஆட்சியமைக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகட னம் செய்து சட்டமன்றத்தை முடக்கிவைத்தனர்.

அஜித்பவார் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, பெரும்பான்மையை நிரூபிக்க எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் ஆளுநர் பாஜகவைச் சேர்ந்த பட்னாவிஸ்க்கும், அஜித் பவாருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 இதன் மூலம் மிகப் பெரிய அளவில் குதிரைப் பேரத்தை நடத்தி கர்நாடக, கோவா பாணியில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற அவர்களின் திட்டம் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தவிடு பொடியானது.

மகாராஷ்டிராவில் நீதி நெறிமுறைகள் சிதைக் கப்பட்டுள்ளன என்று அமித்ஷா கூறுகிறார். நீதி நெறிமுறை குறித்து பேசுகிற எந்த அருகதையும் இவர்களுக்கு இல்லை.
 எந்தளவுக்கு கீழிறிங்கி னாலும், ஜனநாயக மரபுகளை குலைத்தாலும் பர வாயில்லை.

ஆட்சியை கைப்பற்றினால் போதும் என்பதை  மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டவர்கள்.
தற்போது தங்களது முயற்சி தோல்வியடைந்ததால் நீதி நெறிமுறை என்றெல் லாம் பேசுவதில் ஏதாவது அர்த்தம் உண்டா?

 அப்படியே பார்த்தால் காங்கிரசும், தேசிய வாத காங்கிரசும் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், தேசியவாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாரை இழுத்து ஆட்சியமைக்க பாஜக முயல்வது என்ன சித்தாந்தம்?

 இதில் என்ன நீதி நெறிமுறை இருக்கிறது?

அஜித்பவார் தங்கள் பக்கம் வந்தவுடன் அவர் மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற்ற வர்கள் நீதி நெறிமுறைப் பற்றி பேசலாமா?

பல்வேறு தருணங்களில் பாஜகவால் கையா ளப்பட்ட அணுகுமுறை இப்போது அவர்களுக் கெதிராக திரும்பியுள்ளதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அரசியலில் இழிவான வேலைகளுக்கு, ராஜதந்திரம், சாணக்கியத்தனம் என்றெல்லாம் நாமகரணம் சூட்டிக் கொண்டு மகிழ்ந்தவர்கள், தாங்கள் வெட்டியக் குழியில் தாங்களே விழுந்துள்ளனர்.

 பதவியை பிடிப்பது மட்டுமே சிந்தாந்தம் என்று கொண்டவர்கள் சித்தாந்தம் பற்றியெல்லாம் பேசுவது கொடும்புலி காருண்யம் பற்றி பேசு வதற்கு ஒப்பாகும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில், உள்ளாட்சிகளில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
 அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து, தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது.

இதனிடையே தமிழக அரசு, உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அவசர சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபப்டுகிற நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.” இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
இன்று துவங்கி இதே வானிலை 02ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தம்மிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதே நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

தஞ்சை, நாகை, சிதம்பரம், திருவிடைமருதூர், கும்பகோணம் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டார் அம்மாவட்ட ஆட்சியர். திருச்சி மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.

 அரியலூர், திருச்சி மாவட்டங்களைத் தொடர்ந்து காலை 08 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்பரத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது, அரியலூரின் ஜெயம்கொண்டம் பகுதியில் 10 செ.மீ மழையும், காஞ்சியின் ஸ்ரீபெரும்புதூரில் 9 செ.மீ மழையும், கடலூரில் கே.எம்.கோவில் பகுதியில் 8 செ.மீ மழையும், நாகையின் சீர்காழியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
 நாகையின் மயிலாடுதுறையில் 6 செ.மீ மழையும், சிதம்பரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்(1908)
தாமஸ் ஆல்வா எடிசன், போனோகிராஃப் ஒலிப்பதிவுக்கருவியைகாட்சிப்படுத்தினர்(1877)
பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா முடிவெடுத்தது(1947)


1830 - ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் பேரரசுக்கெதிராகப் போலந்தில் நடைபெற்ற, நவம்பர் எழுச்சி  தொடங்கியது.
 1569இல் உருவான போலந்து-லிது வேனிய காமன்வெல்த் என்பது(விரிவாக வரும் ஜூலை 1இல்), அக்காலத்திய ஐரோப் ்பாவில் பரப்பிலும், மக்கள் தொகையி லும் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாக விளங்கியது.
இப்பகுதியின் முக்கியசக்திகளுள் ஒன்றாக விளங்கிய இந்நாட்டில், 18ஆம்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 1715இல் பிரபுக்களே அரசருக்கெதிராகப் போர் தொடுக்க, ஜார் மகா பீட்டர் தலைமையிலான ரஷ்யா நடுவராக நுழைந்தது.
உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவேண்டிய பொறுப்பு இருப்பதாகக்கூறி, ரஷ்யப் படைகள் போலந்தில் நிறுத்தப்பட்டன.
ஐரோப்பிய அதிகாரச் சமநிலையில் இந்நாட்டின் நிலை முக்கியமானதாக இருந்ததால், இதை மாற்றமின்றிப் பாதுகாப்பது என்று 1730இல் ப்ரஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம், மூன்று கருப்புப் பருந்துகளின் கூட்டணி என்று குறிப்பிடப்படுகிறது.
1768-74இல் நடைபெற்ற ஒட்டோமான்களுக்கெதிரான ரஷ்ய-துருக்கியப் போரின்போது, 1772இல் சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டுவந்தது, முதல் போலந்துப் பிரி வினை என்றழைக்கப்படுகிறது.
ரஷ்யாவும், பிரஷ்யாவும் 1793இல் சில பகுதிகளையும், இவற்றுடன் ஆஸ்திரியாவும் சேர்ந்து 1795இல் எஞ்சிய பகுதிகளையும் பிரித்துக்கொண்ட இரண்டாவது, மூன்றாவது போலந்துப் பிரிவினைகளுக்குப்பின், போலந்து என்ற நாடே இல்லாமற்போனது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த நாடாளுமன்ற முடியரசு (காங்கிரஸ் கிங்டம்) என்றழைக்கப்பட்ட போலந்தின் பகுதிகள், அக்காலத்தில் இருந்த வற்றிலேயே மிகச்சிறந்த அரசமைப்புச்சட்டங்களுள் ஒன்றைக்கொண்டு, தன்னாட்சி யுடன் இருந்தன.
 ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டர், இந்த அரசமைப்புச் சட்டத்திற்கும், இப்பகுதியின் நாடாளுமன்றத்திற்கும் கட்டுப்படாமல் பல நடவடிக்கை களை மேற்கொண்டதைத் தொடர்ந்தே இந்த நவம்பர் எழுச்சி ஏற்பட்டது.
ஏறத்தாழ ஓராண்டுக்கு நடைபெற்ற இந்த எழுச்சி ஒடுக்கப்பட்டது. போலிய(போலிஷ்) கேள்வி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் போலந்தின் இருப்பே கேள்விக்குறியான இந்நிலை முதலாம் உலகப்போர்வரை தொடர்ந்தது.
ஹிட்லர் போலந்தை ஆக்கிரமித்ததிலிருந்தே தொடங்கிய இரண்டாம் உலகப்போரின்போதும் உயிர்பெற்ற இக்கேள்வி, சோவியத்தால்தான் தீர்க்கப்பட்டது.
- அறிவுக்கடல்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 அஜித் பவார் குற்றமற்றவர்
மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை என்.சி.பி தலைவர் அஜித் பவார் ராஜினாமா செய்வதற்கு முந்தைய நாள் திங்கள்கிழமை ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.பி) பல கோடி ரூபாய் நீர்ப்பாசன ஊழல் தொடர்பான ஒன்பது வழக்கு விசாரணைகளை மூடிவிட்டதாகக் கூறியுள்ளது.

பாஜக தலைமையில் அரசு அமைக்க (இப்போது ராஜினாமா செய்துவிட்டார்) ஆதரவு அளித்த அஜித் பவார், குற்றமற்றவர் என சான்று அளிப்பதற்காக இது செய்யப்படவில்லை என்று ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அஜித் பவார் முந்தைய காங்கிரஸ்-என்.சி.பி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில், அவர் தலைவராக இருந்த விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகம் (வி.ஐ.டி.சி) உட்பட நீர்ப்பாசன திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
 மகாராஷ்டிராவில் ஐந்து மண்டல சிறப்பு நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகங்கள் உள்ளன.

இதில் எந்தவொரு எஃப்.ஐ.ஆர்.-களிலும் அஜித் பவார் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், நீர்ப்பாசன திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் அஜித் பவார் தலையிட்டதாக ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பார்வே 2018 நவம்பரில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் தெரிவித்திருந்தார்.
விசாரணை நடத்தப்பட்ட 2,654 ஒப்பந்த அறிவிப்புகளில் 45 ஒப்பந்தங்கள் வி.ஐ.டி.சி.-க்கானது.
இதில் 9 வழக்கு விசாரணைகள் மூடப்பட்டது.

ஊழல் தடுப்பு பிரிவு, 212 ஒப்பந்தங்களில் விசாரணை முடித்துவிட்டது என்றும் பதிவு செய்யப்பட்ட 24 வழக்குளில் 5 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.

ஜூன் 2011 நிலவரப்படி, மகாராஷ்டிரா நீர்வளத் துறையால் 3,712 பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள் மூலம் 48.26 லட்சம் ஹெக்டருக்கு பாசன வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜூன் 2012 நிலவரப்படி பயன்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திறன் 32.51 லட்சம் ஹெக்டர் அல்லது 67.36% மட்டும்தான்.
2001-02 மற்றும் 2011-12 ஆண்டுகளுக்கு இடையில், நீர்வளத் துறை திட்டங்கள் குறித்த இந்தியாவின் வரவுசெலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் (சிஏஜி) பல்வேறு அறிக்கைகள், நீண்டகால திட்டங்கள் இல்லாதது, திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்காதது, நிறைவு செய்வதில் தாமதம், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் பணிகளைத் தொடங்குதல் போன்றவற்றை சுட்டிக்காட்டியது.

2012 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா பொறியியல் பயிற்சி அகாடமியின் தலைமை பொறியாளரும், முன்னாள் நீர்ப்பாசனத் துறை பொறியியலாளருமான விஜய் பண்டாரே முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் மற்றும் ஆளுநர் கே.சங்கரநாராயணன் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
அதில் பல்வேறு நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகங்களால் வழங்கப்பட்ட அணை கட்டும் ஒப்பந்தங்களில் அதிகப்படியான செலவு மதிப்பீடுகள் மற்றும் பிற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைகளை பரிந்துரைத்திருந்தார்.
இந்த வழக்கில், பல ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்ததாக விவரங்கள் வெளிவந்தால் துணை முதல்வர் அஜித் பவார் பதவி விலகினார்.
இதனால், வழக்கு விசாரணைக்கு காரணமான பண்டாரேவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியிருந்தது. பின்னர், பண்டாரே 2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட பண்டாரே தோல்வி தோல்வியடைந்தார்.
இந்த முறைகேடுகளை பரப்பிய செயல்பாட்டாளர் அஞ்சலி தமானியா, இவரும் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மற்றொரு செயல்பாட்டாளர் பிரவீன் வதேகோன்கரும் தோல்வியடைந்தார்.

இந்த ஊழல் குறித்த ஆரம்ப விவரங்கள் பிப்ரவரி 2012 இல் பாண்டாரேவின் முதல் கடிதத்தில் வந்துள்ளன. மார்ச் 2012 இல், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையில், ஒரு தசாப்தத்தில் நீர்ப்பாசனத்தின் கீழ் உள்ள பகுதிக்கு சுமார் ரூ.70,000 கோடி செலவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, என்.சி.பி நீர்வளத் துறையை கட்டுப்படுத்தி இருந்தவரை அஜித் பவார் அந்தக் காலத்தில் ஒரு நல்ல பகுதிக்கு அமைச்சராக இருந்தார்.
என்.சி.பி தரவுகளை எதிர்த்தது. ஆனால், முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் எதிர்க்கட்சிகளின் விசாரணை கோரிக்கையை ஆதரித்தார்.  (அடுத்தடுத்த ஆண்டுகளில் பொருளாதார ஆய்வு அறிக்கைகள், நீர்ப்பாசனத்தின் பரப்பளவு அதிகரிப்பு ஆகியவை எளிதாக கைவிடப்பட்டது.)
ஆகஸ்ட் 2012 இல், பிருத்விராஜ் சவான் ஒரு வெள்ளை அறிக்கையை தயாரிக்க உத்தரவிட்டார்; செப்டம்பரில், அஜித் பவார் அமைச்சரவையில் இருந்து விலகினார், வெள்ளை அறிக்கை வழங்கப்பட்ட பின்னர் டிசம்பரில் அமைச்சர் பதவிக்கு திரும்பினார்.
எதிர்க்கட்சி ஒரு பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து 2012 டிசம்பர் 31 அன்று காங்கிரஸ்-என்சிபி அரசு முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலாளர் டாக்டர் மாதவ் சிட்டாலே தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. ஜூன் 2014 இல், சிட்டாலே கமிட்டி அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
 இது அஜித் பவார் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சுனில் தட்கரே ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று கூறியது.
அதற்கு பதிலாக உயர் அதிகாரிகளை குற்றம் சாட்டியது. மாநிலத்தில் நீர்ப்பாசன திறன் 10 ஆண்டுகளில் 0.1% அல்ல, 20% அதிகரித்துள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையையும் மாநில அரசு தாக்கல் செய்தது.

2014 ஆம் ஆண்டில், சிஏஜி 2007 மற்றும் 2013 ஆண்டுகளுக்கு இடையில் ‘நீர்ப்பாசன திட்டங்களை நிர்வகித்தல்’ குறித்த செயல்திறனை தணிக்கை மேற்கொண்டது.
இது 2012 முதல் செயல்பாட்டாளர்கள் முன்வைத்த சில குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியது. அதன் கண்டுபிடிப்புகளில்: மகாராஷ்டிரா நீர்வள ஒழுங்குமுறை ஆணையம் 2007-13 ஆம் ஆண்டில் 189 திட்டங்களை நீக்கியது.
நீக்கப்பட வேண்டிய மாநில நீர்வளத் திட்டமும் எதுவும் இல்லை என்றாலும் முன்னுரிமை இல்லாததால், பின்தங்கிய மாவட்டங்களில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்னுரிமை இல்லாததால், பின்தங்கிய மாவட்டங்களில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன, இதன் விளைவாக வளங்கள் மெதுவாக பரவின.
நீர்வளத்துறை “ஜூன் 2013 நிலவரப்படி செயல்படுத்தப்பட்ட 601 திட்டங்களுடன் சேர்ந்துள்ளது.
இதற்கு ரூ.82,609.64 கோடி இருப்பு செலவு இருப்பு உள்ளது” என்று கூறியுள்ளது. மீதமுள்ள செலவு 2012-13 ஆம் ஆண்டிற்கான மூலதன மானியத்தின் ஒன்பது மடங்கு ஆகும்.
பல சந்தர்ப்பங்களில், வேலை தொடங்குவதற்கு முன்பு நிலம் கையகப்படுத்தல் முடிக்கப்படவில்லை. அதனால், பணிகள் நிறுத்தப்படுவதற்கும் தாமதங்களுக்கும் வழிவகுத்தது.
மேலும், பணிகளுக்கு முன் முறையற்ற ஆய்வுகளால் செலவு அதிகரித்தன.
நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகங்களும் மகாராஷ்டிரா பொதுப்பணி கையேட்டின் விதிகளை மீறியுள்ளன.
இது நிர்வாக ஒப்புதல்களுக்கு மேல் 10% க்கும் அதிகமான செலவினங்களை, திருத்தப்பட்ட நிர்வாக ஒப்புதல்களுக்கு மேல் அதிகாரத்தின் ஒப்புதல் இல்லாமல்அனுமதித்தது.

எதிர்க்கட்சியில் இருந்தபோது, பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் விசாரணை கோருவதில் முன்னணியில் இருந்தார்.
 2014 டிசம்பரில், அவர் முதல்வராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே, நீர்ப்பாசன ஊழலில் அஜித் பவார் மற்றும் தட்கரே ஆகியோரின் பங்கு குறித்து ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளுக்கு ஃபட்னாவிஸ் ஒப்புதல் அளித்தார்.
இந்த ஒப்பந்தம் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாத்திரங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 கொங்கனின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கொன்டேன் அணை திட்டத்தின் நிதி முறைகேடுகளில் நான்கு நான்கு பொறியாளர்களை அரசு இடைநீக்கம் செய்தது. இது தட்கரே அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்டது.
அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்றால், திட்டத்தின் செலவு ரூ.80.35 கோடியிலிருந்து 327.62 கோடியாக உயர்த்தப்பட்டது.
அணையின் உயரத்தை 32.30 மீட்டராக உயர்த்துவதற்கான முடிவு, மேல் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறாமல் எடுக்கப்பட்டது என்பதே குற்றச்சாட்டுகள் ஆகும். இதனால், 45 அதிகாரிகள் துறை ரீதியான விசாரணைகளை எதிர்கொண்டனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------
'நேர்மைக்கு கிடைத்த பரிசு'
ஹரியானா மாநிலத் தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா,
 28 ஆண்டு பணிக்காலத்தில், 53வது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா.
நேர்மையான அதிகாரியான இவர், அரசியல்வாதிகளின் அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகிறார்.

2012ல், ஹரியானாவில், காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா நிறுவனத்தின் நிலம் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
 இதையடுத்து, ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளானார்.

அரசியல்வாதிகள், ஆட்சி யாளர்களின் விருப்பப்படி நடக்காததால், தன்னுடைய, 28 ஆண்டு கால பணியில், 52 முறை, பல்வேறு பணிகளுக்கு பந்தாடப்பட்டார்.
நேற்று ஹரியானாவில், 14 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டதாக, மாநில அரசு அறிவித்தது.
இதில், அசோக் கெம்கா பெயரும் இடம் பெற்றுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் முதன்மை செயலராக பணியாற்றி வந்த அவர், அருங்காட்சியகம் மற்றும் ஆவண காப்பகத்தின் முதன்மை செயலராக மாற்றப்பட்டு உள்ளார்.

அசோக் கெம்கா  சமூக வலைதளத்தில் 'நேர்மைக்கு கிடைத்த பரிசு' எனஇது குறித்து  குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
...9999999999999

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw

  வேலை வாய்ப்புகள்

பெய்ய இரு...

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தில் 55 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது:
1.11.2019 அடிப்படையில் சில பதவிகளுக்கு 30 வயது மற்றும் சில பதவிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி தேதி
: 3.12.2019

விபரங்களுக்கு
: www.cpcl.co.in
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 
 காலியாக உள்ள 92 இடங்களுக்கு அறிவிப்பு.
 காலியிடங்கள்: உதவி பாதுகாப்பு அதிகாரி- 19, பாதுகாவலர்- 73

வயது: 6-12-2019 அடிப்படையில் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் பொதுப் பிரிவினர்-27, எஸ்.சி.,/எஸ்.டி.,- 32, ஓ.பி.சி.,- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது தளர்வு சலுகை உண்டு.



கல்வித் தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. பாதுகாவலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி.

தேர்ச்சி முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
: 'ஆன் லைன்' https://recruit.barc.gov.in
கடைசி நாள்
: 6.12.2019
---------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய தொழில் பாதுகாப்பு படை
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை கான்ஸ்டபிள்' பதவிக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 -23 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1996 முதல் 1.8.2001க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனம் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 153 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தொடர்புடைய விளையாட்டில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 17.12.2019

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கால்நடை உதவி மருத்துவர் . 

காலிப்பணியிடம் : 1141 . 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கால்நடை உதவி மருத்துவர்  .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141  .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 23.02.2020 .
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு 1141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கால்நடைத் துறையில் கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1141 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.எஸ்., பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவை ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி:

கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்து மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

கட்டணம்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கும் கட்டணத்தில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். டிசம்பர் 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். டிசம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவுக்கு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7, 8, 14, 21 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச.28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு
2020, ஜன. 19 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு
ஜன.25- ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

Shabeer Krishnagiri



"மோடி ஊழல் செய்யமாட்டார்;
ஊழல் செய்யவும் விடமாட்டார்.
இந்தியாவில் ஊழலற்ற ஒரே கட்சி பா.ஜ.க."

மேலே உள்ள வரிகளை 50 தபால் அட்டைகளில் எழுதி உடனடியாக 50 நண்பர்களுக்கு அனுப்பினால், 24 மணி நேரத்தில் நல்ல செய்தி வந்து சேரும்.

மேற்கு வங்கத்தில் முகுல் ராய் என்பவர் 100 பேருக்கு அனுப்பினார். அவர் மேல் இருந்த சாரதா சிட்பண்ட் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் 200 பேருக்கு அனுப்பினர். அவர்கள் மேல் இருந்த சுரங்க வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

ஹரியானாவில் துஷ்யந்த் சௌதாலா என்பவர் 100 பேருக்கு அனுப்பினார். அவரது தந்தைக்கு உடனே ஜாமீன் வழங்கப்பட்டது.

மஹாராஷ்டிராவில் அஜித் பவார் 300 பேருக்கு அனுப்பினார். அவர் மேல் இருந்த ஒன்பது வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன.

மேலும் ஜார்கண்ட், அஸ்ஸாம் மாநிலத்திலும் தபால் அட்டை அனுப்பி பலனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ப.சிதம்பரம் என்பவர் தபால் அட்டை அனுப்பாமல் அசட்டையாக இருந்துவிட்டார். இப்போது சிறையில் சிரமப்படுகிறார்.

ஆகவே நண்பர்களே...

#படித்ததில்_ரசித்தது
--------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?