திங்கள், 31 டிசம்பர், 2012

சாம்சங் -மோட்டோரோலா

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்வெளியிட்ட, "கேலக்ஸி' வரிசை  ஸ்மார்ட் போன்களின் விற்பனை,இப்போது  ஒரு கோடியை தாண்டியுள்ளது.
இந்நிறுவனம், கடந்த, 2010ம் ஆண்டு ஜூன் மாதம், முதன் முதலாக, "கேலக்ஸி' வரிசையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, "கேலக்ஸி எஸ்', "கேலக்ஸி எஸ் 2' மற்றும் "எஸ் 3', "கேலக்ஸி நோட்', "கேலக்ஸி நோட் 2', "கேலக்ஸி ஒய்' உட்பட, 13 வகையான ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
samsung
இந்நிறுவனத்தின் அலைபேசி சாதனங்கள் விற்பனையில், "கேலக்ஸி' பிரிவின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது.
2012 ஜனவரி முதல், ஜூன் வரையிலான அரையாண்டில்இந்தியாவில்   10.24 கோடி அலைபேசி சாதனங்கள் விற்பனையாகி உள்ளன.
 ஸ்மார்ட் போன்வகைகள்  விற்பனை 55 லட்சம்ஆகும் .
 சாம்சங் 41.6%,  நோக்கியா 19.2 %,ரிம் 12.1% ஆக விற்பனை விகிதம் உள்ளது .
இப்படி அலை பேசிகள் விற்பனை இருக்கும் போது இந்த அலைபேசி துறையில் முதலிலேயே கால் பதித்த  மோட் டரொலோ  நிறுவனமோ தனது சென்னை தயாரிப்பை கட்டுபடியாகாமல் மூடுகிறது .
மோட்டாரோலா மொபிலிட்டி நிறுவனம், சென்னையில் அதன் அலைபேசி சாதனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்பிரிவை, வரும் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் மூட உள்ளது.
பதிவேற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு, 172 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட இப்பிரிவில், அலைபேசி சாதனங்களில் மென்பொருள்களை பதிவேற்றுவது மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
motorolo
இனிமேல் தனது  அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக, வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி சாதனங்களை விற்பனை செய்ய, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கூகுள் நிறுவனம், மோட்டோரோலா குழுமத்தின் அலைபேசி சாதன பிரிவை கையகப்படுத்தியது.தென்கொரியா சர்வதேச அளவில், மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தில், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில், 4,000 பே ர்களை வீட்டுக்கு அனுப்ப  முடிவு செய்து ள்ளது.
 மொத்தம் உள்ள, 90 தொழிற்பிரிவுகளில், மூன்றில் ஒரு பங்கை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி  500 பேரைக் கொண்ட தென்கொரிய பிரிவை மூடப்போவதாகவும்  இந்நிறுவனம் அறிவித்தது. 
---------------------------------------------------------------------------------------------------------- 
 வருகிறது நில நடுக்கம் ,
இந் தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள இமய மலை பூகம்ப ஆபத்து அதிகம் உள்ள பகுதி ஆகும். இந்த பகுதியில் கடந்த 1897, 1905, 1934, 1950 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது 7.8 முதல் 8.9 ரிக்டர் அளவு வரை பூகம்பம் உண்டா னது. அதன்பிறகும் அந்த பகுதியில் பலமுறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டு இருக் கிறது.
வருங்காலத் தில் இமயமலைப் பகுதி யில் கடுமையான அள வில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிங் கப்பூரைச் சேர்ந்த நன் யாங் தொழில்நுட்ப பல் கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு ஒன்று எச்சரித்துள் ளது.
suran
பால் டப்போனியர் தலைமையிலான விஞ்ஞா னிகள் குழு நடத்திய ஆய் வில் இது தெரிய வந்துள் ளது. இந்த குழுவில் நேபா ளம், பிரான்சு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இடம் பெற்று இருந்தனர்.
ஆய்வு தொடர்பாக அந்த குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் இமய மலைப் பகுதியில் 1255 மற்றும் 1934 ஆகிய ஆண் டுகளில் இரு மிகப்பெரிய பூமி அதிர்ச்சிகள் ஏற்பட் டன. குறிப்பாக 1934ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம் பத்தின் போது இமய மலையின் தென் பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள நிலத்தட்டில் 150 கிலோ மீட்டர் நீளத்துக்கும் மேலாக வெடிப்பு ஏற்பட் டது.
இதனால் அந்த பகு தியின் நிலப்பரப்பிலும் சிறிது மாற்றங்கள் நிகழ்ந் தன. வருங்காலத்தில் இமய மலைப் பகுதியில் பெரிய அளவில் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பூகம்பங்கள் 8 முதல் 8.5 ரிக்டர் அளவு வரை இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காஷ் மீர் மாநிலத்தில் இரு நாட்களுக்கு முன் இரவு 11.20 மணி அளவில் 5.9 ரிக்டர் அளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. 
இதனால் அதிக சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நில நடுக்கம் ஆப்கானிஸ்தா னில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மைய மாக கொண்டு ஏற்பட் டுள்ளது 
இதேபோல் திரிபுரா மாநிலத்தில் இந்தியா-வங்காளதேசம் எல்லை யையொட்டிய பகுதியில் நேற்று பிற்பகல் 1.47 மணிக்கு 4.2 ரிக்டர் அள வில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அதில் சேதம் எதுவும் ஏற்பட வில்லை.
ஆனால் இந்த பூமி அதிர்ச்சி  தொடரும் 8  ரிக்டர் அளவுக்கு வரும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.8 ரிக்டர் அளவு நில நடுக்கம் அதிக சேதத்தை உண்டாக்கும்
------------------------------------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் பெண்களின் கல்வி உரிமைக்காக போரா டிய 15 வயது மாணவி மலாலாவை, பள்ளி வாகனத்தில் வந்தபோது தாலிபன் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து பாகிஸ் தான் ராணுவ மருத்துவ மனையில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த மலாலா, தற் போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின் றார். 
malala
அவரை சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது மகளுடன் லண்டனுக்கு சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், பாகிஸ் தானில் உள்ள ஒரு பெண் கள் கல்லூரிக்கு மலாலா வின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவை எதிர்த்து சுமார் 150 மாணவிகள் வகுப்பு களை புறக்கணித்தனர். மலாலாவின் பெயர் சூட் டப்பட்டால் அந்த கல் லூரியில் படிக்கும் தங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அக்கல்லூரி மாணவிகள் அச்சம் தெரிவித்தனர்.ஆனால்  உணமையிலேயே அப்பெண்களை  சிலர் அச்சுறுத்தியதாலேயே அப்படி எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது.
 மலாலா, தனது பெயரை அந்த கல்லூரிக்கு சூட்டும் முடிவை கைவிடும்படி வேண்டுகோள் விடுதாக கல்லூரி அலு வலர் ஒருவர் கூறியதால் இந்த பெயர் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
___________________________________________________________________________________________ 
இதுவும் வாழ்த்துதாங்க

ஆண்டின் கடைசியில் இருக்கிறோம் .
ஒவ்வொரு ஆண்டும் மிக நல்லதாக நாட்டுக்கும்,தனிப்பட்ட முறையிலும் அமைய எண்ணுகிறோம்-விரும்புகிறொம்.ஆனால் அப்படி அமைவது போல் தெரியவில்லை.நாட்டை ஆள்வோர் எடுக்கும் ஒ வ்வொரு முடிவும் நாட்டை மட்டுமல்ல நமது தனிப்பட்ட வாழ்வையும் செல்லும் திசையை முடிவு செய்கிறது.
suran

அதுவும் உலகமயமாக்கல் வந்து சேர்ந்த பின் வெளிநாட்டினர் எடுக்கும் முடிவு கூட நமது பாதையை தீர்மானிக்க ஆரம்பித்து விட்டது.
இயற்கை மட்டுமே அனைத்தையும் திசை மாற்றும் மாபெரும் சக்தி என்பதை நாம் ஆழிப்பேரலை -நிலநடுக்கம்-எல்நினோ போன்றவைகளின் தாக்கங்களுக்குப்பின் உணர்ந்திருக்கிறோம்.
இயற்கை,-ஆட்சியாளர்கள்-,அவர்களை வழிநடத்தும் அமெரிக்கா -இவர்கள் மூவரும்தான் இன்றைய இந்திய மக்களின் தலைவிதியை முடிவு செய்யும் மும்மூர்த்திகள் இவர்கள் கரூணை இந்த 2013 புத்தாண்டில் கிடைக்க வேண்டும் .
உங்களுக்கு கிடைக்கும் .
 வரும் 2013 ஆங்கிலப்புத்தாண்டு உங்களுக்கு நல்லதாக அமைய வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------

முக நூலில் இருந்து தரவிறக்க ,
-------------------------------------------------

ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை தினமும் வந்து செல்லும் உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழுகின்றது.


இத்தளத்தில் பகிரப்படும் பல்வேறு வீடியோ மற்றும் MP3 கோப்புக்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்துக் கொள்வதற்கு Bigasoft Facebook Downloader எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.


இது தவிர இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் MP3 கோப்புக்களின் போர்மட்களை விண்டோஸ் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு, மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பதும் இதன் சிறப்பியல்புகள் ஆகும்..
 

------------------------------------------------------------------------------------------------------------ 

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

கமலின் விஸ்வரூபம் 3 மணி நேரத்தில் 300 கோடி ரூபாய்கள் -


நண்பர் நாகராஜன் ரவி முகனூலில் வெளியிட்ட தகவல்.

உண்மையில் இன்றுவரை கமலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றவர்கள் இப்போது உண்மை நிலை அறிந்து மனதில் பிரமிப்பு அடைந்திருப்பார்கள்.
இத்துடன் உலக நாயகன் கமல்ஹாசன் ஓய்ந்தான் என்று மனதில்  எண்ணியவர்களூக்கு இது ஒரு சோகம் தரும் செய்திதான்.


300 Crores in 3 Hours - Content suitable for ALL - Viswaroopam Strategy from a MBA point of view............கமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் பாகம் - 2
300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் -
அதுவும் இது ஏர்டெல் டிஷ் வசூல் மட்டும்தான்.
 இன்னமும் சண்,டிஷ் டி .வி,ரிலயன்ஸ் ,டாடா ஸ்கை ,விடியோகான் இருக்கிறது.
 என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.

நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.

1000 ருபாயான்னு கேக்குறவங்களுக்கு - எந்த புது படம் வந்தாலும் தியேட்டர் காரர்கள் செய்யும் முதல் வேலை " 300 காம்போ பேக்கஜ் தான் 7 நாளைக்கு" அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம் கருப்பு கலர் பாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான் வினியோகஸ்தர் மட்டும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூனு லிட்டர் பெட்ரோல் 210. மூனு பேர் படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பனால். இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை - வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம் செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால் நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான் பாக்கியம்.
நேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க.
 என்னை பொறுத்த வரை 50 லட்சம்  பேர் பார்த்தா கூட 500 கோடி ரூபாய் 3 மணி நேரத்தில். 2000 பிரின்ட் பந்தா இல்லை, பர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லை, பீராபிஷேகம் இல்லை, பீத்தல் இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும் விஸ்வரூபம் ....... கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்.........

கமலின் இந்த விஸ்வரூபம் ஹாலிவுட் கம்பெனி வரை பரவும் வருடம் 2013.
 சரித்திரம் உன் பெயர் சொல்லும் - இதை அருகில் இருந்து அன்பாய் , அதட்டலாய் சொல்லிய பல தருணங்களில் உங்களுடன் பழகியவன், பயணித்தவன் என்ற உரிமையில் "you've got what it takes - நன்றியுடன் நாகராஜன் ரவி.
திரையரங்கு காரர்களுக்கும் கைபிடித்தம் வராத வகையில் அனைத்து திரையரங்குகளிலும் ராஜ் கமல் நிறுவனமே விகிதாச்சார வகையில் படத்தை வெளியிடுகிறது.நட்ட வந்தாலும் அது ராஜ் கமலைத்தான் சீரும்.திரையரங்கைப் பாதிக்காது. பின்னரும் திரையரங்குக்காரர்கள் ஏன் பயத்தில் இருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.?
கமல்ஹாசனுக்கு சிக்கல்கள் வரும்போது அதை மகிழ்வுடன் முதல் பக்கத்தில் வெளியிட்டு அரிப்பை தீர்த்துக்கொள்ளும் தமிழ் ஊடகங்கள்  இது போன்ற கமலின் சாதனை செய்திகளை மட்டும் வெளியிடாமல்  கண்ணை மூடிக்கொண்டிருப்பது வழக்கம் என்றாலும் இதுவரை வெளியிட்ட செய்திகளின் தொடர்ச்சியாக வெளியிடலாமே.ஏன் இந்த செய்திகளை வெளியிடவில்லை.இதுதான் தமிழகப் பத்திரிக்கை தர்மம்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் என்ற நட்சத்திர ஓட்டலில் படத்தின் வெளியீடு குறித்து முறைப்படி அறிவிக்கிறார் கமல். 
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி தலைவர் அமீர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி திரையரங்க உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்திருப்பூர் சுப்பிரமணியம் போன்றோர்  கலந்து கொண்டு கமலுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள். 
விஸ்வரூபம் படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் ராஜ்கமல் பிலிம்சுடன் ஒப்பந்தம் போட்டு வருகிறார்கள்.
 தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் திரையிட கமல் முடிவு செய்திருக்கிறார். 
கமலுக்கு பெருகி வரும் இந்த ஆதரவால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி:  நாகராஜன் ரவி 

 
 

கையாலாகாத்தன்மை

டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி மாணவி கற்பழிப்புக்காக நடந்த போராட்டம்,அதிர்வலைகள்,பிரதர்,கு டியரசுத்தலைவர் வரையிலானவர் அறிக்கைகள் சற்று அதிகமாகவே இந்தியாவை குலுக்கி விட்டது.இதற்கான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டது அநியாயம் என்றாலும்,அவர் தானாகவே செத்துப்போனதாக திசை திருப்பியது அதிலும் அநியாயம்.
suran

இந்த போராட்டங்கள் இதுவரை இது பொன்ற கற்பழிப்புகள் இந்தியாவிலேயே நடைப்பெற்றது கிடையாது.
இதுதான் முதல் அக்கிரமம்  அதனால் மக்கள் கொதித்து எழுந்தது போல் ஒரு பிம்பத்தை உண்டாக்கி விட்டது.
இது போன்ற சம்பவங்களில் தன்னிச்சையாக முதலிலேயே பெண்ணுரிமை இயக்கங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவைகள் இது போன்று போராட்டங்களை வழி நடத்திருந்தால் இந்த சமபவங்களே நடந்திருக்காது.
 
வாச்சாத்தியில் அரசு ஏவலர்களே  கிராமத்தையே சூறையாடி-அதில் உள்ள சிறுமிகள் வரை பெண் என்று இருந்தாலே கற்பழித்து ஒரு பெண் ஆளும் போதே களங்க்கப்படுத்தினார்களே அப்போது இது போன்றது குட அல்ல சிறு அளவிலான முணுமுணுப்பு கூட எழாதது இன்னமும் வேதனையையும் ஆச்சரியத்தையும் தருகிறது.

கிட்ட தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர்தான் நீதியே காகித அளவில் கிடைத்துள்ளது.அதுவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தினால்.
கல்வியறிவற்ற கூலித் தொழிலாளியான விஜயா என்ற பெண், தனது 17 ஆவது வயதில்
(1993 ஆம் ஆண்டில்) பாண்டிச்சேரியைச் சேர்ந்த 6 போலிஸ் காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
suran
நீதி?கேட்கும் போராட்டம்.

 இது தொடர்பான வழக்கு 13 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியில் அந்த காவலர்கள் யா ரும் தண்டிக்கப்படவே இ ல்லை.
டெல்லி பெண் கற்பழிப்பு சரிதான் என்றும்,அல்லது அதற்கு போராட்டம்தேவை இல்லை என்பதும் இதன் நோக்கம் அல்ல.இது போன்ற இன்னும் நிறைய கற்பழிப்புகள் இருக்கும்போது அதற்கு நியாயங்கள் கிடைக்காத போது இந்த மக்கள் கூட்டம் அவைகளை கண்டு கொள்ளாமல் இதை மட்டும் இவ்வளவு கோபத்துடன் எதிர் கொள்வது ஏன் ?அதிலும் இந்த போராட்டங்கள் நடக்கும் வேளை இது போன்ற கற்பழிப்புகள் பல நடந்து செய்திகளாகவும் வந்தன அவை பற்றி இவர்கள் கண்டு கொள்ளவே இல்லை .அந்த டெல்லிப் பெண்ணுக்கு மட்டுமே பொராட்டமாக்கிக்கொண்டனர்.
அப்பெண் இப்போது இறந்து விட்டதற்கு கூட இரண்டு நாள் கடை அடைப்பு,புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டதாக நட்சத்திர ஓட்டல்கள் ,வணிகர்கள் அறிவித்துள்ளனர்.இந்தியாவில் எத்தனையோ கொடுர கற்பழிப்புகள் நடந்துள்ளன,நடக்கின்றன.இனியும் நடக்கலாம்.ஆனால் இப்போது இந்த பெண்ணுக்கு மட்டும்  ஏன் இத்தனை முக்கியத்துவம்,போராட்டம்?அதே வேளையில் இங்கு தூத்துக்குடியில் அதைவிட அனியாயமாக கற்பழித்து கொல்லப்பட்ட புனிதாவையும் சேர்த்து இந்திய அளவில் ஏன் போராடவில்லை?
suran

சரி போகட்டும் .இந்தியாவில் 2011 ஆண்டு கொள்ளாமல் விடப்பட்ட  கற்பழிப்பு களை பார்ப்போம்.
தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
 இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இதுவரை இந்தியாவில்  4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது கணக்கில் வந்தது மட்டும்தான் .அசிங்கத்துக்கும்,அவமானத்துக்கும் பயந்து காவல்துறையில் முறையிடாப்படாதது இதே அளவை எட்டும் என்று தெரிகிறது.
மும்பையில்  அக்டோபர் மாதம் தமது மூன்று பெண் நண்பர்களை பாலியல் தொந்தரவில் இருந்து காக்க முற்பட்ட கீனன் சன்டோல் மற்றும் ரூபென் பெர்னாண்டஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
 அவ்வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணை கூட இன்னும் காவலர்கள் முடிக்க வில்லை.
அரசியல்வாதிகளாலும்,ஊடகங்களாளும்தான்  இது போன்ற சிலருக்கு அதிக விளம்பரமும்,முக்கியத்துவமும் .சில இதே தரமானவற்றை கண்டு கொள்ளாமலும் உருவாக்கும் நிலை எற்படுகிறது.முக்கியத்துமும் இன்றி போகிறது.
''இந்தியாவின் வீரப்பெண்மணி மறைந்து விட்டார்."-இது டெல்லி மாணவியின் மரணத்துக்கு இந்தியாவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கை.கற்பழிப்புக்கு ஆளாகி மரணமடைவது ஒரு வீரமா?இது போன்ற அவலங்களை  தடுக்க இயலா கையாஅலகதவர்களின் அறிக்கை.மக்களை திருப்திபடுத்தும் வகையில் மட்டுமே வெளியாகிறது.வேறு என்ன செய்து மக்களை ஏமாற்றுவது?தங்கள்  கையாலாகாத்தன்மையை மறைப்பது?
இது கற்பழிப்பு வீரர்களுக்கு பரிசாக எந்த ஆண்மை காரணமோ அதை விலங்குகளுக்கு நீக்கி விடுவதுபோல் அகற்றி விடுவது அல்லது காயடிப்பு செய்வதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.
அரசுக்கு இதுபுதிய அல்லது  முடியாத செயல் அல்ல.மிசா காலத்தில் சாலையில் இரவு வரும் ஆண்களையெல்லாம் கூட்டிக்கொண்டு சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த அனுபவம் இருக்கிறதே?
இது பொன்ற தண்டனைதான் மற்றவர்களுக்கும் இந்த கற்பழிப்பு சிந்தனையையே வர விடாமல் செய்தும் விடும்.

suran
-------------------------------------------------------------------------------------------------------------------------------

தண்ணீருக்கு நானடிமை.

--------------------------------------------
இங்கிலாந்தைச் சேர்ந்த இருபத்தாறு வயது சாஷா கென்னடி தண்ணீர் குடிக்கின்ற பழக்கத்துக்கு அடிமையாகி இருகின்றார்.
இவர் ஒவ்வொரு நாளும் இருபத்தைந்து லிட்டர் குடிக்கிகின்றார். இவரால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.  இரவிலும் இதே நிலைதான்.
எனவே எந்த நேரமும் எங்கும் தண்ணீர் பாட்டில்களை காவிக் கொண்டுதான் செல்கின்றார். அத்துடன் ஒரு நாளில் குறைந்தது நாற்பது தடவைகள் கழிவறைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.
suran
இரண்டு வயதாக இருந்தபோது அடங்காத தண்ணீர்த் தாகம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தண்ணீர் என்று பெற்றோரை விடாமல் கேட்டு வந்திருக்கின்றார். வைத்தியர்களிடம் கொண்டு போய் பெற்றோர் காட்டி இருக்கின்றனர். ஆனால் எந்தவொரு கோளாறும் கிடையாது என்று சொல்லி வைத்தியர்கள் அனுப்பி விட்டனர்.
இவருக்கு ஆறு வயது ஆனது. இவரது படுக்கைக்கு அருகில் அம்மா ஒவ்வொரு இரவிலும் சில லிட்டர் தண்ணீர் வைப்பார்.
பாடசாலைக்கு தண்ணீர் போத்தல்களுடன் சென்றார். இடைவேளைகளின்போது ஏனைய பிள்ளைகள் விளையாடி மகிழ்வார்கள். இவரோ தண்ணீர்க் குழாயடிக்கு சென்று தண்ணீர் நிரப்பிக் கொண்டு இருப்பார். அதிலேயே நேரம் போய் விடும்.
இவருக்கு பதின்மூன்று வயது ஆனது. ஒவ்வொரு நாளும் பதினைந்து லிட்டர்  தண்ணீர் குடிக்கலானார். இவருடைய படுக்கை அருகில் ஐந்து லிட்டர்  தண்ணீர் கான் ஒவ்வொரு இரவிலும் வைக்கப்பட்டது.
இவருக்கு பதினாறு வயது ஆனது. பாடசாலை படிப்பை விட்டு விட்டு வேலைக்கு செல்ல தொடங்கினார். அலுவலகத்தில் இவருக்கு அருகில் தண்ணீர் கூலர் வைக்கப்பட்டது. இருபது வயது ஆனபோது இருபது லிட்டர்  தண்ணீர் தினமும் குடிக்கலானார். ஆயினும் இவரது தண்ணீர் தாகம் உச்சம் அடைந்து கொண்டே செல்லல் ஆயிற்று.
 drinking_water_2
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டிலிருந்து வீட்டில் இருந்தவாறு ரெலிகொம் நிறுவனம் ஒன்றுக்கு வேலை பார்த்து வருகின்றார். தற்போது ஒவ்வொரு நாளும் பதினெட்டு லிட்டர் முதல் இருபத்தைந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்கின்றார். இவரால் இப்போது ஒரு நாளைக்கு ஆகக் கூடியது ஒரு மணித்தியாலமும் பதினைந்து நிமிடமும் வரை தொடர்ச்சியாக தூங்க முடிகின்றது. தண்ணீர் குடிக்கின்றமைக்கு அல்லது மலசலகூடத்துக்கு செல்லத்தான் தூக்கத்தை விட்டு எழுவாராம். 
-------------------------------------------------------------------------------------------------------------

அயோத்தி

1949 ஆம் ஆண்டு அயோத்தியில் ஒரு மசூதியில் நடைபெற்ற ஒரு சம்பவம், அதனால் ஏற்பட்ட பதற்றம் மற்றும் வன்முறையால் இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன.  அதன் பின்னர் பொறுப்பேற்ற ஐந்து பிரதம மந்திரிகளுக்கும் இந்த விவகாரம் தீராத தலைவலியை உண்டாக்கியது. 
சராயு நதி, நேபாள நாட்டின் எல்லையோரம் வழியாக வட  இந்தியாவில் நுழைந்து கங்கையுடன் சங்கமித்து அயோத்தி நகரம் வழியாக பாய்ந்து செல்கிறது. 1949ல் அயோத்தி  நகரம் கோயில்கள், ஆசிரமங்கள் மற்றும் மடங்கள் நிறைந்த ஒரு நகராக அறியப்படுகிறது. பண்டைக் காலம் முதல் இந்நகரம், ராமரின் பிறந்த ஊராக கூறப்பட்டு வருகிறது. "அயோத்தி" என்பதற்கு "எவராலும் வெல்ல முடியாத" என்று சமஸ்கிருதத்தில் பொருள் கொள்ளப்படுகிறது. இந்நகரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் வசித்து வந்தாலும், நெற்றியில் பட்டை  தீட்டிக்கொண்டு, நீண்ட தாடியுடனும், பெரிய அங்கியுடனும் சுற்றி வரும் சாதுக்களால் இன்று இருப்பது போலவே அன்றும் நிறைந்து காணப்பட்டது. 
1930ல் நாற்பது வயது மதிக்கத்தக்க அபிராமதாஸ் என்கிற ஒரு சமயகுரு பீகாரில் இருந்து அயோத்திக்கு வந்திருந்தார். இவர் தீவிரமான ராம பக்தராவார். அவருடைய சீடர்கள் கூறுகையில், "ராமரை அவர் பிறந்த இடத்தில் பிரதிஷ்டை செய்வதே தனது வாழ்வின் லட்சியம்" என்று சூளுரைத்து வந்ததாக தெரிவிக்கின்றனர். அவர் கூறிய இடத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் முகலாய சக்கரவர்த்தியான பாபரின் படைகள் கட்டிய மசூதி ஒன்று இருந்து வந்தது. குரான் மற்றும் பெர்சிய மொழி எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட செய்யுள் அடிகள் அதன் சுவர்கள் முழுவதும் காணப்படுகின்றன. 
மசூதி இருந்த இடம் ஒரு சுவரால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் ஒரு சிறிய மர  மேடை அமைத்து அதன் மீது ஒரு ராமர் சிலையை வைத்து இந்துக்கள் வழிபட்டு வந்தனர். திரு அபிராம தாஸுக்கு  ராமர் சிலையை அந்த மசூதிக்கு உள்ளேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற விபரித எண்ணம் தோன்றியது. அவரைப் போலவே பல சாதுக்களுக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது.
அவர்கள், அங்கே பழங்காலத்தில் ஒரு இந்துக் கோயில் இருந்ததாகவும், அதை தகர்த்துவிட்டு இந்த மசூதி எழுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறி வந்தனர். இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாகவே இரு பிரிவினருக்கும் அடிக்கடி வன்முறை வெடித்து வந்துள்ளது.  
அபிராம தாஸ் தன சீடர்களிடம், தன்  கனவில் அடிக்கடி ராமபிரான் அந்த மசூதியின் மைய மண்டபத்தில் தோன்றி காட்சி தருவதாக கூறிவந்தார் 
1949 ஆம் ஆண்டின் மத்திய காலகட்டத்தில், அவர் தான் கண்ட கனவை பாயிசாபாத் தின் நகர சட்டநடுவரான  (மாஜிஸ்திரேட்) குரு தத் சிங்கிடம் தெரிவித்தார். ஆச்சரியப்பட்டுபோன திரு சிங், "சகோதரரே, எனக்கும் இந்தக் கனவு நெடு நாட்களுக்கு முன்பே தோன்றியது, இப்போது உங்களுக்கு வந்துள்ளது" என்றார். பின்பு இருவரும் ராமரின் உருவச்சிலையை அந்த இடத்தில் எவ்வாறு  வைப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் இறங்கியதாக திரு  சிங்கின் மகனான திரு குரு பஸ்வந்த் சிங்க¤டம¢ தெரிவிக்கிறார்.  
அதன் பிறகு ஏற்பட்ட சம்பவத்தை பல இந்துக்கள் தெய்வச் செயல் என்றே நம்ப ஆரம்பித்தனர். ஆனால் திரு குரு பஸ்வந்த் சிங் இதை மறுத்து, மிகவும் தெளிவாக திட்டமிடப்பட்டு காரியம் நடந்துள்ளதாக தெரிவிக்கிறார். 
பிரிவினைக்கு முன்னால், அதாவது 1941 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்  தொகை, மொத்த மக்கள் தொகையில் 24.4% ஆக இருந்துள்ளது. பிரிவினைக்கு பின்னர் ஒரு பத்து வருடம் கழித்து அது 10% ஆக  குறைந்துள்ளது. 
பிரதமராக பொறுபேற்றுக் கொண்ட திரு நேரு, இந்தியாவை பல வகையில் சீர்படுத்தி, பல மதங்கள் ஒன்றாக, சகோதரத்துவத்துடன் வாழவும், உலக அரங்கில் இந்தியா  ஒரு மத சார்பற்ற நாடாக அடையாளம் காணப்பட பெரிதும் பாடுபட்டார். ஆனாலும் பல இந்துக்கள், பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தான் நாடு உண்டானதையும், "விருப்பப்பட்ட இஸ்லாமியர்கள் இங்கேயே இருக்கலாம், அல்லது அங்கே செல்லலாம்" என்கிற வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.  காங்கிரஸ் கட்சியிலேயே சிலர், இந்தியாவை இந்து சார்பு கொண்ட நாடாக மாற்ற ஆர்வம் கொண்டிருந்தனர். அனைத்திந்திய இந்து மகாசபை அமைவதற்கு இவர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயும் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் தான். 1949 ஆம் ஆண்டு அவன் தூக்கிலிடப்பட்டான்.  
பிரிவினைக்கு பிறகும் அயோத்தியில் பல இஸ்லாமியர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். இஸ்லாமிய கலைத் தொழிலாளி உண்டாக்கிய இந்துக் கடவுள் சிலைகளை இந்துக்கள் வணங்கி வந்தனர். இந்துக் கோயில் குருக்கள், பூஜைக்கு துணிகளையும் மலர்களையும் இஸ்லாமியக் கடைக்காரரிடமிருந்து வாங்கி வருகின்றனர். அயோத்தியில் உள்ள ஒரு இந்துக் கோயிலுக்கு ஒரு இஸ்லாமிய மேலாளரும் உள்ளார் என்பதும் சுவாரஸ்யமான ஒரு தகவல்.  அன்று, முகம்மது அசிம் அன்சாரி என்கிற 25 வயது தையல்காரர் "நாங்கள் ஏன் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? நாங்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள்" என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது. 
பாயிசாபாதின் சட்ட நடுவரான திரு குரு தத் சிங், அலஹாபாத் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்றவராவார். சிவில் சர்வீஸ் துறையில் சேர்ந்தாலும் சில விஷயங்களில் பிரிட்டிஷ் மேலதிகாரிகளிடம் வேறுபட்டு நின்றார். இவர் தலைப்பாகை அணிந்து கொள்வார், அவர்களோ தொப்பி அணிவதை விரும்புவர். நீங்கள் ஏன் தொப்பி அணியக் கூடாது? என்று அவர்கள் கேட்டால், நீங்கள் ஏன் தலைப்பாகை அணியக் கூடாது? என்று எதிர் கேள்வி கேட்பார் என்று அவர் மகன் கூறுகிறார். 
கலவரங்களை அடக்குவதில் பாகுபாடு காட்டாமல், கண்டிப்புடன் செயல்பட்டார். சில சமயங்களில் இந்துக்களிடமே அவர் "ஏதேனும் நீங்கள் வன்முறையோ குழப்பமோ விளைவித்தால், "உள்ளே லாக்கப்பில் தள்ளிவிடவும் தயங்க மாட்டேன்" என்றும் கண்டிப்பு காட்டுவார்.  இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடும் போது , "நீங்கள் எல்லோரும் என் சகோதரர்கள், நாம் எல்லோரும் இந்தியத் தாயின் பிள்ளைகள்"  என்று அன்பொழுக பேசுவார் என்றும் அவர் மகன் கூறுகிறார். 
பணியில் திறம்பட நேர்மையாக பணியாற்றினாலும், சிறுபான்மையினரை குறிப்பாக இஸ்லாமியர்களை திருப்தி படுத்தும் அரசாங்கத்தின் போக்கு அவருக்கு பெருத்த மன வேதனையை உண்டாக்கியது. பாகிஸ்தான் என்கிற நாடு உதயமானதை அவர் விரும்பவில்லை என்றாலும், "உங்களுக்கென்று ஒரு நாடு உண்டாக்கப் பட்டதென்றால் , நீங்கள் அங்கு செல்வது தான் முறை" என்கிற சிந்தனை அவரிடம் இருந்ததாக அவர் மகன் கூறுகிறார். 
திரு சிங் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். எந்த விதமான தீய பழக்கங்களும் அவரிடம் இல்லை. கல்லூரிக் காலம்  தொட்டு ராமபிரானை கடவுளாக வணங்கி வந்தார். ராமர் என்பவர் விஷ்ணுவின் மறுவடிவம், விஷ்ணு காக்கும் கடவுளாகவும், பிரம்மா படைப்பவராகவும், சிவன் அழிப்பவராகவும் அறியப்படுவர்.  
இந்து மத குறிப்புகளின் படி, ராமர் அயோத்தியில் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் பிறந்தவர். அவர் தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாவார். அவர் சூரிய வம்சத்து வழித் தோன்றலாக அறியப்பட்டவராவார்.  ராமர் "மரியாதை  புருஷோத்தமர்" என்கிற உயர்ந்த பட்டத்தையும் பெற்றவராக திகழ்ந்தார். தன்  மனைவியான சீதாவை இலங்கை அரக்கனான ராவணனிடம் இருந்து போரிட்டு வென்று, அவளை  மீட்டு அயோத்தி நகருக்கு திரும்பினார் என்று சமஸ்கிருத ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அயோத்தியின் அரசனாக திறம்பட ஆட்சி செய்தார் என்றும், இறுதிக் காலத்தில் அயோத்தியில் ஒரு கதவு வழியாக சொர்கத்திற்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.  
திரு சிங்கிற்கு வயதான அதே வேளையில், ராமரை அவர் பிறந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யும் வைராக்கியமும் அதிகரித்தது. இஸ்லாமியர்கள் பாபர் மசூதியை மனமுவந்து தங்களுக்கு தர வேண்டும் என்றும் விரும்பினார். "நான் அவர்கள் மதத்தை மதிக்கும் போது, அவர்களும் அது போல செய்யலாமே" என்று கூறுவார் என்று அவர் மகன் தெரிவித்துள்ளார்.  
1940ம¢ ஆண¢டு மத்தியில், திரு சிங், இந்திய தேசிய  சிவில் துறையில் பணிபுரியும் நிர்வாகச் செயலரான திரு கே.கே.நாயரை சந்தித்து பேசினார்.  இந்தத் துறைதான் இன்றைய ஐ.ஏ.எஸ். துறைக்கு முன்னோடியாக விளங்கியது. திரு நாயர் கேரளத்தை சேர்ந்தவராவார். இந்த இருவரின் எண்ண  ஓட்டமும் ஒரே மாதிரியாக இருந்தது. மேலும் இருவரும் இந்து மகாசபை கட்சியை ஆதரித்து வந்தனர். அவர்களின் அரசாங்க பதவியினால், இருவராலும்  வெளிப்படையாக ஆதரித்து செயல்பட முடியவில்லை.  
அவர்கள் இருவரும் தங்களை அயோத்திக்கு மாற்றுமாறு, தங்கள் மேலிடத்திற்கு விண்ணப்பம் வைத்தனர். 1948 ஆம் ஆண்டு திரு சிங், நகர சட்ட நடுவராக அங்கே பொறுபேற்றார். அதே வேளையில், திரு நாயரும் மாவட்ட சட்ட நடுவராக பொறுபேற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும் இப்பொழுது உயிருடன் இல்லை.  திரு நாயரின் மகனிடம் மேற்கொண்டு தகவல்களை பெற முயன்றபோது, அவர் பேட்டி எதுவும் தர மறுத்துவிட்டார்.
திரு சிங், திரு நாயர், திரு அபிராம தாஸ் மற்றும் பிற அதிகாரிகள் இரவு நேரத்தில் திரு சிங்கின் இல்லத்தில் கூடி ராமர் சிலையை எவ்வாறு மசூதியினுள் பிரதிஷ்டை செய்வது என்பது பற்றி ரகசியமாக விவாதித்தனர்.  அப்போது தனக்கு 15 வயது இருக்கும் என்றும், இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் போது, தான் அவர்களுக்கு நீரும், தேனீரும் அளிக்கச் சென்றதாகவும், சில சமயங்களில் கதவருகே நின்று  அவர்கள் என்ன பேசினார்கள் என்று கேட்டதாகவும் திரு சிங்கின் மகன் தெரிவிக்கிறார்.  
திரு குரு பஸ்வந்த¢  சிங்கின் கூற்றுக்களை திரு மகாந்த் சத்யேந்திர தாஸ் உறுதிப்படுத்துகிறார். இவர் திரு அபிராம தாஸின் சீடராக இருந்தவர் இப்பொழுது இவரை அரசாங்கம் தலைமைச் சமயகுருவாக நியமித்துள்ளது. 1958 ஆம் ஆண்டு இவர் திரு அபிராம தாஸிடம் சேர்ந்துள்ளார். அவர் கூறுகையில்:  
மாவட்ட உயர் அதிகாரிகள், திரு கே.கே.நாயர், மற்றும் திரு குரு தத் சிங் உட்பட திரு அபிராம தாஸுடன் கூட்டுச் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி, பூட்டிக் காவலில் இருக்கும் பாபர் மசூதிக்குள் எவ்வாறு ராமர் சிலையை வைப்பது என்பது பற்றி விவாதித்தனர். 
ஒரு இந்துக் காவலாளி மதியம் மற்றும் மாலை வேளைகளில் மசூதியில் காவல் பணியில் இருந்தார்.  ஒரு இஸ்லாமியக் காவலாளி இரவு நேரக் காவல் பணியில் இருந்தார். திரு அபிராம தாஸையும் மற்றும் சில சிறிய சாதுக்கள் கூட்டத்தையும் உள்ளே அனுமதிக்க இந்துக் காவலாளி ஒப்புக் கொண்டார். இந்து மதத்திற்கு ஒரு மிகப் பெரிய புண்ணிய செயல் செய்து பயன் பெறுவாய் என்று கூறி அவர் மனதைக் கரைத்தனர்.  இந்துக் காவலாளி பின்னர் நடு இரவில் இஸ்லாமியக் காவலாளியிடம் மசூதியின் சாவிகளை ஒப்படைத்துச் சென்றுவிடுவதாக திட்டம் ஏற்பாடானது. மறுபக்கம் இஸ்லாமியக் காவலாளியை திரு குரு தத் சிங்கும், கே.கே.நாயரும் சந்தித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினர். அவர் சம்மதிக்க மறுத்தால், உயிருக்கே ஆபத்து நேரக் கூடும் என்று மிரட்டப்பட்டதாக தெரிகிறது.  அந்தக் காவலாளிகளும் அவருடைய வழித் தோன்றல்களும் பற்றி பின்னர் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.  
ராமரின் சிலை ஏழு அங்குல உயரமும் எட்டு உலோகங்களாலும், உருவம் குழந்தை பருவ நிலையிலும் உருவாக்க தீர்மானிக்கப் பட்டது.  சம்பவம் நடந்த பிறகு, திரு நேருவும் அவருடைய அரசாங்கமும்  கோபப்பட்டு என்ன நடவடிக்கை எடுப்பார்கள்  என்று திரு சிங்கும், நாயரும்  நன்கு உணர்ந்திருந்தனர்.  சிலையை அப்புறப்படுத்த வரும் உத்தரவை ஏற்பதைக் காட்டிலும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதே மேல் என்றும் தீர்மானித்திருந்தனர்.  
நவம¢பர¢ 1949 ஆம் ஆண்டு இறுதியில், அயோத்தியில் பதட்டம் அதிகமாக நிலவியது.  சாதுக்களும் ராம பக்தர்களும் மசூதிக்கு வெளியே நெருப்பு மூட்டி யாகத்தை நடத்தினர். ராமரை அவர் பிறந்த இடத்தில் திருப்பிக் கொண்டுவருவது பற்றியும் சொற்பொழிவு நடத்தினர். இதில் அங்கிருந்த இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. 
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று தேதி குறிக்கப்பட்டது.  அன்று இரவு இஸ்லாமியக் காவலாளி காவல் பொறுப்பு ஏற்க வந்த போது, இந்துக் காவலாளி அவரிடம் சாவிக் கொத்தை கொடுத்துவிட்டு சென்றார். அதிகாலை மூன்று மணி அளவில் (இந்து மதத்திற்கு அது அனுகூலமான உகந்த நேரமாக கருதப்பட்டது) அபிராம தாஸும் அவருடன் வந்த சாதுக்களும் சிறிய மணிகளை ஆட்டியபடி தங்கள் பணியைத் துவக்கினர். விளக்கேற்றிய பிறகு, அந்த சிறிய சிலை மைய மண்டபத்தின் உள்ளே வைக்கப்பட்டு, "இரக்கம் நிறைந்த பரந்த மனப்பான்மையுடைய கடவுள் தோன்றினார்"! என்று பாடினார்கள்.  
அந்த இஸ்லாமியக் காவலாளி உள்ளூர் அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில், அதிகாலை மூன்று மணி அளவில் மசூதியின் மைய மண்டபப் பகுதியில் பெரிய ஒளி தோன்றியதாகவும், அங்கு சென்று பார்த்த பொழுது அங்கு சிறிய ராமர் சிலை தானாக உதயமாகி ஒளி  வீசிக் கொண்டிருந்ததாகவும்  தெரிவித்துள்ளார். 
சம்பவம் நடந்த பிறகு, பதட்டத்தை தணிக்க போலீசார் அங்கு வரவைக்கப்பட்டனர்.  சாதுக்கள் கூட்டத்தை கலைக்க,  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில சாதுக்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. திரு சிங்கின் மகன் தன் தந்தையாரும் மற்றவர்களும் தீட்டிய திட்டப்படி போலீஸாருக்கு வானில் சுடும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவிக்கிறார். 
இரண்டு தகவல் தொடர்பாளர்கள் அயோத்திக்கும் பைசாபாதிற்கும் இடையே மிதிவண்டியில் சென்று செய்தி சேகரித்து திரு குரு தத் சிங்கிடம் தெரிவித்தனர்.  அவர் பிரத்யேகமாக நியமித்த ஒரு இந்துப் பணியாளரிடம் தன் கைப்பட எழுதிய தகவல்களை கொடுத்து திரு நாயரிடம் சென்று சேர்க்குமாறு பணித்திருந்தார்.  இவ்வாறு இருவரும் தகவல் பரிமாற்றத்தை பெற்றனர் என்று கூறுகிறார் திரு குரு பஸ்வந்த சிங். மேலும் அவர்,  திரு சிங், தனது இல்லத்தில் வழிபாட்டையும், பூஜையையும் நடத்தி முடித்தார் என்றும், "அவர்  என்ன வேண்டினார் என்று தெரியவில்லை, ஆனால் என் அனுமானப்படி அவர், "எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கட்டும்" என்று கூறியிருப்பார் என்று நம்புகிறேன்"  என்கிறார்.  
பிறகு திரு சிங், அயோத்தியில் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடையுத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் காவல் துறையினருக்கு அவர் "இந்துக்களை தடுக்க வேண்டாம்" என்று மறைமுகமாக உத்தரவிட்டார்.  அவர் தனது பாயிசாபாத் இல்லத்தை விட்டு, அதிகாரிகள் தங்கும் அரசினர் விடுதிக்கு சென்றார். தன்னைப் பற்றி யார் விசாரித்தாலும் வெளியூர் சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். 
அருகில் இருக்கும் ஊர்களுக்கு செய்தி காட்டுத்தீ போல பரவியது.  ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் சிலையை தரிசனம் செய்ய அயோத்திக்கு படை எடுத்த வண்ணம் இருந்தனர்.  திரு அக்க்ஷய பிரம்மச்சாரி, வயது 35 - (இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், மற்றும் தீவிர ராம பக்தரும் கூட), "ராம பக்தர்கள் வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம், "கடவுளை தரிசிக்க வாருங்கள் " என்று எல்லா இடங்களுக்கும் கூவியபடி சென்றனர். உள்ளூர் அதிகாரிகளோ, திரு நாயரோ, ஒருவர் கூட சிலையை அகற்ற அல்லது பதட்டத்தை தணிக்க ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. 
------------------------------------------------------------------------------------------------------------
suran

சனி, 29 டிசம்பர், 2012

மெக்சிகோவின் இன்றைய கதி...


suran


மெக்சிகோ நகரில் உள்ள ஓட்டலுக்கு மெக்சிகோ விமானநிலையத்திலிருந்து டாக் சியில் என்னை ஏற்றிச்சென்ற ஓட்டுநர் ஒரு கணினி பகுத்தாய்நர் ஆவார். என்னை விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்குக் கொண்டு செல்வதற்கு இடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தில் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தின் அவலநிலை குறித்தும் சரளமான ஆங்கிலத்தில் அவர் என்னிடம் தெரிவித்துவிட்டார். 
உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் என்னிடம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஏனெனில், தானும் தன்னைப்போன்றவர்களும் மெக்சிகோவில் படும் துன்பங்கள் குறித்து அப்போதுதான் தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடி யும் என்று அவர் நினைத்தார். வேலையில் லாத் திண்டாட்டம் குறித்தும், தனக்கு ஒரு சரியான வேலை கிடைக்காதது குறித்தும் அவர் என்னிடம் முறையிட்டார். 
தன் குழந் தைகளுக்கும் இதுவே கதி என்று அவர் கூறி னார். அமெரிக்காவையும் அதன் கொள்கை களையும் சமூகத்தில் நிலவும் லஞ்ச ஊழல் களையும் அவர் சாடினார். அதன்பின் மெக்சி கோவில் நான் தங்கியிருந்த ஒரு வார காலத் திலும் எனக்கு இதுபோன்று எண்ணற்ற அனுபவங்கள் ஏற்பட்டன.

பெரும் மால்கள்
suran

டாக்சி பல வர்த்தக நிறுவனங்களையும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும் கடந்து சென்றது. ஆயினும் சிறிய கடைகள் எதை யும் என்னால் பார்க்க முடியவில்லை. மிகப் பெரிய மால்கள், ஆட்டோமொபைல் டீலர்கள், பெட்ரோல் நிலையங்கள், ரெஸ்டாரண்டுகள், மருந்துக்கடைகள், கார் ரிப்பேர் கடைகள் இருந்தன. குடியிருப்பு காலனிகளிலாவது சிறிய கடைகள் இருக்குமா என்று தெரிய வில்லை. 
 1980 மத்திய வாக்கில் இந்தியத் தூதரகத்தில் வேலைக்குச் சேர்ந்த என் நண் பர் ஒருவர், என்னிடம் கூறியபோது, தான் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் எங்கு பார்த் தாலும் பழக் கடைகள் இருந்ததாகவும், மாலையில் ஒருவர் தனக்கு வேண்டிய பழங் களை வாங்கிச் சாப்பிட முடியும் என்றும், ஆனால் இப்போது அத்தகைய கடைகளை எங்கேயுமே பார்க்க முடிய வில்லை என்றும் கூறினார். இந்தியப் பெருநகரங்களின் கதியும் எதிர்காலத்தில் இதுதானோ என்று நான் அஞ்சினேன்.

சிறிய கடைகள் இல்லாதது என்னை மிகவும் வியக்க வைத்ததெனில், மிகவும் ஆழ மான முறையில் ஏற்பட்டுள்ள வேலையில் லாத் திண்டாட்டம்தான் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெக்சிகோவும் 1994 இலிருந்தே நாஃப்டா எனப்படும் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஓர் அங்கமாக இருந்து, அந்நிய முதலீட்டை இறக்கிய நாடாகும். அமெரிக்காவிலிருந்து பல தொழிற்சாலைகள் வட மெக்சிகோ விற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்துதான் அமெ ரிக்கா மற்றும் கனடிய சந்தைகளுக்குப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. மெக்சிகோ நகரம் கார்களின் வருகையால் பரபரப்பாகி யது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், தனி நபர் வருமானத்தில், நம்மைவிட பத்து மடங்கு அதிகமான அளவில் இருந்தது. 
suran
 ஒன் றன் மீது ஒன்றாக மேம்பாலங்கள் நிறைய கட் டப்பட்ட போதிலும் போக்குவரத்து நெருக்கடி யும் மிகுந்திருந்தது. அதிகாலை நேரத்தில் 25 நிமிடங்களில் கடக்கும் தூரத்தை, பகல் நேரங்களில் கடக்க வேண்டுமானால், இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாகும். நிலப்பரப்பின் பெரும்பகுதி தண்ணீருக்கு மேலே இருந்ததால், வானுயர் கட்டடங் களைக் கட்டவேண்டுமானால் மிகவும் செலவு செய்து அஸ்திவாரங்களை அமைக்க வேண்டியிருந்ததால், நிறைய கட்டடங்கள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டடங் களாகவே கட்டப்பட்டன. எனவே நகரத்தின் பரப்பளவு விரிவானதாக மாறியது.

மெக்சிகோ நகரத்திற்கு 1980களின் மத் தியவாக்கில் சென்றவர்கள் நிறைய சிறிய ஸ்டோர்கள் இருந்ததை நினைவு கூர்கிறார் கள். ஆனால் இப்போது உலகின் மிகப்பெரிய பணக்காரரான கார்லோஸ் ஸ்லிம் என்ப வருக்குச் சொந்தமான சன்பார்ன் தொடர் ஸ்டோர்கள்தான் அங்கே காணப்படுகின் றன. 
suranசன்பார்ன் ஸ்டோர்களில் முதல் தளத் தில் உணவுவிடுதி, ஒரு பொருள் அன் பளிப்பு கடை, ஒரு மருந்துக்கடை இருக் கின்றன. மற்ற கடைகள் தரைத் தளத்தில் இருக்கின்றன. நான் ஒரு இளைஞனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, குடியி ருப்புப் பகுதிகளின் முனைகளில் இத்தகைய ஸ்டோர்கள் இருந்ததைத்தான் பார்த்த தில்லை என்று கூறினார்.

நான் தங்கியிருந்த ஓட்டலின் சன்னலி லிருந்து பார்த்தபோது பெரிய பெரிய மால் களைத்தான் பார்க்க முடிந்ததே தவிர, என் னால் சிறிய ஸ்டோர்கள் எதையும் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவில் காணப்படு வதைப் போலவே சியர்ஸ், வால்மார்ட், மெக் டொனால்டுகள்தான் எந்தப் பக்கம் பார்த் தாலும் காணப்பட்டன. குடியிருப்புப் பகுதி களிலும் சிறிய ஸ்டோர்கள் எதையும் என் னால் பார்க்க முடியவில்லை. அங்கும் வட அமெரிக்காவின் செவன் லெவன்ஸ் என்னும் நிறுவனத்தின் கடைகள்தான் காணப்பட் டன. 
suran
 ஏழைகள் வாங்குவதற்காக அங்குள்ள நடைபாதைகள் மற்றும் சந்தைகளின் அருகே சிறு சிறு கடைகள் இருந்ததைப் பார்த்தேன். மால்களில் பணிபுரியும் தொழி லாளர்கள் நடைபாதைகளில் உள்ள இக் கடைகளுக்கு வந்து உணவுப் பொருள்களை வாங்கி உண்பதையும் பார்த்தேன். ஏனெனில் மால்களில் உள்ள விலைகள் அவர்களின் சம்பளத்திற்குள் வாங்கி உண்ணக்கூடிய அளவிற்கு இல்லாத நிலை.

கிராமக் குடியரசு

அடுத்த நாள், மொலிலோஸ் என்னுமிடத் தில் இருந்த தால்னேபாண்ட்லா என்னும் கிராமத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந் தேன். இது ஒரு புரட்சிகர கிராமமாகும். என்னை விருந்தோம்பி உபசரித்த அல் வாரோ என்பவர் ஒரு பொருளாதாரப் பட்ட தாரியாவார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டார்.

அங்கிருந்த விவசாயிகளுடன் இணைந்து 4000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அம் மலைக்கிராமத்தில் பழவகைகளைப் பயிர் செய்துவந்தார்.
இக்கிராமம் லஞ்சஊழல் அரசியல் கட்சி களை நிராகரித்துவிட்டது. கிராமவாசிகள் தங்கள் சொந்தத் தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஓர் அரசியல் கட்சியின் பிரமுகரான அந்நகராட்சியின் தலைவரை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அல்வாரோவும் மற்றும் சிலரையும் பயங்கர வாதிகள் என்று பிரகடனம் செய்து, அரசாங் கம் அவர்களைக் கைது செய்திட துருப்புக் களை அனுப்பி வைத்தது. எனவே அவர்கள் தலைமறைவாகச் செல்ல வேண்டிய தாயிற்று. மெக்சிகோ நகரம் முழுவதும் எதிர்ப் புக் கிளர்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக பல்கலைக் கழகங்களில் இவை நடந்தன. 
பின்னர் அரசாங்கம் அவர்கள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு, ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தது. இங்குள்ள நிலம் முழுவதும் இங்குள்ளவர்களுக்கே சொந்தம் என்றும், வெளியாள் எவருக்கும் இவற்றை விற்க முடியாது என்றும் ஒப்பந்தம் செய்யப் பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு பேராசிரியர் தங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள் விப்பட்டதும், கிராமத் தலைவர்கள் எனக்கு கிராமத்தில் விளைந்த பொருள்களைக் கொண்டு விருந்து படைத்து நன்கு உபசரித் தனர். 
அவர்களது உணவு வகைகளும் மிக வும் சுவையாக இருந்தது. அல்வாரோ, காந் திஜி குறித்தும் அவருடைய அஹிம்சை தத் துவம் குறித்தும் ஒரு நவீன சமுதாயத்தில் அதை எப்படிப் பிரயோகிக்க முடியும் என் றும் என்னிடம் கேட்டார்.
கொள்ளைக்கும்பலின் ஆட்சி

அமெரிக்காவிலிருந்து முதலீடுகள் வந்து கொட்டப்படும் வட மெக்சிகோவில், கொள் ளைக் கும்பலின் ஆட்சியே நடைபெறு கிறது. சட்டமின்மையும் ஒழுங்கின்மையும் அங்கே தலைவிரித்தாடுகிறது. அரசாங்கம் என்ற ஒன்று அங்கு இருப்பதாகவே தெரிய வில்லை. வேலையில்லா இளைஞர்கள் கொள்ளைக் கும்பலில் இணைந்து கொண் டிருக்கிறார்கள். போதைப்பொருள்கள் கடத் தல், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் புலம் பெயர்ந்து செல்லுதல் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது.
 இவ்வாறு புலம் பெயர்ந்து செல்லுதலும் வேலைவாய்ப்பின் மையை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்கள் அனுப்பி வைத்திடும் பணமும், பெட்ரோலியம் ஏற்றுமதி மற்றும் சுற் றுலாத்துறையும்தான் மெக்சிகோ பொருளாதா ரத்தை ஓரளவிற்குக் கட்டுக்குள் வைத்திருக் கிறது. பொருளாதார நெருக்கடி ஆழமாகாமல் ஓரளவிற்குத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

மெக்சிகோவின் பிரச்சனைகள் தீர்க்கப் படுவதற்குப் பதிலாக, அது அமெரிக்காவிற்கு மிகவும் அருகில் இருப்பது, அதனுடனான சுதந்திர வர்த்தகம், அங்கிருந்து வரும் முத லீடுகள் ஆழமான வேலையில்லாத் திண் டாட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. பாரம் பரியமாக இருந்து வந்த விவசாயத்தை வீழ்ச் சியடையச் செய்துவிட்டது. மெட்ரோ நகரங் களில் இருந்த சில்லரை வர்த்தகர்களுக்கு முடிவு கட்டிவிட்டது. 
மெக்சிகோவில் இன்று நான் பார்த்த காட்சி, இந்தியாவிற்கும் வர வெகு காலமாகாது.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மெக்சிகோவைவிட நம் நாட்டில் நெருக்கடி நிலைமை மேலும் மோசமானதாக இருக்கும். ஏனெனில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து சென்றிட அண்டை நாடாக அமெரிக்கா இங்கே இல்லை.
 பெட்ரோல் உற்பத்தியோ அல்லது சுற்றுலாத்துறையோ மெக்சிகோ வில் இருப்பதுபோல் இங்கு கிடையாது. எனவே நிலைமைகள் இங்கே மெக்சி கோவைவிட மிகவும் மோசமானதாக அமைந் திடும்.
                                                                                                                                                                                          -அருண் குமார்
                                                                                                      சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர்
                                                                                             
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ,                                                         தில்லி

தமிழில்: ச.வீரமணி

 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

தண்ணீர் வர்த்தகம்

நாட்டை கண்ணீரில் தள்ளிவிடும்....

“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்படப் போகும் விளைவுகள்”
கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “வரலாற்றின் முதலாளித்துவ கால கட்டம் புதிய உலகத்திற்குரிய பொருளாயுத அடித்தளத்தைப் படைத்துருவாக்க வேண்டுமெனில்:ஒரு புறத்தில் மனிதகுலத்தின் பரஸ்பர சார்பு நிலை மீது தோற்றுவிக்கப்பட்ட சர்வவியாபகமான ஒட்டுறவையும் அந்த ஒட்டுறவுக்கான வழிவகைகளையும் உருவாக்க வேண்டும்; மறுபுறத்தில் மனிதனின் உற்பத்தி ஆற்றல்களை வளப்படுத்துவதும்பொருள்வகை உற்பத்தியை இயற்கை காரணத்துவங்களை (Natural Agencies) விஞ்ஞான பூர்வமான மேலாண்மையாக உருமாற்றப்படுவதையும் வளர்த்துச் செல்ல வேண்டும்.
மண்ணியல் புரட்சிகள் பூமியின் மேல் பரப்பைப் படைத்துருவாக்கியிருப்பது போன்று அதே வழிகளில் முதலாளித்துவத் தொழில்துறையும் வாணிகமும் புதிய உலகத்துக்கான இந்தப் பொருளாயத நிலைமைகளைப் படைக்கின்றன.” மார்க்ஸின் கூற்றை உண்மையாக்கும் விதமாக உலகமயமாக்கல் தற்போது உலகை கிராமமாக சுருக்கி, மனிதகுலத்தை நாடுகளில் எல்லை கடந்த “சர்வவியாபகமான ஒட்டுறவு உடைய வர்த்தக” சமூக மாக மாற்றியுள்ளது. அதேபோல இயற்கை வளங்களை, “விஞ்ஞான பூர்வமான மேலாண்மை” மூலம் வர்த்தக பண்டங்களாக மாற்றி உள்ளது உலகமயத்தின் தத்துவமான சந்தை பொருளாதர வணிகம்.
அந்த வகையில் இயற்கையின் கொடையான எண்ணெய்க்கு அடுத்தப்படியாக நீர் இன்று மிக பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவருகிறது.
 நீருக்கு தனி கடவுகளை கொண்டிருக்கும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. “தேசிய நீர்க் கொள்கை வரைவு - 2012” என்கிற திட்ட வரைவு ஒன்றை இந்திய நீர்வள அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பாக தனது இணைய தளத்தில் வெளியிட்டது.இந்த கொள்கை வரைவு குறித்தான பொது கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2002-ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிற நிலையில், எவ்வித காரணமும் முன்தேவையும் கூறாமல் புதிய தேசிய நீர்க்கொள்கை வரைவு தீட்டப்பட்டுள்ளது.
“இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான் தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறிய திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவின் வழிகாட்டுதலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகமயம்- தண்ணீர் வர்த்தகம்: 
சந்தைப் பொருளாதரத்தை முன்னெடுத்து செல்லும் உலக வர்த்தகக் கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தக பண்டமாக வரையறுத்துள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவது தடைச் செய்யக் கூடாது என்று கூறுகிறது காட் ஒப்பந்தம். இதன் பொருள் பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களை சுரண்டி விற்கும் வர்த்தகத்தை சமூக நலன், சூழலியல் பாதுகாப்பு என்னும் பெயரில் தடை செய்ய கூடாது என்பது தான்.
Farmers-7_380உலக வர்த்தகக் கழகத்தின் கொள்கைப்படி தண்ணீர் வினியோகம், மற்றும் மேலாண்மை போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும். அதாவது அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய் யும் சேவை மையமாக இருப்பதில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, அந்த பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிட வேண்டும். கூடுதலாக, தண்ணீர் தொடர்பான வர்த்தகம் செயல்களை வரையறுத்து உலக வர்த்தக கழகத்தின் மற்றொரு ஒப்பந்தமான காட்ஸ் (GATS) கூறுகிறது.
இந்த ஒப்பந்தம் வர்த்தக சேவை துறையில் தண்ணீ ரின் பங்காக, அதாவது நீர் வணிகம் செய்ய ஏற்ற செயல்களாக இவற்றை எல்லாம் கூறுகிறது: நீர்க் கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றல், நீர்க் குழாய்களை அமைத்தல், குடிநீர் தொட்டிகளை அமைத்தல், நிலத்தடி நீர் மேலாண்மை, விவாசயத்திற் கான நீர்ப்பாசனம், அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து சேவை. இந்த பணிகளை மேற்கொள்ளும் பல பன்னாட்டு இன் னாட்டு நிறுவனங்களை நாம் அறிவோம். விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங் கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தண்ணீர் தனியார்மயமாக வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. உலக வங்கியும் கூறுகிறது. பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கொண்டு தண்ணீர் தனியார்மயமாகும் வழிவகைகளாக மூன்றை கூறலாம்: முதலாவது ஒட்டுமொத்தமாக தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. இந்த முறை இங்கி லாந்து நாட்டில் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது, நீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடு வது. இந்த முறை பிரான்சு நாட்டில் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது முறை தனியாரிடம் நீர் மேலாண்மையின் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடுவது.


----------மேலும் படிக்க --------------------------->>>>>>


நன்றி:கீற்று 


----------------------------------------------------------------------------------------------------------------------------------
கமலின் "விஸ்வரூபம்" 
--------------------------------
விஸ்வரூபம் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும் , டிடிஎச் ஒளிபரப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
.
கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்திருக்கும் புதிய படம், விஸ்வரூபம். இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். ரூ.95 கோடி செலவில், மிக பிரமாண்டமான முறையில் படம் தயாராகி இருக்கிறது.
இந்த படத்தை டி.டி.எச். தொழில்நுட்பம் மூலம் டெலிவிஷ னில் ஒளிபரப்ப கமல்ஹாசன் ஏற்பாடு செய்து இருக்கிறார்.இதற்கு சில தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பினால், கமல்ஹாசனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டி.டி.எச். மூலம் படத்தை திரையிடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று கூறுகிறார்கள். அதில் ஒரு சின்ன திருத்தம். உலகிலேயே இதுதான் முதல் முறை. உலகமே நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.சேட்லைட் தொலைக்காட்சி வந்தது போல், வேறு ஒரு பரிணாம வளர்ச்சி இது. டி.வி.யில் இலவசமாக படம் காட்டப்பட்டது. டி.டி.எச். மூலம் வருமானம் வருகிறது.
suran
இதன் மூலம் கள்ள வீடியோ தொழில் சிதைக்கப்பட்டு, வருமானம் எங்களுக்கு வந்து சேரும்.ஆனால் சிலர், திருடன் கொண்டு போனாலும் பரவாயில்லை. உடையவனுக்கு லாபம் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். டி.டி.எச். தொழில்நுட்பம், ஒரு கூட்டு முயற்சி வியாபாரம். இதில், யாரும் பாதிக்கப்படப் போவதில்லை. 6 மாதங்களாக விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு இது.
தமிழ்நாடு முழுவதும் “விஸ்வரூபம்’ படத்தை திரையிட, இதுவரை 390 தியேட்டர்கள் முன்வந்துள்ளன. படத்தை திரையிட மாட்டோம் என்று சொல்பவர்களிடம், திரையிட சொல்லவில்லை.

படம், குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரும்.ஏர்டெல், சன், டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய 5 டி.டி.எச். நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப முன்வந்துள்ளன.
.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

' நீண்ட காலமாக சினிமாவில் இருக்கிறீர்கள். ஆனாலும், உங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறதே?’’ என்று கேட்கப்பட்டது.
அது பற்றி  கமல்ஹாசன் 
'"பொருளாதார நெருக்கடி என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் சொல்லவில்லை. எனக்கு எந்த குறையும் இல்லை. நெருக்கடி, எல்லோருக்கும் வரும். டாட்டா, பிர்லாவுக்கும் வந்திருக்கிறது.பஸ்சில் போய்க்கொண்டிருந்த என்னை, “ஆடி’ காரில் போக வைத்து இருக்கிறீர்கள். ரசிகர்கள், என்னை வசதியாகத்தான் வைத்து இருக்கிறார்கள்"
  பதில் கூறினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suranசிவப்பு மழை


suran

இலங்கையில் அண்மைக்காலமாக பல இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு மழையின் துளிகளில் அல்கா வகை உயிரினங்கள் காணப்பட்டதாக அது குறித்து ஆராய்ந்த இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைமை இயக்குனரான டாக்டர் அனில் சமரநாயக்கா "அவை அல்காக்களின் வகையை சேர்ந்ததாக தாம் அனுமானிக்கின்ற போதிலும் குறிப்பாக அவை எந்த வகையான அல்காக்கள் என்பதை தம்மால் கண்டறிய முடியாது இருப்பதாக கூறுகிறார்.
அந்த ஒரு கல உயிர் அங்கிகள்[பாக்டீரியாக்கள்] மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட உயிவாழ்வனவாக இருப்பதுதடன் பெருக்கமடையும் தன்மையையும் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இவை குறித்த தமது அனுமானங்களை உறுதி செய்ய அவற்றை டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் டாக்டர் சமரநாயக்கா கூறினார். இது குறித்து ஏற்கனவே கேரளாவில் பெய்த சிவப்பு மழையை ஆராய்ந்த பிரிட்டனின் கார்டிவ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், அவை மனிதனுக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா, இல்லையா என்பது குறித்து தாம் இன்னும் கண்டறியவில்லை என்றும் அவர் கூறினார்.
''இதுவரை எவரும் அவற்றினால் இறந்ததாக அல்லது பாதிக்கப்பட்டதாக எமக்கு தகவல்கள் வரவில்லை, அதே நேரத்தில் இந்த அல்காவில் 1000 துணை வகைகள் இருக்கின்றன. அவற்றில் இது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை நாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. ஆகவே எமது இறுதி முடிவுகள் வரும்வரை நாம் இவற்றால் பாதிப்பு ஏற்படுமா என்பதை கூறமுடியாது. ஆனால் எவரும் பாதிக்கப்பட்டதாக எமக்கு முறைப்பாடும் இது வரை கிடைக்கவில்லை.'' என்றார் டாக்டர் சமர நாயக்கா.
அதேவேளை, இந்த உயிர் அங்கிகள் குறித்த முழுமையான ஆய்வுகள் முடியும் வரை இவை குறித்து எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மக்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களையும் தாம் கூற முடியாது உள்ளதாகவும் அவர் கூறினார்.
''இது எப்படியான உயிர் அங்கி[பாக்டீரியா} என்பதை முழுமையாக நாங்கள் கண்டறிந்த பின்னர்தான் இந்த சிவப்பு மழை ஏன் உருவாகின்றது, எப்படி உருவாகின்றது என்பன போன்ற விடயங்களையும் கண்டறிய முடியும்'' என்றும் டாக்டர் அனில் சமரநாயக்கா தெரிவித்தார்.
முல்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின்  ரத்தக்கண்ணீராகக் கூட இருக்கலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 28 டிசம்பர், 2012

பேய்கள் நடமாடுகின்றன,

                                                                                                                                         -அருந்ததிராய்
‘அன்தில்லா’ என்பது இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான வளமனையாகும். இதுவரையில் இவ்வளவு பெருந் தொகையைச் செலவிட்டு வேறு எவரும் இதுபோன்ற வீட்டைக் கட்டவில்லை. 27 அடுக்கு மாடிகள் கொண்ட இம்மாளிகையில், மூன்று சிறிய விமானதளங்கள், ஒன்பது மின் தூக்கிகள், தொங்குத் தோட்டங்கள், நடன அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஆறு தளங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் முதலானவை உள்ளன. 600 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். 27 அடுக்குகளின் உயரத்திற்கும் இரும்புச் சட்டகங்கள் மீது புல்வெளி அமைக்கப் பட்டுள்ளது.
சுரன்
120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 விழுக்காடு மதிப்பு அளவிற்கான சொத்து இப்படி 100 பெரும் கோடீசு வரர்களிடம் இருக்கிறது.
இவ்வளவு பெரிய மாளிகையில் அம்பானி குடும்பம் வாழவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது எவர்க்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆயினும் அந்த மாளிகைக்கு வாஸ்து சரியில்லை; அதில் பேய்கள் நடமாடுகின்றன; அது ‘அதிர்ஷ்டம்’ இல்லாதது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
பன்னாட்டு நிதியத்தால் திணிக்கப்பட்ட புதிய தாராளமயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், தற்போது இந்தியாவில் 30 கோடி நடுத்தர மக்கள் இருக்கின்றனர். இவர்களின் அருகிலேயே அவலமான இந்தியாவும் இருக்கிறது. வளங்களை இழந்து கிடக்கும் ஆறுகள், வறண்டுவிட்ட கிணறுகள், மொட்டையாகக் காட்சி தரும் மலைகள், கொள்ளை யடிக்கப்பட்ட காடுகள், கடன் சுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 2,50,000 உழவர்களின் ஆவிகள், ஒரு நாளைக்கு இருபது உருபாய்க்கும் குறைவாகவே செலவிடக் கூடிய வறிய நிலையில் வாழும் 80 கோடி மக்கள் என்று பட்டியல் நீள்கிறது.
முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 20 பில்லியன் டாலர் (1 பில்லியன் - 100 கோடி). ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் முகேஷ் அம்பானியிடம் உள்ளன.
சுரன்
பெட்ரோலியப் பொருள்கள், எண்ணெய், இயற்கை எரிவளி, செயற்கை இழை, சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், உணவுப் பொருள் சில்லறை வணிகம், கல்வி நிறுவனங்கள், உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஈடுபட்டுள்ள ரிலை யன்சு நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 47 பில்லியன் டாலர். அண்மையில், செய்திகள் மற்றும் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் (சேனல்கள்) 27 கொண்டிருந்த இன்போடெல் நிறு வனத்தின் 95 விழுக்காட்டுப் பங்குகளை ரிலையன்சு வாங்கியது.
ரிலையன்சைப் போல இந்தியாவில் டாடா, ஜிண்டால், வேதாந்தா, மிட்டல், எஸ்ஸார், முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம் ஆகியவை முதன்மையான முதலாளிய நிறுவனங்களாக உள்ளன. இந்நிறுவனங்களின் கிளைகள் அய்ரோப்பா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் உள்ளன. இந்நிறுவனங்களின் வலைப்பின்னல்கள் கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் - வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உள்ளன. டாடா நிறுவனத்துக்கு 80 நாடுகளில் 100 கம்பெனிகள் உள்ளன. இந்தியாவில் மிகவும் பழமையான பெரிய மின் உற்பத்தி நிறுவனங்களுள் டாடா நிறுவனமும் ஒன்று.
 டாடா நிறுவனம் சுரங்கங்கள், எரிவாயு வயல்கள், எஃகு ஆலைகள், தொலைபேசி, கேபிள் டி.வி. மற்றும் அகண்ட அலைவரிசை வலைப்பின்னல், நகரியங்கள் அமைத்தல் ஆகிய தொழில்களைச் செய்கிறது. மகிழுந்துகள், சரக்குந்துகளைத் தயாரிக்கின்றது. பல தாஜ் ஓட்டல்கள் உள்ளன. தேயிலை நிறுவனம், புத்தக வெளியீட்டு நிறுவனம், நூல் விற்பனை மய்யங்கள், புகழ்பெற்ற டாடா உப்பு, லேக்மி அழகு சாதனங்கள் தயாரிப்பு முதலானவற்றையும் நடத்து கின்றது.
 ‘எங்களுடைய பொருள் இல்லாமல் நீங்கள் வாழ முடியாது’ என்று விளம்பரம் செய்யக் கூடிய அளவுக்கு டாடா நிறுவனம் எல்லாத் தொழில்களிலும் - துறைகளிலும் ஈடுபட்டுள்ளது.
சுரன்
எல்லாவற்றையும் தனியார் மயமாக்குவது என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு உலகிலேயே பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்தது. ஆயினும் பழைய காலனி நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது போலவே, இந்தியாவின் கனிம வளங்கள் முதன்மையாக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நிலத்தடியின் ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் கனிமங்கள் கொள்ளைப் பணத்தை அள்ளிக்கொடுக் கின்றன. அதனால் இத்தொழிலில் டாடா, ஜிண்டால், எஸ்ஸார், ரிலையன்சு, ஸ்டெர்லைட் போன்ற முதலாளிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பணம் கொடுத்து வாங்காத ஒரு பொருளை விற்பது போன்ற சுரங்கத் தொழில் - வணிகனின் பெருங் கனவு நனவானது போன்றதல்லவா!
அடுத்ததாக, பெருமுதலாளியக் குழுமங்களுக்குப் பெருமளவிலான வருவாய், மனை-நில வணிகத்தி லிருந்து கிடைக்கிறது. உலகில் பல நாடுகளிலும் உள்ள ஊழல் அரசு ஊழியர்களின் உதவியால், வால் ஸ்டிரீட் தரகர்களும், வேளாண்-வணிகப் பெருங்குழுமங்களும், சீனாவின் பில்லியனர்களும் பல நாடுகளில் பெரும் பரப்பளவு கொண்ட நிலங் களைக் கைப்பற்றியுள்ளனர்.
 இந்தியாவில் அரசு பல இலட்சம் ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து, ‘பொது நன்மைக்காக’ என்று கூறி, தனியார் முதலாளிகளுக்குக் கொடுத்து வருகிறது. சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், அடிப்படையான கட்டு மானத் திட்டங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், மகிழுந்து செய்யும் தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்கூடங்கள், ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ஆகியவற்றுக்காக முதலாளிகளுக்கு அரசு நிலங்களை அளிக்கிறது. (சொத்துரிமைச் சட்டம் ஏழைகளுக்குச் செல்லாது போலும்).
எப்பொழுதும் போல, தம் நிலங்களிலிருந்தும், வாழ்வாதாரங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் மக் களுக்கு மறுகுடியமர்த்தலும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என்று உறுதிமொழி மட்டும் அளிக்கப் படுகிறது.
சுரன்
 நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் ஒட்டுறவே இல்லை என்பது இப்போது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. 20 ஆண்டுக்கால ‘வளர்ச்சிக்கு’ப்பின், உழைக்கும் வயதி னருள் 60 விழுக்காட்டினர் சுய தொழில் செய்வோராக இருக்கின்றனர். நாள் / வார / மாதக் கூலிக்கு (சம்பளத் துக்கு) வேலை செய்யும் உழைப்பாளர்களில் 90 விழுக்காட்டினர் அமைப்புச்சாராத் தொழிலாளர்களாக - எத்தகைய பணிப்பாதுகாப்பும் உதவியும் அற்ற வர்களாக இருக்கின்றனர்.
சுதந்தர இந்தியாவில், 1980கள் வரையில், நக்சலைட்டுகள் இயக்கம் முதல் செயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் முழுப்புரட்சி இயக்கம் வரை பல்வேறு இயக்கங்கள், பெருநிலப் பண்ணையார் களிடம் உள்ள நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்துத் தர வேண்டும் என்று போராடின. ஆனால் இன்று, நிலத்தையோ அல்லது சொத்தையோ பிரித்தளிக்க வேண்டுமென்று யாரேனும் பேசினால், அது சனநாயகத்துக்கு எதிரானது என்றும், அவ்வாறு கூறுபவர் பைத்தியம் என்றும் கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆயுதமேந்திக் கடுமையாகப் போராடும் இயக்கங்கள் கூட, மக்களிடம் குறைந்த அளவில் எஞ்சியுள்ள நிலத்தைப் பாதுகாப்பதற்காகவே போராடும் நிலை உள்ளது.
சுரன்
 நிலமற்ற பல இலட்சம் மக்கள் - இவர்களில் பெரும் பகுதியினர் தலித்துகள், பழங்குடியினர் - அவர்கள் காலங்காலமாக வாழ்ந்த சிற்றூர்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, தற்போது சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் எத்தகைய அடிப்படை வசதிகளுமில்லாத குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் இழிந்த-இரங்கத்தக்க வாழ்நிலை பற்றி எவரும் பேசுவதில்லை.
2005ஆம் ஆண்டு சத்தீஷ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மாநில அரசுகள் பல முதலாளியக் குழுமங்களுடன் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம், பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பாக்சைட், இரும்புத் தாது மற்றும் பிற கனிமங்களை அற்பத் தொகைக்கு விற்கப்பட்டன. தாராளமயச் சந்தையின் விதிப்படி, கனிமங்களின் மதிப்பு மீது 0.5 விழுக்காடு முதல் 7.00 விழுக்காடு வரையிலான உரிமைப் பங்கீட்டுத் தொகையை (ராயல்டி) அரசுக்கு அளிக்க வேண்டும் என்பதுகூட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இடம் பெறவில்லை.


                                                                                                                  மேலும் படிக்க----->

சுரன்


வியாழன், 27 டிசம்பர், 2012

கசப்பான உண்மை.இந்தியாவில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன.
நடந்து கொண்டுமிரு க்கின்றன.நடக்கவுமுள்ளது.ஆனால்  டெல்லி மாணவி பலாத்காரம் மட்டும் இப்படி கடும் விளைவுகளை எற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் 13 வயது சிறுமி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு கொடுரமாக கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்.அதை இந்த ஊடகங்களோ இளைய தமிழ் சமுதாயமோ கண்டு கொள்ளவில்லை. கற்பழிப்பில் கூட பாரபட்சமா?
 சொல்லப்போனால் தூத்துக்குடி கற்பழிப்பு நிகழ்வு மிகக்கொடுமை.13 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் போது பட்டபகலில் பலாத்காரம்,கொலை செய்யப்பட்டுள்ளாள்.
இப்போ து டெல்லி மாணவியை மத்திய அரசு சிங்க்கப்பூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்புகிறதாம்.உடன் அவரின் பெற்றோர்களும் அரசு செலவில் சென்று சிகிச்சை பெற உள்ளனர்.
ஆபாச போராட்டம் 
ஆனால் இவர்களின் நீதி கேட்டு போராட்டத்தில் கற்களால் தலையில் தாக்கப்பட்டு இறந்த காவலர் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது.
டெல்லி காவலர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை அவர் குடும்பத்திற்கு கொடுத்துள்ளனராம்.
இவர்  கூட தாக்குதலில் இறக்கவில்லை.மாரடைப்பால் இறந்து போனார் என்று ஆம் ஆத்மி கேஜ்ரிவால குழு கூறிவருகிறது.அப்படியாவது இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட தனது கட்சிக்காரர் விடுவிக்கப்படுவார் என்ற காரணம்தான்.
இன்னமும் இந்த சம்பவத்துக்கு சிலர் பொராடிக்கொண்டிருக்கிறார்களாம்.
அரசின் கவனத்தை,ஏன் ஒட்டு மொத்த மக்களின் கவனத்தை திருப்பியாகிவிட்டது.
பெண்கள் பாதுகாப்பின்மையை அரசுக்கு சுட்டிக்காண்பித்தாகி விட்டது.
குற்றவாளிகளை கைது செய்து உச்சக்கட்ட தண்டனைக்கும் உத்திரவாதம் பெற்றா யிற்று.
காவலர் ஒருவரை கொலையும் செய்தாகிவிட்டது.சில வாகனங்களை சீதமும் படுத்தியாகிவிட்டது.மாணவிக்கு வெளி நாட்டில் சிகிச்சையும் வழங்க செய்தாகி விட்டது.இன்னமும் போராட்டம் எதற்காக?
இன்ட நேரம் ஒரும் அமைச்சர் கூறியது பற்றிதான் 'இரவில் பெண்கள் தனியேஊரை  சுற்றுவதும்,காரில் ஏற கூப்பிட்டவுடன் ஏறி செல்வதும் தவறு."
இதை கூறியதற்காக அவருக்கு எத்தனை கண்டனம்.தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் நிலை.
ஆனால் வர கூறியது மிக சரியான கருத்துதான் .
பெண்கள் தனியே சென்று வர இந்த நாட்டில் இன்னமும் பாதுகாப்பான சூழல் உருவாகவில்லை.அவர்களுக்கு பாதுகாப்பு தர காவல்துறை ரோந்து என்பதே இப்பூது கிடையாது.ஏ ன் காவல்துறையினரால் கூட பாலியல் பலாத்காரங்கள் பல இடங்களில் நடந்துள்ளது நாம் செய்திகளில் படிப்பதுதான் .
இவை எல்லாவற்றையும் விட பெண்கள் ஆண்களுக்கு எல்லா விதத்திலும் சமம் என்று சொல்லிக்கொடு பெண்கள் அமைப்புகள் போராடினாலும் உடல்வளுவைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு சமமாக எதிர்ப்பை உடல் ரீதியாக காட்ட முடியாது.அவர்கள் வலுவில் மெ ல்லினம்தான்.
 அப்படி இருக்கையில் ஆண்களின் இது பொன்ற கொடுர செயல்களை எதிர்க்கும் வலுவில்லாமல் பெண்கள் பலியாகத்தான் செய் கிறார்கள்.
அந்த அமைச்சர்  கூறிய அறிவுரையை மறுப்பதிற்கில்லை.இன்றைய இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பை வழங்காத நாடாகத்தான் இன்றுவரை உள்ளது.பெண்கள் தங்கள் பாதுகாப்பை இப்படித்தான் பெற்றுக்கொள்ள வெண்டிய கட்டாயத்தில்தான்  இருக்கிறார்கள்.
இதுதான் கசப்பான உண்மை.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
வால்மார்ட்: சில உண்மைகள்
--------------------------------------------------------------------                                                                                                                                         -ஆர்.பத்ரி
வால்மார்ட்டை விரட்டியடிக்கும் எழுச்சிமிக்க போராட்டம் சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் என்பது ஒரு துவக்கமே.. இன்றோடு முடியப் போவதில்லை.. இன்னமும் வலுவாகவும், ஆயிரமாயிரம் மக்களை திரட்டி சக்தி மிக்கதாகவும் தொடரத்தான் போகிறது. இந்நிலையில் வால்மார்ட் குறித்து மேலும் சில உண்மைகளை தெரிந்து கொள்வோம்.
நாடே எதிர்க்கிற போது வால்மார்ட் உள் ளிட்ட நிறுவனங்கள் எப்படி இந்தியா விற்குள் நுழைந்தன. இதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக் கெடுப்பில் எப்படி வெற்றி கிடைத்தது..?

இதற்கான அனைத்து வேலைகளை யும் கச்சிதமாக முடிக்கும் பொறுப்பை பேட்டன் பாக்ஸ் என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டதோடு, வெற்றிகரமாக செய்தும் முடித்திருக்கிறது. பேட்டன் பாக்ஸ் எனும் நிறுவனம் எந்தவொரு பொருளையும் தயாரிக்கும் நிறுவனமோ அல்லது பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தகத் தில் ஈடுபடும் நிறுவனமோ அல்ல.
 இது போன்ற திரை மறைவு பேரங்களை சாதுர் யமாக செய்து முடிக்கும் ஒரு இடைத் தரகர் நிறுவனமே. இந்நிறுவனம் இந்த தரகு வேலையை முடிப்பதற்கும், அதற் காக அதிகாரிகள், ஆளும் அரசியல்வாதி கள் ஒத்துழைப்பை பெறுவதற்கும் செல வழித்த தொகைதான் ரூ.125 கோடி. இதற்கு பெயர் ஆங்கிலத்தில் லாபி. தமி ழில் சொன்னால் திரைமறைவு பேரம். இந்த பேரம்தான் பலரையும் வால்மார்ட் டிற்கு ஆதரவாக வாலை ஆட்ட வைத்திருக்கிறது. இந்நிறுவனம்தான் இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன் பாட்டு பேரத்தையும் வெற்றிகரமாக முடித் தது என்பதையும் நினைவில் கொள்ள லாம். 
இதுபோன்ற இடைத்தரகர் நிறுவ னத்தின் பிரதானப் பணி என்பது, அரசிய லாக எடுக்கப்படும் முடிவுகளுக்கேற்ப கருத்து ரீதியாகவும், எண்ணிக்கை அடிப் படையிலும் பெரும்பான்மை ஒப்புதலை பெற்றுத் தர முயற்சிப்பது தான்.

எப்படி ஒரு நிறுவனத்தால் இதை சாதிக்க முடிந்தது. அப்படியென்ன அதிகாரமும், சக்தியும் உள்ளது இந்த நிறுவனத்திற்கு..?
அதில்தான் விஷயமே அடங்கியிருக் கிறது. இந்த பேரத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பணியை இந்நிறுவனத் தின் சார்பில் தலைமையேற்று முடித்தவர் பெயர் பிராங்க் விஸ்னர். இவர் யார் தெரியுமா? இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பல ஆண்டு காலம் பணி யாற்றியவர். அப்படியெனில் அவர் அதிகாரபூர்வமாக சகல மரியாதையோடு நமது நாட்டிற்குள் வந்து பிரதமர், ஜனாதி பதி, மத்திய அமைச்சர்களை பல சந்தர்ப் பங்களில் சந்தித்து நல்ல அறிமுகம் ஆனவர் என்று அர்த்தம். இப்போது புரிகிறதா? ஏன் இந்த முக்கிய பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் சூட் சுமம்..? உள்ளூர் காவல் நிலையத்தில் ஆளும் அரசியல்வாதிகளால் நடத்தப் படும் கட்டப்பஞ்சாயத்திற்கும் இதற்கும் வேறுபாடு இருக்கிறதா என்ன?

உள்ளே நுழைவதற்கே இப்படியான சட்டவிரோத வழிகளை கையாளும் நிறுவனம், வர்த்தகத்தை நேர்மையாக நடத்துமா?

அந்நிய முதலீடு சட்டபூர்வமாக்கப் பட்டதற்கு பிறகுதான் வால்மார்ட் நிறு வனம் இந்தியாவிற்குள் தனது முதலீட் டையும், வர்த்தகத்தையும் துவங்கப்போகி றது என்பதான வாதமே முழு பூசணிக் காயை கவளச் சோற்றில் மறைக்க முய லும் செயலுக்கு ஒப்பாகும். உண்மையில், வால்மார்ட் தனது இந்திய வர்த்தக கூட்டாளியான பாரதி ரீடெய்ல் நிறுவனத் தில் பல ஆண்டு காலமாக மறைமுக மாக முதலீட்டை மேற்கொண்டு வர்த்த கத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக் கிறது. பாரதி ரீடெய்ல் நிறுவனம் கடந்த 2009 ம் ஆண்டில் வைத்திருந்த கடை கள் எண்ணிக்கை 43 மட்டுமே. தற் போது அந்நிறுவனத்திற்கு உள்ள கடை கள் எண்ணிக்கை 186. அதாவது 2009 -10 ம் ஆண்டில் வால்மார்ட் நிறுவனம் ரூ.455 கோடியையும், 2011-12 ம் ஆண் டில் ரூ.1,023 கோடியையும் கொல்லைப் புற வழியாக பாரதி ரீடெய்ல் நிறுவனத்தில் முதலீடு செய்து, வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறது.

ஒரே ஒரு வால்மார்ட் வருவதாலேயே உள்நாட்டு சில்லரை வர்த்தகம் முழுவதும் சீரழிந்துவிடுமா என்ன.. சற்று மிகைப்படுத்தி பார்ப்பதாக தெரிகிறதே..?

இந்த கேள்விக்கு விடை கிடைக்க வேண்டுமெனில், வால்மார்ட் நிறுவனத் திற்கு பொருளாதார ரீதியாகவும், அதிகார ரீதியிலும் உள்ள அசுர பலத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். இந்நிறு வனம் ஈட்டும் லாபத்தின் அளவு இந்திய மதிப்பில் ஒரு நிமிடத்திற்கு சுமார் ரூ.15 லட்சம். ஒரு மணி நேரத்திற்கு ரூ. 9 கோடி. நாள் ஒன்றுக்கு ரூ.216 கோடி. மாதம் ஒன் றுக்கு ரூ.6696 கோடி. ஆண்டு ஒன்றுக்கு இந்நிறுவனம் ஈட்டும் லாபத்தின் அளவு சுமார் ஒரு லட்சம் கோடியை தொடும். அப்படியெனில் அதன் வர்த்தக மதிப்பு இதை விட பன்மடங்கு இருக்கும். இந்தி யாவில் பல்வேறு மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட் அளவிற்கு லாபமீட்டும் ஒரு நிறுவனம் நிச்சயமாக தான் நினைத்த தையெல்லாம் சாதிக்கும் தன்மை கொண்டதாகத்தானே இருக்க முடியும். அது மட்டுமல்ல, வால்மார்ட் நிறுவனம் தற்போது வணிகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளில் சுமார் 80 சதவீத அளவிற் கான உள்நாட்டு உற்பத்திகளை தானே கொள்முதல் செய்து கொள்கிறது. அப்படி யானால் அந்த நாடுகளின் சந்தை அந் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தாகத் தானே அர்த்தம். மேலும் அதன் அரசியல் செல்வாக்கைப் பற்றி கேட் கவே வேண்டாம். 
இந்திய சந்தையை கைப்பற்ற அமெரிக்கத் தூதரையே இடைத்தரகராக நியமிக்கும் ஆற்றல் கொண்டது. சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா விற்கு ஒரு பெரும் தொகையை வால் மார்ட் அள்ளி வழங்கியதை பார்த்தாலே நமக்கு புரிந்திருக்கும் அதன் அரசியல் செல்வாக்கு எத்தகையதென்று.

அப்படியெனில் இந்நிறுவனம் லாபத் திற்காக உள்நாட்டு சட்டங்களையெல் லாம் மதிக்காதா..?

அதில் சந்தேகமே வேண்டாம். சர்வ நிச்சயமாக நமது நாட்டு சட்டங்களை துச்சமாக கருதுவதோடு, பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடும். தமிழகத்தில் அந்நிய நிறுவனங்கள் அனு மதிக்கப்படாது என்ற மாநில அரசின் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு சென்னையில் அதிகாரிகளை நியமித்து சிறு நிறுவனங்களை வளைத்துப் போடும் அதன் வேகம் ஒரு உதாரணம். கடந்த செப்டம்பர் 20 அன்று நடைபெற்ற நாடு தழுவிய கடையடைப்பிற்கு அடுத்த நாளே, அரசு தனது கொள்கை முடிவை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பா கவே சண்டிகரில் தனது முதல் அலுவ லக நிர்மாணப் பணிகளை முடித்திருக் கிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணியாற்றிய 22 மில்லியன் தொழிலாளர்கள் இன்றைக்கு எவ்வித சட்டபாதுகாப்பும் இன்றி நடுத் தெருவில் நிற்கின்றனர். இந்த நிறுவனத் திற்கு ஆடைகள் தயாரித்து கொடுக்கும் வங்கதேசத்தைச் சார்ந்த ஒரு நிறு வனத்தில் சமீபத்தில் ஒரு தீவிபத்து ஏற் பட்டு 122 தொழிலாளர்கள் கருகி செத்துப் போனார்கள். 
 அந்நிறுவனத்திற்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என பகிரங்கமாக வால்மார்ட் நிறுவனம் அறிவித்தது. வங்கதேச அரசும், தொழிலாளர் குடும்பங்களும் செய்வதறி யாது திகைத்து நிற்கிறார்கள்.

நவீன பொருளாதாரக் கோட்பாடுகள் நடைமுறையில் இருக்கும் இத்தகைய காலகட்டத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்ப்பது என்பது சரிதானா?

ஆம். தற்போதைய காலகட்டத்தில் நாம் அந்நிய முதலீடுகளை எதிர்க்க முடியாது தான். ஆனால் நாட்டிற்குள் வருகிற அந்நிய முதலீடுகள் மூன்று அம் சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முதலில் உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட உதவ வேண்டும். 
இரண்டாவதாக, உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதாக இருக்க வேண் டும். மூன்றாவதாக, புதிய தொழில்நுட் பத்தை கொண்டு வருவதாக இருக்க வேண்டும். ஆனால் சில்லரை வர்த்தகத் தில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நிய முத லீடு வேறு மாதிரியான மூன்று விளைவு களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. 
 முதலாவதாக, சுயதொழில் செய்து கொண்டிருக்கிற கோடிக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வாழ வழியின்றி தற்கொலையைத் தான் நாட வேண்டி யிருக்கும். இரண்டாவதாக, ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகள் தங்கள் ஒரே உடமையான நிலங்களை வால்மார்ட் நிறுவனத்திடம் இழந்து நிற்க வேண்டிய அவலம் ஏற்படும். மூன்றாவதாக, சில் லரை வர்த்தகத்தின் துணைத் தொழில் களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வேலை யிழக்கும் அபாயமும் ஏற்படும். இத்த கைய விளைவுகளால் உள்நாட்டு பொரு ளாதாரம் பாதிக்கப்பட்டு, நிலைமை நாளுக்கு நாள் மேலும் சிக்கலாகத்தான் மாறும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------