கசப்பான உண்மை.



இந்தியாவில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன.
நடந்து கொண்டுமிரு க்கின்றன.நடக்கவுமுள்ளது.ஆனால்  டெல்லி மாணவி பலாத்காரம் மட்டும் இப்படி கடும் விளைவுகளை எற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் 13 வயது சிறுமி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு கொடுரமாக கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்.அதை இந்த ஊடகங்களோ இளைய தமிழ் சமுதாயமோ கண்டு கொள்ளவில்லை. கற்பழிப்பில் கூட பாரபட்சமா?
 சொல்லப்போனால் தூத்துக்குடி கற்பழிப்பு நிகழ்வு மிகக்கொடுமை.13 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் போது பட்டபகலில் பலாத்காரம்,கொலை செய்யப்பட்டுள்ளாள்.
இப்போ து டெல்லி மாணவியை மத்திய அரசு சிங்க்கப்பூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்புகிறதாம்.உடன் அவரின் பெற்றோர்களும் அரசு செலவில் சென்று சிகிச்சை பெற உள்ளனர்.
ஆபாச போராட்டம் 
ஆனால் இவர்களின் நீதி கேட்டு போராட்டத்தில் கற்களால் தலையில் தாக்கப்பட்டு இறந்த காவலர் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது.
டெல்லி காவலர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை அவர் குடும்பத்திற்கு கொடுத்துள்ளனராம்.
இவர்  கூட தாக்குதலில் இறக்கவில்லை.மாரடைப்பால் இறந்து போனார் என்று ஆம் ஆத்மி கேஜ்ரிவால குழு கூறிவருகிறது.அப்படியாவது இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட தனது கட்சிக்காரர் விடுவிக்கப்படுவார் என்ற காரணம்தான்.
இன்னமும் இந்த சம்பவத்துக்கு சிலர் பொராடிக்கொண்டிருக்கிறார்களாம்.
அரசின் கவனத்தை,ஏன் ஒட்டு மொத்த மக்களின் கவனத்தை திருப்பியாகிவிட்டது.
பெண்கள் பாதுகாப்பின்மையை அரசுக்கு சுட்டிக்காண்பித்தாகி விட்டது.
குற்றவாளிகளை கைது செய்து உச்சக்கட்ட தண்டனைக்கும் உத்திரவாதம் பெற்றா யிற்று.
காவலர் ஒருவரை கொலையும் செய்தாகிவிட்டது.சில வாகனங்களை சீதமும் படுத்தியாகிவிட்டது.மாணவிக்கு வெளி நாட்டில் சிகிச்சையும் வழங்க செய்தாகி விட்டது.இன்னமும் போராட்டம் எதற்காக?
இன்ட நேரம் ஒரும் அமைச்சர் கூறியது பற்றிதான் 'இரவில் பெண்கள் தனியேஊரை  சுற்றுவதும்,காரில் ஏற கூப்பிட்டவுடன் ஏறி செல்வதும் தவறு."
இதை கூறியதற்காக அவருக்கு எத்தனை கண்டனம்.தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் நிலை.
ஆனால் வர கூறியது மிக சரியான கருத்துதான் .
பெண்கள் தனியே சென்று வர இந்த நாட்டில் இன்னமும் பாதுகாப்பான சூழல் உருவாகவில்லை.அவர்களுக்கு பாதுகாப்பு தர காவல்துறை ரோந்து என்பதே இப்பூது கிடையாது.ஏ ன் காவல்துறையினரால் கூட பாலியல் பலாத்காரங்கள் பல இடங்களில் நடந்துள்ளது நாம் செய்திகளில் படிப்பதுதான் .
இவை எல்லாவற்றையும் விட பெண்கள் ஆண்களுக்கு எல்லா விதத்திலும் சமம் என்று சொல்லிக்கொடு பெண்கள் அமைப்புகள் போராடினாலும் உடல்வளுவைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு சமமாக எதிர்ப்பை உடல் ரீதியாக காட்ட முடியாது.அவர்கள் வலுவில் மெ ல்லினம்தான்.
 அப்படி இருக்கையில் ஆண்களின் இது பொன்ற கொடுர செயல்களை எதிர்க்கும் வலுவில்லாமல் பெண்கள் பலியாகத்தான் செய் கிறார்கள்.
அந்த அமைச்சர்  கூறிய அறிவுரையை மறுப்பதிற்கில்லை.இன்றைய இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பை வழங்காத நாடாகத்தான் இன்றுவரை உள்ளது.பெண்கள் தங்கள் பாதுகாப்பை இப்படித்தான் பெற்றுக்கொள்ள வெண்டிய கட்டாயத்தில்தான்  இருக்கிறார்கள்.
இதுதான் கசப்பான உண்மை.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
வால்மார்ட்: சில உண்மைகள்
--------------------------------------------------------------------                                                                                                                                         -ஆர்.பத்ரி
வால்மார்ட்டை விரட்டியடிக்கும் எழுச்சிமிக்க போராட்டம் சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் என்பது ஒரு துவக்கமே.. இன்றோடு முடியப் போவதில்லை.. இன்னமும் வலுவாகவும், ஆயிரமாயிரம் மக்களை திரட்டி சக்தி மிக்கதாகவும் தொடரத்தான் போகிறது. இந்நிலையில் வால்மார்ட் குறித்து மேலும் சில உண்மைகளை தெரிந்து கொள்வோம்.
நாடே எதிர்க்கிற போது வால்மார்ட் உள் ளிட்ட நிறுவனங்கள் எப்படி இந்தியா விற்குள் நுழைந்தன. இதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக் கெடுப்பில் எப்படி வெற்றி கிடைத்தது..?

இதற்கான அனைத்து வேலைகளை யும் கச்சிதமாக முடிக்கும் பொறுப்பை பேட்டன் பாக்ஸ் என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டதோடு, வெற்றிகரமாக செய்தும் முடித்திருக்கிறது. பேட்டன் பாக்ஸ் எனும் நிறுவனம் எந்தவொரு பொருளையும் தயாரிக்கும் நிறுவனமோ அல்லது பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தகத் தில் ஈடுபடும் நிறுவனமோ அல்ல.
 இது போன்ற திரை மறைவு பேரங்களை சாதுர் யமாக செய்து முடிக்கும் ஒரு இடைத் தரகர் நிறுவனமே. இந்நிறுவனம் இந்த தரகு வேலையை முடிப்பதற்கும், அதற் காக அதிகாரிகள், ஆளும் அரசியல்வாதி கள் ஒத்துழைப்பை பெறுவதற்கும் செல வழித்த தொகைதான் ரூ.125 கோடி. இதற்கு பெயர் ஆங்கிலத்தில் லாபி. தமி ழில் சொன்னால் திரைமறைவு பேரம். இந்த பேரம்தான் பலரையும் வால்மார்ட் டிற்கு ஆதரவாக வாலை ஆட்ட வைத்திருக்கிறது. இந்நிறுவனம்தான் இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன் பாட்டு பேரத்தையும் வெற்றிகரமாக முடித் தது என்பதையும் நினைவில் கொள்ள லாம். 
இதுபோன்ற இடைத்தரகர் நிறுவ னத்தின் பிரதானப் பணி என்பது, அரசிய லாக எடுக்கப்படும் முடிவுகளுக்கேற்ப கருத்து ரீதியாகவும், எண்ணிக்கை அடிப் படையிலும் பெரும்பான்மை ஒப்புதலை பெற்றுத் தர முயற்சிப்பது தான்.

எப்படி ஒரு நிறுவனத்தால் இதை சாதிக்க முடிந்தது. அப்படியென்ன அதிகாரமும், சக்தியும் உள்ளது இந்த நிறுவனத்திற்கு..?
அதில்தான் விஷயமே அடங்கியிருக் கிறது. இந்த பேரத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பணியை இந்நிறுவனத் தின் சார்பில் தலைமையேற்று முடித்தவர் பெயர் பிராங்க் விஸ்னர். இவர் யார் தெரியுமா? இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பல ஆண்டு காலம் பணி யாற்றியவர். அப்படியெனில் அவர் அதிகாரபூர்வமாக சகல மரியாதையோடு நமது நாட்டிற்குள் வந்து பிரதமர், ஜனாதி பதி, மத்திய அமைச்சர்களை பல சந்தர்ப் பங்களில் சந்தித்து நல்ல அறிமுகம் ஆனவர் என்று அர்த்தம். இப்போது புரிகிறதா? ஏன் இந்த முக்கிய பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் சூட் சுமம்..? உள்ளூர் காவல் நிலையத்தில் ஆளும் அரசியல்வாதிகளால் நடத்தப் படும் கட்டப்பஞ்சாயத்திற்கும் இதற்கும் வேறுபாடு இருக்கிறதா என்ன?

உள்ளே நுழைவதற்கே இப்படியான சட்டவிரோத வழிகளை கையாளும் நிறுவனம், வர்த்தகத்தை நேர்மையாக நடத்துமா?

அந்நிய முதலீடு சட்டபூர்வமாக்கப் பட்டதற்கு பிறகுதான் வால்மார்ட் நிறு வனம் இந்தியாவிற்குள் தனது முதலீட் டையும், வர்த்தகத்தையும் துவங்கப்போகி றது என்பதான வாதமே முழு பூசணிக் காயை கவளச் சோற்றில் மறைக்க முய லும் செயலுக்கு ஒப்பாகும். உண்மையில், வால்மார்ட் தனது இந்திய வர்த்தக கூட்டாளியான பாரதி ரீடெய்ல் நிறுவனத் தில் பல ஆண்டு காலமாக மறைமுக மாக முதலீட்டை மேற்கொண்டு வர்த்த கத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக் கிறது. பாரதி ரீடெய்ல் நிறுவனம் கடந்த 2009 ம் ஆண்டில் வைத்திருந்த கடை கள் எண்ணிக்கை 43 மட்டுமே. தற் போது அந்நிறுவனத்திற்கு உள்ள கடை கள் எண்ணிக்கை 186. அதாவது 2009 -10 ம் ஆண்டில் வால்மார்ட் நிறுவனம் ரூ.455 கோடியையும், 2011-12 ம் ஆண் டில் ரூ.1,023 கோடியையும் கொல்லைப் புற வழியாக பாரதி ரீடெய்ல் நிறுவனத்தில் முதலீடு செய்து, வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறது.

ஒரே ஒரு வால்மார்ட் வருவதாலேயே உள்நாட்டு சில்லரை வர்த்தகம் முழுவதும் சீரழிந்துவிடுமா என்ன.. சற்று மிகைப்படுத்தி பார்ப்பதாக தெரிகிறதே..?

இந்த கேள்விக்கு விடை கிடைக்க வேண்டுமெனில், வால்மார்ட் நிறுவனத் திற்கு பொருளாதார ரீதியாகவும், அதிகார ரீதியிலும் உள்ள அசுர பலத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். இந்நிறு வனம் ஈட்டும் லாபத்தின் அளவு இந்திய மதிப்பில் ஒரு நிமிடத்திற்கு சுமார் ரூ.15 லட்சம். ஒரு மணி நேரத்திற்கு ரூ. 9 கோடி. நாள் ஒன்றுக்கு ரூ.216 கோடி. மாதம் ஒன் றுக்கு ரூ.6696 கோடி. ஆண்டு ஒன்றுக்கு இந்நிறுவனம் ஈட்டும் லாபத்தின் அளவு சுமார் ஒரு லட்சம் கோடியை தொடும். அப்படியெனில் அதன் வர்த்தக மதிப்பு இதை விட பன்மடங்கு இருக்கும். இந்தி யாவில் பல்வேறு மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட் அளவிற்கு லாபமீட்டும் ஒரு நிறுவனம் நிச்சயமாக தான் நினைத்த தையெல்லாம் சாதிக்கும் தன்மை கொண்டதாகத்தானே இருக்க முடியும். அது மட்டுமல்ல, வால்மார்ட் நிறுவனம் தற்போது வணிகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளில் சுமார் 80 சதவீத அளவிற் கான உள்நாட்டு உற்பத்திகளை தானே கொள்முதல் செய்து கொள்கிறது. அப்படி யானால் அந்த நாடுகளின் சந்தை அந் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தாகத் தானே அர்த்தம். மேலும் அதன் அரசியல் செல்வாக்கைப் பற்றி கேட் கவே வேண்டாம். 
இந்திய சந்தையை கைப்பற்ற அமெரிக்கத் தூதரையே இடைத்தரகராக நியமிக்கும் ஆற்றல் கொண்டது. சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா விற்கு ஒரு பெரும் தொகையை வால் மார்ட் அள்ளி வழங்கியதை பார்த்தாலே நமக்கு புரிந்திருக்கும் அதன் அரசியல் செல்வாக்கு எத்தகையதென்று.

அப்படியெனில் இந்நிறுவனம் லாபத் திற்காக உள்நாட்டு சட்டங்களையெல் லாம் மதிக்காதா..?

அதில் சந்தேகமே வேண்டாம். சர்வ நிச்சயமாக நமது நாட்டு சட்டங்களை துச்சமாக கருதுவதோடு, பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடும். தமிழகத்தில் அந்நிய நிறுவனங்கள் அனு மதிக்கப்படாது என்ற மாநில அரசின் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு சென்னையில் அதிகாரிகளை நியமித்து சிறு நிறுவனங்களை வளைத்துப் போடும் அதன் வேகம் ஒரு உதாரணம். கடந்த செப்டம்பர் 20 அன்று நடைபெற்ற நாடு தழுவிய கடையடைப்பிற்கு அடுத்த நாளே, அரசு தனது கொள்கை முடிவை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பா கவே சண்டிகரில் தனது முதல் அலுவ லக நிர்மாணப் பணிகளை முடித்திருக் கிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணியாற்றிய 22 மில்லியன் தொழிலாளர்கள் இன்றைக்கு எவ்வித சட்டபாதுகாப்பும் இன்றி நடுத் தெருவில் நிற்கின்றனர். இந்த நிறுவனத் திற்கு ஆடைகள் தயாரித்து கொடுக்கும் வங்கதேசத்தைச் சார்ந்த ஒரு நிறு வனத்தில் சமீபத்தில் ஒரு தீவிபத்து ஏற் பட்டு 122 தொழிலாளர்கள் கருகி செத்துப் போனார்கள். 
 அந்நிறுவனத்திற்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என பகிரங்கமாக வால்மார்ட் நிறுவனம் அறிவித்தது. வங்கதேச அரசும், தொழிலாளர் குடும்பங்களும் செய்வதறி யாது திகைத்து நிற்கிறார்கள்.

நவீன பொருளாதாரக் கோட்பாடுகள் நடைமுறையில் இருக்கும் இத்தகைய காலகட்டத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்ப்பது என்பது சரிதானா?

ஆம். தற்போதைய காலகட்டத்தில் நாம் அந்நிய முதலீடுகளை எதிர்க்க முடியாது தான். ஆனால் நாட்டிற்குள் வருகிற அந்நிய முதலீடுகள் மூன்று அம் சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முதலில் உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட உதவ வேண்டும். 
இரண்டாவதாக, உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதாக இருக்க வேண் டும். மூன்றாவதாக, புதிய தொழில்நுட் பத்தை கொண்டு வருவதாக இருக்க வேண்டும். ஆனால் சில்லரை வர்த்தகத் தில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நிய முத லீடு வேறு மாதிரியான மூன்று விளைவு களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. 
 முதலாவதாக, சுயதொழில் செய்து கொண்டிருக்கிற கோடிக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வாழ வழியின்றி தற்கொலையைத் தான் நாட வேண்டி யிருக்கும். இரண்டாவதாக, ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகள் தங்கள் ஒரே உடமையான நிலங்களை வால்மார்ட் நிறுவனத்திடம் இழந்து நிற்க வேண்டிய அவலம் ஏற்படும். மூன்றாவதாக, சில் லரை வர்த்தகத்தின் துணைத் தொழில் களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வேலை யிழக்கும் அபாயமும் ஏற்படும். இத்த கைய விளைவுகளால் உள்நாட்டு பொரு ளாதாரம் பாதிக்கப்பட்டு, நிலைமை நாளுக்கு நாள் மேலும் சிக்கலாகத்தான் மாறும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?