திங்கள், 31 டிசம்பர், 2012

இதுவும் வாழ்த்துதாங்க

ஆண்டின் கடைசியில் இருக்கிறோம் .
ஒவ்வொரு ஆண்டும் மிக நல்லதாக நாட்டுக்கும்,தனிப்பட்ட முறையிலும் அமைய எண்ணுகிறோம்-விரும்புகிறொம்.ஆனால் அப்படி அமைவது போல் தெரியவில்லை.நாட்டை ஆள்வோர் எடுக்கும் ஒ வ்வொரு முடிவும் நாட்டை மட்டுமல்ல நமது தனிப்பட்ட வாழ்வையும் செல்லும் திசையை முடிவு செய்கிறது.
suran

அதுவும் உலகமயமாக்கல் வந்து சேர்ந்த பின் வெளிநாட்டினர் எடுக்கும் முடிவு கூட நமது பாதையை தீர்மானிக்க ஆரம்பித்து விட்டது.
இயற்கை மட்டுமே அனைத்தையும் திசை மாற்றும் மாபெரும் சக்தி என்பதை நாம் ஆழிப்பேரலை -நிலநடுக்கம்-எல்நினோ போன்றவைகளின் தாக்கங்களுக்குப்பின் உணர்ந்திருக்கிறோம்.
இயற்கை,-ஆட்சியாளர்கள்-,அவர்களை வழிநடத்தும் அமெரிக்கா -இவர்கள் மூவரும்தான் இன்றைய இந்திய மக்களின் தலைவிதியை முடிவு செய்யும் மும்மூர்த்திகள் இவர்கள் கரூணை இந்த 2013 புத்தாண்டில் கிடைக்க வேண்டும் .
உங்களுக்கு கிடைக்கும் .
 வரும் 2013 ஆங்கிலப்புத்தாண்டு உங்களுக்கு நல்லதாக அமைய வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------

முக நூலில் இருந்து தரவிறக்க ,
-------------------------------------------------

ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை தினமும் வந்து செல்லும் உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழுகின்றது.


இத்தளத்தில் பகிரப்படும் பல்வேறு வீடியோ மற்றும் MP3 கோப்புக்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்துக் கொள்வதற்கு Bigasoft Facebook Downloader எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.


இது தவிர இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் MP3 கோப்புக்களின் போர்மட்களை விண்டோஸ் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு, மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பதும் இதன் சிறப்பியல்புகள் ஆகும்..
 

------------------------------------------------------------------------------------------------------------