சாம்சங் -மோட்டோரோலா

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்வெளியிட்ட, "கேலக்ஸி' வரிசை  ஸ்மார்ட் போன்களின் விற்பனை,இப்போது  ஒரு கோடியை தாண்டியுள்ளது.
இந்நிறுவனம், கடந்த, 2010ம் ஆண்டு ஜூன் மாதம், முதன் முதலாக, "கேலக்ஸி' வரிசையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, "கேலக்ஸி எஸ்', "கேலக்ஸி எஸ் 2' மற்றும் "எஸ் 3', "கேலக்ஸி நோட்', "கேலக்ஸி நோட் 2', "கேலக்ஸி ஒய்' உட்பட, 13 வகையான ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
samsung
இந்நிறுவனத்தின் அலைபேசி சாதனங்கள் விற்பனையில், "கேலக்ஸி' பிரிவின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது.
2012 ஜனவரி முதல், ஜூன் வரையிலான அரையாண்டில்இந்தியாவில்   10.24 கோடி அலைபேசி சாதனங்கள் விற்பனையாகி உள்ளன.
 ஸ்மார்ட் போன்வகைகள்  விற்பனை 55 லட்சம்ஆகும் .
 சாம்சங் 41.6%,  நோக்கியா 19.2 %,ரிம் 12.1% ஆக விற்பனை விகிதம் உள்ளது .
இப்படி அலை பேசிகள் விற்பனை இருக்கும் போது இந்த அலைபேசி துறையில் முதலிலேயே கால் பதித்த  மோட் டரொலோ  நிறுவனமோ தனது சென்னை தயாரிப்பை கட்டுபடியாகாமல் மூடுகிறது .
மோட்டாரோலா மொபிலிட்டி நிறுவனம், சென்னையில் அதன் அலைபேசி சாதனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்பிரிவை, வரும் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் மூட உள்ளது.
பதிவேற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு, 172 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட இப்பிரிவில், அலைபேசி சாதனங்களில் மென்பொருள்களை பதிவேற்றுவது மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
motorolo
இனிமேல் தனது  அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக, வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி சாதனங்களை விற்பனை செய்ய, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கூகுள் நிறுவனம், மோட்டோரோலா குழுமத்தின் அலைபேசி சாதன பிரிவை கையகப்படுத்தியது.தென்கொரியா சர்வதேச அளவில், மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தில், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில், 4,000 பே ர்களை வீட்டுக்கு அனுப்ப  முடிவு செய்து ள்ளது.
 மொத்தம் உள்ள, 90 தொழிற்பிரிவுகளில், மூன்றில் ஒரு பங்கை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி  500 பேரைக் கொண்ட தென்கொரிய பிரிவை மூடப்போவதாகவும்  இந்நிறுவனம் அறிவித்தது. 
---------------------------------------------------------------------------------------------------------- 
 வருகிறது நில நடுக்கம் ,
இந் தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள இமய மலை பூகம்ப ஆபத்து அதிகம் உள்ள பகுதி ஆகும். இந்த பகுதியில் கடந்த 1897, 1905, 1934, 1950 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது 7.8 முதல் 8.9 ரிக்டர் அளவு வரை பூகம்பம் உண்டா னது. அதன்பிறகும் அந்த பகுதியில் பலமுறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டு இருக் கிறது.
வருங்காலத் தில் இமயமலைப் பகுதி யில் கடுமையான அள வில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிங் கப்பூரைச் சேர்ந்த நன் யாங் தொழில்நுட்ப பல் கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு ஒன்று எச்சரித்துள் ளது.
suran
பால் டப்போனியர் தலைமையிலான விஞ்ஞா னிகள் குழு நடத்திய ஆய் வில் இது தெரிய வந்துள் ளது. இந்த குழுவில் நேபா ளம், பிரான்சு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இடம் பெற்று இருந்தனர்.
ஆய்வு தொடர்பாக அந்த குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் இமய மலைப் பகுதியில் 1255 மற்றும் 1934 ஆகிய ஆண் டுகளில் இரு மிகப்பெரிய பூமி அதிர்ச்சிகள் ஏற்பட் டன. குறிப்பாக 1934ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம் பத்தின் போது இமய மலையின் தென் பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள நிலத்தட்டில் 150 கிலோ மீட்டர் நீளத்துக்கும் மேலாக வெடிப்பு ஏற்பட் டது.
இதனால் அந்த பகு தியின் நிலப்பரப்பிலும் சிறிது மாற்றங்கள் நிகழ்ந் தன. வருங்காலத்தில் இமய மலைப் பகுதியில் பெரிய அளவில் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பூகம்பங்கள் 8 முதல் 8.5 ரிக்டர் அளவு வரை இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காஷ் மீர் மாநிலத்தில் இரு நாட்களுக்கு முன் இரவு 11.20 மணி அளவில் 5.9 ரிக்டர் அளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. 
இதனால் அதிக சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நில நடுக்கம் ஆப்கானிஸ்தா னில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மைய மாக கொண்டு ஏற்பட் டுள்ளது 
இதேபோல் திரிபுரா மாநிலத்தில் இந்தியா-வங்காளதேசம் எல்லை யையொட்டிய பகுதியில் நேற்று பிற்பகல் 1.47 மணிக்கு 4.2 ரிக்டர் அள வில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அதில் சேதம் எதுவும் ஏற்பட வில்லை.
ஆனால் இந்த பூமி அதிர்ச்சி  தொடரும் 8  ரிக்டர் அளவுக்கு வரும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.8 ரிக்டர் அளவு நில நடுக்கம் அதிக சேதத்தை உண்டாக்கும்
------------------------------------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் பெண்களின் கல்வி உரிமைக்காக போரா டிய 15 வயது மாணவி மலாலாவை, பள்ளி வாகனத்தில் வந்தபோது தாலிபன் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து பாகிஸ் தான் ராணுவ மருத்துவ மனையில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த மலாலா, தற் போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின் றார். 
malala
அவரை சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது மகளுடன் லண்டனுக்கு சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், பாகிஸ் தானில் உள்ள ஒரு பெண் கள் கல்லூரிக்கு மலாலா வின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவை எதிர்த்து சுமார் 150 மாணவிகள் வகுப்பு களை புறக்கணித்தனர். மலாலாவின் பெயர் சூட் டப்பட்டால் அந்த கல் லூரியில் படிக்கும் தங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அக்கல்லூரி மாணவிகள் அச்சம் தெரிவித்தனர்.ஆனால்  உணமையிலேயே அப்பெண்களை  சிலர் அச்சுறுத்தியதாலேயே அப்படி எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது.
 மலாலா, தனது பெயரை அந்த கல்லூரிக்கு சூட்டும் முடிவை கைவிடும்படி வேண்டுகோள் விடுதாக கல்லூரி அலு வலர் ஒருவர் கூறியதால் இந்த பெயர் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
___________________________________________________________________________________________



 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?