சனி, 29 டிசம்பர், 2012

தண்ணீர் வர்த்தகம்

நாட்டை கண்ணீரில் தள்ளிவிடும்....

“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்படப் போகும் விளைவுகள்”
கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “வரலாற்றின் முதலாளித்துவ கால கட்டம் புதிய உலகத்திற்குரிய பொருளாயுத அடித்தளத்தைப் படைத்துருவாக்க வேண்டுமெனில்:ஒரு புறத்தில் மனிதகுலத்தின் பரஸ்பர சார்பு நிலை மீது தோற்றுவிக்கப்பட்ட சர்வவியாபகமான ஒட்டுறவையும் அந்த ஒட்டுறவுக்கான வழிவகைகளையும் உருவாக்க வேண்டும்; மறுபுறத்தில் மனிதனின் உற்பத்தி ஆற்றல்களை வளப்படுத்துவதும்பொருள்வகை உற்பத்தியை இயற்கை காரணத்துவங்களை (Natural Agencies) விஞ்ஞான பூர்வமான மேலாண்மையாக உருமாற்றப்படுவதையும் வளர்த்துச் செல்ல வேண்டும்.
மண்ணியல் புரட்சிகள் பூமியின் மேல் பரப்பைப் படைத்துருவாக்கியிருப்பது போன்று அதே வழிகளில் முதலாளித்துவத் தொழில்துறையும் வாணிகமும் புதிய உலகத்துக்கான இந்தப் பொருளாயத நிலைமைகளைப் படைக்கின்றன.” மார்க்ஸின் கூற்றை உண்மையாக்கும் விதமாக உலகமயமாக்கல் தற்போது உலகை கிராமமாக சுருக்கி, மனிதகுலத்தை நாடுகளில் எல்லை கடந்த “சர்வவியாபகமான ஒட்டுறவு உடைய வர்த்தக” சமூக மாக மாற்றியுள்ளது. அதேபோல இயற்கை வளங்களை, “விஞ்ஞான பூர்வமான மேலாண்மை” மூலம் வர்த்தக பண்டங்களாக மாற்றி உள்ளது உலகமயத்தின் தத்துவமான சந்தை பொருளாதர வணிகம்.
அந்த வகையில் இயற்கையின் கொடையான எண்ணெய்க்கு அடுத்தப்படியாக நீர் இன்று மிக பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவருகிறது.
 நீருக்கு தனி கடவுகளை கொண்டிருக்கும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. “தேசிய நீர்க் கொள்கை வரைவு - 2012” என்கிற திட்ட வரைவு ஒன்றை இந்திய நீர்வள அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பாக தனது இணைய தளத்தில் வெளியிட்டது.இந்த கொள்கை வரைவு குறித்தான பொது கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2002-ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிற நிலையில், எவ்வித காரணமும் முன்தேவையும் கூறாமல் புதிய தேசிய நீர்க்கொள்கை வரைவு தீட்டப்பட்டுள்ளது.
“இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான் தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறிய திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவின் வழிகாட்டுதலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகமயம்- தண்ணீர் வர்த்தகம்: 
சந்தைப் பொருளாதரத்தை முன்னெடுத்து செல்லும் உலக வர்த்தகக் கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தக பண்டமாக வரையறுத்துள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவது தடைச் செய்யக் கூடாது என்று கூறுகிறது காட் ஒப்பந்தம். இதன் பொருள் பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களை சுரண்டி விற்கும் வர்த்தகத்தை சமூக நலன், சூழலியல் பாதுகாப்பு என்னும் பெயரில் தடை செய்ய கூடாது என்பது தான்.
Farmers-7_380உலக வர்த்தகக் கழகத்தின் கொள்கைப்படி தண்ணீர் வினியோகம், மற்றும் மேலாண்மை போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும். அதாவது அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய் யும் சேவை மையமாக இருப்பதில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, அந்த பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிட வேண்டும். கூடுதலாக, தண்ணீர் தொடர்பான வர்த்தகம் செயல்களை வரையறுத்து உலக வர்த்தக கழகத்தின் மற்றொரு ஒப்பந்தமான காட்ஸ் (GATS) கூறுகிறது.
இந்த ஒப்பந்தம் வர்த்தக சேவை துறையில் தண்ணீ ரின் பங்காக, அதாவது நீர் வணிகம் செய்ய ஏற்ற செயல்களாக இவற்றை எல்லாம் கூறுகிறது: நீர்க் கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றல், நீர்க் குழாய்களை அமைத்தல், குடிநீர் தொட்டிகளை அமைத்தல், நிலத்தடி நீர் மேலாண்மை, விவாசயத்திற் கான நீர்ப்பாசனம், அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து சேவை. இந்த பணிகளை மேற்கொள்ளும் பல பன்னாட்டு இன் னாட்டு நிறுவனங்களை நாம் அறிவோம். விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங் கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தண்ணீர் தனியார்மயமாக வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. உலக வங்கியும் கூறுகிறது. பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கொண்டு தண்ணீர் தனியார்மயமாகும் வழிவகைகளாக மூன்றை கூறலாம்: முதலாவது ஒட்டுமொத்தமாக தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. இந்த முறை இங்கி லாந்து நாட்டில் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது, நீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடு வது. இந்த முறை பிரான்சு நாட்டில் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது முறை தனியாரிடம் நீர் மேலாண்மையின் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடுவது.


----------மேலும் படிக்க --------------------------->>>>>>


நன்றி:கீற்று 


----------------------------------------------------------------------------------------------------------------------------------
கமலின் "விஸ்வரூபம்" 
--------------------------------
விஸ்வரூபம் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும் , டிடிஎச் ஒளிபரப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
.
கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்திருக்கும் புதிய படம், விஸ்வரூபம். இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். ரூ.95 கோடி செலவில், மிக பிரமாண்டமான முறையில் படம் தயாராகி இருக்கிறது.
இந்த படத்தை டி.டி.எச். தொழில்நுட்பம் மூலம் டெலிவிஷ னில் ஒளிபரப்ப கமல்ஹாசன் ஏற்பாடு செய்து இருக்கிறார்.இதற்கு சில தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பினால், கமல்ஹாசனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டி.டி.எச். மூலம் படத்தை திரையிடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று கூறுகிறார்கள். அதில் ஒரு சின்ன திருத்தம். உலகிலேயே இதுதான் முதல் முறை. உலகமே நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.சேட்லைட் தொலைக்காட்சி வந்தது போல், வேறு ஒரு பரிணாம வளர்ச்சி இது. டி.வி.யில் இலவசமாக படம் காட்டப்பட்டது. டி.டி.எச். மூலம் வருமானம் வருகிறது.
suran
இதன் மூலம் கள்ள வீடியோ தொழில் சிதைக்கப்பட்டு, வருமானம் எங்களுக்கு வந்து சேரும்.ஆனால் சிலர், திருடன் கொண்டு போனாலும் பரவாயில்லை. உடையவனுக்கு லாபம் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். டி.டி.எச். தொழில்நுட்பம், ஒரு கூட்டு முயற்சி வியாபாரம். இதில், யாரும் பாதிக்கப்படப் போவதில்லை. 6 மாதங்களாக விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு இது.
தமிழ்நாடு முழுவதும் “விஸ்வரூபம்’ படத்தை திரையிட, இதுவரை 390 தியேட்டர்கள் முன்வந்துள்ளன. படத்தை திரையிட மாட்டோம் என்று சொல்பவர்களிடம், திரையிட சொல்லவில்லை.

படம், குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரும்.ஏர்டெல், சன், டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய 5 டி.டி.எச். நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப முன்வந்துள்ளன.
.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

' நீண்ட காலமாக சினிமாவில் இருக்கிறீர்கள். ஆனாலும், உங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறதே?’’ என்று கேட்கப்பட்டது.
அது பற்றி  கமல்ஹாசன் 
'"பொருளாதார நெருக்கடி என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் சொல்லவில்லை. எனக்கு எந்த குறையும் இல்லை. நெருக்கடி, எல்லோருக்கும் வரும். டாட்டா, பிர்லாவுக்கும் வந்திருக்கிறது.பஸ்சில் போய்க்கொண்டிருந்த என்னை, “ஆடி’ காரில் போக வைத்து இருக்கிறீர்கள். ரசிகர்கள், என்னை வசதியாகத்தான் வைத்து இருக்கிறார்கள்"
  பதில் கூறினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran