அதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.  முன்னதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரராகவும் உருவெடுத்தார் அதானி.

இந்நிலையில், இந்த சாதனையை நிகழ்த்த கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் 1600 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளிவந்தன.

கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக தற்போது உள்ளது.

தற்போது உலகின் 2ஆவது பெரும் பணக்காரராக விளங்கும் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் 2 மடங்குக்கும் மேல் அதிகமாகியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், விமான நிலையங்கள், சிமென்ட், காப்பர் சுத்திகரிப்பு, தரவு மையங்கள், பசுமை ஹைட்ரஜன், பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு, சாலைகள் மற்றும் சூரிய மின்கல உற்பத்தி உள்ளிட்ட புதிய வளர்ச்சித் துறைகளில் அதானி எண்டர்பிரைசஸ் அதிக முதலீடு செய்துள்ளது.

அதானி குழுமம், தொலைத்தொடர்பு துறையில் தடத்தை பதிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. மேலும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் விமான நிலைய வணிகங்களை மேம்படுத்துவதற்கான பாரிய திட்டங்களையும் கொண்டுள்ளது. அதானி குழுமம் பசுமை எரிசக்தி உள்கட்டமைப்பிற்காக 70 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான அதானி, 2022ல் மட்டும் தனது சொத்தை 60 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளார். மற்ற பணக்காரர்களை விட ஐந்து மடங்கு அதிகம். பிப்ரவரியில் அம்பானியை முந்திச் சென்று, ஏப்ரலில் செண்டிபில்லியனர் (நிகர சொத்து $100 பில்லியன் அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள்) ஆக உருவெடுத்தார்.

------------------------------------------------------------

மாரடைப்பு

மனித உடலில் ஓய்வில்லாமல் எந்நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு எது என்று கேட்டால் அது இதயம் என்று சொல்லலாம்.

கருவில் உருவாகும் நேரத்தில்,எப்போது இதயத்துடிப்பு கேட்க ஆரம்பிக்கின்றதோ,அன்றிலிருந்து அந்த மனிதன் இறக்கும் தருவாய் வரை,ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு உறுப்பு எதுவென்று கேட்டால் அது இதயம்.

ஆகவே அந்த இதயத்தை சரியானபடி பாதுகாப்பது,ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.சரி,இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது.

அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, அதிகப்படியாக கோபம் அடையாமல் இருப்பது மற்றும் அதிகப்படியான படபடப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை  இதயத்தை எப்பொழுதும் ஒரே சீரான துடிப்புடன் வைத்திருக்கும்.

இப்படியாக இதயத்தை  ஆரோக்கியமாக வைப்பது மட்டுமே நீங்கள் அதற்குத் தரும் ஆகச்சிறந்த பாதுகாப்பாகும்.

காய்கறிகள் மற்றும் பழங்களில் நிறைய உயிர் சத்துக்களும், நார்ச்சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன.இவற்றில் கொழுப்பு மூலக்கூறுகள் அவ்வளவாக கிடையாது.

ஆகவே காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளும் போது, ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதோ அல்லது கொழுப்புகள் சிறை மற்றும் தமனி எனப்படும் ரத்த ஓட்ட பாதைகளில் கொழுப்பாக படிவதோ கிடையாது.
மேலும் இத்தகைய பழங்களில் அதிக கலோரிகளும் கிடையாது.

ஆகவே இது உங்கள் உடலுக்கும் இதயத்திற்கும் ஆகச் சிறந்த உணவாகும்.

வேக வைத்த பச்சைப்பயிறு, பட்டாணி, சுண்டல், சோளம், காராமணி,மொச்சை மற்றும் வேர்க்கடலை போன்ற தானிய வகை உணவுகளுக்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக,மாவாக மாற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட தானிய மாவுகள், செரிமானத்திற்கு உகந்ததாக இருக்காது. மேலும் மாவுகளில் நார்ச்சத்தின் அளவு குறைந்து விடுகிறது. 

நார்ச்சத்து இல்லாத மாவுகளினால்,செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. ஆகவே, மாவு உணவில் இருந்து நீங்கள் நேரடியாக தானிய வகை உணவுகளுக்கு ஒருவேளை சைவமாக இருந்தால் பாலாடை கட்டிகள்,நெய் மற்றும் வெண்ணை போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது கூட,அன்றைய தினத்திற்கு தேவைப்படும் கொழுப்பின் அளவிற்கு மட்டுமே,இத்தகைய உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 உங்கள் இதயத்திற்கு அதிக தொல்லை தராத உணவு முறைகளைக் கொண்ட வாழ்க்கை முறைகளையும் அமைத்துக் கொண்டால் நலமாக வாழலாம்.

-----------------------------------------------------------