இரு பதவியேற்புகள்.

 இந்திய ஒன்றிய அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்

இந்திய ஒன்றிய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்திருக்கிறார். 

இவர், பதவியேற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இவர் தமிழ்நாடு பார் கவுன்சிலில் கடந்த 1977-ம் ஆண்டு பதிவுசெய்தார். 

1982-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உச்ச நீதிமன்றத்தில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றியிருக்கிறார். 

சுற்றுச்சூழல் சட்டங்கள், வரி தொடர்பான வழக்குகள், அரசியல் சாசனம், பழங்குடியினர் உரிமைகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் உரிமைகள் குறித்த பல வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார்.

 பல்வேறு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள், ஒன்றியஅரசின் சார்பில் வாதாடியுள்ளார். 

இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பணிசெய்துள்ளார்.

-------------------------------------------------------------------------

முப்படைகளின் தலைமை தளபதி

அனில் சவுகான் 

புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவி ஏற்கிறார். 

இதற்கென டெல்லியில் உள்ள போர் நினைவிடம் சென்ற அவர், போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து ராணுவ தளபதி மனோஜ் பாண்டே , விமானப்படை தளபதி வி.ஆர் சவுத்ரி, கப்பற்படை துணை தளபதி அட்மிரல் கோர்மடே ஆகியோருடன் சேரிந்து கவுரவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முப்படைகளின் தலைமை தளபதியான அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவலுடன் பணியாற்றியவர் மட்டுமல்லாது, மறைந்த பிபின் ராவத்துடன் ஒரே படைப்பிரிவில் பணியாற்றிய உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

  காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை அடக்கியதில் அனில் திறம்பட செயலாற்றியதாக கூறப்படுகிறது. 

இவருக்காகவே மத்திய அரசு ராணுவ விதிகளில் திருத்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.  

ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரல் அல்லது ஜெனரல் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் 62 வயதை பூர்த்தி அடையாதவராக இருந்தால் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என விதிகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?