தனது முயற்சியில் தளரா
52 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்க கோடிக்கணக்கில் செலவழித்த நபருக்கு இதுவரையில் மொத்தமாக மிக சொற்பமான பரிசு மட்டுமே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ராகவன்.
இவர் கடந்த 52 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றார். அதன்மூலம் தனது வாழ்க்கை என்றென்றும் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
இவர் இதுவரை லாட்டரி சீட்டுக்கு செலவு செய்த தொகை மொத்தம் ரூ.3.5 கோடியைத் தாண்டியுள்ளது.இவ்வளவு செலவு செய்தது கூட அவருக்குத் தெரியாது.
அவர் வைத்து இருந்த பழைய சீட்டுகளை மொத்தமாக எண்ண ஆரம்பித்தபோது தான் இந்த விஷயம் தெரிய வந்தது.
ராகவன் தனது வருமானத்தில் ஒரு பகுதியை லாட்டரி சீட்டுக்காக ஒதுக்கி வருகிறார். அவர் இதுவரை வாங்கிய பழைய லொட்டரிகள் சாக்கு மூட்டைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. சமீபகாலமாக அனைத்தையும் கூட்டி கணக்கிட்டால் மொத்தம் ரூ.3.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படி அவர் லாட்டரி வாங்கி இருந்தாலும் அவர் வென்ற அதிகபட்ச லாட்டரி பணம் எவ்வளவு தெரியுமா..?
வெறும் ரூ. 5 ஆயிரம் மட்டுமே. இருந்தாலும் அவர் தான் லாட்டரி வாங்கும் முயற்சியை நிறுத்தவில்லை.
கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் ராகவன், 18 வயதில் லாட்டரி சீட்டு வாங்கத் தொடங்கினார்.
தற்போதும் தனது முயற்சியில் சற்றும் தளராத ராகவன்,ஒரு நாளைக்கு 10 லாட்டரி சீட்டுகள் வரை வாங்கிக் கொண்டிருக்கிகிறார்.
---------------------------------------------------------------------------
இலங்கை
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு
இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தில் கஞ்சா பயிர்செய்கை தொடர்பான யோசனை ஒன்றை சுகாதார அமைச்சகம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளது.
குறித்த பிரதேசத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த யோசனையை முன்வைக்க உள்ளார்.
இந்த யோசனையானது அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்குலக நாடுகளின் சந்தைகளில் கஞ்சாவுக்கு மிகப் பெரிய தேவை நிலவுவதாகவும் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலைமையில் கஞ்சாவை ஏற்றுமதி செய்வது வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட சிறந்த வழியாக இருக்கும் என இலங்கை அமைச்சர் சிசிர ஜயகொடி கூறியுள்ளார்.
---------------------------------------------------------++++----------