சனி, 30 செப்டம்பர், 2017

அந்த ஏழு நாட்கள் உணவு முறை.

உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்பைக்குறைத்து உடலை கச்சிதமாகவும் ,ஆரோக்கியமாகவும் ,வலிமையாகவும் வைத்துக்கொள்ளும் முறையை நீங்கள் தேடிக்கொண்டிருக்கலாம்.

உங்களுக்காக ஒரு ஏழு நாட்கள் இயற்கை உணவு முறை.

இதுதான் தற்போது பல இடங்களில் பலர் தேர்வு செய்யும் முறையாக உள்ளது.
ஒருவாரம் மட்டுமே இதை நீங்கள் இந்த உணவு பழக்கத்தை மேற்கொண்டால் போதும்.உடல் கச்சிதமாகி விடும்.

அதன் பின் நீங்கள் அப்படியே உடல் நிலையை பராமரித்தல் போதும்.

இந்த ஏழு நாள் உணவுப்பழக்கத்தை மேற்கொள்ளுகையில் உங்களுக்கு உடற்சோர்வு முதல் நாளில் ஏற்படுவது இயற்கை.
ஆனால் நீங்கள் அளவுக்கு அதிகமாக சோர்வு, படபடப்பு, மயக்கம் என்று உணர்ந்தால் , இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடி அவரின் அறிவுரையை கேட்க வேண்டும்.

மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் தொடர்ந்து அறிவுரை பெற வேண்டும். 

சர்க்கரை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் இந்த முயற்சியில் கண்டிப்பாக இறங்க வேண்டாம்.முதல் நாள்

பழங்களால் ஆன டயட்டே முதல் நாள் மெனு. 
பழங்களைத் தவிர காய்கறிகள், சாதம் எதையும் தொடவே கூடாது. 
தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைச் சாப்பிடலாம். 

வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சையைச் சேர்க்கக் கூடாது.

இரண்டாம் நாள்

முதல் நாள் பழங்களாகச் சாப்பிட்டதில் உடல் சற்று சோர்ந்திருக்கும். 
எனவே, போதிய எனர்ஜி கிடைப்பதற்காக வேகவைத்த ஓர் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் காலை உணவாகச் சாப்பிடலாம்.

வெண்ணெய் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு உடலில் சேரும். 
பின் காய்கறிகளைப் பச்சையாகவோ, எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்தோ மதியமும் இரவும் சாப்பிடலாம்.

கீரைகளையும் வேகவைத்துச் சாப்பிடலாம். 
முட்டைகோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து நிறையவே சாப்பிடலாம்.

மூன்றாம் நாள்

வாழைப்பழம், உருளைக்கிழங்கைத் தவிர்த்து மற்ற காய்கறி, பழங்கள், கீரைகளைச் சாப்பிடலாம். 
சாலட், சமைத்தது என எந்தவிதத்திலும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

நான்காம் நாள்

ஒரு டம்ளர் பால் (ஸ்கிம்டு மில்க்) மற்றும் இரண்டு வாழைப்பழங்களை தலா மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். 
கடந்த மூன்று நாட்களாக ஜி.எம் டயட் பின்பற்றி இருப்பதால், உடலில் சோடியத்தின் அளவு குறைந்திருக்கும், 
வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். 
பால் மற்றும் வாழைப்பழத்துடன் தக்காளி, வெங்காயம், குடமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, சூப் செய்து குடிக்கலாம்.

ஐந்தாம் நாள்

முளைகட்டிய பயறை வேகவைத்துச் சாப்பிடலாம். 
அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிரும் தக்காளியும் சேர்த்துச் சாப்பிடலாம். 
ஐந்தாம் நாளில் தக்காளி அவசியம் இருக்க வேண்டும். 
மேலும், வேகவைத்த சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த நாளில் ஒரு கோப்பை சூப்பும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆறாம் நாள்

ஐந்தாம் நாள் பின்பற்றியதைப்போல முளைகட்டிய பயறு அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிர் சாப்பிடலாம். 
சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸ் சாப்பிடலாம். 
இதர காய்கறிகளும் சாப்பிடலாம். ஆனால், தக்காளி சேர்க்கக் கூடாது. 
சூப் குடிக்கலாம்.

ஏழாம் நாள்

பிரவுன் அரிசி சாதத்துடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
முடிந்தவரை சாதத்தைக் குறைத்துக்கொண்டு காய்கறிகள், பழங்களை உண்பது மிகவும் நல்லது.

பின் குறிப்பு:-

ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். 

களைப்பாக இருந்தால் போதிய ஓய்வு எடுத்துவிட்டு உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். 
ஜி.எம் டயட்டில் உடற்பயிற்சியும் ஓர் அங்கம்.

எனவே, தினமும் குறைந்தது 10 ஆயிரம் அடி அல்லது 3 கி.மீ. தூரம் நடப்பது. 
அரை மணி நேரம் நீந்துவது, சைக்கிளிங் போவது போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்யலாம்.

ஏழு நாளும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.


இப்பயிற்சியினால் உங்களுக்கு அளவுக்கு அதிக சோர்வு, படபடப்பு, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் தொடர்ந்து அறிவுரை பெற வேண்டும். 

சர்க்கரை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் இதை செய்ய முயற்சிக்க வேண்டாம்.


தமிழக புதிய ஆளுனராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார். 
தமிழகத்தின் பொறுப்புஆளுனராக  இருந்து வரும் வித்யாசாகர் ராவிற்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்து வருகிறார். 

பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940 ம் ஆண்டு ஏப்ரல் 16 ம் தேதி பிறந்தவர். இவர் அசாம் கவர்னராக பணியாற்றி உள்ளார்.
 நாக்பூர் லோக்சபா தொகுதியில் இருந்த 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர்.
முதலில்  அகில இந்திய பார்வர்டு கட்சியிலும்  . பின்னர் காங்கிரசிலும் இருந்தவர். 1991 ல் பா.ஜ.,வில் இணைந்தார்.
======================================================================================
ன்று,
செப்டம்பர்-30.
 • உலக  மொழிபெயர்ப்புத்  தினம்
 • உலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)
 • பாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)
 • போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
 • தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
=======================================================================================


வெள்ளி, 29 செப்டம்பர், 2017

புதிய இந்தியாவா? மற்றோரு எத்தியோப்பியா!

நாட்டின் பொருளாதாரத்தில் பிரதமர் மோடி & பிஜேபியின் சாதனைகள்....
2014ல் 8.3% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வருடாந்திர வளர்ச்சி விகிதம் தற்போது 5.3% ஆக உள்ளது. அதாவது 68.7% வீழ்ச்சியடைந்துள்ளது..
2014ல் 4.9% ஆக இருந்த உற்பத்தி தயாரிப்பு தற்போது 0.10% ஆக உள்ளது. அதாவது 97% வீழ்ச்சியடைந்துள்ளது..

2014ல் 4.9% ஆக இருந்த தொழில்துறை உற்பத்தி தற்போது 1.20% ஆக உள்ளது. அதாவது 75% வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சியை தடுக்க போதிய வாய்ப்புகள் இருந்தும் மோடி அரசு அதனை நழுவ விட்டிருக்கிறது. இதனால் பொருளாதார வீழ்ச்சிக்கு இன்னும் காங்கிரஸ் கட்சியை குறை சொல்லிக்கொண்டிருக்க கூடாது என்று பாஜக வை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது :
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசை இனியும் குறை சொல்லக்கூடாது.
நமக்கு ஏராளமான வாய்ப்பும் நேரமும் இருந்தது.
பொருளாதாரம் தொடர்ந்து சரிந்த போதும் நான் பேசவில்லை.
தற்போது, ஒரு காலாண்டு கணக்கை வைத்து மட்டும் பேசவில்லை.
தொடர்ந்து 6 காலாண்டாக பொருளாதாரம் சரிந்து வருகிறது.

ராஜ்நாத் சிங், பியூஸ்கோயலுக்கு என்னை விடவும் பொருளாதாரம் பற்றி தெரிந்திருக்கலாம். இதனால், அவர்கள், உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்தியா உள்ளதாக நினைக்கின்றனர். இதனை நான் ஏற்கவில்லை.

 பொருளாதாரம் பலவீனமாக இருந்த போது ரூபாய் நோட்டு வாபசை அமல்படுத்தியிருக்கக்கூடாது. இது இன்னும் பாதித்துவிட்டது. ஜிஎஸ்டி பொருளாதாரத்திற்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் முக்கிய அந்நிய செலாவணி ஈர்ப்பு, ஜவுளித்துறை ஏற்றுமதி தான்..
 கரூர், திருப்பூர், சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களின் பல லட்சம் தொழிலாளர்கள், பல்லாயிரம் தொழில் முனைவோரின் வாழ்வாதாரமும் ஜவுளித்துறை தான்.. நிற்க.
இந்திய அரசு, ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க, 7% மானியம் அளித்து வந்தது.., இது பல்லாண்டுகளாக இருக்கும் நடவடிக்கை.. ஜவுளித்துறையில் நமக்கு போட்டி நாடுகள் சீனாவும், பாகிஸ்தானும் தான்..
அந்த நாடுகளின் விலைக்கு போட்டியாக இந்திய நிறுவனங்கள் உலக சந்தையில் போராட, விலை கணக்கீட்டில் இந்த மானியத்தையும் சேர்த்து கணக்கிட்டுத் தான் விலை நிர்யணம் செய்கிறார்கள்.. அந்த மானியம் மட்டுமே நஷ்டத்தில் கை கொடுத்து வந்தது..

அதுவும் இந்த விலையை இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என கான்டராக்ட் போட்டு விடுவார்கள்.. இடையில் விலை ஏற்ற முடியாது.
 இதில் முக்கிய செய்தி என்னவென்றால், போட்டி நாடுகளுக்கு அந்த அரசாங்கம், மின்சாரத்தில் மானியம், இட வாடகையில் மானியம், ஏற்றுமதி ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகள் அளிக்கிறது..
 இந்தியாவில் இது எதுவுமே கிடையாது..
வரும் அக்டோபர் முதல், அந்த மானியத்தை வெறும் 2% என மோடி அரசு குறைத்துவிட்டது.. இது ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய அடியாகும்..

ஏற்கனவே GSTல் நிமிர முடியாமல் இருக்கும் தொழில் முனைவோர், இந்த மானிய குறைப்பால், இருக்குமிடம் தெரியாமல் அழிந்து போவார்கள், வேலையிழப்பு கடுமையாக இருக்கும்..

இந்தியாவிற்கு வர வேண்டிய வாய்ப்புக்கள் போட்டி நாடுகளுக்கு செல்லும், ஏற்றுமதி வாய்ப்பை நாம் இழக்க நேரிடும்..

இந்த கொடுமையை கேட்க கூட நாதியில்லாத தொழில் முனைவோர்கள், அனாதைகளாக இன்று விழி பிதுங்கி நிற்கிறார்கள்..

இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டிய தமிழக அரசு, MGR நூற்றாண்டு விழாவில் மும்முரமாக இருக்கிறது..

யாராவது எதுவும் செய்து ஏற்றுமதியாளர்களைக் காப்பாற்றுங்கள்..
தனது பொருளாதார தவறான முடிவுகளை நிறுத்திக்கொள்ளாமல் மேலும் மோடி ஆட்சியில் இருந்தால் அவர் காண விரும்பும் புதிய இந்தியா மற்றோரு எத்தியோப்பியா வாகத்தான் இருக்கும் ஆபத்து உள்ளது .…..
=======================================================================================
ன்று,
செப்டம்பர்-29.

 • உலக இதய தினம்

 •  உலக காபி தினம்

 • ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)

 • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)
=======================================================================================வியாழன், 28 செப்டம்பர், 2017

இந்திய கோடீசுவரர்கள் அதிகரிப்பு,

இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, ‘5.7 சதவிகிதம்’ என்று வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து 6-ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் டாலர் முதலீடுகளை திரும்ப எடுத்துக்கொண்டு ஓடுவதும், இறக்குமதி அதிகரிப்பு காரணமாக இந்திய சந்தையில்இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் டாலர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.


புதன்கிழமையன்று நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.72 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
 இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் வெறும் 5.7 சதவிகிதம் என்ற அளவிற்கு, 3 ஆண்டுகளில் இல்லாத மோசமான இடத்திற்கு சென்றது. 

இது இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய பதற்றமே, அவர்கள் தங்களின் முதலீடுகளை அவசர அவசரமாக திரும்பப் பெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.புதிய முதலீடுகள் வராத நிலையில், ஏற்கெனவே வந்த முதலீட்டையும் காப்பாற்றிக்கொள்வதற்காக சில வித்தைகளை செய்வதென மோடி - ஜெட்லி கூட்டணி இறங்கியுள்ளது. ஆனால், எதுவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றுவதாக இல்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு சுமார் 50,000 கோடி ரூபாயை கூடுதலாகச் செலவிட முடிவு செய்துள்ளது; இந்தக் கூடுதல் செலவீட்டின் மூலம் பொருளாதாரச் சரிவைக் குறைக்க முடியும் என மோடி அரசு கணக்கு போட்டுள்ளது.
ஆனால் இந்தக் கூடுதல் செலவீட்டு திட்டத்தின் மூலம் இந்திய அரசுக்கு மேலும், அதிகளவிலான நிதிப்பற்றாக்குறைதானே ஏற்படும் என்று எண்ணும் முதலீட்டாளர்கள், இந்திய சந்தையில் செய்துள்ள முதலீட்டை திரும்ப எடுப்பதில்தான் அவசரம் காட்டு கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல், புதிய முதலீட்டு அளவுகளையும் குறைத்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை யும், சகுனம் சரியில்லை என்பதையே முதலீட்டாளர்களுக்கு செய்தியாக கூறியுள்ளது.50,000 கோடி ரூபாய் மட்டுமே நிதிப்பற்றாக்குறை பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஜூன் காலாண்டிற்கு உள்ளேயே இந்திய இறக்குமதியின் அளவு 41.2 பில்லியன் டாலராக அதிகரித்து இருப்ப தை ரிசர்வ் வங்கி போட்டு உடைத்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து, நம்பிக்கையற்ற அறிவிப்புக்களே வருவதால், சுதாரித்துக் கொண்ட பன்னாட்டு முதலீட்டாளர்கள், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 5,500 கோடிரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து தங்களது முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.

ஜிஎஸ்டி வசூல் ரூ. 5000 கோடி குறைந்ததுசரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. 
விற்பனை வரி, நுழைவு வரி, சுங்க வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகளை ஒழித்து விட்டு அதற்கு மாற்றாக ஒரு முனை வரியான சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதாக மோடி அரசு கூறியது.முதல் மாதத்திலேயே 95,000 கோடி வரி வசூல் செய்யப்பட்டது. 

ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்களில் 74 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 38 லட்சம் தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் தங்களின் ஜூலை மாதத்திய ஜிஎஸ்டி வரியை ஜிஎஸ்டியின் இணைய தளத்தின் வாயிலாக செலுத்தினர்.முதல் (ஜூலை) மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலானது, உத்தேசமாக 95,000 கோடி ரூபாயாக இருந்தது. 
இது மோடி அரசை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 

சுமார் 14,402 கோடி ரூபாய் மத்திய வரியாகவும் மாநில வரியாக சுமார் 21,067 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த வரி  சுமார் 47,377 கோடி ரூபாயும், சொகுசு பொருட்களின் மீது வசூலிக்கப்படும் வரி வருவாய் சுமார் 7,823 கோடி ரூபாயும் இருந்தது.
ஆனால், ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக சுமார் 90,669 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 5 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது. 
இதுவும் மோடி அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


இதையொட்டி, ஜிஎஸ்டியின் ஆணைய மானது, சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்டதொகையை உள்ளீட்டு வரிப்பயன்பாடாக எடுத்துக்கொண்ட 162 தொழில் நிறுவனங்களு க்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி சமாளித்தல் வேலையில் இறங்கியுள்ளது.

பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை மட்டும் இரண்டு மடங்கானதுநாட்டின் வளர்ச்சியும், பொருளாதாரமும் தொடர்ந்து இறங்குமுகத்திலேயே இருந்தா லும், இந்தியாவில் பெரும்பணக் காரர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. 
அது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.இந்தியாவில் 2016-ஆம் ஆண்டில், ஆயிரம்கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 339 பேர்களாக இருந்தது. அதுவேஇந்தாண்டு 617 பேர்களாக அதிகரித்துள்ளது. 

சீன நாட்டைச் சேர்ந்த ஹூரன் என்ற நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.இந்திய பணக்காரர்கள் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஹூரன் நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. 

தற்போது 6-ஆவது ஆண்டாக, இந்திய பெரும்பணக்காரர்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.1
000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களை மட்டுமே இந்த வருடத்திற்கான ஆய்வில் ஹூரன் சேர்த்துள்ளது. 
இதில் எப்போதுமில்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 302 பேர் புதிதாக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். 

அதாவது, கடந்த ஓராண்டில் புதிதாக 302 இந்தியர்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய் என்ற அளவை தாண்டியுள்ளது.

இந்திய பெரும்பணக்காரர்களில் எப்போதும் போல, மோடியின் நண்பர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள் ளார். நடப்பாண்டு அவரது சொத்து மதிப்பு சுமார்58 சதவிகிதம் வரை அதிகரித்து மொத்த சொத்தின் மதிப்பு 2 லட்சத்து 57 ஆயிரத்து 900 கோடியாக ரூபாயாக உயர்ந்துள்ளது. 

இந்தாண்டு பார்மா மற்றும் எப்எம்ஜிசி துறையைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.2017-ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் பார்மா துறையில் இருந்து 79 பேரும், எப்எம்ஜிசி துறையில் இருந்து 63 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
பெரும்பணக்காரர்கள் 617 பேர்களில், 182 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். 117 பேர் தில்லியையும், 51 பேர் பெங்களூருவையும் சேர்ந்தவர்களாவர்.


சென்னையைச் சேர்ந்த 15 பேரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

2017-ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையும், கடந்த ஆண்டை விட சுமார் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ‘

பிஎம்எஸ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்ததற்குதவறான ஆலோசகர்களும் தவறான வழிகாட்டுதலால் ஆன சீர்த்திருத்தங்களுமே காரணம் என்று ஆர்எஸ்எஸ்-ஸின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங் சாடியுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு ஏற்கெனவே நம் சிறிய மற்றும் மிகச்சிறிய தொழில்களை பாதித்துவிட்டது. 

சில்லரை விற்பனைத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று பிஎம்எஸ் கூறியுள்ளது. 

உலக அளவில் 40-ஆவது இடம்இதனிடையே, பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில், உலகளவில் இந்தியா ஓரிடம்கீழிறங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு ள்ளது. 

உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண்அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், மொத்தமுள்ள 137 பொருளாதார நாடுகளில், சென்ற ஆண்டு இந்தியா 39-ஆவது நாடாக இருந்தது. இந்த முறை ஓரிடம் பின்தங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் பல இந்தியர்கள் மோடி அரசுவருகைக்குப் பின் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் அதே இந்தியா பொருளாதாரத்தில் மக்கள் வளமை பட்டியலில் பின்னடைந்து கொண்டே இருக்கிறது.
======================================================================================
ன்று,
செப்டம்பர்-28.


 • சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)
 • உலக ரேபிஸ் நோய் தினம்
 • பசுமை நுகர்வோர் தினம்
 • தாய்வான் ஆசிரியர் தினம்

=======================================================================================
பாஜக அறிவாளர் குழு ஆலோசனை அடிப்படையில் மோடி செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் ஊத்திக்கொண்டதுடன்.
காங்கிரசு ஆட்சியை விட மிக பாதாளத்தில் இந்தியாவை தள்ளி விட்டது.
உள்நாட்டு உற்பத்தி குறைவால் வளர்முக நாடுகள் பட்டியலில் கூட இந்தியாவை வைக்க பிடிக்காமல் ஐநா.எடுத்து விட்டது.
தற்போது சீரழிந்த பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி பொருளாதார வல்லுநர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
அதுதான் நமக்கு மிகவும் கவலையை தருகிறது.

காரணம் அவர்களின் கூர் மதிதான் .
அதை உங்களுக்கு விளக்கத்தான் ஒரு சிறு கதை.இது உல்டாதான்.கற்பனையைத்தவிர வேறு ஏதும் இல்லை.
மோடி ஆலோசகர்களின் கூர்மதியை விளக்கமட்டுமே செய்யும்.
புதினை ரஷ்யாவில் சந்தித்த நரேந்திர மோடி,
"உங்கள் நாட்டில் நீங்கள் தொடர்ந்து பதவியில் இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.
"சரி" என்ற புதின்
"அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மோடி குழப்பமாகி,
"ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள்தானே என்றார்.
இருந்தாலும் பரிட்சித்து பாருங்கள் என்றார் புதின். நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே, இண்டர்காம் பொத்தானை அழுத்தி,
பிரதமர் திமித்ரியை தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
திமித்ரி அறைக்குள் வந்து,
"சொல்லுங்கள் என்றார்.
புதின் சிரித்துக் கொண்டே அவரிடம் கேட்டார்,
, உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், திமித்ரி
"அது நான்தான்்" என்றார்.
"நன்றி என்று கூறி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் மோடி பக்கம் திரும்பி "பார்த்தீர்களா?" என்றார்.
மோடி தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவையும் ஒரு முறை பார்த்துவிட்டு செல்லலாமென எண்ணி வேண்ட விறுப்பாக மீண்டும் இந்திய வந்தார்.
இந்தியா வந்தவுடன் அமித் ஷாவை தேடினார்.
ஒருவழியாக அமித் ஷாவை பார்த்து அவரிடம் கேட்டார்,
"அமித், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?"
"உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்" என்ற அமித் ஷா பொன்னார் தமிழிசை ராம்தேவ் H.ராஜா நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஒவ்வொருவரிடமும் கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை.
அதில் ஒருவர் 'காங்கிரசின் ஊழலை மட்டும் ஒழிப்போம்' என்று அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டவர். பழைய பழக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் ஓடி, "நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டு்ம். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.
கேஜ்ரிவால், "அது நான்தான்!" என்றார்.
விஷயத்தை கேள்விப்பட்ட அமித் ஷா மோடியிடம் ஓடி, "எனக்கு விடை தெரியும்" என்றார்.
"சொல்லு". என்றார் மோடி
"அரவிந்த் கேஜ்ரிவால்தான் அது".
மோடி அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,
"முட்டாள்! அது திமித்ரிடா!" என்றார்.
                                                                                                                                     -உதவி முகநூல் 
======================================================================================


புதன், 27 செப்டம்பர், 2017

கண்டவர் விண்டிலர்.விண்டவர் கண்டிலர்.

‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவரைப் பார்த்ததாக கூறியது அத்தனையும் பொய்’ என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. வீரமணி ஆகியோர்கூறியிருந்தனர்.

 இது விவாதங்களை கிளப்பிவந்த நிலையில், ‘அனைத்துஅமைச்சர்களும் அப்பல்லோவில் ஜெயலலிதாவைப் பார்த்தோம்’ என்று மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜூ கூறியுள்ளது, பலரையும் தலையிலடித்துக் கொள்ளச் செய்துள்ளது.

தமிழக மக்களை வைத்து, அமைச்சர்கள் லாவணிப் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம்தேதி இரவு 10.15 மணியளவில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அதில், காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைந்ததன் காரணமாகஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.அவரது உடல் நிலைகுறித்து தினம்தோறும் அமைச்சர்கள், அரசுத் துறையினர், மருத்துவமனை நிர்வாகம் ஊடகங்களுக்கு தகவல்களை அளித்துக் கொண்டிருந்தனர். ஜெயலலிதா டிவி பார்த்தார். இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் அப்பல்லோ வாசலில் நின்று பேட்டி கொடுத்தனர்.

காவிரி விவகாரம் தொடர்பாகமுதல்வர்கள் கூட்டத்தை செப்டம்பர் 29-ஆம் தேதி மத்திய அரசுகூட்டியிருந்த நிலையில், அதுதொடர்பாக மருத்துவமனையிலேயே தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் 1 மணி நேரம் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தமிழக அரசே செய்திக் குறிப்பு வெளியிட்டது.
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் படிவம் மற்றும் சின்னம் ஒதுக்கும்படிவத்தில் அவரே கைரேகை வைத்தார் என்றும் அதிமுகவினர் கூறினர்.

தமிழக ஆளுநர் வித்யா சாகர்ராவ், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை, நேரில் வந்து பார்த்துச் சென்றனர். 
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.


லண்டன் டாக்டர் ஜான் ரிச்சர்ட்பீலே உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 70 நாட்களாகியும் அவர் விரைவில் வீடு திரும்புவார்என்று திரும்பத் திரும்ப கூறப்பட்டு வந்தாலும், சிகிச்சை தொடரவே செய்தது. 
ஆனால், திடீரென டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் முதன்முறையாக அறிவித்தது.

அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறிய அப்பல்லோ நிர்வாகம், எக்மோ எனும் செயற்கை நுரையீரல் மூலமே ஜெயலலிதாவின் சுவாசம் நடைபெறுவதாக தெரிவித்தது. 
பின்னர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் ஜெயலலிதா இறந்து விட்டார் என்று 12.10 மணிக்கு அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.
நன்றாக குணமடைந்து வந்தார் என்று கூறப்பட்ட ஜெயலலிதா திடீரென மரணமடைந்தது, அதிமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரணத்தில் மர்மம் இருப்பதாக பரவலாக கருத்துக்கள் வெளிப்பட்டன. இதுதொடர்பாக சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். 

ஆனால், அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. முதல்வர் பதவி பறிக்கப்பட்டதற்கு பின், ஓ. பன்னீர்செல்வம் முதன்முறையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பினர். ஜெயலலிதா மரணம்தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தி,மக்களின் சந்தேகத்தைப் போக்கவேண்டும் என்றார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கச் சொல்லும் ஓ. பன்னீர்செல்வம், அவர் முதல்வராக இருந்தபோது, அதுபற்றி பேசாதது ஏன்? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர். 


பதவி பறிபோனதால் ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறு பேசுவதாக சாடினர். அப்படி விசாரித்தால், முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குறிப்பிட்டார்.
ஆனால், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குப் பின், இவர்கள்அனைவருமே பல்டி அடித்தனர். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாகநீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று அறிவித்தார். 
அதைத்தொடர்ந்து கடந்தவாரம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர்தான் கொன்று விட்டார்கள் என்று புதிய குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

மதுரை பொதுக்கூட்டத்தில் தனது குற்றச்சாட்டை மீண்டும்உறுதிப்படுத்திய அவர், ஜெயலலிதாவை பார்ப்பதற்கு அமைச்சர்களைக் கூட சசிகலாகுடும்பத்தினர் அனுமதிக்கவில்லை; அவர் இட்லி சப்பிட்டார்,சட்னி சாப்பிட்டார் என்று அப்போதுநாங்கள் கூறியதெல்லாம் பொய்;அதற்காக மக்களிடம் மன்னிப்புக்கேட்கிறோம் என்று அடுத்தடுத்து குண்டுகளைப் போட்டார்.

 அமைச்சர் கே.சி. வீரமணி, அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோரும் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதையே கூறினர். “எந்த அமைச்சர்களும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை, ஆளுநர் வந்துபார்க்கும்போது கூட ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை; ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்திக்காட்டியதாக ஆளுநர் கூறியவை அனைத்தும் பொய்” என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் ஒருபுறத்தில் பரபரப்பைக் கிளப்பினர்.

இவ்வாறு போய்க் கொண்டிருந்த நிலையில் செவ்வாயன்று காலை கீழ்ப்பாக்கத்தில் விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. வீரமணி கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, நீங்கள்ஜெயலலிதாவைப் பார்த்தீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம்” என்று அதிரடியாக கூறி செல்லூர் ராஜூ அதிர்ச்சி அளித்தார். அவர் கூறிய அடுத்த சிலமணி நேரத்தில் தில்லியில் பேட்டியளித்த தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபிலும், தீவிர சிகிச்சை பிரிவு இரண்டாவது வார்டுக்கு மாற்றும்போதுநான் ஜெயலலிதாவைபார்த்தேன்என்று கூறி பரபரப்பைகிளப்பினார்.

தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளும் வகையிலான அமைச்சர்களின் முன்னுக்குப்்பின் முரணான பேட்டிகள் செய்தியாளர்களையே குழப்பத்தில் தள்ளியது. 
அமைச்சர்கள் சொல்வதில் எது உண்மை? எதுபொய் நாட்டு மக்களும் குழம்பிப்போயினர்.ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லை என்று தற்போது திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார். 
ஆனால், அவர்தான் முன்பு“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வெற்றியை ஜெயலலிதா இனிப்பு வழங்கி எங்களுடன் கொண்டாடினார்” என்று பொதுக்கூட்ட மேடையில் கூறினார். அதுவும் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மேல் சத்தியம் செய்து நம்புங்கள் என்றார். தற்போது ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை என்று கூறுகிறார். 
செல்லூர் ராஜூவோ “நான் மட்டுமல்ல; அமைச்சர்கள் அத்தனை பேருமே ஜெயலலிதாவைப் பார்த்தோம்” என்று கூறுகிறார்.
மாற்றி மாற்றிப் பேசுவதன் மூலம் உண்மையில் இவர்கள்என்ன செய்ய நினைக்கிறார்கள்? ஆட்சியைக் கலைக்கத் துடிக்கும்சசிகலா - டிடிவி தினகரன் தரப்பைவிசாரணை ஆணையம் மூலம் மிரட்ட முயற்சிக்கிறார்களா? 
மாநிலம் சந்திக்கும் பிரச்சனைகளைத் திசைத் திருப்பி மக்களுக்கு வேடிக்கை காட்ட முயற்சிக்கிறார்களா? 
என தமிழகமக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

தினகரன் தரப்பு மிரள்கிறதா என்றால், ஓய்வுபெற்ற நீதிபதிவிசாரணையெல்லாம் போதாது; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று டிடிவி தினகரன்ஆதரவாளரும் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ-வுமான வெற்றிவேல் தைரியம் காட்டுகிறார். 

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணை கேட்டு அறிக்கை விடும் நிலையில், “தற்போது சிபிஐ விசாரணை கேட்பவர்கள் அடுத்து எப்பிஐ விசாரணை கேட்பார்களா?” என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் பதுங்குகிறார். 

நீதிவிசாரணை தேவை என்று சொன்னார்கள் அதை அமைத்துவிட்டோம் என்கிறார்.


ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதா மரணத்தில் தனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் எதுவும் இல்லை என்றுதான் கூறினார். மூத்த அமைச்சர்களில் ஒருவரான ஓ.எஸ். மணியனும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்றே கூறினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇப்போதுவரை எதுவும் பேசியதாக தெரியவில்லை.உண்மையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதுஎன்று கூறியவர் ஓ. பன்னீர்செல்வம்தான். விசாரணைக் கமிஷன்அமைந்தால் மட்டும்தான் அதிமுகவில் மீண்டும் இணைவேன் என்று நிபந்தனையும் விதித்தார். 
உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற அளவிற்குப் போனார். 

அதற்கு உறுதிமொழி கொடுத்துத்தான் எடப்பாடியும் ஓ. பன்னீர்செல்வத்தை உடன் சேர்த்துக் கொண்டார்.
ஆனால்40 நாட்களுக்கு மேலாகியும் எடப்பாடியோ - ஓ. பன்னீர்செல்வமோ இருவருமே வாய் திறக்கவில்லை. 

திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறிக்கொட்டியதும்- அதனடிப்படையில் எதிர்க்கட்சிகள் கொடுத்த நெருக்கடியே- தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரணைஎன்ற கண்துடைப்பு ஆணையத்தை எடப்பாடி அமைப்பதற்கு காரணமாகி இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இவ்விஷயத்தில் தங்கள் தரப்பு நிலையை விளக்க வேண்டும். ஜெயலலிதா மறைவின்போது இவர்களும் அமைச்சர்கள்தான். 

அவர்கள் ஜெயலலிதாவை பார்த்தார்களா? 

அதற்கு ஏதேனும் அனுமதி மறுக்கப்பட்டதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
=======================================================================================
ன்று,
செப்டம்பர்-27.
 • உலக சுற்றுலா தினம்
  ஹர்கிஷன்சிங் சுர்ஜித்
 • மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)
 • உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
 • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
 • கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)
 • தோழர்.ஹர்கிஷன்சிங் சுர்ஜித் நினைவு தினம் (2008)========================================================================================


செவ்வாய், 26 செப்டம்பர், 2017

அமைதிப்படை கமல்?

தற்போதைய கமல்ஹாசன் பேட்டிகளில் அவர் இதுவரை தென்பட்ட கருப்பு சட்டை,பகுத்தறிவு,பெரியாரை சிந்தனைகள்,இடதுசாரி முற்போக்கு எண்ணங்கள் மறைந்து முற்றிலுமாக வலதுசாரி காவித்தனம் மெருகேறுகிறது.

அறிமுகப்படுத்தும் போதே இடதுசாரிகள்,கா ங்கிரஸ்,திமுகவால் சரியான நடைமுறை இல்லை என்று சொல்லிய பணமதிப்பிழப்பை மோடி செய்தது சரியான செயல் என்று தற்போது அளக்கிறார். நடைமுறைய சரிவரவில்லை என்று பகிரங்கமாக ஆடிட்டர் குருமூர்த்தி போல் பேசுவதை விட சில தவ றுகள் நடந்திருக்கலாம் என்றும் ,மோடி சிறப்பாக செயல்படுகிறார் பயனுக்கு மக்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்பதும் மோடிவித்தை க்கு ஆதரவாகவே கமல் தெரிகிறார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் போது அதற்கு வழிகாட்டியாகவும்,பின்னணியாகவும் இருக்கும்  பாஜக மத்திய அரசை பாராட்டுவது எந்தவகையில் சரியாக வரும்.


கமல்ஹாசன் சொல்லும் ஊழல் ,முறைகேடுகளாலான  ஆட்சி தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருப்பதற்கு  முற்றிலும் பாதுகாப்பை தருவது பாஜகதான்.

ஆளுநரை அதற்காக பாஜக  பயன்படுத்துவதையும் தெரியாதவர் அல்ல கமல்.
அது தமிழ்நாட்டு கடைகோடி மக்களுக்கும் தெரியும் நிலை இருக்கையில் கமலுக்கு தெரியாமல் இருக்காது.

காவிரி மேலாண்மை ஆணையம்,ஜல்லிக்கட்டு,நீட் தேர்வில் ஏமாற்று,விவசாயிகள்  என்று பாஜக மோடிஅரசு தொடர்சியாக தமிழ் நாட்டு மக்களை வஞ்சகம் செய்யும் மோடியை பாராட்டுவது இந்திய அரசியலில் மற்றோரு நிதிஷ் குமாராகத்தான் கமல்ஹாசனை வளர்க்கும்.

இன்றைய அரசியல் குதிப்பு கமல்ஹாசனை முதலில் அறிவிப்பு வெளிவரும் போது பெருவாரியாக மாற்றம்விரும்பிகள் ஆதரித்தது அவரின் இடதுசாரி,பகுத்தறிவு எண்ணங்கள் வெளிப்பாடுகளுக்குத்தான்.

ஆனால் அரசியல் சாக்கடையில் இறங்கும் முன்னரே அவரின் "நீலச்ச்சாயம் வெளுத்துப்போச்சு டும் ,டும் ,டும் "
என்ற பாட்டு அவருக்கே பொருந்தி விடுமோ என்ற பயம் இயல்பாகவே அவரின் தீவிர ரசிகனான எனக்கு உண்டாகிறது.


தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை கையூட்டு  கலவி இருக்கையில் நேரடி முதல்வராக விருப்பம் தெரிவிக்கும் கமல்ஹாசன் எப்படி ஆட்சியை ஊழலற்றதாக கொண்டு செல்வார் என்ற எண்ணம் உருவாக்குகிறது.

ஸ்டாலின் போன்ற துணை முதல்வர்,மேயர்  பொறுப்பில்,இருந்த ஒருவருக்குத்தான் அதிகாரிகள்,அலுவலர்களின் யார் ஊழல் பெருச்சாளி ,நடுநிலை ஊழல்வாதி,நாணயமானவர் என்ற இனங்கண்டு அதற்கேற்ப பதவிகளை வழங்கி ஓரளவுக்கு முறைகேடற்ற ஆட்சியை வழங்க இயலும்.
கமலுக்கு இதை இனங்காண்பது கடினம்.

முதலில் டெல்லியில் ஆட்சி அமைத்த கெஜ்ரிவால் இது போன்ற அதிகாரிகளால் இரண்டு மாதம் கூட ஆட்சி செய்யமுடியாமல் போனதை கணக்கில் எடுத்து அரசியலில் இறங்கி சில நாட்கள் தன்னை வலுப்படுத்திக்கொண்டு பின்னர் முதல்வராவதுதான் நலம்.

கமல்ஹாசனை அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பி அழைத்ததற்கு அவரின் முற்போக்கு ,பகுத்தறிவு சிந்தனை கருத்துக்கள்தான் காரணம்.
இதைத்தான் மீண்டும்,மீண்டும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.


ஆனால் விளம்பரத்தாலும் ,புகைப்பட ஜாலங்களாலும் (போட்டோ ஷாப் )ஹிட்லர் பாணியில் இவர் வல்லவர்,இவர் ஆட்சிக்கு வந்தால் பாலாறு ஓடும்,தேனாறு ஓடும் என்று பணிக்கு அமர்த்தப்பட்ட தகவல் தொழில் நுட்பக்குழு சமூக வலைத்தளங்கள்,ஊடகங்களில் காட்டிய பலூன் தனமான வளர்சியால்  ஆட்சியில் அமர்ந்த பாஜக மோடியை ஆதரிப்பது என்பது தனது நாற்காலி கனவில் வரும் நாற்காலியின் கால்களை தானே ஒடித்துக்கொள்வதாகத்தான் உள்ளது.

"விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது "என்ற பாடல் வரிகளுக்கேற்ப மோடியின் செயல் திறன் தற்போது உலக அளவில் இந்தியாவை வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கத்தான் வைத்துள்ளது.

15 லட்ச ரூபாய் ஒவ்வொருவர் கணக்கில் வரவு வைத்ததில் இருந்து ஜப்பான் 80000 கோடிகள் புல்லட் ரெயில் இலவசமாக இந்தியாவுக்கு பெற்றுவந்ததாகவும் பொய் சொல்லி மோடி அம்பலப்பட்டதை பார்த்தும் செயல் திறன் மிக்கவர் என்று கமல் இன்னமும் சொன்னால் அவரும் பக்தாள் கூட்டத்தை சேர்ந்த அமைதிப்படை என்றுதான்  நாங்கள் முடிவுக்கு வர  முடியும். 

கடைசியாக கமல்ஹாசன் அவர்களுக்கு  இரண்டு குறிப்புகள் .

தமிழகத்தில் மக்கள் அடிமனதில் மோடி நம் மாநிலத்துக்கு எதிரானவற்றையே செய்கிறார்.பாஜக ஒரு மதவாத கட்சி என்ற இரு கருத்துக்களும் உறுதியாக உள்ளது.அதனால்தான் சாதாரண சாரணர் தேர்தலில் கூட பாஜக செயலாளர் எச்.ராஜா டெபாசிட் போய் அவமானப்பட்டுள்ளார்.

பாஜவுடனான கூட்டணி கட்சி சிவசேனாவே பாஜகவையும்,மோடியையும் அவ்வப்போது விமர்சிக்கிறது.
நேற்று கூட "மோடி செயல்பாடுகளால் இந்திய வளர்ந்துள்ளது மோடிக்கு ஆதரவான அலைதான் இந்தியா முழுக்க என்றால் மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்.யார் வளர்ந்துள்ளர்கள் அம்பானியும்,அதானியும்தானே ?"
என்று அதன் பத்திரிகையில் எழுதியுள்ளது.
இவைகளை கணக்கில் கொள்ளுங்கள்.
ஆனால் நேற்று நீங்கள் ஊழலை ஒழிக்க பாஜகவுடன் கைகோர்க்க தயார் என்று  அறிவித்துள்ளது உங்கள் கொள்கை பிடிப்பு என்ன என்பதை காட்டுகிறது.
ஆண் -பெண் ,இரவு-பகல் என்பது போல் இடது சாரி -வலதுசாரி என்றுதான் உள்ளது நடுசாரி என்பது உலகை ஏமாற்றும் வலதுசாரிகளுக்கான அமைதிப்படை ,ஐந்தாம்படை என்று கூட சொல்லலாம்.
ஒன்று ஆணாக இருக்க வேண்டும்.அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்.நடுவாந்திரம் என்பது சரியான தீர்வல்ல.தேர்வல்ல .
==========================================================================================
ன்று,
செப்டம்பர்-26.
 • உலக கடல்சார் தினம்
 •  இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்(1890)
 • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம்(1954)
 • ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
===========================================================================================
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டில்லி டல்கத்தாரோ ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கல ந்துகொண்டவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு சீட்டு சீனாவில் தயாரிக்கப்பட் டுள்ளது.
வாழ்கபாஜக , வளர்கமேக் இன் இந்தியா . 
 சீனாவில் தயாரான பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆர்எஸ்எஸ், பாஜக.வினர் பல முறை வலியுறுத்தி வருகின்றனர். 
இதற்காக இந்திய தயாரிப்பு பொருட்களை அதிகப்படுத்தும் வகையில் 2014ம் ஆண்டு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கார்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வருகிறார். 
ஆனால்  பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் சீனாவில் தயாரான நுழைவு சீட்டு பயன்படுத்தப்பட்டு,இந்திய தயாரிப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நுழைவு சீட்டில் ஆங்கிலமும், சீன மொழியும் இடம்பெற்றுள்ளது. தேசிய மொழி என்று பாஜக.வினர் கூறி வரும் இந்தி மொழி இதில் இடம்பெறவில்லை. 
அந்த நுழைவு சீட்டில் ‘மேட் இன் சீனா லோகோதான்  இடம்பெற்றுள்ளது.
வாழ்கபாஜக , வளர்கமேக் இன் இந்தியா . 


=============🧐