வெள்ளி, 29 செப்டம்பர், 2017

புதிய இந்தியாவா? மற்றோரு எத்தியோப்பியா!

நாட்டின் பொருளாதாரத்தில் பிரதமர் மோடி & பிஜேபியின் சாதனைகள்....
2014ல் 8.3% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வருடாந்திர வளர்ச்சி விகிதம் தற்போது 5.3% ஆக உள்ளது. அதாவது 68.7% வீழ்ச்சியடைந்துள்ளது..
2014ல் 4.9% ஆக இருந்த உற்பத்தி தயாரிப்பு தற்போது 0.10% ஆக உள்ளது. அதாவது 97% வீழ்ச்சியடைந்துள்ளது..

2014ல் 4.9% ஆக இருந்த தொழில்துறை உற்பத்தி தற்போது 1.20% ஆக உள்ளது. அதாவது 75% வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சியை தடுக்க போதிய வாய்ப்புகள் இருந்தும் மோடி அரசு அதனை நழுவ விட்டிருக்கிறது. இதனால் பொருளாதார வீழ்ச்சிக்கு இன்னும் காங்கிரஸ் கட்சியை குறை சொல்லிக்கொண்டிருக்க கூடாது என்று பாஜக வை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது :
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசை இனியும் குறை சொல்லக்கூடாது.
நமக்கு ஏராளமான வாய்ப்பும் நேரமும் இருந்தது.
பொருளாதாரம் தொடர்ந்து சரிந்த போதும் நான் பேசவில்லை.
தற்போது, ஒரு காலாண்டு கணக்கை வைத்து மட்டும் பேசவில்லை.
தொடர்ந்து 6 காலாண்டாக பொருளாதாரம் சரிந்து வருகிறது.

ராஜ்நாத் சிங், பியூஸ்கோயலுக்கு என்னை விடவும் பொருளாதாரம் பற்றி தெரிந்திருக்கலாம். இதனால், அவர்கள், உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்தியா உள்ளதாக நினைக்கின்றனர். இதனை நான் ஏற்கவில்லை.

 பொருளாதாரம் பலவீனமாக இருந்த போது ரூபாய் நோட்டு வாபசை அமல்படுத்தியிருக்கக்கூடாது. இது இன்னும் பாதித்துவிட்டது. ஜிஎஸ்டி பொருளாதாரத்திற்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் முக்கிய அந்நிய செலாவணி ஈர்ப்பு, ஜவுளித்துறை ஏற்றுமதி தான்..
 கரூர், திருப்பூர், சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களின் பல லட்சம் தொழிலாளர்கள், பல்லாயிரம் தொழில் முனைவோரின் வாழ்வாதாரமும் ஜவுளித்துறை தான்.. நிற்க.
இந்திய அரசு, ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க, 7% மானியம் அளித்து வந்தது.., இது பல்லாண்டுகளாக இருக்கும் நடவடிக்கை.. ஜவுளித்துறையில் நமக்கு போட்டி நாடுகள் சீனாவும், பாகிஸ்தானும் தான்..
அந்த நாடுகளின் விலைக்கு போட்டியாக இந்திய நிறுவனங்கள் உலக சந்தையில் போராட, விலை கணக்கீட்டில் இந்த மானியத்தையும் சேர்த்து கணக்கிட்டுத் தான் விலை நிர்யணம் செய்கிறார்கள்.. அந்த மானியம் மட்டுமே நஷ்டத்தில் கை கொடுத்து வந்தது..

அதுவும் இந்த விலையை இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என கான்டராக்ட் போட்டு விடுவார்கள்.. இடையில் விலை ஏற்ற முடியாது.
 இதில் முக்கிய செய்தி என்னவென்றால், போட்டி நாடுகளுக்கு அந்த அரசாங்கம், மின்சாரத்தில் மானியம், இட வாடகையில் மானியம், ஏற்றுமதி ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகள் அளிக்கிறது..
 இந்தியாவில் இது எதுவுமே கிடையாது..
வரும் அக்டோபர் முதல், அந்த மானியத்தை வெறும் 2% என மோடி அரசு குறைத்துவிட்டது.. இது ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய அடியாகும்..

ஏற்கனவே GSTல் நிமிர முடியாமல் இருக்கும் தொழில் முனைவோர், இந்த மானிய குறைப்பால், இருக்குமிடம் தெரியாமல் அழிந்து போவார்கள், வேலையிழப்பு கடுமையாக இருக்கும்..

இந்தியாவிற்கு வர வேண்டிய வாய்ப்புக்கள் போட்டி நாடுகளுக்கு செல்லும், ஏற்றுமதி வாய்ப்பை நாம் இழக்க நேரிடும்..

இந்த கொடுமையை கேட்க கூட நாதியில்லாத தொழில் முனைவோர்கள், அனாதைகளாக இன்று விழி பிதுங்கி நிற்கிறார்கள்..

இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டிய தமிழக அரசு, MGR நூற்றாண்டு விழாவில் மும்முரமாக இருக்கிறது..

யாராவது எதுவும் செய்து ஏற்றுமதியாளர்களைக் காப்பாற்றுங்கள்..
தனது பொருளாதார தவறான முடிவுகளை நிறுத்திக்கொள்ளாமல் மேலும் மோடி ஆட்சியில் இருந்தால் அவர் காண விரும்பும் புதிய இந்தியா மற்றோரு எத்தியோப்பியா வாகத்தான் இருக்கும் ஆபத்து உள்ளது .…..
=======================================================================================
ன்று,
செப்டம்பர்-29.

  • உலக இதய தினம்

  •  உலக காபி தினம்

  • ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)

  • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)
=======================================================================================