இந்திய கோடீசுவரர்கள் அதிகரிப்பு,

இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, ‘5.7 சதவிகிதம்’ என்று வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து 6-ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் டாலர் முதலீடுகளை திரும்ப எடுத்துக்கொண்டு ஓடுவதும், இறக்குமதி அதிகரிப்பு காரணமாக இந்திய சந்தையில்இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் டாலர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.


புதன்கிழமையன்று நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.72 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
 இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் வெறும் 5.7 சதவிகிதம் என்ற அளவிற்கு, 3 ஆண்டுகளில் இல்லாத மோசமான இடத்திற்கு சென்றது. 

இது இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய பதற்றமே, அவர்கள் தங்களின் முதலீடுகளை அவசர அவசரமாக திரும்பப் பெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.புதிய முதலீடுகள் வராத நிலையில், ஏற்கெனவே வந்த முதலீட்டையும் காப்பாற்றிக்கொள்வதற்காக சில வித்தைகளை செய்வதென மோடி - ஜெட்லி கூட்டணி இறங்கியுள்ளது. ஆனால், எதுவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றுவதாக இல்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு சுமார் 50,000 கோடி ரூபாயை கூடுதலாகச் செலவிட முடிவு செய்துள்ளது; இந்தக் கூடுதல் செலவீட்டின் மூலம் பொருளாதாரச் சரிவைக் குறைக்க முடியும் என மோடி அரசு கணக்கு போட்டுள்ளது.
ஆனால் இந்தக் கூடுதல் செலவீட்டு திட்டத்தின் மூலம் இந்திய அரசுக்கு மேலும், அதிகளவிலான நிதிப்பற்றாக்குறைதானே ஏற்படும் என்று எண்ணும் முதலீட்டாளர்கள், இந்திய சந்தையில் செய்துள்ள முதலீட்டை திரும்ப எடுப்பதில்தான் அவசரம் காட்டு கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல், புதிய முதலீட்டு அளவுகளையும் குறைத்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை யும், சகுனம் சரியில்லை என்பதையே முதலீட்டாளர்களுக்கு செய்தியாக கூறியுள்ளது.50,000 கோடி ரூபாய் மட்டுமே நிதிப்பற்றாக்குறை பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஜூன் காலாண்டிற்கு உள்ளேயே இந்திய இறக்குமதியின் அளவு 41.2 பில்லியன் டாலராக அதிகரித்து இருப்ப தை ரிசர்வ் வங்கி போட்டு உடைத்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து, நம்பிக்கையற்ற அறிவிப்புக்களே வருவதால், சுதாரித்துக் கொண்ட பன்னாட்டு முதலீட்டாளர்கள், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 5,500 கோடிரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து தங்களது முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.

ஜிஎஸ்டி வசூல் ரூ. 5000 கோடி குறைந்ததுசரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. 
விற்பனை வரி, நுழைவு வரி, சுங்க வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகளை ஒழித்து விட்டு அதற்கு மாற்றாக ஒரு முனை வரியான சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதாக மோடி அரசு கூறியது.முதல் மாதத்திலேயே 95,000 கோடி வரி வசூல் செய்யப்பட்டது. 

ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்களில் 74 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 38 லட்சம் தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் தங்களின் ஜூலை மாதத்திய ஜிஎஸ்டி வரியை ஜிஎஸ்டியின் இணைய தளத்தின் வாயிலாக செலுத்தினர்.முதல் (ஜூலை) மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலானது, உத்தேசமாக 95,000 கோடி ரூபாயாக இருந்தது. 
இது மோடி அரசை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 

சுமார் 14,402 கோடி ரூபாய் மத்திய வரியாகவும் மாநில வரியாக சுமார் 21,067 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த வரி  சுமார் 47,377 கோடி ரூபாயும், சொகுசு பொருட்களின் மீது வசூலிக்கப்படும் வரி வருவாய் சுமார் 7,823 கோடி ரூபாயும் இருந்தது.
ஆனால், ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக சுமார் 90,669 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 5 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது. 
இதுவும் மோடி அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


இதையொட்டி, ஜிஎஸ்டியின் ஆணைய மானது, சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்டதொகையை உள்ளீட்டு வரிப்பயன்பாடாக எடுத்துக்கொண்ட 162 தொழில் நிறுவனங்களு க்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி சமாளித்தல் வேலையில் இறங்கியுள்ளது.

பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை மட்டும் இரண்டு மடங்கானதுநாட்டின் வளர்ச்சியும், பொருளாதாரமும் தொடர்ந்து இறங்குமுகத்திலேயே இருந்தா லும், இந்தியாவில் பெரும்பணக் காரர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. 
அது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.இந்தியாவில் 2016-ஆம் ஆண்டில், ஆயிரம்கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 339 பேர்களாக இருந்தது. அதுவேஇந்தாண்டு 617 பேர்களாக அதிகரித்துள்ளது. 

சீன நாட்டைச் சேர்ந்த ஹூரன் என்ற நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.இந்திய பணக்காரர்கள் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஹூரன் நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. 

தற்போது 6-ஆவது ஆண்டாக, இந்திய பெரும்பணக்காரர்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.1
000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களை மட்டுமே இந்த வருடத்திற்கான ஆய்வில் ஹூரன் சேர்த்துள்ளது. 
இதில் எப்போதுமில்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 302 பேர் புதிதாக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். 

அதாவது, கடந்த ஓராண்டில் புதிதாக 302 இந்தியர்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய் என்ற அளவை தாண்டியுள்ளது.

இந்திய பெரும்பணக்காரர்களில் எப்போதும் போல, மோடியின் நண்பர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள் ளார். நடப்பாண்டு அவரது சொத்து மதிப்பு சுமார்58 சதவிகிதம் வரை அதிகரித்து மொத்த சொத்தின் மதிப்பு 2 லட்சத்து 57 ஆயிரத்து 900 கோடியாக ரூபாயாக உயர்ந்துள்ளது. 

இந்தாண்டு பார்மா மற்றும் எப்எம்ஜிசி துறையைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.2017-ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் பார்மா துறையில் இருந்து 79 பேரும், எப்எம்ஜிசி துறையில் இருந்து 63 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
பெரும்பணக்காரர்கள் 617 பேர்களில், 182 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். 117 பேர் தில்லியையும், 51 பேர் பெங்களூருவையும் சேர்ந்தவர்களாவர்.


சென்னையைச் சேர்ந்த 15 பேரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

2017-ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையும், கடந்த ஆண்டை விட சுமார் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ‘

பிஎம்எஸ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்ததற்குதவறான ஆலோசகர்களும் தவறான வழிகாட்டுதலால் ஆன சீர்த்திருத்தங்களுமே காரணம் என்று ஆர்எஸ்எஸ்-ஸின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங் சாடியுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு ஏற்கெனவே நம் சிறிய மற்றும் மிகச்சிறிய தொழில்களை பாதித்துவிட்டது. 

சில்லரை விற்பனைத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று பிஎம்எஸ் கூறியுள்ளது. 

உலக அளவில் 40-ஆவது இடம்இதனிடையே, பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில், உலகளவில் இந்தியா ஓரிடம்கீழிறங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு ள்ளது. 

உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண்அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், மொத்தமுள்ள 137 பொருளாதார நாடுகளில், சென்ற ஆண்டு இந்தியா 39-ஆவது நாடாக இருந்தது. இந்த முறை ஓரிடம் பின்தங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் பல இந்தியர்கள் மோடி அரசுவருகைக்குப் பின் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் அதே இந்தியா பொருளாதாரத்தில் மக்கள் வளமை பட்டியலில் பின்னடைந்து கொண்டே இருக்கிறது.
======================================================================================
ன்று,
செப்டம்பர்-28.


  • சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)
  • உலக ரேபிஸ் நோய் தினம்
  • பசுமை நுகர்வோர் தினம்
  • தாய்வான் ஆசிரியர் தினம்

=======================================================================================
பாஜக அறிவாளர் குழு ஆலோசனை அடிப்படையில் மோடி செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் ஊத்திக்கொண்டதுடன்.
காங்கிரசு ஆட்சியை விட மிக பாதாளத்தில் இந்தியாவை தள்ளி விட்டது.
உள்நாட்டு உற்பத்தி குறைவால் வளர்முக நாடுகள் பட்டியலில் கூட இந்தியாவை வைக்க பிடிக்காமல் ஐநா.எடுத்து விட்டது.
தற்போது சீரழிந்த பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி பொருளாதார வல்லுநர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
அதுதான் நமக்கு மிகவும் கவலையை தருகிறது.

காரணம் அவர்களின் கூர் மதிதான் .
அதை உங்களுக்கு விளக்கத்தான் ஒரு சிறு கதை.இது உல்டாதான்.கற்பனையைத்தவிர வேறு ஏதும் இல்லை.
மோடி ஆலோசகர்களின் கூர்மதியை விளக்கமட்டுமே செய்யும்.
புதினை ரஷ்யாவில் சந்தித்த நரேந்திர மோடி,
"உங்கள் நாட்டில் நீங்கள் தொடர்ந்து பதவியில் இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.
"சரி" என்ற புதின்
"அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மோடி குழப்பமாகி,
"ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள்தானே என்றார்.
இருந்தாலும் பரிட்சித்து பாருங்கள் என்றார் புதின். நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே, இண்டர்காம் பொத்தானை அழுத்தி,
பிரதமர் திமித்ரியை தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
திமித்ரி அறைக்குள் வந்து,
"சொல்லுங்கள் என்றார்.
புதின் சிரித்துக் கொண்டே அவரிடம் கேட்டார்,
, உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், திமித்ரி
"அது நான்தான்்" என்றார்.
"நன்றி என்று கூறி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் மோடி பக்கம் திரும்பி "பார்த்தீர்களா?" என்றார்.
மோடி தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவையும் ஒரு முறை பார்த்துவிட்டு செல்லலாமென எண்ணி வேண்ட விறுப்பாக மீண்டும் இந்திய வந்தார்.
இந்தியா வந்தவுடன் அமித் ஷாவை தேடினார்.
ஒருவழியாக அமித் ஷாவை பார்த்து அவரிடம் கேட்டார்,
"அமித், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?"
"உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்" என்ற அமித் ஷா பொன்னார் தமிழிசை ராம்தேவ் H.ராஜா நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஒவ்வொருவரிடமும் கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை.
அதில் ஒருவர் 'காங்கிரசின் ஊழலை மட்டும் ஒழிப்போம்' என்று அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டவர். பழைய பழக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் ஓடி, "நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டு்ம். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.
கேஜ்ரிவால், "அது நான்தான்!" என்றார்.
விஷயத்தை கேள்விப்பட்ட அமித் ஷா மோடியிடம் ஓடி, "எனக்கு விடை தெரியும்" என்றார்.
"சொல்லு". என்றார் மோடி
"அரவிந்த் கேஜ்ரிவால்தான் அது".
மோடி அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,
"முட்டாள்! அது திமித்ரிடா!" என்றார்.
                                                                                                                                     -உதவி முகநூல் 
======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?